Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

தொடர் 23: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

இத்தாலி – 1

நமது பயாஸ்கோப்காரனின் சினிமா பயணம் என்பது யுலிசெஸ்ஸின் கடற்பயணம் போல. பயாஸ்கோப்காரன் ஐரோப்பிய சினிமாவின் முக்கிய திரைப்படங்களைத் தந்திருக்கும் உலகின் முக்கிய திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலியில் வந்து இறங்கியிருக்கான். இந்திய திரைப்பட மேதைகள் ஒரு சிலருக்கு உந்து சக்தியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ள உலகத் திரைப்படங்கள் சிலதை உருவாக்கிய புகழ்பெற்ற திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலி இரண்டாம் உலகப் போரின் பாதிப்பும் தாக்கமும் பெற்ற இவர்களின் மகத்தான படைப்புகளைக் கொண்டது. போரின் அவலத்தை அப்பட்டமாயும் அங்கதமாயும் அழகியல் நயத்தோடும் சொல்லுபவை. இத்தாலிய சினிமா, உலக சினிமாவில் மிக முக்கிய பங்காற்றியதில் சில மேதைகளைக் கொண்டது. ராபர்டோ ரோசலினி, விட்டோரியா டி சிகா, லூசினோ விஸ்கோண்டி, பியர் பவாலோ பசோலினி ஃபெடரிகோ ஃபெல்லினி, கைலேஞ்சலோ அண்டோனியோனி, பெர்னார்டோ பெர்டு லுஸ்ஸி மற்றும் ஜிசிபே டோர்னடூர் என்ற இயக்குனர் பெயர் பட்டியல் முக்கியமானது. இத்தாலிய சினிமா “நியோ ரியலிஸம்” என்ற திரைப்பட கோட்பாட்டை கண்டெடுத்தது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

ராபர்டோ ரோசெல்லினி (ROBERTO ROSSELLIN) இத்தாலிய நியோரியலிஸ சினிமாவின் தந்தையாக குறிப்பிடப்படுவர். 1954-ல் ரோசெல்லினி, “நான் நியோரியலிஸத்தின் தந்தையில்லை”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை முன் வைத்த முரண்பாடு, ரோசெல்லினியின் கலைக்கோட்பாட்டிலிருந்து நேரடியாக எழுப்பப்பட்டதென்று கருதப்படுகிறது. நியோ ரியலிஸம் என்பது திரைப்படத்தில், “ஸ்டைலை” நிராகரித்த ஒரு புதிய ஸ்டைல்! இந்த திரைப்பட ஆக்க வகைமையை ரோசெல்லினி இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் பொருளாதார நெருக்கடி எதிரிகள் ஆக்கிரமிப்பு, வேலையாட்கள் பஞ்சம் என்பனவற்றின் இடையில் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு படத்தில் பங்கு பெறும் நடிகர்களும் படப்பிடிப்புக்கான இடங்களுமே, அந்தப் படத்தையும் அதன் இயக்குனரையும் அந்தப் படத்தை உருவாக்குபவையாக இருக்க வைத்தன. ஸ்டூடியோக்கள் தவிர்க்கப்பட்டு, கதை நடக்கும் நிஜமான அசல் இடத்திலேயே படம் எடுக்கப்படுவதோடு, தொழில் ரீதியான நடிகர்களோடு, அந்தந்தப் பகுதியில் வாழ்ந்து நடமாடும் மக்களையே படத்தில் நடிக்கச் செய்வது. இது நியோ ரியாலினி வகை திரைப்பட ஆக்கத்துக்கான எளிமையான விளக்கம். “WE MUST KNOW THINGS OUTSIDE OF ANY IDEOLOGY’’, என்று தன் திரைப்படக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார் ரோசெல்லினி.

ரோசெல்லினி 1906-ல் ரோமில் பிறந்தவர். இன்றைக்கு நாம் சிக்கியிருக்கும், “கொரோனா”வைப் போன்ற பேரழிவுப் பெருந்தொற்று நோயாக அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பரவிய “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்ற நோயால் ரோசெல்லினி இருபது மாதங்கள் படுத்த படுக்கையாயிருந்து உயிர் பிழைத்தவர். இவரோடு இவர் சகோதரர் ரென்ஜோ ரோசெல்லினியும் [RENZO ROSSELLINI] இணைந்து நாடகங்கள் போட்டனர். ரென்ஜோ பின்னாளில் ராபர்டோவின் படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பாளராகயிருந்து வந்தவர்.

ரோசெல்லினி “ROME OPEN CITY” [ROMA CITTA APERTA] படத்தை 1945-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இத்தாலியை ஜெர்மன் ராணுவம் 1945-ல் சூழ்ந்து ரோம் நகரை ஆக்கிரமித்தவுடனே இவர் இப்படத்தை செய்து முடித்தார். ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை அவற்றில் பெங்கு பெற்ற ரோமானிய பொது மக்களின் அவலத்தை அவர்களைக் கொண்டே – கிட்டத்தட்ட ஓர் ஆவணப் படம் போல செய்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய மையமாயிருப்பது, ஒன்பது மாத ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பில், அதை எதிர்த்து ரகசியமாய் போராடிய கம்யூனிஸ்டு “எதிர்ப்பாளர்”களின் கதை.

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ரோம் நகரம் ஜெர்மன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த மிக நெருக்கடி மிக்க கட்டம். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு போராட்டம். கடுமையான உணவுப் பங்கீடு அமுலில் வருகையில் மக்கள் ரொட்டிக்கு வரிசையில் நிற்கும் காட்சி. நிலக்கரி லாரிகளிலிருந்து சாலையில் சிந்தும் கரியை பொறுக்கும் சிறுவர்கள். அவர்களையே, அப்படியப்படியே அந்தந்த இடங்களிலேயே இப்படம் படமாக்கப்பட்டது. இப்படம் உலகின் முதல் நியோ ரியலிஸ திரைப்படம். அதுவரை, சர்வாதிகாரி முஸோலினி காலத்து “வெள்ளை டெலிபோன் திரைப்படங்கள்” எனும் 1940களின் தொடக்க கால மோகத்தை உடைத்து, கருப்பு டெலிபோன்களை படமாக்கிய முதல் படமும் இதுதான். முஸோலினிக்கு வெள்ளை டெலிபோன் கருவிகளின் மேல் மோகமாதலால், அன்றைய திரைப்படங்களில் இடம் பெற்ற தொலைப்பேசி கருவிகளும் வெள்ளை நிறத்தாலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்
ANNA MAGNANI

ரோமை நாஜிகள் ஆக்கிரமித்ததை, நகர ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுன் கம்யூனிஸ்டுகள் அதிகம். கம்யூனிஸ்ட் தலைவன் ஃபிரான்சிஸ்கோ என்பவரின் லித்தோகிராஃபிக் அச்சுக்கூடம் இடம் பெற்றிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மான்ஃபிரெடி எனும் எதிர்ப்பாளர் கம்யூனிஸ்ட் தலைவன் ஒளிந்திருக்கிறான். அதை சந்தேகித்த ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் திடீரென போய் சோதிக்கிறது. மான்ஃபிரடி தப்பித்து வேறொரு பெண் வீட்டில் தஞ்சம் புகுகிறான். அச்சுக்கூட உரிமையாளர் ஃபிரான்சிஸ்கோவின் மனைவி பினாவும், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்ட தேவாலய பாதிரியார் பின் பியட்ரோவும் புரட்சியாளருக்கு உதவி வருகின்றனர். இறுதி வெற்றி ரோம் நகருக்கு கிடைக்கும் தருணத்தில் கம்யூனிஸ்ட் மான்ஃபிரடி பிடிபட்டு மரண தண்டனை பெறுகிறான். அவனுக்கு உதவிய பினா, கர்ப்பிணி கோலத்தில் நாஜிகளால் வீதியில் சுட்டுக் கொல்லப்படுகிறாள். பாதிரியாரையும் சுட்டுக் கொல்லுகின்றனர். பினா பாத்திரத்தில் அன்னா மாக்னானியும் (ANNA MAGNANI), மான்ஃபிரடியாக மார்செல்லோ பாக்ளியரோவும் (MARCELLO PAGLIERO), பாதிரியாராக அல்டோ ஃபாப்ரிஜியும் (ALDO FABRIZI) தொழில்முறை திறனோடு நடித்திருக்கினற்னர். மற்ற பாத்திரங்களை ஏற்ற உப – உபரி நடிக நடிகைகள் யாவருமே நடிகர்களே அல்ல. இப்படம் எடுக்கப்பட்ட அவ்வந்த பகுதிகளிலுள்ள ஜனங்களே நடித்திருக்கிறார்கள். இந்த வகையான புதிய யதார்த்த வழி படமாக்கலை கடக் மற்றும் மிரினாள் சென்னும் தங்கள் சினிமாக்கு பின்பற்றியிருக்கிறார்கள். ரோம் ஓப்பன் சிடிகேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு PALME DOR விருது பெற்றது.

இவ்வகையான நியோ ரியலினி திரைப்பட முறை உலகெங்கும் பின்பற்றப்பட்டது. பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவை காமிரா கலைஞர் உபால்டோ அராடா  [UBALDO ARATA] செய்திருக்கிறார்.

ரோசெல்லின் அடுத்தடுத்து செய்த இரு படங்களும் ஓபன் சிடி போலவே நியோரியலிஸ் படங்கள். PAISA [1946]  என்ற படம் யுத்தகால இத்தாலி வாழ்க்கையை ஆறு பகுதிகளில் ஆறு கதைகளில் சொல்லும் படம். ஆறாவது பகுதி அற்புதமானது. மூன்றாவது GERMANY, YEAR ZERO [1947] என்ற படம் ஒரு ஜெர்மனிய பையன் குண்டு வீச்சால் படுமோசமாய் நாசமாகி சிதிலமடைந்த பெர்லின் நகரத்துக்குள் நடமாடும் அனுபவம் பற்றியது. இம் மூன்று திரைப்படங்களும் ராபர்டோ ரோசெல்லினியின் “யுத்த கால முப்படங்கள்”, என்று அழைக்கப்படுபவை. ரோசெல்லினிக்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச நடிகை ஒருவரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அன்பார்ந்த திரு ரோசெல்லினி, உங்கள் ஓபன்சிடி, பெய்சா ஆகிய திரைப்படங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு, நன்கு ஆங்கிலம் பேசும், ஜெர்மன் மொழியை மறக்காத, ஃபிரெஞ்சு மொழியில் பேசத் திணறும் இத்தாலிய மொழியறியாத ஸ்வீடிஷ் நடிகை ஒருத்தி தேவையிருக்குமானால் சொல்லுங்கள், நான் உடனே வந்து உங்கள் திரைப்படம் ஒன்றில் நடிக்கத் தயாராயிருக்கிறேன். இப்படிக்கு, இங்கிரிட் பெர்க்மன்.” என்றிருந்தது. அடுத்து ரோசெல்லினி இன்கிரிட் பெர்க்மனை கதாநாயகியாய் வைத்து  STROMBOLI. LAND OF GOD (1949) எனும் படத்தை இயக்கி வெளியிட்டார்.

இப்படத்தைத் தொடர்ந்து இன்கிரிட் பெர்க்மன் ரோசெல்லியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்ததோடு இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த உறவு 1956 வரை நீடித்தது. 1956-ல் இன்கிரிட் பெர்க்மன் அமெரிக்க ஹாலிவுட்டின் அழைப்பை ஏற்று அங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தார். 1956-ல் பிரம்மாண்டமான ANASTASIA [1956] என்ற படத்தை YUL BRYNER–வுடன் இணைந்து நடித்தார். ரஷ்ய புரட்சிக்குப் பின் ஜார் மன்னனின் உறவினர்கள் ஃபிரான்சுக்கு தப்பியோடி மறைந்திருந்தனர். அதில் முக்கியமான பெண் அனாஸ்தாசியா. அவர்களைத் தேடிப் பிடிப்பதில் போல்ஷெவிக்குகள் அலைகின்றனர். போல்ஷெவிக் அதிகாரியாக யூல் பிரின்னரும் அவருக்குப்  போக்குக் காட்டும் அனாஸ்தாசியாவாக இன்கிரிட் பெர்க்மனும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இப்படத்தோடு பெர்க்மனுக்கும் ரோசெல்லினிக்குமான உறவு முடிந்து போனது. இப்படத்தில் நடித்தமைக்காக பெர்க்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார். ரோசெல்லினி 1959-ல் INDIA என்ற மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்தளித்தார். ராபர்டோ ரோசெல்லினி 1977-ல் காலமானார். காலமாகும் தருணத்தில் ஏசு கிறிஸ்துவின் கதையை MESSIA என்ற தலைப்பில் படமாக்கினார். அவர் மறைவுக்குப் பிறகு 1978-ல் இப்படம் வெளி வந்தது.

ராபர்டோ ரோசெல்லினி தன் முதல் காதல் மனைவியிலிருந்து கடைசி மனைவி வரை எல்லோரோடும் இறுதி வரை தொடர்பிலிருந்தே வந்திருப்பவர். அவரது மரணத்தின் போது நல்லடக்கம் நடக்கையில் இறுதி மரியாதை செலுத்த அந்த எல்லா காதலிகளும் மனைவிகளும் வந்திருந்து மலர் வைத்துச் சென்ற நிகழ்வு மிக அரிதானது. இந்த நிகழ்வையே ஆரம்பக் காட்சியாக கொண்ட ஒரு ஃபிரெஞ்சு புதிய அலை படத்தை தயாரித்து இயக்கியவர் ஃபிரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] படம் “THE MAN WHO LOVED WOMEN”.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

நியோரியலிஸ திரைப்படங்களில் மற்றொரு மைல்கல் விட்டோரியா டிசிகா இயக்கிய மிக மிக புகழ் பெற்றதும் உலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுமான படம் “THE BICYLE THIEVES” விட்டோரியா டி சிகாவின் [VITTORIO DE SICA] புகழ்பாடும் இப்படத்தை பயாஸ்கோப்காரன் மிகவும் காலம் கடந்தே பார்க்க நேரிட்டது. இதற்கு முன்பாக டி சிகாவை நடிகராக சில படங்களில் பார்த்த அனுபவமுண்டு. பிறகு அவர் இயக்கிய பல்வேறு சிறப்பான படங்களைப் பார்த்த பிறகுதான் “சைக்கிள் திருடர்கள்” படத்தையும் அவரது பிற இத்தாலி படங்களையும் பார்க்க நேரிட்டது. சேலம் நியூ சினிமாவில் வெளியான “A FAREWELL TO ARMS” (1957) வண்ணப் படம் அவற்றில் ஒன்று. இந்த புகழ்பெற்ற அமெரிக்க நாவல் அமெரிக்க எழுத்தாளரான ஹெமிங்வே எழுதியது. 1932-ல் கேரி கூப்பர் நடித்த கருப்பு வெள்ளைப் படம் ஒன்றிருக்கிறது.

1957-ன் படத்தில் ராக் ஹட்சன் நடித்திருப்பார் A FAREWELL TO ARMS – நாவல், முதல் உலகப் போர் பின்னணியில் இராணுவ செஞ்சிலுவை வண்டியின் ஓட்டுனருக்கும் இராணுவ நர்ஸ் ஒருத்திக்குமான சோக முடிவைக் கொண்ட காதல். போர் காட்சிகள், தியாகம் எல்லாம் உள்ளிட்டது. கதையில் ஓர் இராணுவ அறுவை சிகிச்சை மருத்துவரின் பாகம், பாத்திரம் மிக முக்கியமானது. அவரை எதிரிகள் குற்றவாளியாக்கி சுட்டுக் கொன்று விடுவார்கள். அந்த உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று அதி சிறப்பாக நடித்தவர் விட்டோரியா டி சிகா. டி சிகாவை நமது பயாஸ்கோப்காரன் மேலும் சில படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க நேரிட்டது. [SHOES OF THE FISHERMAN]. இச்சமயம் அவரது அற்புத இயக்கத்தில் உருவான இத்தாலிய படம் “LA CIOCIARA – (1960)” [TWO WOMEN] ஓடியன் திரையரங்கில் இரண்டாவது ஓட்டமாய் திரையிடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பர்டோ மொரேவியா [ALBERTO MORAVIO] எழுதிய நாவலைக் கொண்டு
டி சிகா செய்த உயரிய படம். லா சியோசியாரா போரின் அவலம், மனித உறவுகள், தாய் – மகள் பாசம் என்பனவற்றைக் கொண்டது. இது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு “TWO WOMEN” என்று வெளியானது.

1901-ல் இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த டி சிகா தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்ற ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர். 17-வது வயதிலேயே சினிமாவில் நடித்தவர். அவரது வசீகர தோற்றம் விரைவில் புகழ் பெற்ற கதாநாயக நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அவருக்கும் திரைப்பட எழுத்தாளர் சிசேர் ஸவாட்டினிக்குமான
[CESARE ZAVATTINI]  நெருங்கிய உறவு டி சிகாவை உயர்ந்த திரைப்பட இயக்குனராக்கியது. ஸவாட்டினியுடன் இணைந்து 1946-ல் “ஷு ஷைன்” [SHOE SHINE] [ BICYCLE THIEVES] 1948 இரு படங்களையும் செய்தார். சைக்கிள் திருடர்களின் நியோ ரியலினி அதிசயம். இந்தியாவில் ஒரு சத்யஜித் ரே தோன்றுவதற்கும் வழி காட்டியாயிற்று. இவ்விரு படங்களும் இரண்டாம் உலக யுத்த கொடுமையையடுத்து இத்தாலியை வாட்டிய வறுமையைச் செல்லுபவை. பைசைகிள் தீவ்ஸ் படம், சிறப்பு ஆஸ்கார் விருதைப் பெற்றது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

யுத்தத்துக்குப் பிந்தைய ரோமில் வேலையற்று உழலும் அன்டோனியோ ரிக்குக்கு [ANTONIO RICCI] சினிமா சுவரொட்டி ஒட்டும் வேலை கிடைக்கிறது. அதற்கு சைக்கிள் அவசியம். சைக்கிள் இருந்தால் தான் வேலை தருவோம் என்கிறார்கள். மனைவி வீட்டு பெட்ஷீட்டுகளை அடகு வைத்து பழைய சைக்கிள் ஒன்றை வாங்கித் தருகிறாள். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் காட்சியே டி சிகாவின் கலை மேன்மையோடு அரசியல் – சமூக எதிர்கால சிந்தனையும் உள்ளிட்டதாயிருக்கும். அது பெரிய சுவரொட்டி. சுவரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து ஒட்டப்படும் அச்சுவரொட்டி ஒரு அமெரிக்க ஹாலிவுட் படத்துக்கானது. சுவரொட்டி முழுக்க கவர்ச்சியான நிலையில் ரீடா ஹேவர்த்தின் படம் கொண்டது. இத்தாலியை ஹாலிவுட் சினிமா ஆக்கிரமித்திருப்பதை டி சிகா இந்தக் காட்சி வழியே தெரிவிக்கிறார். முதல் நாள் போஸ்டரை ஏணியில் ஏறி ஒட்டி விட்டு இறங்கிக் கீழே வந்து பார்த்தால் சைக்கிள் காணோம். அண்டோனியோவின் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விடுகிறார்கள். தனது மகன் – சிறுவன் ப்ரூனோவுடன் [BRUND] திருடுபோன தன் சைக்கிளைத் தேடி அண்டோனியோ ஊரெங்கும் அலைகிறான். பழைய பொருட்கள் – திருட்டு சாமான்களை வாங்கி விற்கும் குஜிலி, அடகுக் கடைகள் எங்கும் பார்த்தாகி விட்டது. பார்க்கும் பழைய சைக்கிள்கள் எல்லாமே களவு போன தன் சைக்கிள் போலவே இருக்கிறது. அப்படியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும் வகையில் டி சிகா, ஆகா! என்னமாய் காட்சிகளை அடுத்தடுத்து கோர்த்திருக்கிறார். ஒரு சைக்கிள் இவர்களுடையது போலவேயிருக்கிறதால், “இதுதான் நம் சைக்கிள்” என்று ப்ரூனோ கூறவும் அதை எடுக்க முயற்சித்து மாட்டிக் கொள்ளும் காட்சி நமது இரக்கத்தைப் பெறுகிறது.

சைக்கிள் போனதால் கிடைத்த வேலையும் கோவிந்தா! இந்த அலைச்சலில் ரோமானிய சமூகத்தின் பல போருக்குப் பிந்தைய அவலங்களை புரையோடின வகுப்பு பேதங்களை சந்திக்கிறான் அண்டோனியோ. இந்த மகத்தான இத்தாலிய நியோரியலிஸ் படம் விட்டோரியா டி சிகாவை புகழின் சிகரத்துக்கு இட்டுச் சென்றது. தந்தைக்கும் மகனுக்குமுள்ள மாபெரும் பரஸ்பர பரிவை. அன்புறவை, பாசத்தை இப்படம் அபரிதமாகச் சொல்லுகிறது. இப்படத்தில் மிருதுவாய் இழையோடும் அங்கதம் மற்றும் எள்ளல் கூடிய சமூக நகைச்சுவையில் சாப்ளினையும் பார்க்க முடிகிறது. டி சிகாவின் உயரிய இயக்கத்தில் பக்க பலமாய் இணைந்திருப்பது அண்டோனியோவா நடிக்கும் லாம்பர்டோ மாக்கியோரானி [LAMBERTO MAGGFORANI] மற்றும் சிறுவன் ப்ரூனோவாக நடிக்கும் என்ஸோ ஸ்மீலாலா [ENZO STALOLA]. என்ஸோ ஸ்டலோபுலா நடிகனல்ல. அங்கிருந்த பையன். இருவரின் அதி உயர்ந்த நடிப்பும், அலெஸ்ஸாண்ட்ரோவின் இசையும், கார்லோ மாண்டுவோரியின் [CARLO MONTUORI] பிரமாத ஒளிப்பதிவும் மிகச் சிறந்த அயல் மொழிக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தன.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

இடையில் வேறு படங்களைச் செய்து விட்டு விட்டோ ரியா டிசிகா 1960-ல் “LA CIOCIARA” [TWO WOMEN] என்ற மீண்டும் நியோரியலிஸ பாணியில் ஒரு படத்தை இயக்கினார். இரண்டாம் உலகப் போர் முடியுந்தருவாயில் ஜெர்மனிய படையின் தாக்குதல் ஒருபுறம், நேச நாட்டுப் படைகளின் எதிர் தாக்குதல் மறுபுறம் என்றிருக்கையில் முஸோலியின் கைதுக்குப் பின் இத்தாலிய ராணுவம் சீர் குலைகிறது. இந்த சூழலில் செஸ்ரா எனும் இளம் விதவை கணவனின் கடையைக் கவனித்துக் கொண்டு தன் பதிமூன்று வயது மகள் ரோ செட்டாவுடன் வாழ்கிறாள். குண்டு மாரி பொழியும் நிலையில் கடை மூடப்படுவதும் திறப்பதுமாய். ரோமை விட்டு வெளியேறி மலைப்பகுதியிலிருக்கும், சொந்த ஊருக்கு மகளோடு போய் விட முடிவு செய்கிறாள் செஸீரா. தன் கடையை பார்த்துக் கொள்ளுமாறு கணவனின் நண்பன் ஜியோவன்னியிடம் கேட்டுக் கொள்ள, அதற்கு பிரதியுபகாரமாய் அவன் அவளையே கேட்கிறான். அவனது விருப்பத்துக்கு இணங்கிவிட்டு செஸீரா, ரோசெட்டாவுடன் ரயிலில் புறப்படுகிறாள். வழியில் குண்டு வீச்சுக்கு ரயில் இருப்புப் பாதை சேதமடைந்ததால் ரயில் நின்று விடுகிறது. இறங்கி நடந்தே போய் விடலாமென இரு பெண்களும் தங்கள் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து நடந்து விடுதியொன்றில் தங்குகின்றனர். அங்கும் இத்தாலிய சிப்பாய்கள் பாலியல் ரீதியான தொந்தரவை ஆரம்பிக்கின்றனர். அந்தப் பகுதியில் பாசிஸ்டுகள், ராணுவத்தை விட்டு விட்டு ஓடி வந்து ஒளிந்திருப்பவர்கள், கடத்தல் வியாபாரிகள் நிறைந்திருக்கின்றனர்.

அவ்வூரில் படித்த பணக்கார இளைஞன் ஒருவனுக்கும் செஸீராவுக்கும் காதலுறவு ஏற்படுகிறது. இளைஞன் பாசிஸத்தை எதிர்ப்பவன். ஒருநாள் அங்கு வரும் ஜெர்மானிய இராணுவம் மலைப் பகுதியில் வழிகாட்டியாக பிக்கோலை – இளைஞனை அழைத்துச் செல்லுகின்றனர். அவன் திரும்பல்லை. கிராமத்திலிருக்க பயந்த குடும்பங்கள் வெவ்வேறு திசையில் தப்பிச் செல்லுகையில், செஸீராவும் அவள் பெண்ணும் ஒரு பக்கம் செல்லும் வழியில் குண்டு வீச்சில் சிதிலமடைந்த தேவாலயத்தில் இராவு தங்குகின்றனர். அங்கு வரும் நேச நாட்டு படையைச் சேர்ந்த சிப்பாய்கள் வெறி கொண்டு தாயையும் மகளையும் ஒருவர் முன்னால் இன்னொருவரை, இருவரும் ஒருவரையொருவர் பார்க்கப் பார்க்க கெடுத்து நாசமாக்கி வல்லுலுறவு கொண்டு விட்டு போய் விடுகின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கும். ஒருகணம் ஆடிப்போய் விடுகிறோம். தாய் செஸீராவாக நடிக்கும் பிரபல இத்தாலி நடிகை சோஃபியா லாரன்ஸ் உலகப் புகழ்பெற்ற நடிகை. இந்த காட்சியிலும், அடுத்து ஒரு லாரியில் அமர்ந்து கண்ணீர் மல்க குடிகார லாரி டிரைவரின் ஆபாச பாட்டை சகித்தவாறு போகும் காட்சியிலும் சோஃபியா நடிப்பின் சிகரத்துக்குப் போய் விடுகிறார். ஓர் எளிய பெண்ணின் அனுபவ ரீதியாக இத்தாலியின் யுத்த வரலாற்றை டி சிகா மிக அழுத்தமாய் – அற்புதமாய் படமாக்கியிருக்கிறார். பல சர்வதேச விருதுகளைப் பெற்ற “இரு பெண்கள்” படத்தில் செஸீராவாக நடித்தமைக்கு சோஃபியா லாரன்ஸ் சிறந்த நடிகை விருது பெற்றவர்.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகா 1963-ல் “THE CONDEMNED OF ALTONA” என்ற அரிய படத்தை இயக்கினார். “ஜெர்மனி யுத்தம் ஓய்ந்த பின்” – என்றும் இதைப் பெயரிடலாம். ஹிட்லர் காலத்தில் அவர் அமைத்திருந்த இரண்டு கொடூரமான அமைப்புகள்: ஜெஸ்டபோ மற்றும் எஸ்.எஸ். [SHUDTS STAFFEL] இந்த எஸ்.எஸ். அமைப்பு ஜெர்மனிய ராணுவத்தை விட கொடூரமானது. இதைச் சேர்ந்த நாஜிகள்தான் யூதர்களை விஷவாயு நிரம்பிய அறைகளில் தள்ளிக் கொன்றவர்கள். ஹிட்லர் மரணமுற்றபின், பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைவராக வைசந்தால் என்றவர் தலைமையில், அர்ஜெண்டினாவுக்கும் பிற இடங்களுக்கும் தப்பியோடி தலைமறைவான எஸ்.எஸ். தலைவர்களில் பிறகு பிடிபட்டு மரண தண்டனையளிக்கப்பட்டவர்களில் அடால்ஃப் இஷ்மன் [ADALF EACHMAN] எடுவார்டு ரோஷ்மன் [EDUVARD ROSHMAN] ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்வாறு தேடப்பட்டு வந்த ஒருவன் புத்திபேதலித்துப் போகிறான். அவனது தந்தை பெரிய தொழிலதிபராகிறார் – மேற்கு ஜெர்மனியில் மகனைக் காப்பாற்ற ஒரு பாதாள அறைகட்டி அதற்குள் வைத்திருக்கிறார். அவன் சதா பிதற்றியபடி கிழிந்துபோன எஸ்.எஸ். சீருடையில், பெரிய கரும்பலகையில் கிறுக்கல் கோட்டோவியங்கள் கிறுக்கி ஜெர்மனி நேச நாடுகளால் அழிந்து போய் அதன் இளைஞர்கள் ரவுடிகளாய், கூட்டிக் கொடுப்பவர்களாய் அலைகிறார்கள் என படம் கிறுக்கி தனக்குத் தானே பேசுவான். ஜெர்மன் இளம்பெண்கள் எல்லாம் சோரம் போய் வேசிகளாகி விட்டனர் என்கிறான்.

அப்படியெல்லாம் இல்லை, ஜெர்மனி தொழில்வளத்தில், கடல் வாணிபத்தில் கல்வியில் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று அவனுக்கு அவன் தொழில் அதிபரான தந்தை சொல்லியும் பயனில்லை. ஒருநாள் அவனைக் காரில் வைத்து மழை பெய்யும் சமயம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லுகிறார் தந்தை. உயரமான இடத்துக்கு இட்டுச் சென்று துறைமுகத்தில் நங்கூரமடித்து நிற்கும் வணிகக் கப்பல்களைக் காட்டுகிறார். தொழிற்கூடங்களைக் காட்டுகிறார். மகன் சிரித்துக் கொண்டே தன் தந்தையைப் பிடித்துத் தூக்கி வெகு உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறான். மழை வலுக்கிறது. பைத்தியக்காரனின் தொழிலதிபத் தந்தையின் பிணம் மழையில் கிடக்கிறது. இப்படம் 1964-ல் சென்னை க்ளோப் திரையரங்கில் வெளியானது. இப்படத்தின் கதை-வசனத்தை டி சிகாவின் விருப்பப்படி அமைத்து எழுதியவர் உலகப் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எக்சிஸ்டென்ஷியலிஸ தத்துவ மேதை ழோன் பல் சார்தர். கரும்பலகைக் கிறுக்கல் கோட்டோவியங்களை வரைந்தவர் போலந்து ஓவியரும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நண்பருமான ஃபெலிக்ஸ் டோபால்ஸ்கி.
[FELIX TOPALSKI]. புத்திபேதலித்த மகனாக சிறப்பாக நடித்தவர் ஆஸ்திரிய நடிகர் மாக்ஸிமில்லியன் ஷெல் [MAXIMILLON SCHELL]. தந்தையாக நடித்தவர் ஃபிரெடரிக் மார்ச்
[FREDERIC MARCH]. டி சிகாவின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகாவின் மற்றொரு யுத்த பின்னணியிலான படம் “SUN FLOWER”. இப்படம்

1969-ல் தயாரித்து இயக்கி வெளியானது. இத்தாலி ஃபிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பு. இத்தாலிய ராணுவ சிப்பாய் ஒருவன் இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்ய எல்லைக்கு அனுப்பப்படுகிறான். ரஷ்யாவில் கைதாகி போர் ஓய்ந்த பிறகு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அங்கேயே சூரியகாந்திச் செடிகளை பயிரிட்டு சாகுபடி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். தாய்நாடான இத்தாலிக்குத் திரும்புவதே இல்லை. அவனது இத்தாலிய மனைவி அவனைத் தேடிக் கொண்டு ரஷ்யாவுக்கு வருகிறாள். ஒருவழியாக இராணுவ விவரங்களைக் கொடுத்தபின் அவனை கண்டடைகிறாள். இப்போது அவன் பொது மன்னிப்பு பெற்று, ரஷ்ய குடிமகனாகி, ரஷ்ய பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாக சுகமாய் வாழ்கிறதைப் பார்த்துவிட்டு இத்தாலிய மனைவி, ஊர் திரும்புகிறாள். இந்தப் படத்தில் ரஷ்ய இயற்கைக் காட்சிகளை ஏராளமாக வழங்கியிருக்கிறார் டி சிகா. இத்தாலி மனைவியாக சோஃபியா லாரன்ஸும், அவளது கணவனாக மார்செல்லோ மாஸ்டிராயினியும் நடிக்கிறார்கள். ரஷ்ய மனைவியாக லூட்மிலா சவேலியெவா [LUDMILA SAVELYEVA] மற்றும் கலினா ஆண்ட்ரீவா [GALINA ANDREEVA] எனும் ரஷ்ய நடிகையும் நடிக்கிறார்கள். சென்னையில் சஃபையர் திரையரங்கில் திரையிடப்பட்ட SUN FLOWER விட்டோரியா டி சிகாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொள்ளப்படாதது.

உலக சினிமாவில் மனித நேயத்தை முன்னெடுத்துச் சென்ற திரைப்பட மேதைகளில் டி சிகா ஒருவர். இவர் 1974-ல் காலமானார்.

(வளரும்)

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன்(மேற்கு ஐரோப்பிய சினிமா) – விட்டல்ராவ்

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மேற்கு ஐரோப்பிய சினிமா

துருக்கிய சினிமா மிகவும் அறிவு ஜீவித்தனமாயிருக்கிறது. மிக மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் துருக்கிய திரைப்படங்கள் சில மிக மிக ஆழமான பொருள் பொதிந்தவை. மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அவற்றின் கேள்விகளையும் உள்ளிட்ட கதையாடல்கள் ஊடே அவற்றுக்கான பதில்களை தாமாகவே மிகவும் சாவதானமான நடையில் தேடிக் கொண்டவையாக இருப்பவை. யோசிக்கும்போது, ஒரு வித “ மணிகவுல் ” தனமான சினிமாவாக சில துருக்கித் திரைப்படங்கள் படுகின்றன. அப்படியிருப்பதுவே அவற்றின் மேன்மை. துருக்கிய சினிமாவின் அரிதான திரைப்படங்கள் சிலதைத் தயாரித்து இயக்கி நடித்து, சர்வதேச அளவில் பெயரும் பாராட்டும் புகழும் பெற்றவர் நூரி பில்கெ சீலான் (NURI BILGE CEYLAN). இவரது மனைவி எப்ரு சீலானும் (EBRU CEYLAN) இவரோடு இவரது படங்களில் நடித்து வருபவர்.

Nuribilgeceylan.jpg
NURI BILGE CEYLAN

நூரி துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் 1959 – ல் பிறந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடீத்த இவர் இஸ்தான் புல் நகரின் மிமர் செரியன் (MIMAR SERIAN ) பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் திரைப்பட ஆக்கத்துக்கான படிப்பை முடித்துத் தேறியவர். இவரது மனைவி எப்ருவும் அதே சர்வ கலா சாலையில் திரைப்படிப்பு படித்து தேறியவர். நூரி 1995-ல் எடுத்த “ கோஸோ ” ( KOZO ) எனும் குறும்படம் புகழ்பெற்றது. பிறது இவர் கசபா ( KASABA – 1997 ), மாயிஸ் சிகின்டிஸி ( MAYIS SIKIN – NAYIS SIKINTISI – 1999 ), உஸக் (UZAK – 2002 ) க்ளைமேட் (IKLIMLER – 2006 ) ஆகிய திரைப்படங்களைச் செய்திருப்பவர். உளிக் படத்தில் முயன்ற தனித்தன்மைகளை நூரி, க்ளைமேட் படத்தில் தான் முழுமையாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.

துருக்கிய மொழியில் IKLIMLER என்று சொல்லப்படம் CLIMATES நவீன உலக சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படம் ஆக்கப்பட்ட விதம் குறித்தான சிறிய ஆவணப்படம் ஒன்றில், படத்தின் வெவ்வேறு மூன்று காட்சி நிகழ்வுகளை தூரி படமாக்கி இயக்கும் விதத்தைக் காண்கையில், அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு நடிப்பு அசைவையும் எவ்வளவுக்கு எளிதாகவும் அதே சமயம் கால விரயமின்றி கச்சிதமாயும், காட்சி அரங்கேறும் சமயம் – எதிர்பாராத சிறு குறுக்கீடுகளை சமாளிக்கும் விதமும் துல்லியமாக தெரிபவை.

“ க்ளைமேட்ஸ் ” ஓர் இத்தாலியல் ( EXISTENTIALIST ) கோட்பாட்டை உட்கொண்டு உள்ளடக்கிய காவியம். துருக்கியின் புற நகர்ப் பகுதியின் கோடை, மழை, குளிர் – பனிக்காலமென்ற மூன்று பருவ காலங்களின் போது நிகழும் ஓர் ஆண் – பெண் உறவின் சிதறலையும் அது ஒன்று சேருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் கதையைக் கொண்டிருப்பது. தங்களுக்கு கிடைத்து பிறகு விலகிச் செல்லும் வாழ்க்கையின் பத்தை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் மனப்போராட்டம் கொண்ட ஓர் ஆண் – பெண் உறவைப் பற்றிய அரிய படம் க்ளைமேட்ஸ். மிக உயரிய நடிப்பாற்றலின் வெளிப்பாடும் திகைக்க வைக்கும் காமிரா கோணங்களும் இக்கதையை நகர்த்துகின்றன.

இஸா ( ISA )  வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் கல்லூரி போதகரும், உயர்பட்டப் படிப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு காஸ் ( KAS ) எனும் நகரில் இருப்பவன். இவனது பெற்றோர்கள் சற்று தொலைவிலுள்ள இடத்தில் வசிப்பவர்கள். இவனது காதலி பஹார் ( BAHAR ) . இவள் தொலைக்காட்சிப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கலை இயக்குனராக பணியிலிருப்பவள். காஸ் நகரில் இஸா ஒரு விடுதியிலிருக்கையில் பஹார் அவனைச் சந்திக்க வருகிறாள். அது நல்ல கோடைகாலம். வெயில் அதிகம். நகரின் புறப்பகுதியிலிருக்கும் மிகப் பழைமையான அசீரிய – பர்ஷிய நகர எச்சமாய் நிற்கும் கட்டிடத்தின் பிரம்மாண்ட தூண்களை இஸா காமிராவில் படமெடுக்கிறான். பஹார் கவனித்தபடி அலுப்பால் பொறுமையிழந்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனக்கு அலுப்பு எதுவுமில்லை என கூறிவிட்டு தூரமாய் போய் நிற்கிறாள்.

பிறகு அவர்கள் ஸ்கூட்டரில் வெகு தூரத்திலுள்ள அவ்வூர் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். இஸா கடலில் நீராட, பஹார் மணலில் அரை நிர்வாணத்தில் சூரிய குளியல் எடுத்த நிலையில் கண்மூடி மல்லாந்து படுத்திருக்கிறாள். இஸா அவளை நெருங்கி, தன் கை கால்களில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அன்போடு அழைத்து முத்தமிடுகிறான். அவள் தன்னை மறந்து கிடக்கையில், இஸா விளையாட்டாக மணலை அள்ளி அவளை கழுத்து வரை மூடுகிறான். அவளும் அவனது விளையாட்டை ரசித்தபடி கண் மூடிக் கிடக்கிறாள். திடீரென்று அவன் மணலையள்ளி அவளது மூக்கு வாய் தலை முழுவதையும் மூடி மணல் சமாதி கட்டி விட, பஹார் அலறித் துடித்து எழுந்து விடுகிறாள். இதை, வெறும் விளையாட்டா, அல்லது வினையாவென்று அவளாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை நம்மாலும் நினைக்க முடியவில்லை.

அடுத்து அவர்கள் கடற்கரையிலிருந்து விடுதியை நோக்கி மலைப் பாதையில் ஸ்கூட்டரில் வேகமாய் வந்து கொண்டிருக்கையில், பின்னால் உட்கார்ந்து வரும் பஹார், சட்டென்று இஸாவின் கண்களை இறுகப் பொத்துகிறாள். அவன் அலறியடித்து ஸ்கூட்டரை பாலன்ஸ் இழந்து கன்னா பின்னாவென திருப்பியோட்ட அது, “ ஸ்கிட் ” டாகி விழுகிறது. அவன் எழுந்து அவளைத் திட்டி அடிக்கிறான். அவளது அந்த செய்கையால் இருவருமே இறந்து போயிருக்க வேண்டியவர்கள் என்று திட்டுகிறான். அவளைத் தூக்கி கடலில் அமுக்கப் போகிறான். பஹாரும் பதிலுக்கு அவனை அடித்தும் காலால் உதைத்தும் வைக்கிறாள். பிறகு மௌனமாக நடந்தே போகிறாள். அவனிடமிருந்து அவள் பிரிந்து தன் ஊருக்குப் போய் விடுகிறாள். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவர்கள் உறவில் அது மேலும் பெரிதாகிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது இஸா புத்தகக் கடையொன்றில் தன் நண்பன் குய்வன் (GIJVEN ) எனும் பத்திரிகையாளனையும் அவனது கவர்ச்சியான காதலி செராப்பை (SERAP) யும் சந்திக்கிறான். பஹாரையும் அவர்கள் அறிந்தவர்களே. பஹாருக்கும் இஸாவுக்குமான உறவு பற்றியும் பேசுகின்றனர். தான் பத்திரிகை வேலையாய் அன்று வெளியூருக்குப் போக இருப்பதை குய்வன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இஸா, அன்றிரவு செராப்பின் வீட்டுக்குப் போய் அவளது விருப்பத்துக்கு எதிராக நுழைகிறான். பஹாருக்கும் அவனுக்குமிடையில் உறவு விரிசலடைந்திருப்பது குறித்து மீண்டும் செராப் கேட்கிறாள். ஆண்  பெண்ணுக்கிடையில் உருவாகும் அந்தரங்க உறவு விரிசலை அறிவதில் தனக்கு ஆர்வமதிகம் என்கிறாள் செராப். இஸா அவளை நெருங்குகிறான். அவளது பலத்த எதிர்ப்பையும், முறியடிப்பையும் மீறி, இஸா செராப்புடன் வல்லுடலுறவு கொள்ளுகிறான். இஸா தன் பெற்றோர்களிடம் போகையில், “ சீக்கிரம் பஹாரை மணந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள் ” , என்கிறாள் அம்மா.

இஸாப்பிற்கு செராப்பிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வரவும், அவன் அவளிடம் போகிறான். நேற்று அவனால் வல்லுறவுக்கு உட்பட்ட செராப் இன்று தானாக முன் வந்து அவனையழைக்கிறாள். இஸா வேண்டா வெறுப்பாக இருக்கிறான்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ISHAKPASHA

அதன் பிறகு இஸா காஸ் நகரை விட்டு பழைமையான இஷக்பாஷா ( ISHAKPASHA ) எனும் நகரையடைந்து புகைப்படமெடுக்கிறான். மழைக் காலம் போய் குளிர்மிக்க பனிக்காலம் வந்திருக்கிறது. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் பார்க்கையில் பனி மூடிய சூழலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை படமாக்க வண்டியில் வந்து இறங்கும் பஹாரைப் பார்க்கிறான் இஸா. அவன் மனம் முற்றிலும் மாறுகிறது. அவளுக்காக இளகுகிறது. அவள் வந்த பஸ் புறப்படத் தயாராகும்போது இவன் பஸ்ஸில் நுழைந்து அவளருகில் உட்காருகிறான். அவள் திடீரென விசும்பி அழுகிறாள்.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, இனி இருவரும் முன்பு மாதிரி இருக்கலாமென்றும், இஸ்தான் புல்லுக்குப் போய் திருமணம் செய்து கொண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழலாமென்கிறான். அவள் மேற்கொண்டு தனக்கு டெலிபோன் செய்ய வேண்டாமென கூறிவிட, பஸ் புறப்படத் தயாராகிறது. இசா போய் விடுகிறான். ஆனால் இரவு அவனது விடுதியறைக்கு பஹார் வருகிறாள். அவர்கள் உறவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இஸாவாக தூரியும், பஹாராக அவன் மனைவி எப்ருவும் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை காமிரா கலைஞர் கோகன் துயாகி ( GOKHAN TUYAKI ) பாராட்டும்படி செய்திருக்கிறார்.

துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் ஒருவித தார்மீக எரிச்சல், பொறாமை சண்டையெல்லாம் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க – ரோமானிய கலை வடிவங்களின் ஆதி கட்டுமான சிதிலங்கள் துருக்கியின் பெருமை வாய்ந்த தொல்லியல் சான்றுகளாய் நிற்பவை.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
MICHAEL CACOYANNIS

கிரேக்க சினிமாவின் நன்கறியப்பட்ட ஓரிரண்டு திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் மைகேல் ககோயானிஸ் ( MICHAEL CACOYANNIS ). ககோயானிஸ் செய்த இரு கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் நவீன கிரேக்க சினிமாவிற்கு பெருமை சேர்த்தவை. அவற்றில் ஒன்று, “ கருப்பு உடையில் ஒரு பெண் ” . ( A GIRL IN BLACK ). Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ் ககோயானிஸ் தமது முதல் கிரேக்கப் படம், A WINDFALL IN ATHENS “ – ஐ 1954 – ல் தயாரித்து இயக்கினார். அதன் பிறகு இயக்கி 1956 – ல் வெளிவந்த கருப்பு உடையில் ஒரு பெண் – படம் உலகுக்கு அவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு கிரேக்க சினிமாவையும் மைகேல் ககோயானிஸ்ஸையும், அதில் தகாநாயகியாய் நடித்த எல்லி லாம்பட்டி ( ELLI LAMBETTI ) யையும் சர்வதேச கவனம் பெறச் செய்தது. இப்படத்தின் சில சிறப்புகளில் ஒன்று இதன் படமாக்கல் முறை. இதன் கதை, இயக்குனர் ககோயானிஸை தொடர்ந்து சில காலத்துக்கு அலைக் கழித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அடுத்து அவர் செய்த ஓரிரண்டு படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

பாவ்லோ ( PAVLO ) திறமையான எழுத்தாளனாயிருந்தும் அதிர்ஷ்டமற்ற இளைஞன். அந்தோனி நடுத்தர வயதான கட்டிட பொறியியல் வல்லுனன். இருவரும் நண்பர்கள். கிரேக்கம், நிறைய சிறு சிறு தீவுகளைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு தீவும் தனித்துவம் கொண்டதென்றாலும், மக்களின் சிந்தனை, வாழ்வுமுறை என்பவை தீவுக்குத் தீவு எவ்வித வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. தீவுகளைச் சென்றடைய அழகிய பயணிகள் கப்பல்களுண்டு. அப்படியான கப்பல் ஒன்றில் பாவ்லோவும் அண்டோனியும் ஹைட்ரா ( HYDRA ) எனும் தீவுக்கு பயணித்து போய் ஒரு வாரத்துக்கு தங்கி கழிக்க விரும்பி புறப்படுகிறார்கள். தீவில் இறங்கினதுமே கூலியொருவன் அறிமுகமாகி இவர்களின் ஜங்கமங்களை தூக்கிக் கொண்டவன். அவர்கள் விருப்பப்படி பழைய வீடு ஒன்றில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறான்.

அந்த வீடு ஃப்ரோசோ ( PHROSO ) என்ற நடுத்தர வயது விதவைக்குச் சொந்தமானது. அவளுடைய அழகிய இளம் பெண் மரினா ( MARINA), அவளுக்கு இளையவன் மிட்சோ ( MITSO ). அந்த பழுதடைந்த கிரேக்க வீடு போலவே, அந்த குடும்பமும் தத்தளிக்கிறது. பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும். பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த நிலையில் அம்மாகாரி ஃப்ரோசோவுக்கும் பனாகிஸ் ( PANAGIS ) என்பவனுக்குமான கள்ள உறவு புதர் மறைவில் நடப்பதை சிறுவர்கள் பார்த்துவிட, அம்பலமாகிறது. கோபமுற்ற மகன் மிட்சோ, அம்மாவை தெருவில் வைத்து அடிக்கிறான். குடும்பப் பெயர் கெட்டதால், அக்காவும் தம்பியும் வெளியில் தலைகாட்டவும் முடியவில்லை.

இதையெல்லாம் பாவ்லோவும் அண்டோனியும் கவனிக்கின்றனர். அதே சமயம் பாவ்லோ மரினாவை நேசிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்கிறாள். ஆனால் அண்டோனி இதை விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மரினா பேரில் ஒருதலைக் காதல் கொண்ட அவ்வூர் இளைஞன் கிறிஸ்டோ வன்முறைக்குத் தயாரா கையில் மரினாவின் தம்பி மிட்ஸோ சண்டை வலித்து ரவுடிகளால் தாக்கப்படுகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை வம்புக்கிழுத்தபடியே இருக்கிறான். பாவ்லோ மரினாவைத் தன்னோடு ஏதென்சுக்கு வந்து விட கேட்கிறான். அண்டோனி, பாவ்லோ புறப்படாததால் தான் மட்டும் புறப்பட்டுப் போகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான்.

பாவ்லோவ் படகுச் சவாரி செய்ய படகு ஒன்றை வேண்டுகிறான். கிறிஸ்டோ தனது மீன்பிடிக்கும் படகை தர முன் வருவதோடு அதனுள் கடல் நீர் புகும்படி செய்து விடுகிறான். படகு மூழ்கட்டும் என்ற எண்ணம். பாவ்லோ படகை கிளப்புகையில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் – பெண் குழந்தைகள் ஓடி வந்து தங்களையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்க பாவ்லோ சம்மதித்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு படகு வலிக்கிறான். சிறிது தூரம் போனதும் தண்ணீர் படகினுள் புகுந்து அது மூழ்கத் தொடங்குகிறது.

குழந்தைகளில் ஒரு சிறுமி கிறிஸ்டோவின் தங்கை. நிறைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாண்டு போகின்றன. பாவ்லோவை போலீஸ் கைது செய்து சிறையிலிடுகிறது. அவன் மீது கொலைக் குற்றம் பதிவாகிறது. மரினா கிறிஸ்டோவை கட்டாயப்படுத்தி உண்மையைக் கேட்டறிவதோடு, போலீசில் உண்மையைச் சொல்ல மிரட்டுகிறாள். குற்றமனப்பான்மை தாக்க, அவன் போலீசில் உண்மையைக் கூறி சரணடைகிறான். விடுதலையடைந்த பாவ்லோ கடற்கரையில் இவனுக்காக நிற்கும் மரினாவை எதிர்பார்ப்போடு சந்திக்கிறான்.

இந்தப் படத்தின் கதை வசனம் நடிப்பு எல்லாமே எளிமையானது. ஆனால் படமாக்கப்பட்ட முறை இசை, ஒளிப்பதிவு என்பவை பிரமிப்பூட்டுபவை. பாவ்லோவாக டிமிட்ரி ஹான் ( DIMITRI HORN) என்பவரும் மரினாவாக எல்லி லாம்பெட்டி என்பவரும் ( ELLI LAMBETTI ) சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா நிபுணர் வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் எட்டே எட்டு வாரங்களில் ஒரே ஒரு காமிராவைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது கருப்பு உடையில் ஒரு பெண்.

 

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ZORBA THE GREEK

ககோயான்னிஸ் இயக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க கிரேக்கப் படம் “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இப்படம் ஆங்கிலமாக்கப்பட்டு சென்னை ஓடியன் தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படம்  1964-ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் “ க்ரேட் “ ( CRETE ) என்ற கிரேக்கத் தீவின் பொது மக்களே உதிரிபாகங்களில் வியப்பூட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

நிகோஸ் கஸாண்ட்ஸகிஸ் ( NIKOS KAZANTZAKIS ) கிரேக்க மொழி இலக்கியத்தின் தாஸ்தாயெவ்ஸ்கி என போற்றப்படுபவர். கஸாண்ட்ஸகியின் அமர நாவல், “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இந்நாவலை திரைப்படமாக்கிய தயாரிப்பாளருள் ஒருவர், அதில் ஜோர்பாவாக நடித்த உலகப் புகழ் பெற்ற குணசித்திர நடிகர் ஆந்தனி க்வின். ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN) ஏற்கனவே “ THE VISIT “ போன்ற அற்புதமான திரைப்படங்கள் தயாரிப்பிலும் பொறுப்பேற்று நடித்த மிக உயரிய நடிகர்.

கிரேக்க தேசத்தின் பல சிறு தீவுகளில் ஒன்று க்ரேட்.. இதில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஒன்று தூரீந்து செயல்பாடின்றி கிடக்கிறது. க்ரேட் மோசமான வறுமையில் கிடக்கிறது. அச் சுரங்கத்தின் உரிமையாளரின் மகன் இங்கிலாந்து கப்பலில் ஏதென்ஸ் வந்து அங்கிருந்து க்ரேட் தீவுக்கு வருகிறான். கவிதை, கட்டுரைகள் எழுதும் புத்தகப் புழு அவன். நடுவழியில் சரியான மழையில் நரைத்த முடியும் மழிக்காத முகமுமாய் ஒருவன் அறிமுகமாகிறான்.

“ நான் ஜோர்பா. அலெக்சிஸ் ஜோர்பா.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் சுரங்க வேலையில் அனுபவமிக்கவன் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இளைஞன் இங்கிலாந்தில் வளர்ந்த கிரேக்கன். ஜோர்பா தன்னையும் சேர்த்துக் கொள்ள கேட்டு உடன் புறப்படுகிறான். இவர்கள் தீவின் நகரை நோக்கி வாடககைக் காரில் வருவதைப் பார்க்கும் ஓர் அரை லூசு “ அமெரிக்கன் வருகிறான் ” , என்று வீடு வீடாகச் சொல்லுகிறான். வறுமையில் வாடும் அந்த ஜனங்கள், அமெரிக்கன் என்றால் பணக்காரன் என்று எண்ணத்தில் “ கஞ்சிவரதப்பா ”, என்றதும், “ எங்கே வருதப்பா ” , என்று அலை பாய்கின்றனர்.

தீவில் சிறு விடுதி வைத்து நடத்தும் ஹார்டென்ஸ் ( HARTENSE ) என்ற வயதான ஃபிரெஞ்சுக்காரி ஒருத்திக்கு அறிமுகமாகி அவளது இடத்தில் தங்குகின்றனர். இளமையில் பாரிஸில் காபரே நடனக்காரியாக இருந்த அந்த பணக்காரிக்கு நிறைய ஆண் உறவு இருந்தது. எல்லாம் கப்பல் தலைவர்கள். கடைசியாக ஒரு கப்பல்காரன் அவளை விதவையாக்கி இந்தத் தீவில் விட்டுவிட்டு இறந்து போனான். ஹார்டென்சுக்கு துணையாக அரை லூசும், மாலுமி விட்டுச் சென்ற “ காணவரோ ” ( CANAVARO ) என்ற கூண்டுக் கிளியுமிருந்தனர். ஊரில் லோலா என்ற ஓர் அழகிய இளம் விதவை. லோலாபேரில் ஊரில் பலருக்கும் காம இச்சையுண்டு. இளைஞனின் சுரங்கம், நில புலன்களை மாவ்ரண்டோனி என்பவன் பார்த்துக் கொள்ளுகிறான். இவனது மகன் பாவ்லோவுக்கு லோலா மீது பயங்கர காதல். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை.

ஹார்டென்சுக்கு அந்த வயதிலும் ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதை, ஜோர்பா பூர்த்தி செய்கிறான். தூர்ந்து சரிந்து பாழாகிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் புத்தியிர் பெற உள் கட்டுமானத்துக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அருகிலுள்ள மலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை அவ்வூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உரியவை. சுரங்கம் மீண்டும் உயிர் பெற்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ஜோர்பாவும், குட்டி முதலாளியும் அனுமதி பெற்று மரங்களைக் கீழே இறக்க திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் குட்டி முதலாளிக்கும் விதவை லோலாவுக்கும் காதல் உறவு ஏற்படுகிறது. அவளை நெருங்கும்படி ஜோர்பாவும் முதலாளிக்குத் தூபமிடுகிறான்.

முதல் கட்டமாய் கொஞ்சம் பேர் சுரங்கத்துள் இறங்குகிறார்கள். சுரங்கம் மீண்டும் குமுறி சரிகிறது. இதனால் மிகவும் மனம் தளர்ந்த முதலாளியை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஜோர்பா நடனமாடுகிறான். இந் நடனமும் அதன் பின் ஒலிக்கும் ஸ்பானிஷ் கிட்டார் வாத்திளய இசையும் மிக மிக ரம்மியமானது மட்டுமல்ல, முக்கியமும் ஆகும். படத்தின் ஜீவன் போன்றது. ZORBA என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதுகெலும்பு போன்றது இந் நடனமும் இசைவும். அதற்கான கிரேக்க நாடோடி கிட்டாரின் பெயர் “ சந்தூரி ” ( SANTOURI ) என்பது என்று கூறுகிறான் ஜோர்பா. எப்போதெல்லாம் தன் மனத்தில் தொய்வும், சோர்வும், தோல்வி மனப்பான்மையும் சோகமும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் நடனமாடுவதாக கூறுகிறான் ஜோர்பா.

“ என் மனைவி இறந்தாள், முதல் மகனும் இறந்தான். அப்போது நான் நடனமாடினேன். அதனால் இன்று நன்றாக இருக்கிறேன் “, என்கிறான்.

அன்றிரவு முதலாளி இளைஞனை லோலாவிடம் அனுப்பி வைக்கிறான்.

மறுநாள் அதைக் கொண்டாடும் விதமாக ரம் குடிக்க வைக்கிறான்.

“ ஜோர்பா, உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ” என்கிறான் இளைஞன். உடனே சட்டென்று தொடர்கிறான் ஜோர்பா.

“ சாத்தானும் கூட, பாஸ் ” , “ நாம் செய்யும் காரியங்களில் சாத்தான்தனமும் கலந்திருக்கு “ , என்கிறான்.

மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் வகுத்து முதலாளியின் ஒப்புதலைப் பெற்ற அவள் ஏதென்சுக்குப் போய் சில முக்கிய உபகரணங்களை வாங்கி வரப் போகிறான். திரும்பி வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. லோலா பேரில் அடங்காத காம இச்சை கொண்ட பாவ்லோ அவளோடு முதலாளி இளைஞன் இருப்பதை பார்த்துவிட்டு மனமுடைந்து கடலில் விழுந்து சாகிறான். இது பெரிய விஷயமாகிறது. தேவாலயத்துக்கு எல்லோரும் போகிற நேரம், லோலாவும் புறப்படுகிறாள். இறந்துபோன மகனுக்கு பழி வாங்க அவனது அப்பா முடிவெடுத்து ஊரார் முன்னிலையில், அவளைக் குத்திக் கொன்று விடுகிறான்.

மழை கடுமையான நிலையில் நனைத்தபடி ஃபிரெஞ்சுக்காரி ஹார்டென்ஸ் இறந்து போகிறாள் நாதியற்ற அயல்நாட்டுப் பணக்காரியான அவளது வீட்டுக்குள் அத் தீவின் பஞ்சத்திலடிபட்ட ஆண் பெண்கள் புகுந்து அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு போகின்றனர். அரசாங்கம் அவற்றை வசப்படுத்து முன் நாமே எடுத்துக் கொள்ளலாமென்று கத்தியபடியே அவர்கள் சூரையாடுகிறார்கள். இந்தக் காட்சியும் லோலாவின் படுகொலைக் காட்சியும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கடைசி முயற்சியாக, மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதைப் பார்க்க தேவாலயப் பாதிரியார் முதல் ஊரே கூடியிருக்கையில், அந்த முயற்சியும் பெருத்த தோல்வியில் முடிகிறது. ஊருக்கே திரும்பி விடுவதாய் முதலாளி இளைஞன் கூறுகிறான். ஜோர்பா மீண்டும் தனியனாய் நிற்கிறான். முதல் முறையாக தனக்கு நடனம் கற்றுத் தருமாறு ஜோர்பாவை முதலாளி கேட்கிறான். நடனமாடுதென்பது, தோல்வி, இழப்பு, மரணம் என்பதன்போது அத்துயரை மறக்கதான் செய்யும் காரியம் என்பான் ஜோர்பா. இப்போது அவன் இளைஞனுக்கு கடற்கரையில் நடனமாட ஒவ்வொரு அடியெடுத்து கற்றுத் தருகிறான்.

ஜோர்பாவாக ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN ) மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பரிந்துறைக்கப்பட்டவர். இளைஞனாக ALAN BATES –ம், லோலாவாக IRNE PAPA – வும் நிறைவாக செய்திருக்கின்றனர். இதன் இனிய இசையை மிகிஸ் ( MIKIS THEODU RAKIS) தியோடோராகிஸும், ஒளிப்பதிவை வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) யும் செய்திருக்கின்றனர்.

நவீன கிரேக்க சினிமாவின் மிக முக்கிய குறியீடாக பரந்துபட்ட பார்வையில் பேசப்படுபவர் தியோடோரோஸ் ஆஞ்செலோ பௌலோஸ் ( THEUDOROS ANGELO POULOS ). இவருடையது பிரமிப்பூட்டும் திரைப் படங்கள்.

தியோ ஆஞ்செலோ பௌலோஸ் ஏதென்சில் 1935-ல் பிறந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து விட்டு, ஃபிரெஞ்சு திரைப்பட பள்ளியான IDHEC – ல் திரைப்படக் கலையை கற்றவர். பிரான்சிலிருந்து 1964-ல் ஏதென்சுக்கு திரும்பியவர். ‘’ DIMOKRATIKI ALLAGI “ என்ற கிரேக்க தினசரி இதழில் 1967 வரை சினிமா விமர்சகராகப் பணியாற்றியவர். 1965-ல் இவர் திரைப்படமெடுக்கத் தொடங்கினார். 1968-ல் “ BROAD CAST “ என்ற குறும்படத்தை இயக்கினார். 1975-ல் இவரது “ THE TRAVELLING PLAYERS “ என்ற படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1988-ல் வெளியான இவரது “ LANDSCAPE IN THE MIST ”, 1991-ல் வெளியான ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “. GAZE 1996-ல் எடுத்த “ ULYSSES GAZE “ ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றவை.

சமகால உலக சினிமாவில் இவரது கிரேக்கத் திரைப்படங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியவை. அதே சமயம் இவரும் வேறொரு உலக சினிமா ஆளுமை – மேதையின் திரைப்படங்களால் பாதிப்பு பெற்றவர். இவரது முக்கிய பேட்டியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்று மிக முக்கியமானது. அந்த நேர்காணலில் அவர் இசையைப் பற்றி மிக விரிவாக பேசுகிறார். சத்யஜித் ரே தம் படங்களுக்கான இசை குறித்து பேசியதற்கு இணையானது தியோ ஆஞ்செலோபௌலோசின் இசைக் குறித்த கருத்துக்கள். இவரது படங்களில் இசைக் கோர்வை ரம்மியமாய், எடுப்பாய் சிலிர்க்க வைக்கும்.

இந்த நேர்காணலில் இவர், உலக சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ரஷ்ய திரைப்பட மேதை, ஆண்ட்ரீ தார்காவ்ஸ்கி குறித்து நிறைய சிலாகிக்கிறார். அவரோடு ஃபிரான்சில் கழித்த நாட்களை பெருமையோடு நினைவு கூர்கிறார். தார்க்காவ்ஸ்கியின் பாதிப்பு தியோவின் பல படங்களில் தெரிகிறது. ஆரம்பத்தில் தாம் ஜெர்மானிய தத்துவ நாடக மேதை BERTOLT BRECHT – ன் ஆளுமையால் முழுக்கவே பாதிக்கப்பட்டிருந்ததாயும் பிறகு அதிலிருந்து வெளியில் வந்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலின் மரணம் குறித்த கருத்துக்கு நேரெதிரான வழியில் படம் எடுத்ததாயும் கூறுகிறார்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தியோ ஆஞ்செலோ பௌலோசின்  ‘’ ALEXANDER THE GREAT “ 1980-ல் வெளி வந்தது. படம் தொடங்கும்போது ஒரு சிறு வாசகம் : கிரேக்க நாட்டை அந்நியர் படையெடுத்து தாக்க வருகையில் , மாசிடோனிய வீரர்களோடு அலெக்சாண்டர் என்ற வீர இளைஞன் போரிட்டு முறியடித்துத் துரத்தினான். அதன் பின் அவன் ஆசியாவின் பகுதிக்குள் நுழைந்து போரிட்டு, சிறைபட்டிருந்தவர்களை மீட்டான். நிறைய நாடுகளை வென்று மகா அலெக்ஸாண்டர் என்றானான்.

இதையடுத்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கோச்சு வண்டிகளும் குதிரைச் சவாரியுமாயிருந்த காலத்து கிரேக்கம். கிராமங்கள் பலதின் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அங்குள்ள பிரபுக்கள் ஆக்கிரமித்தும் பிடுங்கியும் சொந்தமாக்கிக் கொண்டதை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களை நியாயம் வேண்டி குரல் கொடுத்தவர்களை அரசியல் குற்றவாளிகளாய் அரசு சிறையிலடைத்திருந்தது. அவர்கள் ஒருநாள் சிறையிலிருந்து தப்பி காட்டுக்குள் நுழைகின்றனர்.

ஓரிடத்தில் வெள்ளைக் குதிரையொன்றும் நட்டு வைத்த வாளும், வாள் மீது பண்டைய கால கிரேக்க போர்வீரர் தரிக்கும் தலைக் கவசமும் இருக்கிறது. தப்பி வந்தவர்களில் தலைவனாயிருந்தவன் இவற்றை எடுத்து குதிரைமேல் ஏறி பயணமாகிறான். அவன் அலெக்ஸாண்டர் என எல்லாராலும் அழைக்கப்படுகிறான். அவனைத் தொடர்ந்து தப்பி வந்தவர்களும் அவனோடு இணைந்து ஒரு படையாக உருவாகிறார்கள். கிராமம் கிராமமாக அலெக்ஸாண்டர், அந்த ஹெல்மட் அணிந்து போர்வாளை இடையில் செருகி வெள்ளைக் குதிரைமீதமர்ந்து, தன் படையினர் முன்னும் பின்னும் நடந்து வர பயணித்து கிராமங்கள் தோறும் அறிமுகமாகிறான்.

போலீஸ் நிலையங்களில் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கொள்ளுகிறார்கள். ஏழெட்டு பிரபுக்களையும், சமாட்டிகளையும் கடத்தி வந்து பணயக் கைதியாய் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசுகிறான் அலெக்ஸாண்டர். தன்னிடமிருக்கும் சீமான்களையும் சீமாட்டிகளையும் விடுவிக்க, கிராம வாசிகளிடமிருந்து அபரிக்கப்பட்ட நிலங்களைப் பிடுஙகி உரியவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். அலெக்ஸாண்டர் மீதும், அவனது படையினர் மீதும் விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகி, பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இடையிடையே அலெக்ஸாண்டருக்கு காக்கய் வலிப்பு வந்து விடும். உடனே அங்குள்ள எல்லோரையும் திரும்பி நின்று முதுகைக் காட்ட கட்டளையிடுவார்கள் காப்டனின் வலிப்பு அவஸ்தை யாருக்கும் தெரிந்து விடலாகாது. ( ஜுலியஸ் சீசரின் விஷயமும் கூட ? ) இந்த அலெக்ஸாண்டர் என்பவன் முழு வழுக்கைத் தலையும் அதை சமன்படுத்தும் விதமாய் பின் சிகையை ஏராளமாய் வளரவிட்டும், தாடியை நீண்டு பறக்க விட்ட தலையைக் கொண்டவன். மனைவி கிடையாது. ஒரே ஒரு மகள், கிராமத்திலுள்ள பழைய வீட்டிலிருக்கிறாள். அலெக்ஸாண்டர் தன் படையுடன் தன் சொந்த ஊருக்கு, பணயக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

இவனுடைய படையைச் சேர்ந்த ஒருவன் பணயக் கைதிகளிலிருக்கும் அழகிய சீமாட்டி ஒருத்தியை கற்பழிக்க முயற்சிக்கையில் பிடிபட்டு அலெக்ஸாண்டரால் தூக்கிலிடப்படுவதோடு பெண் பயணக் கைதிகளை விடுவித்து விரட்டி விடுகிறான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பணயக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். அச்சமயத்தில் அரசு உயரதிகாரி நிறுத்தக் கோரி நிபந்தனைகள் ஏற்கப்படுவதாய்க் கூறுகிறார். ஆனால் விரைவில் அரசு இராணுவம் கிராமத்தைச் சுற்றி வளைக்கிறது.

தன்னை எதிர்த்து எதிர் புரட்சி செய்தவர்களைச் சுட உத்தரவிடுகையில் அலெக்ஸாண்டரின் மகளே தன் தாயின் திருமண உடை தரித்து சுடப்படுபவர்களோடு சேர்ந்து நின்று, “ நானும் அவர்களில் ஒருத்தியே ” என்கிறாள். அவளையும் சேர்த்து சுட்டுக் கொல்லுகிறார்கள். இதனிடையில் அலெக்ஸாண்டர் என்ற பெயர் கொண்ட சிறுவன் ஒருவனும் அவனது ஆசிரியர் ஒருவரும் படத்தின் முக்கிய பாத்திரங்களாய் வருகிறார்கள். ஆசிரியர்தான் எதிர் புரட்சியாளர்கள் உருவானதுக்கு பொறுப்பானவர் என்பதால் அவரும் சுடப்பட்டுச் சாகிறார்.

இராணுவம் அலெக்ஸாண்டரின் படையினரைச் சுட்டு காலி செய்த நிலையில் மகா அலெக்ஸாண்டரும் இறந்து கீழே சாய்கிறான். அடுத்த காட்சியில் கிரேக்க யுத்த ஹெல்மட்டணிந்த அவனது தலையளவு வெள்ளைக் கற்சிற்பம் தரையில் கிடக்கிறது. இராணுவத் தலைவன் பயந்து அதை நெருங்குகையில் குதிரைக் குளம்பொலி கேட்டு பயந்து ஓடிவிடுகிறான். சிறுவன் அலெக்ஸாண்டர் மட்டக் குதிரை மீதமர்ந்து போகிறான். அவன் மலை மீதிருந்து பார்க்க, நவீன மயமான கிரேக்க நகரம், அதன் பல மாடி கட்டிடங்களோடு தெரிகிறது. இப்படத்தின் கதையோட்டத்தின் வழியே ஆஞ்செலோ பௌலோசியின் அரசியல் சார்பும் தெரிய வருகிறது.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

1991-ல் இவர் எடுத்த ‘’ SUSPENDED STEP OF A STORK “ என்ற அரிய படம், தேசத்துக்க தேசம் கொண்ட எல்லை, போர் நிமித்தம் ஏற்படும் அகதிகள் வருகை, அதன் காரணமான பிரச்சினைகள் உள்ளிட்டது. உலகப் போரின் போதே ரஷ்யாவிலிருந்த ஏராளமான கிரேக்கர்கள் அகதிகளாக கிரீஸுக்கு திரும்பி வந்து பிரச்சினைகள் ஏற்படுத்திய வரலாற்றை இப்படம் ஓர் உரையாடலில் தெரிவிக்கிறது. துருக்கியும் அல்பேனியாவும் கிரேக்கத்துக்கு அண்டை நாடுகள். சற்று தள்ளி இத்தாலிவுமிருப்பதால் இங்கேற்படும் போர்களின் போது பீதியில் மக்கள் அகதிகளாக கிரேக்க பூமிக்குள் நுழைவது வழக்கம்.

சமீபத்தில் நடந்த துருக்கி, சிரியா போர்களின்போது அகதிகளின் வருகை பெருகியது. இந்த பின்னணியில் கிரேக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எவ்வித காரணமுமின்றி மறைந்து விடுகிறார். கொலைக் காட்சி ஊடகம் ஒன்று, அகதிகள், அவர்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகளை பதிவு செய்ய வருகிறது. அதன் முக்கிய மைய இயக்குனரான இளைஞன் ஒருவனுக்கு மறைந்து போன அரசசியல்வாதியைக் கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகிறது. அந்த அரசியல்வாதியை அறிந்தவர்களும் கூட அறியாதவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

அவரோடு நன்கு பழகி உறவு கொண்ட அயல்நாட்டுப் பெய் ( தனக்கு கிரேக்கமொழி தெரியாது என்று சொல்லிக் கொண்டவள் ) தொலைக்காட்சிக்காரனுக்கு அறிமுகமாகி சிலவற்றைக் கூறுகிறாள். உபயோகமற்று ரெயில்வே வெளியில் நிற்கும் நிறைய ரயில்பெட்டிகள் அகதிகள் தங்குமிடங்களாயிருக்கின்றன. அகதிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து கிரேக்கம் ஊதிப் பெருக்கும்போது, அவர்களின் வருகைக்கு தடை விதிக்கிறது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அந்தந்த எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவம் காவல் புரிகிறது. டி.வி.காரன் தன் கிரேக்க ராணுவ கர்னலின் உதவியுடன் தைரியமாக சுற்றுகிறான்.

ஒருமுறை எல்லைக்கு அழைத்துச் சென்று, கிரேக்க எல்லைக் கோடான நீல நிறக் கோட்டைக் காட்டி கூறுகிறார். “ இந்தக் கோட்டைத் தாண்டி சும்மா, ஓர் அடி வைத்து விடமுடியாது. வச்சா ? ” என்று கூறி வலதுகாலை உயர்த்துகையிலேயே, அடுத்த நாட்டு இராணுவ அதிகாரி துப்பாக்கியுடன் விரைந்து வருவது தெரிகிறது. அடுத்து என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “ என்பது.

அவன் பனிமழையில் ஒரு ரயில் பெட்டிக்குள் நுழைய கூடவே ஒரு மனிதன் வருகிறான். அம்மனிதனின் அனுமதியின்றி நுழைந்ததற்கு மன்னிப்பு கோரி பனிக்காக அண்டுகிறான் டி.வி.காரன். அந்த அகதியின் தோற்றமும் முகமும் டி.வி.காரனக்கு சந்தேகத்தையும் நம்பிக்கையையும், ஆர்வத்தையுமூட்டுகிறது. ஒரு பையன் ஓடி வந்து ரொட்டி வினியோகம் செய்து விட்டு, “ காற்றாடி பற்றி கதை சொல்லு ” என்று அகதியைக் கேட்க, அகதி, காற்றாடி ( பட்டம் )யிலிருந்து, ராக்கெட், அதிலிருந்து வான எல்லை, நாடுகளின் எல்லைகள் வரை சொல்லி விட்டு, மேற்கொண்டு இன்னொரு நாள் பேசலாமென்கிறான்.

டி.வி.குழு ரெயில்வே பெட்டிகளை, அங்கு வசிக்கும் ஏராளமான – கணக்கில் வராத அகதிகளைப் படமாக்குகிறது. அறைக்கு வந்து T.V. இளைஞன் பழைய படம் ஒன்றைப் போட்டு, மறைந்துபோன கிரேக்க வம்சாவளி மந்திரியின் பேச்சையும், முகத்தையும் ZOOM செய்து கவனிக்கிறான். அவன் சந்தேகம் தீருகிறது. ரயில்பெட்டியில் பார்த்த நபரேதான். டி.வி.காரனும் அவனது குழுவும் வருகை தரும் உணவு விடுதியில் ஓர் இளம்பெண் இவனையே உற்று கவனிக்கிறாள். இவனது அறை வரை வந்து விட்டு, தான் போக வேண்டுமென்று கூறி போய் விடுகிறாள். அந்த இளம் கிரேக்க வம்சாவளி அகதிப் பெண் டி.வி.காரனின் மற்றொரு கேள்விக்குறி.

ஒருநாள் அவளிறியாது பின் தொடர்ந்து அகதிக் குடியிருப்பிலுள்ள அவளுடைய இடத்தையடைகிறான். தனக்கு இளைய குழந்தைகள் இரண்டைப் படுக்க வைத்து விட்டு கூறுகிறாள். பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றுக்கு அப்பாலிருந்து அகதிகளாய் வந்ததையும், அம்மா இறந்ததையும், அப்பா டெலிஃபோன் பழுது பார்ப்பவராய் வேலை பார்ப்பதாய் கூறுகிறாள். மோசமான பருவநிலையால் டெலிபோன்கள் நிறைய பழுதடைந்ததால் இராப்பகலாக மஞ்சள் சீருடையில் டெலிபோன் பணியாளர்கள் மழையில் வேலை செய்கிறார்கள். அப்பெண்ணின் அப்பா வருகிறார். டி.வி.காரனுக்கு மேலும் ஒரு திடுக்கிடல். வந்தவர், அகதிகள் ரயிலில் பார்த்த அதே ஆள். தங்களோடு உணவருந்த அழைக்கிறார்.

இரண்டொரு நாட்களில் ஆற்றுக்கு மறுபுறமுள்ள தேசத்திலிருக்கும் இளைஞனுக்கும், இங்குள்ள டெலிபோன்காரரின் பெண்ணுக்கும் சோகமான கல்யாணம் நடக்கிறது.மறுகரையில் மணமகனும் அவனைச் சேர்ந்தவர்களுமாய் நிற்க, இக் கரையில் மணப் பெண்ணும் அவள் தந்தையும், மற்ற அகதிகளும் நிற்க, பாதிரியார் சைக்கிளில் வந்து ஆணும் பெண்ணும் அகதிகளால் ஆறு பிரிக்க விலகி நிற்கும் நிலையிலேயே திருமணச் சடங்கை முடித்தவராய்ப் போகிறார்.

“ என் கணவன் ஒருநாள் ஆற்றைக் கடந்து வந்து என்னை அழைத்துப் போகப் போகிறான் ” , என்று மணப்பெண் கூறுகிறாள்.

” நீங்கள் எனக்கு காற்றாடி கதையை சொல்லி முடிக்கவில்லையே ” என்று கேட்கிறான் ரொட்டி வினியோகிக்கும் பையன்.

” நீயே முடிவை அனுமானித்துக் கொள் ”, என்கிறார். மணப்பெண்ணின் தந்தையும் டெலிபோன் பணியாளருமான அகதி. டி.வி.கார இளைஞனைப் பொறுத்தளவு அவனும், கிரேக்க மக்களும் தேடும் மறைந்துபோன மந்திரியும் அவராகத் தானிருக்க வேண்டும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. டி.வி.குழு புறப்படுகிறது.

இப்படத்தில் காணாமற்போன மந்திரியாகவும், அகதியாக டெலிபோன் பணியாளராக வரும் மிகச் சிறந்த இத்தாலி நடிகரும், சர்வதேச அளவில் புகழும் பரிசும் பெற்ற மார்செல்லோ மாஸ்ட்ராயினி நடிக்கிறார். தியோ ஆஞ்செலோபௌலசின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி

அப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளிகளில் வருடத்தில் ஒரு முறையோ, இரு முறையோ திரைப்படங்கள் போட்டுக் காட்டுவார்கள். எல்லாப் பள்ளிகளிலும் இருக்காது. சேலம் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் நான் மூன்றாம் படிவம் (எட்டாம் வகுப்பு) படிக்கையில் (1956) அப்பள்ளியின் புனித இஞ்ஞாசிரியர் கூடத்தில் (ST. IGNASIOUS HALL) இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்பள்ளிக்கென்று சொந்தமான சினிமாப்படம் போட்டுக் காட்டக்கூடிய 16 M.M புரொஜக்டரும், திரையுமிருந்தன. அப்படியாக ஒருநாள், வகுப்பாசிரியர் உணவு இடைவேளைக்குப் பின் தெரிவித்தார்.

இன்னைக்கு இக்னேஷியஸ் ஹாலில் ஒரு ஈரானிய சினிமா காட்டறாங்க. “பிம் தி லிட்டில் டாங்கிணு. மூணு மணிக்கு ஷோ. எல்லாரும் ஒழுங்கா அமைதியா போய் பார்த்துட்டு, படம் முடிஞ்சதும் ஓடிடக் கூடாது. வகுப்புக்கு வரணும். வழக்கம் போல ப்ரேயர் உண்டு.”

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்
Image Credit: MUBI

BIM, THE LITTLE DONKEY– “பிம் என்னும் கழுதைக் குட்டி” எனும், சிறுவருக்காகத் தயாரிக்கப்பட்ட அந்த ஈரானிய கருப்பு வெள்ளைத் திரைப்படம் கிட்டத்தட்ட மௌனப் படம். ஆங்கிலத்தில் வருணணையிருந்தது. உயர் வகுப்புகளுக்கு விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வகுப்பு எடுப்பவரும், N.C.C. முதல்நிலை ஆபீசருமான ஆசிரியர் வைத்தியநாத ஐயர் மைக்கில் ஒவ்வொரு காட்சியின் வருணனையையும் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஈரானியச் சிறுவர்களுக்கு கழுதைக் குட்டிகளைக் கொடுத்துப் பராமரிக்கச் சொல்லுவது ஒரு காலத்து வழக்கமாயிருந்தது. அவர்களில் ஒரு சிறுவன் அப்துல்லா. அவனது கழுதைக் குட்டியின் பெயர் பிம். சிறுவர்கள் தத்தம் கழுதைகளோடு கொஞ்சி விளையாடி மேய்த்து வருகையில், அந்நாட்டுக் குட்டி இளவரசன் மசூத், தன் கழுதைக்குட்டி மீது சவாரி செய்து கொண்டு வருகிறான். அவனுக்கு உதவியாக ஒரு பையன். இளவரசனின் கழுதை திடீரென நகராமல் நின்று விடுகிறது. உட்கார்ந்த நிலையிலேயே கழுதைக் குட்டியின் வயிற்றை இரு கால்களால் உதைத்துக் கிளப்ப முயற்சித்தும் முடியவில்லை. உதவிப் பையன் அதன் வாலைப் பிடித்து முறுக்கிச் சுழற்றியெல்லாம் பார்க்கிறான்.

இளவரசன் இறங்கிக் கழுதையை கஷ்டப்பட்டு இழுக்க, உதவி, பின்னாலிருந்து தள்ள அரண்மனைக்குள் போய்விடுகிறார்கள். அப்துல்லாவும் மற்ற சிறுவர்களும் இதையெல்லாம் பார்த்துச் சிரிக்கிறார்கள். இதனால் கோபமும் பொறாமையும் கொண்ட மசூத், அப்துல்லாவின் அழகிய கழுதை பிம்மை ஆட்களைவிட்டு திருடிவரச் செய்து கட்டிப்போட்டுவிட்டு அப்துல்லாவையும் சிறையில் அடைக்கிறான். பிம்மை மசூத் துன்புறுத்துகிறான். அதன் உடலெங்கும் வெள்ளை வண்ணம் அடிக்கிறான். காதுகளைக் கத்தரிக்கிறான். பிறகு அப்துல்லாவுக்கும் பிம்முக்கும் உள்ள பாசம், அன்பு, வாஞ்சையெல்லாம் மசூத்துக்குப் புரிகிறது. தன் தவறுக்கு வருந்தி, பிம்மீதும் அப்துல்லாமீதும் அன்பும் இரக்கமும் கொள்கிறான்.

இருவரையும் விடுதலை செய்து சினேகமாகிறான். அதேசமயம், மசூதின் தந்தையான அரசரின் மதிய சாப்பாட்டை பிம் சாப்பிட்டு விடவே, மன்னர் கட்டளைப்படி பிம் கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகிறது. போகிற வழியில் திருடர்கள் களவாடி, படகில் வைத்துக் கடல் வழியே அடுத்த தேசத்துக்கு தப்பிச் செல்லுகின்றனர். மசூது சிப்பாய்களையும் அப்துல்லாவையும் ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கழுதைக் கள்வர்களைக் கடலில் துரத்திச் சென்று பிம்மை மீட்கிறான். அப்துல்லாவும் பிம்மும் மசூதும் இணைபிரியா நண்பர்களாயிருக்கின்றனர். சக மனிதனையும், பிற பிராணிகளையும் அன்போடு நேசித்துப் பழகுதலின் அவசியத்தைச் சொல்லும் இவ்வரிய ஈரானிய கருப்பு வெள்ளைப் படம் 1951இல் எடுக்கப்பட்டு 1954இல் வெளிவந்திருக்கும் விவரங்களை சமீபத்தில் கூகுளில் தேடிப் பிடித்தறிந்தேன்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்
ALBERT LAMORISSE

அன்றைய ஈரானில் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் என்பதெல்லாம் அரிது. ஃபிரெஞ்ச் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஈரானில் படம் பண்ணியிருக்கிறார்கள். அந்த வகையில் BIM THE LITLE DONKEY படத்தை ஆல்பர்ட் லமூரிஸ் (ALBERT LAMORISSE) எனும் பிரெஞ்ச் இயக்குனர் இயக்கியிருக்கிறார். இவரே கதையை எழுதியிருக்க, வருணனை செய்தவர் JACQUES PREVERT. படத்தில் மசூதின் நகராத கழுதையை இழுத்துச்செல்லுகையில் பின்னணியில் இசைக்கப்படும் இசை, கழுதை கத்துவது மாதிரியே இருக்கிறது. இசையமைப்பு செய்தவர் GEORGES IGUERBOUCHEN என்பவர். அரிய கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு செய்திருப்பவர் ANDREY COSTEY மற்றும் GUY TABARY.

இன்று, உலகத் திரைப்பட வரைபடத்தில் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் ஈரானிய சினிமா மத ரீதியான கட்டுப்பாடுகளிடையேயும், அரசின் கட்டுப்பாடான கெடுபிடிகளிடையேயும், சமூகக் கட்டுப்பாட்டு வரம்புக்குள்ளும் சிக்கியிருக்கிறது. இவற்றை மீறி பல படங்கள் வெளியுலகையடைய தாமே தம்மைக் கடத்தப்பட்டுத்தான் திரைப்பட விழாக்களில் காட்டப்படுகின்றன. அவ்விதமான சிறந்த ஈரானியத் திரைப்படங்களின் முன் வரிசையில் நிற்பவை, புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட மேதையெனக் கருதப்படும் மொஹசென் மக்மல்பாஃப் (MOHSEN MAKHMALBAF) படங்களாகும். இவரது மூத்த மகள் சமீரா மஹ்மல் பாஃப் (SAMIRA MAKHMAL BAF) சிறந்த திரைப்பட கர்த்தாவாக; தந்தையின் கதைகளை, தந்தையின் எடிட்டிங், வழிகாட்டல் துணையோடு படங்கள் செய்வதால் இருவரையும் இணைத்தே பேசுவதும் சரியாகப்படும்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

90–களின் தொடக்கத்தில் மொஹசென் மக்கல் பாஃப் ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கினார். “A MOMENT OF INNOCENCE” எனும் அப்படத்துக்கு ஈரானின் மதம் முதல்வாத சமூக–அரசியல் போக்கில் பலத்த எதிர்ப்பு இருந்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவால் படம் நாசமாகும் அல்லது தடை செய்யப்படும் என்ற யோசனையில் மஹமல் பாஃப் அதை சமர்ப்பிக்கவில்லை. முதலீடு செய்த தயாரிப்பாளர் பெருங் கவலையில் ஆழ்ந்து போனதைக் கண்ட இயக்குநர் மக்மல் பாஃல் தம் வீட்டையே விற்றுப் பட முதலாளிக்குத் தர வேண்டியதைக் கொடுத்தனுப்பினார்.

மொஹசென் மக்மல் பாஃப் ஒருமுறை கூறினார், “ஈரானில் பூகோளம், கணிதம், பௌதிகம் என்று எல்லாமுமே ஒரு மதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.” “ஆஃப்கானிஸ்தானம்” என்றவுடனே நமக்கு நினைவுக்கு வரும் இடம் கந்தஹார். இந்திய விமானம் ஒன்றும், பயணிகளும் தாலிபான் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாய் வைக்கப்பட்டு சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுவிக்க பேரம் பேசப்பட்ட விமான நிலையம் உள்ள நகரம் கந்தஹார் (காந்தாரம்) இந்த கந்தஹாரின் பெயரைக் கொண்ட படத்தை வெகுசிறப்பாகத் தயாரித்து இயக்கியிருக்கிறார் மக்மல் பாஃப். உலகின் சிறந்த பத்திரிகைகளாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் 2001 கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் பரிசை வென்றது. ஆப்கானிஸ்தானத்துக்குள் நுழைய முற்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையின் ஊடாக, மனிதனின் தளராத நம்பிக்கையையும், தீரத்தையும் கூறும் படம் கந்தஹார் கனடாவில் குடியேறிய ஆப்கானியப் பெண் நஃபாஸ் ஒரு பத்திரிகையாளர்.

அவள் தன் சகோதரியைச் சந்திக்கும் ஆர்வத்தில் கஷ்டப்பட்டு ஆப்கன் பகுதிக்குள் வரும் நஃபாஸ், தாலிபான் தீவிரவாதிகள் புதைத்த கண்ணிவெடி வெடித்து அடிபடுகிறாள். தாலிபான் தீவிரவாதத்துக்கு ஆட்பட்ட ஆப்கனிஸ்தான் பொதுமக்கள், படும்துயரை, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சக்திமிக்க காமிராவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணினம் தாலிபான்களால் மதக் கட்டுப்பாடென்று கொடுமைப்படுத்தப்படுவதை நஃபாஸ் பார்க்கிறாள். மூன்று நாள் கழித்து வரவிருக்கும் சூரிய கிரகணத்தன்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாய் பிரகடனப்படுத்துகிறாள் நஃபாஸ்.

தலையிலிருந்து பாதம் வரை புர்கா அணிந்து அவள் அகன்று விரிந்த பாலைவனத்தில் பயணிப்பது, வழியில் கொள்ளையர்களை எதிர்கொள்வது, இறந்து கிடக்கும் பிணங்களின் ஆடைகள், காலணிகள், பிற உடைமைகளைத் திருடர்கள், திசை தெரியாது அலையும் நாடு கடத்தப்பட்டவர்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், கண்ணி வெடிகளில் சிக்கி ஊனமானவர்கள், என பல்வேறு மக்களை சந்திக்கும் நஃபாஸ், இறுதியில் ஒரு திருமணக் கும்பலில் சிக்கி அதுவே தீர்வுமாகி அவர்களோடு சேர்ந்து கந்தஹார் நகரை நெருங்குகிறாள். ஒரு பெண்ணின் அற்புதமான பயங்கர பயண அனுபவமாகவும் போகிறது படம். மக்மல் பாஃப் அற்புதமாய் இயக்கியுள்ள இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவு எப்ராஹிம் கஃபூரி (EBRAHIM GHAFOURI) யின் காமிராவில் வெளிப்படுகிறது.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

மொஹசென் மக்மல் பாஃப் மற்றொரு குறிப்பிடத்தக்க ஈரானிய திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். 1987– ல் வெளியான “THE CYCLIST” எனும் படம் ரிமினி சினிமா சர்வதேச திரைப்பட விழாவில் (RIMINI – CINEMA INTERNATIONAL FILM FESTIVAL) சிறந்த படத்துக்கான “தங்க R” பரிசு (GOLDEN – R) பெற்றது.

ஆப்கானிஸ்தானத்திலிருந்து தாலிபான்களின் அட்டகாசம் தாங்காது, அமெரிக்கக் குண்டு வீச்சிலிருந்தும் கண்ணி வெடிகளிலிருந்தும் உயிர் தப்ப ஏராளமான பேர் அகதிகளாக ஈரானுக்குள் நுழைந்தனர். அப்படிப்பட்ட ஆப்கன் அகதி நஸ்ஸிம். அவனுடைய மனைவிக்கு முற்றிய கான்சர். ஈரானிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளது சிகிச்சைக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. ஆப்கன் அகதிகளை குறைந்த தினக் கூலியில் கடுமையான வேலை செய்ய கூவியழைத்து லாரியிலேற்றிக் கொண்டு போகிறார்கள். நஸ்ஸீமும் அவனது சிறு வயது மகனும் அவதிக்குள்ளாகின்றனர். அவனது வறுமையையும் பணத்தின் அவசரத் தேவையையும் உணர்ந்து கொண்ட அவனது நண்பன் ஒருவன் அவனது பரிதாப நிலையை பணம் பண்ணும் விதமாய் உபயோகிக்க எண்ணுகிறான்.

விடாமல் நிற்காமல் ஒரு வாரத்துக்கு நஸ்ஸீமை சைக்கிள் ஓட்டிக் காட்டும்படி கூறுகிறான். இதுபோன்ற “ஹடயோகம்” நம்மூர்களிலும் எனது இளம் வயதில் பார்த்திருக்கிறேன். சைக்கிள் ஓட்டினபடியே சாப்பாடு, குளியல், கழிதல் எல்லாவற்றையும் செய்வார்கள். பந்தயம் கட்டிக் கொண்டு 24 மணிநேரமும் இடைவிடாது மூன்று நான்கு நாட்களுக்கென்று பொது மைதானத்தில் சைக்கிளில் வட்டம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்த ஒலிபெருக்கியில் சினிமாப்பாட்டு வைப்பார்கள். நஸ்ஸீமை வைத்து லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி கொள்ளை லாபமடிக்க முயற்சி நடக்கிறது. அவனது மனைவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். எப்படியும் பணம் சம்பாதித்து மனைவியைக் காப்பாற்றிவிட, மனஉறுதியோடு நஸ்ஸிம் சைக்கிள் விடுகிறான். நஸ்ஸீமின் திறமைகளாக இருப்பது–இல்லாததையெல்லாம் ஈரானிய ஜனங்களுக்கு விளம்பரமாகத் தரப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு இரவு பகலாக இடைவிடாது ஆப்கன் சைக்கிள் சாம்பியன் நஸ்ஸீம் சைக்கிள் ஓட்டும் விஷயம் படத்தில் ஓடுகிறது. நஸ்ஸீமின் துன்பம் பணமாகிறது. ஆறாவது நாள் இரவு, நஸ்ஸீம் மயக்கமுற்று விழுகிறான். ஜனங்கள் யாருமில்லாத அந்த நடு இரவு நேரம். அந்தப் போட்டியை ஏற்பாடுசெய்த அவனது நண்பனும் இன்னொருவனும் ரகசியமாக ஓரிடத்துக்கு நஸ்ஸீமைத் தூக்கிச்சென்று படுக்கவைக்கின்றனர். நஸ்ஸீமுக்குப் பதிலாக அவன் நண்பன் பணப்பந்தயத்தை முன்னிட்டு, முகத்தை, தலையையெல்லாம் மூடிக்கொண்டு அந்த இரவு முழுதும் சைக்கிள் ஓட்டுகிறான். காலையில், உடல் தேறிவிட்ட நஸ்ஸீம் சைக்கிள் ஏறுகிறான். பந்தய நாட்கள் முடிவடையவும், ஏராளமான பாராட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் நஸ்ஸீமின் மனைவி கான்சரோடு போராடித் தோற்று மரணமுறுகிறாள்.

மக்மல் பாஃப் ஈரானிய மக்களின் சமூகப் பிரச்சினைகளை மிக யதார்த்தமாய் தம் படங்களில் தொடுகிறார். வறுமையின் தாக்கத்தையும் அதன் சாக்காய் வைத்து ஒருவரையொருவர் சுரண்டி வாழ்வதை தம் படத்தில் பளிச்சென காட்டுகிறார். மொஹரம் ஸாய்நல் ஸடேஷ் (MOHARRAM ZAYNAL ZADEH) என்பவர் சைக்கிளோட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சமீரா மக்மல் பாஃப் திரைப்படமாக்கல் கலையைத் தன் தந்தை மொஹசென் மக்மல் பாஃயிடமிருந்து கற்றவர். தன் 14–வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட சமீரா 17-வது வயதிலிருந்து திரைப்படம் எடுக்கத் தொடங்கியவர் என்பது வியப்பளிக்கிறது. எவ்விதச் சுதந்திரமும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட சமூக– அரசியல் சூழல்! சமீராவின் முதல் முயற்சியாக இயக்கப்பட்ட ஈரானின் திரைப்படம், “APPLE” குறிப்பிடப்பட வேண்டிய படம். இப்படத்தில் இரு சிறுமிகள் பேச்சுத் திறனற்ற சகோதரிகள். அவர்களை தகப்பன் வீட்டில் வைத்து பூட்டி வைத்திருக்கிறான். குளித்தே மாதக் கணக்காகிறது. எப்படியோ அக்கம்பக்க ஜனங்கள் மனித உரிமைக் காவலர் சங்கத்துக்கு தெரியப்படுத்தி புகார் அளித்ததின் பேரில் சங்கம் அனுப்பி வைத்த பெண்மணியொருத்தி, தகப்பனை வீட்டைத் திறக்க வைத்து சிறுமிகளை விசாரிக்கிறாள்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

அதற்கொரு பரிகாரம் செய்வது படம். இந்த அரிய சமூகப் பிரச்சினை முன்னிட்ட படமே சமீராவின் புகழுக்கு வித்திட்டது. பிறகு அவர் இயக்கிய, “THE BLACKBORDS” எனும் திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்படம் குர்திஷ் மக்களின் நெருக்கடியானதொரு வாழ்க்கை நிகழ்வைச் சொல்லுகிறது. ஈரானுக்கும் ஈராக்குக்கும் மூண்ட போர் பயங்கரமானது. இரசாயன வெடிகுண்டுகள் வீசப்பட்ட யுத்தம். இச் சூழலில் ஒரு இளம் ஆண் ஆசிரியர்கள் ஈரானிய–குர்திஸ்தான் பகுதியின் மலைகள் வழியே, கரும்பலகைகளை முதுகில் சுமந்துவாறு மாணவர்களைத் தேடி மலைக்கிராமங்களில் அலைகிறார்கள். கரும்பலகைகள் பெரியவை என்பதால் அவற்றின் மறைவில் ஒளிந்து கொள்ளவும், யுத்த நேரமாதலால் குண்டடியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன.

ஆசிரியர் கூட்டத்திலிருந்து இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில்–வழியில் நடக்கையில் ஒரு ஆசிரியர் சிறுவர் கூட்டமொன்றோடு சேர்கிறான். அச்சிறுவர்கள் கள்ளச் சந்தையில் கிடைத்த தடை செய்யப்பட்ட அயல்நாட்டுப் பொருட்களை ஈரான் – குர்திஸ்தான் எல்லையில் கொண்டு போய் விற்கும் படிப்பறிவற்ற சிறுவர்கள். ஆசிரியர் படிப்பு சொல்லித்தர கேட்டால், அவர்கள் தேவையில்லையென மறுக்கிறார்கள். மற்றொரு ஆசிரியர் வயதான குர்திஷ் மக்கள் இரசாயன குண்டுவீச்சுக்கு பயந்து ஈரானிலிருந்து தங்கற்ள குர்திஸ்தான் கிராமத்துக்குப்போக முற்படுகிறவர்களோடு சேருகிறான் அதில் ஒருசில கிழவர்கள் சிறுநீர் கழிக்க முயற்சித்தும் கழிக்க முடியாமல் மரண அவஸ்தையுறுகிற காட்சியை சமீரா பிரமாதமாய் படமாக்கியுள்ளார். அந்தக் கூட்டத்தில் கணவனையிழந்து ஐந்து வயதுப் பையனோடு உள்ள இளம் பெண்ணுக்கும் ஆசிரியருக்கும் முடிச்சு போடும் வேலை நடக்கிறது.

வேண்டா வெறுப்பாக பெண் இசைகிறாள். பெண்ணுக்குச் சீதனமாக தரும் வழக்கமாய் தர பணம் எதுவுமில்லாத ஆசிரிய இளைஞன் தன்னிடமுள்ள ஒரே ஒரு ஜங்கம சொத்தான கரும்பலகையை அளக்கிறான். கல்யாணமாகி அந்தப் பெண் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆசிரியர் எவ்வளவு பேசியும் அவள் பேசுவதுமில்லை, முகம் கொடுத்துப் பார்ப்பதுமில்லை. ஒரு கிழவன் தனக்கு வந்த கடிதமொன்றை ஆசிரியரிடம் தந்து படித்துக் காட்டச் சொல்லுகிறான். அக்கடிதம் யுத்த களத்திலிருக்கும் கிழவனின் மகன் அனுப்பியது. ஆனால், அரபிக்கில் எழுதப்பட்ட கடிதம். ஆசிரியரால் அதைப் படிக்க மட்டுமே முடியும். ஆனால் பொருள் தெரியாதென்றாலும் ஒருவாரு படித்து எதையோ சாதகமாகச் சொல்லி வைக்கிறான். பிறகு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்வதாக சொல்ல, விவாகரத்தும் நடக்கிறது. சீதனமாய்த் தந்த கரும்பலகை பெண்ணைச் சேரும் என்பதால் அதையும் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக நடக்கிறான ஆசிரியர். கூட்டம் இறுதியில் தங்கள் குர்திஸ்தான் கிராம எல்லையை அடைகிறது.

BLACK BOARD திரைப்படத்தின் இயக்கத்துக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு ஒனன்றை அவருக்கும் ஸ்வீடிஷ் பட இயக்குனருக்கும் பகிர்ந்தளிக்ககப்பட்டது. குர்திஷ் மக்களின் படுதயர் குறித்த அக்கறையும் கவலையும் ஈரானியத் திரைப்பட பெண் இயக்குனர் சமீராவுக்குத்தான் இருந்திருக்கிறது. சயத் மொஹம்மதி பெஹனாஜ் ஜாஃபரி போன்றோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எப்ராஹிம் கஃபூரியின் காமிரா கோணங்களும் எம்.ஆர்.தர்வீஷின் இசைக் கோர்வையும் படத்தின் கூடுதல் சிறப்புக்குத் துணை நிற்பவை. சமூக–அரசியல் ரீதியாய் மக்களுக்கு நேரும் அநீதியை எதிர்த்துப் போராடும் உணர்வுகளைத் தெரிவிக்க ஒரு ஆயுதமாகத் தன் திரைப்படக் கலையைப் பயன்படுத்துகிறார் சமீரா.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

அதன்பிறகு சமீரா “AT FIVE IN THE AFTERNOON” என்ற திரைப்படம் செய்தார். இப்படம் அந்நாட்டு மக்களின் துன்பத்தையும் தவிப்பையும் மட்டும் எடுத்துச் சொல்லாமல் எதிர்பார்ப்பு மிக்க பெரு நம்பிக்கையையும் பேரவாவையும் வெளிப்படுத்துகிறது. இப்படமும் அவ்வாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் பரிசைப் பெற்றது. ஆஃப்கானிஸ்தானிய மக்களின் துயர வாழ்வின் பேரில் சமீரா மிகுந்த அக்கறை கொண்டவர். இன்று, உலக நாடுகளில் பெரும்பான்மை, ஆஃப்கன் மக்களுக்கு மருந்து, உணவு, பணம் அவசியம் என உணர்ந்து உதவி செய்ய முன்வருவதை அன்றே உணர்ந்து பரிசளிப்பை ஒட்டி நடந்த பேட்டியில் சமீரா கூறியதாவது:

“ஃப்கானியர்கள் மேற்கு தேசங்களின் ஏகாதிபத்திய இருண்ட மூட்டத்திலிருந்து மீண்டெழவேண்டுமானால் அவர்களுக்கு பணமும் பிற அத்தியாவசிய பொருட்களும் தேவையென்பதை எனது திரைப்படம் உலகத்துக்குச் சொல்லும் என்று நம்புகிறேன்” என்பதாகும்.

இந்தப் படம் ஒரு வயதான வண்டிக்காரன், அவன் மகள், மருமகள், அவளுடைய குழந்தை என்று நான்கு பேர் வாயிலாகச் சொல்லப்படும் கதையைக் கொண்டது. தாலிபான் கெடுபிடி ஓய்ந்த பிறகான சூழலையும் கொஞ்சம் பார்க்கிறது படம். இன்றைக்கு ஆப்கானிஸ்தானத்தில் மீண்டும் பழைய பயம், நடுக்கம் எல்லாம் திரும்பியிருக்கிறது. தாலிபான்கள் வருகையின் போது ஏராளமான மக்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். விமானத்தை எதிர்நோக்கி லட்சக்கணக்கில் மக்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ரயிலிலும் பஸ்ஸிலும் இடம் கிடைக்காமல் மேற்கூரை மேலேறிப் பயணிப்பதுபோல விமானத்தின் இறக்கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும், கூரை மேல் ஏறிப்படுத்தும், சரிந்து விழுந்து இறந்தும் போன மக்களை காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்ததைப் பார்த்தோம். இதை AT FIVE IN THE AFTERNOON படத்தில் வண்டிக்காரக் கிழவன் பேசும் இறுதி வசனமாக, “எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லை”, என்பதை சமீரா எழுப்புகிறார்.

Bioscope Karan 21th Web Article Series by Vittal Rao. This Series About Iran movies பயாஸ்கோப்காரன் மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி 21– விட்டல்ராவ்

2011–ல் “SEPARATION” என்ற ஓர் அதியற்புத ஈரானிய திரைப்படம் வெளிவந்து மிகச் சிறந்த படத்துக்கான பல பரிசுகளைப் பெற்றது. ஓர் இளம் ஈரானியத் தம்பதிகள். அவர்களின் பதினோறு வயதுப் பெண்ணுக்கு வெளிநாட்டுப்படிப்பு கிடைத்து பெண்ணோடு வெளிநாட்டுக்குப் போய் விட பள்ளியாசிரியையான அம்மா விரும்பி சகல ஏற்பாடுகளையும் செய்ய, பெண்ணின் தந்தை வர மறுக்கிறான். அவனுடைய வயதான தந்தை “ அல்ஜமீயர் ” நோயால் தகுந்த துணையின்றி இயங்க முடியாதிருக்கிறபடியால் தன்னால் வர முடியாதென்கிறான். மகளின் எதிர் காலம்தான் முக்கியமென கூறும் மனைவி விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கிறாள். பெண்ணுக்கு அம்மாவும் வேண்டும், அப்பாவும் வேண்டும். மனைவி பிரிந்து போய் விட்ட நிலையில் கணவன் மனநோயாளி தந்தையையும் பெண்ணையும் வைத்துச் சமாளிக்கத் திணறி அப்பாவைக் கவனித்துக்கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்துகிறான்.

அவள் பெரியவரை சரியாகக் கவனிக்காத நிலையில் அவர் நழுவி எங்கோ போய்விடுகிறார். வேலைக்காரி கடைத்தெருவில் சுற்றி அவரை மீட்க சாலையைக் கடக்கையில் காரில் இலேசாக மோதிக் கொள்ளுகிறாள். இன்னொரு நாள் பெரியவரைக் கட்டிலோடு கட்டிப்போட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறாள் வேலைக்காரி. கிழவர் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் கிடக்கிறார். இப்படத்தில் கிழவர் தன் நிலையறியாது நழுவி மறைவதை மட்டும் விரிவுபடுத்தி ஒரு கன்னடமொழிப் படம் ஜனரஞ்சகமாக பிற்காலத்தில் “கோதிபண்ணமத்து சாதாரண மை கட்டு” என்ற பெயரில் படமாயிற்று.

வேலைக்காரிக்கும் பெரியவரின் மகனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வீட்டில் பணம் காணாமற் போகிறது. திருட்டுக் குற்றமும் சுமத்தப்பட்டு வேலைக்காரியை வெளியேறும்படிக் கத்துகிறான். அவள் தன்னை அவன் படிக்கட்டில் பிடித்துத தள்ளியதாகவும் அதனால் தனது 4 மாத கரு கலைந்து போனதாகவும் போலீசில் புகார் தருகிறாள். வேலைக்காரியின் கணவன், தன் குழந்தையைக் கொன்றதாகக் கூறி புகாரளிக்கிறான். சிறைத் தண்டனைமளிக்கப்பட்ட கணவனைக் காப்பாற்ற மனைவி வீடு திரும்பி ஜாமீன் பெறுகிறாள். பெரியவரை மீட்க பாதையைக் கடந்தபோது கார் மோதியபோதே கருக் கலைந்ததென்ற உண்மையை வேலைக்காரி கூறி, அவன் கணவன் கொஞ்சம் பணம்பெறச் சம்மதிக்கிறான்.

கேஸ் தள்ளுபடியானவுடன், விவாகரத்து விஷயம் எழுகிறது. கணவன் மனைவி, மகள் மூவரும் கோர்ட்டில். பெண்ணைப் பார்த்து, “நீ யாரோடு இருக்க முடிவு செய்திருக்கிறாய்?” என்று நீதிமன்றம் கேட்கிறது. பதில் சொல்ல இயலாது பெண் கண்ணீர் விடுகிறாள்ு. பெற்றோர் வெளியில் காத்திருக்க–படம் முடிகிறது. கோர்ட் ஓர் இயந்திர மனிதன். பெற்றோர்கள் குழப்பத்தில், தந்தையா, தாயா என்ற கேள்வியில் இளம் மகள். இந்த அற்புதப் படத்தை தயாரித்து எழுதி இயக்கியவர் அஸ்கர் ஃபர்ஹாதி (ASGHAR FARHADI) அற்புதமான வண்ண ஒளிப்பதிவு காமிரா M.KALARI என்பவரது. லீலா ஹடாமியும் சரீனா ஃபர்ஹாதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

 

Bioscope Karan 20th Web Article Series by Vittal Rao. This Series About Thailand movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய்-3 20 – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்கு முகமாய்

நம் நாட்டு நிகழ்த்துக் கலைகளில் முக்கியமான தொன்று யட்சகானம், தெருக்கூத்து போலவே வெட்ட வெளியில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய இசை நடன நாடகம். அதனால் அது “யட்சகான பயலாட்ட” என கன்னடத்தில் குறிப்பிடப்படுகிறது. “பயலு” என்றால் கன்னடத்தில் பொட்டல், வெட்டவெளி. எனவே பயலாட்ட யட்சகான புனைவுகளின் பாத்திரங்களுக்கான வேடம், உடை, கீரிட அலங்காரம், என சகலத்தையும், சிறிய பொம்மைகளை உருவாக்கி அவற்றுக்கு அணிவித்து, அதே கதைகளை, பாடல்களைக் கொண்டு யட்சமான பொம்மலாட்டங்களும், தென் கன்னட பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இக்கலை வடிவின் தொடர்ச்சி தென் கிழக்கு நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் அந்நாட்டு கலை கலாச்சார நம்பிக்கைகளை ஒட்டி நடனக் கூத்தாகவும், பொம்மலாட்டமாகவும் நடத்திக் காட்டப்பட்டு வருகின்றன. நம்முடைய இராமாயண, மகாபாரதக் கதைகளையே அடிப்படையாகக் கொண்டு அனுபவம் மிக்க மாஸ்டர்களால் கடுமையான பயிற்சியளிக்கப்பட்டு அரங்கேற்றம் நடைபெறுகிறது.

தாய்லாந்து நாட்டின் இளம் திரைப்பட இயக்குனர் நான்ஜி நிமிபட் என்பவர் எழுத்தாளர் ஈக் ஐயம்சுவென் (EK IEMCHUEN) என்பவரது கதையைக் கொண்டு சக்கரம் (THE WHEEL) என்ற ஓர் அழகிய பேய்க்கதைத் திரைப்படமாக்கி பல விருதுகளையும், பரிசையும் பெற்றிருக்கிறார். திகிலூட்டும்படியான பேய்க் கதைகளில் இது வித்தியாசமானது. தாய்லாந்தின் பாரம்பரிய நடன நாடகம் மற்றும் பொம்மலாட்டக் கலையினூடே இந்த திகில் கதை சொல்லப்படுகிறது.

Bioscope Karan 20th Web Article Series by Vittal Rao. This Series About Thailand movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய்-3 20 – விட்டல்ராவ்
நான்ஜீ நிமிபட்ர் 1997-ல் இயக்கிய டாங்பிரேலிஸ் மற்றும் இளம் ரவுடிக் கும்பல் (DANG BIRELEYS AND THE YOUNG GANGSTERS) என்ற திரைப்படம் மிகவும் வெற்றிகரமான தாய் படம். வான்கூவர், லண்டன், ரோட்டர்டாம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வெகுவாக பேசப்பட்டது. இந்த THE WHEEL திரைப்படம் பிரஸ்ஸெல் நகரில் நடைபெற்ற 19வது உலகத் திரைப்பட விழாவில் (GRAND PRIX விருது பெற்ற படம். சிறந்த பேய்க் கதைப் படத்துக்கான விருது பெற்ற இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது. 29-வது ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய கதைப் படத்துக்கான (BEST ASIAN FETURE FILM) விருதையும் இப்படம் பெற்றது.

தாய்லாந்து நாட்டின் பொம்மலாட்டம், ஹுன் லகோர்ன் லேக் (HUN LAKORN LEK) எனும் கதை வகையது. பல தலைமுறைகளாய் குறிப்பிட்ட சிலரே இக்கலையில் கடவுளர்கள், வீரர்கள், அழகிகள் மற்றும் பூதங்களைக் கொண்ட கதைகளை திறம்பட மிகவும் அழகிய அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்டு பொம்மலாட்டம் நிகழ்த்தி வந்தனர். அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.

தாய்லாந்து நடனம் கோன் (KHON) என்றழைக்கப்படுவது, இது பொம்மலாட்டம் போலல்லாது. நெரிசலான தெருக்களில் நடத்தப்படுகிறது. கோன் கலைஞர்கள் தம் நிஜ முகத்தைக் காட்டாது, முக மூடிகள் அணிந்து முகத்தை மறைத்து பொம்மலாட்டத்தில் சொல்லும் அதே கதைகளை நடித்துக் காட்டுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை… கீழ் நிலையிலிருக்கிறது.

கோன் நடனக் கலைஞர்கள் விலைமதிப்புள்ள பொம்மலாட்ட பொம்மைகள் மீது பொறாமையும் எரிச்சலும் படுவார்கள். ஒவ்வொரு பொம்மையும் ஒரு பயங்கர சாபத்தால் பாதுகாக்கப்படுகிறது என்ற பலத்த நம்பிக்கையிருந்த போதிலும், அவற்றை அழிக்கும் யோசனையிலிருக்கின்றனர். அவற்றின் நிஜமான உரிமையுடைய சொந்தக்காரர்களால்தான் அவற்றை உயிர்ப்பிக்க முடியும்.

க்ரூ டோங் (KRU TONG) என்பவர் அனுபவமிக்க கோன் நடனக் கலைஞரும், பயிற்சியாளருமாவார். ஒரு சமயம் அவர், பெரிய பெட்டியொன்றில் விலை மதிப்புள்ள அழகிய பொம்மலாட்டப் பாத்திரங்களுக்கான பொம்மைகளைப் பார்க்கிறார். அவற்றைக் கொண்டு தானே ஹுன்லகோர்ன் லேக் பொம்மலாட்டக் காட்சிக்கான ஏற்பாட்டை செய்ய முற்படுகிறார். அச்சமயம் அவரது பேத்தி பூவா (BUA) ஒரு பூதப் பொம்மையை வைத்துக் கொண்டிருக்கிறது. சிறுமி பூவா ஒரு மர்மமான சித்தரிப்பு பொம்மைகளின் தாந்திரிக உள்ளர்த்தங்களையும், அவற்றின் சீற்றம் மிக்க எதிர்வினைகளையும் உள் வாங்கிக் கொண்ட மனிதப் பிறவியாக சிறுமி பூவா தோன்றுகிறாள். இப்போது பூவா தான் வைத்திருக்கும் பூதப் பொம்மையின் ஒரு காலைப் பலமாய்த் திருகுகிறாள். அவளது தாத்தாவும் கோன் நடன குருவுமான க்ரூ டோங் ஐய்யோ என்று அலறியவாறு தன் ஒரு காலைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறார். பொம்மைகளின் சாபம் மேலும் தொடருகிறது. படத்தின் ஆரம்பமே ஒரு திகிலில் அமைந்திருக்கிறது.

படுக்கையில் உடல் நிலை சரியில்லாது படுத்திருக்கும் தாய்லாந்தின் பொம்மலாட்ட நிபுணர் தாவோ எதையோ கண்டு மிரண்டு நெளிகிறார். கண்கள் பிதுங்க அலறுகிறார். அவர் படுக்கையைச் சுற்றி அவரது அரிய படைப்புகளான பொம்மைகள் சூழ்ந்து நிற்க, அவரது முக்கிய பொம்மலாட்ட மாணவனும் அழகிய இளைஞனுமான கான் (GAAN) இன்னதென்று புரிந்து கொள்ளுமுன் அவர் உடல்நிலை தீவிரமடைகிறது. அதே சமயம், கிராமத்துக் கோயிலில் கோன் நடன நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இளைஞன் கான் அங்கு போயிருக்கிறான். பொம்மலாட்ட மாஸ்டருக்கு என்னவாயிற்று என்று க்ரூ டோங் கேட்கவும், தனக்கெதுவும் புரியவில்லை, எல்லாம் மர்மமாயிருக்கிறதென்கிறான் கான். அச்சமயம் பொம்மலாட்ட மாஸ்டர் தாவோவின் வீடு பற்றி எரிகிறது.

நடன மாஸ்டரின் பேத்தி பூவா பூதப் பொம்மையான தோசா கான் (TOSA GAN) என்பதை கையில் வைத்திருக்கும் காட்சியைக் கண்டுதான் தாவோ மாஸ்டர் மிரண்டு அலறுகிறார். வீடு எரிகிறது. விஷயமறிந்து கோயில் நடனக் காட்சி நிறுத்தப்பட்டு, நடன ஆசிரியரும், நடனக் கலைஞர்களும் பொம்மலாட்டக் கலைமாணவன் கானும் ஓடிச் சென்று தீயை அணைக்கின்றனர். நடனக் கலை மாஸ்டர் டோங், பொம்மலாட்ட மாஸ்டர் தாவோ தீயில் கருகிக் கிடப்பதைக் கண்டு மனம் பதறி தான் அங்கேயே இருக்க முடிவு செய்கிறார். எல்லோரும் போன பிறகு பொம்மைகளை எடுத்துக் கொண்டு போகிறார். இனி தாமே பொம்மலாட்டத்தையும் நடத்தலாமென்ற பேராசையோடு அந்தப் பொம்மைகளுக்கு புது வண்ணமேற்றி புதுமெருகூட்டுகையில்தான், குழந்தை பூவா பூதப் பொம்மை தோசா கானின் காலைத் திருக, க்ரூ டோங்கின் கால் பாதிக்கப்பட்டு சாய்கிறார்.

அதே சமயம், நடனக் கலை மாணவர்களில் ஒருவனான அவரது மகன் பொம்மலாட்டக் கலைஞனாக மாற விரும்புகிறான். காரணம், அவனது காதலி ஒரு பொம்மலாட்டக்காரி என்பதோடு, பொம்மலாட்டக்கார அழகன் கானோடு நெருங்கிப் பழகுகிறான் என்பதுமாகும். மாஸ்டர் தன் மகனை பொம்மலாட்டப் பயிற்சிக்கு லாயக்கில்லாதவன் என்கிறார். அவன் பொம்மலாட்டக்காரனான கானை கேலி செய்கிறான்.

பொம்மைகளின் சாபம் தொடருகிறது. அவரது அழகிய மனைவியும் தேர்ந்த கோன் நடனக்காரியுமானவள் தன் பேத்தி பூவாவின் கையிலிருக்கும் பூதப் பொம்மையைப் பிடுங்க முற்படுகிறாள். குழந்தை தர மறுக்கிறது. அச்சமயம் நடன மாஸ்டர் வீடும் தீப்பற்றிக்கொண்டு எரிகிறது. மாஸ்டரின் மனைவி முழு கோன் நடன ஒப்பனையோடு தூக்கிலிட்டுக் கொண்டு பிணமாய்த் தொங்குகிறாள். பூதப் பொம்மையோடு பூவா ஓடிவிடுகிறது. கான் தன் கதாலியுடன் சல்லாபித்திருக்கும் நிலையில், மாஸ்டரின் மகன் வந்து இருவரையும் கத்தியால் வெட்டிக் கொன்று விடுகிறான். மாஸ்டரின் வீடு எரிந்து எல்லாரும் எல்லாமும் சாம்பலாகின்றனர். குழந்தை பூவா தன் பொம்மையை அணைத்தபடியே நீரில் குதித்து மூழ்குகிறது.

இந்த தாய்லாந்து வண்ணப்படம், ஒரு திகில் படம் என்பதற்கும் பல படிகள் மேலாக, அரிய கலைக்காட்சிக் கூடமாயும் பாரம்பரிய கலைகளின் காட்சியகமுமாயும் தோன்றுகிறது. காமிரா கோணங்களும் வண்ண ஒளிப்பதிவும் அற்புதம் ஒளிப்பதிவு செய்தவர் தாய்லாந்தின் சிறந்த காமிரா கலைஞர் நட்டா வுட் கிட்டிகூன் [NATTA WUT KILLTKHUN] என்பவர்.

தென் கிழக்கு சினிமாவில் கொரிய திரைப்படங்களின் பங்கு முக்கியமானது. உலகின் எல்லா நாடுகளிலும் வணிக நோக்கிலான ஜனரஞ்சக சினிமா ஒரு பக்கம் பெரும் பகுதியை இடம் பிடித்துக்கொண்டிருந்தாலும் நல்ல சினிமா அர்த்தம் பொதிந்த சினிமா என்பது இணையான கோட்டில் பயணித்தே வருகிறது. கொரிய சினிமாவின் நிலையும் அதுவே.
Bioscope Karan 20th Web Article Series by Vittal Rao. This Series About Thailand movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய்-3 20 – விட்டல்ராவ்நிறைய கொரிய படங்களைப் பார்த்ததில் அவற்றில் நவீன சீனப்படங்களின் பாதிப்பும் சாயலும் சில சமயம் பாணியும்கூட, நீரில் அமிழ்ந்தும், அமிழாது மிதக்கும் மிதவையைப் போல தோன்றுகிறது. நவீன கொரியப் படங்களில் ஓங்கார்வை-யின் பாதிப்பு தெரிகிறது. அதேசமயம், சில கொரிய திரைப்பட மேதைகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சில படங்கள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் இம் க்வோன் தாயெக் [IM KWON TAEK] இவரது “பீரியட்” படம் என்று தனித்துக் கூறத்தக்க மிகச் சிறந்த படம். கொரியாவின் புகழ்பெற்றவரும் பாரம்பரிய ஓவியக்கலைக்கு எதிரான பாதையில் போன ஓவியருமான சி-ஹ்வா-சியோன் [CHI-HWA-SEON] என்பவரின் வாழ்க்கையைச் சொல்லும் “PAINTED FIRE” எனும் திரைப்படம். இந்தப் படத்துக்கு டைம் வார இதழின் திரைப்பட விமர்சகர் ரிச்சர்டு கோர்லிஸ் [RICHARD CORLISS] விமர்சிக்கையில், “இம் க்வோன் தேயெக் ஒரு கொரிய கிராண்ட் மாஸ்டர். அவரைப் போன்ற கலைஞர்கள் இருக்கும்போது கீழை நாடுகளின் திரைப்படங்கள் கலைத்தன்மையை என்றைக்குமே இழந்து விடாது.” என்று குறிப்பிடுகிறார். 2002-ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இம் க்வோனுக்கு சிறந்த இயக்குனர் விருது இப்படத்துக்கென அளிக்கப்பட்டது.

இப்படம் 19-ம் நூற்றாண்டு கொரிய ஓவியர் சி ஹ்வா சியோன் [CHI HWA SEON] என்பவரையும் அவரது ஓவியக் கலைப்பணியைப் பற்றியுமான அழகிய படம். இவரது அசல் ஓவியங்களை மறு தயாரிப்பாகத் தீட்டியவர் [REPRODUCTION] அந்தப் பணியில் நன்கு அறியப்பட்ட கொரிய கலைஞர் ஜாங் சியூங் உப் [JANG SEUNG-UP] என்பவர், சி ஹ்வாவின் ஓவியங்களையும் ஜாங் சியூங்க் மறுபடைப்பாகச் செய்திருக்கிறார். எனது நண்பரும் ஓவியருமான கிருஷ்ணசாமி என்பவர் பெங்களூர் சஞ்சய் நகரத்திலிருக்கிறார். உலகச் சுகாதார அமைப்பின் [WHO] கிளையில்-இமாச பிரதேசத்தில் டல்ஹவுசி எனுமிடத்தில் புகைப்படக் கலை மற்றும் ஓவியப் பணியை செய்து வந்தவர். பணியில் ஓய்வு பெற்ற பின் சஞ்சய் நகரில் “ரமண கலா கேந்திர” என்ற ஓவியக் கூடம் ஒன்றை நிறுவி, உலகப் புகழ்பெற்ற ஓவிய ஒரிஜினல் மாஸ்டர்களின் ஒப்பற்ற ஓவியங்களின் மறுபடைப்பாக நகல் பணியைச் செய்தவர், அசலுக்கும், நகலுக்கும் சிறிதும் வேறுபாடு தெரியாத வகையில் தத்ரூபமாய் செ்து கொடுத்து வந்தார்.

அசல் ஓவியத்தின் அதே அளவுக்கு, கிட்டத்தட்ட அதே வகை கான்வாஸ் மீது, அசலின் வண்ணப்பூச்சுக்களின் ஆதார வண்ணங்களை ஆய்ந்தறிந்து அதே ரீதியில் தீட்டுவார். அனேகமாய் அவரிடம் வந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அயல்நாட்டவர்கள், ரெம்ப்ரண்ட, வெர்மீரீ, கோயா, முதலியவர்களின் ஓவியங்களைக் காட்டி அதன் மறுபடைப்புகள் வேண்டி ஆர்டர் தருவார்கள். கிருஷ்ணசாமி, தாம் தீட்டிய ஓவியங்களுக்கான சட்டங்களைத் தேர்ந்தெடுப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரிஜினல் படத்தின் சட்டம் எப்படியோ அதே மாதிரி இருக்குமாறு முடிந்தவரை தேடிப் பிடித்து சட்டமிடுவார். அதற்கேற்றாற்போல ரேட்டும் அதிகம், அவரிடம். இதே விதமாய் 19-ம் நூற்றாண்டில் கொரியாவில் சி ஹ்வாவின் ஓவியங்களை, ஜாங்க் சியூஸ்-உப்-மறு தயாரிப்பு செய்து புகழ்பெற்றார்.

ஆரம்பத்தில் கடின உழைப்போடும், சிறிது தம் விருப்பத்துக்கு ஒப்ப நின்ன மாறுதல்களோடும் கிழக்காசிய ஓவியங்களை மறுபடைப்பு செய்தே புகழ்பெற்றார். அசலில் சி ஹ்வாவின் ஓவியத்தில் இல்லாத ஓரிரு அம்சங்களை கூடுதல் சித்தரிப்பாக செய்வார். ஒரு மரத்தில் கிளையொன்றை தம் மறுபடைப்பில் நீட்சியுற்றதாயும், ஓரிரு பூக்களை தீட்டியதோடு, ஒரிஜினலில் இல்லாத ஒரு பறவையையும் கூடுதலாக தன் நகல் ஓவியத்தில் ஜாங் சியூங் செய்தவர். 1882ல் கொரியாவின் சோசின் பேரரசு முடிவுக்கு வரும்போது கொரிய புரட்சியாளர்கள் அந்நிய படையெடுப்புக்கு எதிராகவும் அப்போதிருந்த ஊழல் சர்க்காருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த சூழலில் படத்தின் கதை தொடங்குகிறது.

சீ ஹ்வா சியோன் கொரியாவின் 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியன். 1882 முதல் 1887 வரை கொரியா அரசியலில் நிகழ்ந்த புயலில் சிக்கி அந்நியர் சூழ்ச்சியில் குழம்பியிருந்த காலம். சமூக-அரசியல் மாற்றம் கருதி புராட்சியாளர்கள் ஜப்பானுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க செய்த முயற்சி சீனாவின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது. சீஹ்வாசியோன் சிறுவயதில் படிப்பறிவற்ற வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்தவர். நம் நாட்டிலிருப்பது மாதிரியே கொரியாவில் மேல் ஜாதி – கீழ் ஜாதி என்ற பாகுபாடு இருந்திருப்பதையும் இப்படத்தின் மூலம் அறிய வருகிறோம். ஓவியன் சீஹ்வா சீழ் ஜாதியை்சேர்ந்தவர் என்பதால் தெருவில் தள்ளப்படுகிறான். எவ்வித ஓவிய அடிப்படைப் பயிற்சியுமற்றவன் என்பதும், கீழ் ஜாதியன் என்பதும் அவனது ஓவியத்திறமையை மற்றவர்கள் அலட்சியப்படுத்தி பரிகசிப்பதற்கான காரணங்களாயிருந்தவை.

உயர் ஜாதி செல்வந்த பிரபு ஒருவர் அன்பு காட்டி அவனை ஊக்குவித்து பயிற்சி பெற உதவுகிறார். அவன் எவ்வித பயிற்சியும் படிப்புமில்லாமலே ஓவியக் கலையில் மேதைமை பெற்றிருப்பதை அவர் கண்டறிகிறார். அவரது முயற்சியால் அவன் ஒரு பெரிய மாஸ்டரிடம் ஓவியம் கற்க சேர்கிறான். கொரிய ஓவியக் கலை மரபு சீன ஓவியக் கலை மரபின் வழி வந்திருப்பதையும் இன்னும் அதே வழியைப் பின்பற்றுவதையும் பார்க்கையில் சீஹ்வா அதிலிருந்து வேறுபட நினைக்கிறான். தத்துவார்த்த ரீதியாக ஜப்பானும் சரி, கொரியாவும் சரி, சீன தத்துவ நெறிமுறை வழியையே பின்பற்றி வந்தன. சீன தத்துவ ஞானி கந்ஃபியூஷியஸின் தத்துவ கருத்துகள் 17ஆம், 18ஆம், 19ஆம் நூற்றாண்டு ஜப்பானையும் கொரியாவையும் நேரடியாகவே ஆட்கொண்டிருந்ததை இத்திரைப்படமும் காட்டுகிறது. சீஹ்வாவின் திறமை குருவையும் மிஞ்சுகிறது.

தன் சுய திறமையால் அவன் புகழ் பெற்ற ஓவியனாகிறான். அதன் பிறகு அவன் ஓஹ்வோன் என்று அழைக்கப்படுகிறான். ஆரம்பத்தில் அவனது கீழான ஜாதியின் காரணமாய் மரியாதைக் குறைவாக பல சந்தர்ப்பங்களில் நடத்தப்படுகிறான். அவனுக்கு குடிப் பழக்கமும் பெண்கள் சகவாசமும் சேருகிறது. இரண்டும் இல்லாமல் அவனால் இயங்க முடிவதில்லை. ஆண், பெண் உடலுறவுக் காட்சிகளின் சித்தரிப்பைக் கொண்ட காம சூத்ர படங்களை புத்தகத்தைத் தந்து புதியதாக தீட்டித் தருமாறு ஒருவர் கேட்கிறார். ஓஹ்வோன் காமசூத்திரப் படங்களைப் பிரதியெடுத்து தருவதின் மூலம் குடிப்பதற்கும் கூத்தி ஷோக்குக்கும் வேண்டிய பணம் கிடைக்கிறது. அவனை விரும்பிய அழகிய இளம்பெண் நோய்வாய்ப்பட்டு கிடக்கையில் அவனுடைய பறவைகள் ஓவியம் ஒன்றைக் கேட்கிறாள். ஓஹ்வோன் அவளருகிலேயே அமர்ந்து அவளது விருப்பப்படி பறவைகள் ஓவியம் தீட்டித் தருகிறான். அவள் அதை ஆனந்தமாய்ப் பார்த்தபடியே உயிரை விட்டு விடுகிறாள். அச்சம் பயம் அவனுக்குள் மரணத்தைக் குறித்த தத்துவம் ஒன்றை ஓதிச் செல்லுகிறது.

ஓஹ்வோன் அந்த ஊரைவிட்டு வேறிடம் போகும் வழியில் வானத்தில் ஆயிரக்கணக்கிலான பறவைக் கூட்டத்தையும் அதனூடே மிக அழகிய பெரிய பறவையொன்று நிதானமாய்ப் பறந்து செல்லுவதையும் கண்டு கண்களில் நீர் ததும்ப நிற்கிறான். அந்த பெண்ணே பறவையாக பறந்து போனதாய் நினைத்து கொள்ளுகிறான். இந்தக் காட்சி காமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பதும், பின்னணியில் கேட்கும் பாடலும்், இசையும் மிகவும் இதமாயிருக்கிறது.
கொரியாலில் அப்போது சீனரும் ஜப்பானியரும் மாறி மாறி உள்நாட்டு புரட்சியாளருக்கு ஆதரவும் உதவியும் செய்வதுபோலிருக்கையில் அவ்விரு நாட்டுப் படைத் தளபதிகளும் ஓவியம் போன்ற கலைகளின் செயல்பாட்டிலும் நுழைகின்றனர். எந்த வகையிலாவது கொரியாவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொள்ளும் பெரு நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர்.
Bioscope Karan 20th Web Article Series by Vittal Rao. This Series About Thailand movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய்-3 20 – விட்டல்ராவ்ஓஹ்வோன் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய ஓவியன், தனக்கு முழுத்திருப்தியும் வரவில்லையெனில் தான் வரைந்த ஓவியங்களைக் கொண்ட காகிதங்கள் அவ்வளவையும் தீயில் போட்டு விடுவான். கிட்டதட்ட வின்சென்ட் வான்கோவைப் போன்ற மனமுடையவனாகவே தெரிகிறான். ஓவியர்களைப் பொறுத்தளவு கொரிய கலை, சீன- ஜப்பானிய ஓவியக் கலையையே ஒத்திருக்கிறது. காகிதங்களின் பரப்பிலும், பட்டுத் துணிகள் மீதும்தான் தீட்டப்பட்டிருக்கின்றன. தைலவண்ணம் OIL PAINT என்பது மேற்கத்திய ஓவியங்களுக்கானது. கொரிய ஓவியங்கள் பார்ப்பதற்கு, பறவைகள், விலங்குகள், குடியானவர்கள், விறகு வெட்டிகள், தாசிப் பெண்கள், சந்நியாசிகள், மரங்கள், மலர்கள், நீரோடை, மலைகள் என்று இருந்தாலும், திரைப்படத்தின் உரையாடல்கள், வழியாக நாம் அறிவது, அவை. யாவும் மனிதன் சம்மந்தப்பட்ட குறியீடுகளே என்பது. அந்நிய ஆக்கிரமிப்பு சமயம் குடியானவர்கள் எரிக்கப்படுகின்றனர்.

ஓவிய மாஸ்டர் துரோகியாக அறிவிக்கப்படுகிறார். அவர் தப்பி ஓடி விடுகிறார். கத்தோலிக்கர்கள் தலைவெட்டப்பட்டு அவர்களது தலைகள் மரங்களில் தொங்கவிட்டிருக்கும் காட்சி கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. அந்த கத்தோலிக்கத் தலைகளில் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பாவைச் சேர்ந்த தலைகளுமுண்டு. பின்னாட்களில் வயதான ஓஹ்வோன், தன் குருநாதர் ஓவிய மாஸ்டரை வயதான கோலத்தில் பனி நிறைந்த பகுதியொன்றில் சந்திக்கையில் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளுகின்றனர். தன் ஓவியங்கள் சிலதை தீயில் போட்டுவிட்டு அவனும் தீயில் புகுந்து எரிந்து போவதாய் படம் முடிகிறது. உண்மையில் சீஷ்வா சியோனின் மர்மமான மறைவு 1897-இல் நிகழ்ந்ததாகவும், அவர் திரும்பவேயில்லை என்பதாகவும் ஒரு வாசகத்தோடு படம் முடிகிறது.

சீஹ்வோன்வாக சோய் மின் சிக் (CHOI- MINSIK) என்ற நடிகர் சிறப்பாக அப்பாத்திரத்தை ஏற்று செய்திருக்கிறார். படத்தின் சிறப்பு அதன் காமிரா. அதைக் கொண்டு அற்புதமாக ஒளிப்பதிவு ஆற்றியிருப்பவர், ஜுங்-11- சுங் (JUNG-11- SUNG) இசையும் ரம்மியமானது. இசைப் பொறுப்பை ஏற்றவர், கிம் யோவுங் டாங் (KIM YOUNG DANG)

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்குமுகமாய்

கீழை நாடுகளில் ஜப்பானின் கலாச்சாரம் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது அவர்களின் கிமோனாயில் மண்டியிட்டு உட்காருவது, தேநீர் உபசரிப்பு, அழகிய குடை மற்றும் விசிறி, இவையனைத்தும் சடங்குகளாகவே மேற்கொண்டு வந்தவை. பண்டைய ஜப்பான் (16-17ம் நூற்றாண்டு) எனும்போது அதன் புகழ்பெற்ற சாமுராய் போர் வீரர்கள், சண்டை காலத்திலும் அமைதி காலத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்கள் உயிருக்கும் மேலாக மதித்த சுயகவுரவம், இதன் காரணமாய் அவர்கள் மேற்கொண்ட தற்கொலைச் சடங்கு என்பவை முக்கிய ஜப்பானிய கலாச்சார பண்பாடுகள். இவற்றை வைத்து ஹாலிவுட்டிலும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, SAYANORA ATEA HOUSE AT AUGUSTMOON என்பவை. ஜப்பானின் அசல் இயக்குனர்களால் உருவான மகத்தான திரைப்படங்களைப் பார்க்குமுன் ஜப்பானின் மகத்தான கலைஞன் ஒருவனைப் பற்றியும் பேசலாம்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
The Sea of Fertility by Yukio Mishima

யூகியோ மிசிமா- சாமுராய் – ஹராகிரி
யூகியோ மிஷிமா (YUKIO MISHIMA) தன் 45- வது வயதின் போதே 20 நாவல்கள், 39 நாடகங்கள், ஒரு பயண நூல், எண்பது சொச்சம் சிறுகதைகள், மற்றும் கணக்கற்ற கட்டுரைகள் எழுதியிருந்த ஜப்பானின் எழுத்தாளர் 1968-ன் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு முக்கிய தகுதியாளராய் சொல்லப்பட்டிருந்தவர். ஆனால், ஜப்பானின் மற்றொரு நாவலாசிரியர் யாசுநாரி காவ பாட்டா (YASUNARI KAWABATA) என்பவருக்கு அவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஷிமா திரைப்படங்கள் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். கராத்தே மற்றும் பண்டைய ஜப்பானிய கெண்டோ என்ற வாட்போர் பயிற்சியும் பெற்றவர். இதனால் ஜப்பானின் ஹெமிங்வே என்று அழைக்கப்பட்டவர்.

மிஷிமா நான்கு பகுதிகளாக ஒரு மாபெரும் நாவலை எழுதி முடித்தார். அதன் இறுதி பகுதியை எழுதி முடித்து (THE SEA OF FERTILITY) என்று அதற்கு பெயரிட்டு பதிப்பகத்துக்குச் சேர்த்தார். நிலவில் தண்ணீரற்ற சில்லிட்ட காலியான கடல்கள் என விஞ்ஞானம் கருதும் நிலவுப் பகுதியை SEA OF FERTILITY என அழைப்பார்கள். நாவலின் இவ்விருதி பகுதி ஜப்பானின் பாரம்பரிய கனவான் தன்மைகளையும், 1912 முதல் 1970 வரையிலான புதிய சீமான் செழிப்பையும் அவரது சமகால ஜப்பானிய வாழ்க்கையில் அவர் கண்டுணர்ந்த அதீத வெறுமையையும் பற்றி விவரிக்கப்படுகிறது.

1960ன் தொடக்கத்தில் மிஷிமா SHIELD SOCIETY என்ற தேசியத்தைப் பாதுகாக்கும் படையொன்றைத் தொடங்கினார். அவரது சிந்தனையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் கொஞ்சம்பேர் படையில் சேர்ந்தனர்.

மேற்கத்திய நாகரீகத்தையும் மேற்கத்திய அரசியல் சட்ட அமைப்பையும் தழுவிக் கொண்ட ஜப்பானில்தான் கண்ட பொருளியல் சீரழிவைப் பற்றிய தம் வெளிப்படையான மனக்குறையை மிஷிமா தமது ஆரம்ப எழுத்துக்களிலும் வாழ்க்கையிலும் கையாண்டு வெளிப்படுத்தியவர். ‘‘ஒரு தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கியமான யுத்தத்தை முற்றிலுமாய் துறக்க வேண்டும்’’ என்று 2-ம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா விதித்த அரசியல் சாசனத்தை மிஷிமா ஏற்கவில்லை. உலகப் போருக்கு முன்பிருந்த அசல் ஜப்பானிய அரசியல் சாசனம் புதுப்பிக்கப்பட்டு ஜப்பானிய அரசர் மீண்டும் புனிதமானவராய் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் யுத்தத்தில் ஜப்பான் இழந்த கெளரவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினார் மிஷிமா.

சுமார் 100 இளைஞர்கள் சேர்ந்தார்கள். ஜப்பான் ராணுவத்தினரை தம் படையில் சேர்க்கும் முயற்சியில் தோல்வியுற்ற மிஷிமா, ராணுவ தளபதியை பேட்டி எடுப்பதுபோல தம் வீரர்களோடு சென்று அவரைக் கட்டி போட்டுவிட்டார். தளபதியின் ராணுவ வீரர்கள் ஓடி வரவும் அவர்களில் எட்டுப் பேரை மிஷிமாவின் வீரர்கள் வாளால் வெட்டிக் கொன்றனர். போலீசும் விரைந்து வந்தது. 1200 ராணுவ வீரர்கள் சுற்றி நின்றனர். தளபதியுடன் கதவைச் சுத்திக் கொண்ட மிஷிமா பால்கனியில் போய் நின்று கொண்டு சாமுராய் பாணியில் உடுத்து பத்து நிமிடங்கள் பேசினார். நடப்பு அரசியல் சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழ ராணுவத்தை அழைத்தார்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Seppuku Image Credit: Wikipedia

மேற்கத்திய பாணி அரசியல் சாசனத்தை ஒழித்து, உலகப் போருக்கு முன்னிருந்த பழைய மன்னரின் அரசியல் சட்டங்களையே பின்பற்றுவதன் மூலம் ஜப்பானியரின் பண்டைய பெருமைகளையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க தம் படையில் இணையுமாறும் புரட்சி செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். அவரது முயற்சி ஏற்கப்படவில்லை. மிஷிமா ஜப்பானிய சாமுராய்களின் பாரம்பரிய தற்கொலை வடிவான ‘‘செப்புகு’’ (SEPPUKU)வின் நியதிபடி தன் வாளையெடுத்து தம் வயிற்றில் ஆழமாய் இறக்கினார். செப்புகு என்பதை ஹராகிரி என்றும் அழைப்பார்கள். உடனே தாமதிக்காது அவரது படையைச் சேர்ந்த மகாகட்சு மோரிடா என்பவன் தன் வாளை உயர்த்தி ஒரே வீச்சில் மிசிமாவின் தலையை வெட்டி உருண்டோடச் செய்தான். இது புனித காரியமாக கெளரவ மரணமாய் சாமுராய்கள் கருதுவர். மிசிமாவின் இயற்பெயர், கிமிடேக் ஹிராவோகா (KIMITAKE HIRAOKA) என்பது சாமுராய் பரம்பரையில் வந்த செல்வந்தரின் மைந்தர். ஹராகிரியை வைத்து ஜப்பானில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் மிகச் சிறப்பான படம், ‘‘ஹராகிரி,’’

ஜப்பானிய திரைப்பட கலைஞர்களில் தனித்துவமிக்க, ஆனால் சரியாக கவனிக்கப்படாத படைப்பாளி மசாகி கோபயாஜி. தீவிரமாய் போரை எதிர்த்தவர் என்ற ரீதியில் மிசிமாவின் கொள்கைக்கு நேர்மாறானவர். இவர் இயக்கிய HUMAN CONDITION என்ற மகத்தான திரைப்படம் மூன்று தொகுப்புகளாய் ஒன்பது மணிநேரம் ஓடக்கூடிய காவியத் திரைப்படம். 1962ல் கோபயாஷியின் மிகச் சிறந்த படமென கருதப்படும் ஹராகிரி வெளிவந்தது. ஜப்பானிய திரைப்படங்களில் மிக முக்கியமானது ஹராகிரி. 1630களின் கதை நிலவரப்படி, ‘‘இயி’’ எனும் வம்சாவளியின் மாளிகைக்கு ஹன்சிரோ ட்சுகுமோ எனும் சாமுராய் ஒருவர் வருகிறார். சாமுராய் எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய பயிற்சி பெற்ற வாட்போர் வீரர்கள் பிரபுக்களின் பாதுகாப்பாளர் குழுவிலிருப்பார்கள். அன்றைய ஜப்பானில் உள்நாட்டுப் போர்களில் சாமுராய்கள் போரிட்டவர்கள்.

இச்சமயம், அந்தப் போர்கள்ஓய்ந்து, அமைதி நிலவியதால், அங்கிருந்த சாமுராய் குழுக்கள் கலைக்கப்பட்டன. வேறு வேலையில் ஈடுபட முடியாது வறுமையில் உழன்ற ட்சுகுமோ இயிகுல மாளிகைக்கு வந்து அங்கு தான் ஹராகிரி செய்து கொள்ள அனுமதி கேட்கிறார். பணமின்றி, உணவின்றி வறுமையில் கஸ்டப்படுவதைவிட ஹராகிரி மூலம் தன்னை முடித்துக் கொள்ள வந்திருப்பதாய் கூறுகிறார். அன்றைய ஜப்பானில் ஹராகிரி முறையில் உயிர் விடுவது புனித காரியமாய் கருதப்பட்டது. அதைச் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகளை ஏற்கவேண்டும். அவசரமின்றி நிதானமாய் செய்யவேண்டும்.

ஹராகிரி ஒரு சடங்கான தற்கொலை குறுவாளாக அடிவயிற்றை இடமிருந்து வலமாய் ஆழமாய்க் கிழித்துக் கொண்டவுடன் இதற்கு உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தம் வாளால் தலையை வெட்டி ஹராகிரி சாவை முடிப்பார். சிலர் பணம் பெறுவதற்காக தான் ஹராகரி செய்வதாய்க் கூறினால் ஐயோ பாவம் என்று பணத்தைத் தந்து அனுப்புவார்கள். சுகுமோவையும் அவ்விதமாய் நினைத்த மாளிகைத் தலைவர் ஓமாகாதா, மோத்தோம் என்ற சாமுராய் பணத்துக்காக வந்ததையும் கட்டாய ஹராகிரியில் மடிந்ததையும் சுகுமோவுக்கு கூறுகிறார். சுகுமோ, தான் பணத்துக்கன்றி உயிரை மாய்த்துக் கொள்ளவே வந்திருப்பதாகக் கூறி ஹராகிரிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கிருக்கும் எல்லா சாமுராய்களும் ஹராகிரி நிகழ்விடத்தைச் சுற்றி தலைவரோடு அமர்நதிருக்கின்றனர்.

சுகுமோ தன் தலையை இறுதியில் வெட்டக்கூடிய வரை தான் தேர்ந்தெடுப்பதாக கோரி தேர்ந்தெடுத்த சாமுராய் வீரன் உடல் நலம் சரியில்லையென கூறி வருவதில்லை வேறொரு நபரை சுகுமோ ஏற்காத நிலையில் தலைவரின் அனுமதியுடன் அவன் தன் கதையைச் சொல்லுகிறான்.

வேலையையும் மனைவியையும் இழந்த சுகுமோவின் அழகிய மகனை மோத்தோமேக்கு திருமணம் செய்து தருகிறார். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது வறுமை அதிகரித்த நிலையில் சுகுமோவின் மகள் காசநோய் கண்டு அவதியுறுகிறாள். குழந்தைக்கு கடுமையான ஜூரம். எங்காவது பணம் கேட்டு வருவதாய்ப் போன மருமகன் வீடு திரும்பவேயில்லை. வறுமையில் உழன்ற சில சாமுராய்கள் ஹராகிரி செய்துகொள்ள முன் வரும்போது இரக்கப்பட்டு சில பிரபுக்கள் தற்கொலையைத் தவிர்க்க பணம் தந்து அனுப்புவர் அல்லது தங்களிடமே வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவர் என்ற நினைப்பில் மோத்தோமே இயிமாளிகைக்கு வந்து ஹராகிரி புரிந்து கொள்ள அனுமதி கேட்கிறான். மருத்துவச் செலவுக்கு ஏற்கெனவே அவன் தன் வாளின் அலகை விற்றிருந்ததால் மூங்கில் பிளாச்சலான அலகை கைப்பிடியில் பொருத்தி வைத்திருந்தான். மோத்தோமே பணத்துக்கே ஹராகிரி செய்ய நாடகமாடுகிறான் என நினைத்த மாளிகைப் பிரபு ஹராகிரி செய்ய அனுமதிக்கிறார். மருமகன் இறக்கிறான். தொடர்ந்து குழந்தையும் மகளும் இறக்கவே சுகுமோ அனாதையாகிறார்.

எல்லாவற்றுக்கும் பழிவாங்க சுகுமோ இயி மாளிகைக்கு வந்திருக்கிறார் என்பது அங்குள்ளவர்களுக்குப் புரிகிறது. சுகுமோ ஹராகிரிக்கு உதவிட விரும்பிக் கேட்ட மூன்று பேரும் மூங்கில் வாளைக் கொண்டு மோத்தோமேவை ஹராகிரி புரிய வற்புறுத்தியவர்கள். கதையை முடித்த சுகுமோ அந்த மூவரின் குடுமிகளை அனைவரின் முன் வீசி எறிகிறார். இங்கு வருமுன் மோத்தோமோவைஅவமானப்படுத்திய அந்த மூவரையும் தனித்த வாட்போரில் எதிர்கொண்டு கொல்லாது குடுமிகளை மட்டும் அறுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எதிரியிடம் குடுமியை இழப்பதென்பது அவமான காரியமாய் சாமுராய்கள் கருதுவார்கள்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Shichirō Fukazawa Image Credit: Wikipedia

காலாவதியாகி அர்த்தமிழந்த சாமுராய் கட்டுபாட்டின் அதிகாரத்தை சுகுமோ கேலி செய்கிறார் மிக்க அவமானமடையும் பிரபு சுகுமோவைக் கொல்லும்படி உத்திரவிட பயங்கர வாட் போர் நடக்கிறது. சுகுமோ நான்கு பேரைக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் சாமுராய் குலத்தின் குறியீடாக இயி இனத்தார் வணங்கப்பட்ட குல தெய்வ உருவத்தை இழுத்து எறிந்து சிதைத்து அவர்கள் என்றென்றும் மறக்க முடியாதபடி அவமானமுறச் செய்த பின் வாளைத் தம் உடலில் பாய்ச்சி தன்னை மாய்த்துக் கொள்ளுகிறார். நடந்தேறிய சகல உண்மை நிகழ்வுகளையும் நேரெதிராக திரித்து பொய்யாகப் பதிவேட்டில் எழுதிவைக்க பிரபு ஆணையிடுகிறார்.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்ஜப்பானிய சமூகத்தின் அடக்குமுறை கூடிய அதிகார அமைப்பு கோபயாஷியின் திரைப்படங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகிறது. சுகுமோவாக நகதாய் அற்புதமாய் நடிக்கிறார். மூலக்கதையை எழுதியவர் ஜப்பானின் சிறந்த எழுத்தாளர் YASUHIKO TAKIGUCHI. படத்தின் அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பவர். YOSHIO MIYAJIMA. ஜப்பானிய மொழியில் ஹரா என்றால் வயிறு. கிரி என்றால் இரண்டாக பிளப்பது என்று பொருள்.
சீனாவைப் போலவும் இந்தியாவைப் போலவும் ஜப்பானும் காலங்காலமாய் பாரம்பரிய கலாச்சார சங்கரிகளையும், விசித்திரமான பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் நாடு. ஜப்பானின் பண்டைய பாரம்பரிய செவி வழிக்கதைகளில் ஒன்று ஒபசூடெ OBASUTE இந்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு ஜப்பானின் புகழ் பெற்ற நாவலாசிரியர் ஷிசிரோ ஃபுகாஸாவா SHICHIRO FUKAZAWA எழுதிய நாவல் BALLAD OF NARAYAMA (நாராயாமாவின் கவிதை இசை நாடகம்) ஆச்சரியம் என்பதைவிட மனதை உருக்கும் இசை நாடகம் எனலாம்.

இந்நாவலை ஜப்பானிய திரைப்பட மேதைகளில் ஒருவரான கீய்சுகே கினோசிடா KEISUKE KINOSHITA என் பவர் மகத்தான திரைக் காவியமாய் இயக்கியளித்திருக்கிறார். கினோஷிடா, ஜப்பானின் சமகால திரைப்பட மேதைகளில் நன்கு அறியப்பட்ட அகிரா குரோசாலா கோபயாசி மற்றும் யசுஜிரோ ஓசு ஆகியோரின் வரிசையிலிருப்பவர். இவரது நாராயாமா கதைச் சித்தரிப்பின் வகை மிகவும் வேறுபட்டது. அதீத அழகியல் சார்ந்தது. நேராக ஒரு சினிமாவாகச் செய்யாமல், ஜப்பானின் பாரம்பரிய நாடகப் பாணியான தாபுச்சி தியேட்டர் TABUCHI THEATRE கலை வடிவையும், நவீன திரைப்பட கலைமுறையையும் இணைத்து செய்துள்ளார் கினோசிடா ஜப்பானின் கலாச்சார மதிப்பீடுகளை இப்படத்தின் வழியாக அவர் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.

19-ம் நூற்றாண்டு ஜப்பானின் பணிமூடிய மலைகளிடையே உள்ள சிறிய கிராமத்தில் வாழ்க்கை என்பது சவால்கள் மிக்கது. பஞ்சம், தானியத்தைக் கவர்ந்து செல்லும் கள்வர்கள் ஒரு புறம். அந்த கிராமத்தில் ஒரு வினோத சடங்கு ரீதியான பழக்கம். எழுபது வயதை அடைந்த முதியவர்களை அக்குடும்பத்தின் மூத்த ஆண் மகன் முதுகில் சுமந்துச் சென்று தூரத்திலுள்ள மலையுச்சிலமைந்த இடுகாட்டில் உயிரோடு விட்டு விட்டு வந்துவிட வேண்டும். 70 வயதான முதியவர்கள் அங்கிருந்தவாறே இறப்பார்கள். அவர்கள் அங்கிருக்கும் கடவுளோடு சேர்வார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் உயிரோடு அங்கு பயணித்து விடப்பட்டு இறக்க முதியவர்கள் முன் வருகிறார்கள். எப்போது தங்களுக்கு எழுபது வயதாகும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு சிலர் அவ்வாறு சாவதற்கு விரும்பாது வாழவே விரும்புகிறார்கள். அந்த இடுகாடு இருக்குமிடம் ஒரு மலையுச்சிப் பகுதி. அம்மலைதான் நாராயாமா. அக்கிராமத்தில் எழுபதை எட்டுபவள் கிழவி ஓரின் (ORIN) இவளைச் சுற்றித்தான் கதை. இவளுக்கு நிறைய பிள்ளைகள், மூத்தவன் தட்சுஹை (TATSUHEI) தாரமிழந்தவன். அவனையு்ம் அவனது குழந்தையையும் கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டு நாராயாமாவுக்கு நிம்மதியாகப் போய் விடலாமென சொல்லுகிறாள் ஓரின்.

உப்பு வியாபாரி ஒருவன் முயற்சியில் அடுத்த ஊரிலுள்ள விதவைப் பெண் ஓரினுக்கு புது மருமகளாகி தட்சுஹையை மணக்கிறாள். கடமை முடிகிறது, ஓரின் கிழவிக்கும் 70-வது பிறந்த நாள் வருகிறது. 70 வயதிலும் அவளுக்கு 33 பற்களிருக்கின்றன. அவை பிசாசுப் பற்கள் என்று சொல்லி ஊரார் கேலி செய்கிறார்கள். அவ்வளவு பற்களோடு நாராயாமாவுக்கு பயணிப்பது சரியல்ல என வேதனையுறும் ஓரின் தானே முன் பற்களை அடித்து நீக்கிவிடுகிறாள்.

பனிகாலம் தொடங்கவும் ஓரின் தன் மூத்த மகனை தன்னை நாராயமாவுக்குக் கொண்டு விடச் சொல்லுகிறாள். அதற்கான சடங்கும் அதன்போது ஓதப்படும் கட்டளைகளும் முக்கியமானது. ஒரு சிறு நாற்காலியை மகன் முதுகில் கட்டி, அதில் தன் தாயையோ தந்தையையோ உட்காரச் செய்து, தன்னை இறுகப் பிடித்துக் கொள்ள செய்து ஓடை, பள்ளத்தாக்குகள், கரடு முரடான மலைப் பாதைகளில் ஏறியிறங்கி நாராயாமாவை அடைய வேண்டும். போவது யார் கண்ணிலும் படக் கூடாது. இந்த இறுதிப் பயணத்தை யாரும் பார்த்து விடாதபடி இரவோடிரவாகச் செய்ய வேண்டும். ஒரு நீர் நிலையையடுத்து ஏழு வளைவுகள் எனப்படும் ஏழு பள்ளத்தாக்குகளைக் கடந்தால் நாராயாமாவுக்குள் நுழையலாம். சுமப்பவன் திரும்பிப் பார்க்கவே கூடாது அம்மாவை விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாய் திரும்பி வரவேண்டும்.

ஒரே ஒரு சலுகை என்னவென்றால், ஏழு வளைவுகளைக் கடந்தும் விரும்பினால் ஒரே ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். இவை கட்டளைகள். இக்கட்டளைகள் ஆறுபேர் கொண்ட குருமார்களால் (அதில் ஒருவர் பெண்) நிபந்தனையாக பயணத்தின்போது முதல் நாளிரவில் நடக்கும் சடங்கின் போது ஓதப்படுகின்றன. மறுநாள் நள்ளிரவில் தாயை சுமந்துகொண்டு மலை, காடுகளில் கடுமையான நடைப்பயணம் மேற்கொண்டு விடியும்போது நாராயாமாவை அடைந்து ஓரினை இறக்கிவிட்டு திரும்புகிறான் மகன். வழியில் தன் எழுவது வயது அப்பனை அவனது சம்மதமின்றி வற்புறுத்தி கயிற்றால் கட்டித் தூக்கி வருகிறான் இன்னொரு ஊர்க்காரன். அப்பன் முடியாதென்று சண்டையிடவே, அவரை அப்படியே மலையிலிருந்து உருட்டிவிடுகிறான். ஓரின் மகனுக்கும் அவனுக்கும் இதனால் சண்டை மூண்டு அவனும் தன் வழியிலேயே உருண்டு மாள்கிறான். தட்சுஹை திரும்பி ஓடிப் போய் அம்மாவைப் பார்த்து குதூகலத்தோடு கூறுகிறான்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Akira Kurosawa Image Credit: Wikipedia

‘‘அம்மா, பனி விழத் தொடங்கிவிட்டது. இனி மேல் உனக்கு வலியோ அசெளகரியமோ இருக்காது’ இந்தப் படத்தை கீய்ஷீகே கினோஷிடா ஒரு இசைநாடக வடிவில் தாபுச்சி தியேட்டர் எனும் ஜப்பானிய பாரம்பரிய வடிவில் இயக்கியுள்ளார். படம் முடிவில் பயணிகளையும் சரக்கையும் கொண்ட புகைவண்டித் தொடர் ஒன்று வேகமாய் ஓடுகிறது. ஆளரவமற்ற ரயில்வே ஸ்டேஷனின் பெயர்ப் பலகையில் ஓபாசுடே (OBASUTE) என்ற பெயர் இருக்க அடியில் ‘‘கைவிடப்படும் இடம்’’ என்ற ஜப்பானிய சொற்களிருக்கின்றன. ஓரினாக நாடக நடிகை கினுயோ தனகாவும் (KINUYO TANAKA) மகனாக தெய்ஜி தகாஹாஷியும் (TEIJI TAKAHASHI) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜப்பானுக்குள்ளேயே அதிகம் திரையிடப்பட்ட இப்படத்திற்கு ஜப்பானின் 3 கினெமோ ஜூன்போ (KINEMO JUNPO) பரிசுகள் சிறந்த டைரக் ஷனுக்கும் சிறந்த நடிகைக்கும் சிறந்த படத்துக்குமென வழங்கப்பட்டது.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்அதே சமயம் இக்கதையை முழுக்கவும் முற்றிலுமாய் ஓர் அரிய நவீன சினிமாவாக ஷோஹை இமாமுரா இயக்கி வெளியிட்டார். (SHOHEI IMAMURA) பிரம்மாண்டமும் பிரமிப்புமிக்க இப்படம் உலகெங்கும் திரையிடப்படுகையில் சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டது. இமாமுரா பாலே ஆஃப் நாராயாமாவை 1983-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். முதல் வகையில் இடம் பெறாத சில காட்சிகள் இந்த புதிய படத்தில் இடம் பெற்று சினிமா என்பதை காட்டியது. காட்டில் ஓர் இளம் ஜோடி உடலுறவு கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உடற்பசி கொண்ட ஒருவன் அந்த நேரத்துக்கு பெண் துணை கிடைக்காததால், அடுத்த வீட்டுக்காரன் பெண் நாயைப் புணருகிற காட்சி.

மகன் தாய் ஓரினை முதுகில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பாதை, மலைப்பாதை, மரப்பாலம், பள்ளத் தாக்குகளில் இரவில் கடுமையான நடைப் பயணம் செய்யும் படத்தின் கடைசிக் காட்சி தூக்கி வாரிப் போடுகிறது. நாராயாமா மலையை நெருங்குகையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் முழுசும், சிதறியுமாய் சமீபத்தில் வைக்கப்பட்டு இறந்து போய், பறவைகளால் குதறப்பட்ட ஒரு கிழவியின் எலும்புக்கூட்டோடு தலைமுடியும், மிச்சம் மீதி அழுகிய சதையும் இப்படத்தின் ஒளிப் பதிவை பிரமிக்கும் வகையில் காமிரா கலைஞர் மசாவோ தோச்சிசாவா (MASAO TOCHIZAWA) அமைத்திருக்கிறார். கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இமாமுராவுக்கு இப்படத்துக்கு தங்க இலச்சினைப் பரிசு அளிக்கப்பட்டது. ஓரின் பாத்திரத்தில் சுமிகோ சகாமோடோ (SUMIKO SAKAMOTO)வும் மகன் தட்சுஹை பாத்திரத்தில் கென் ஓகாடாவும் (KEN OGATA) அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற திரைப்பட மேதைகளுள் முக்கியமான ஒருவர் ஜப்பானின் அகிரா குரோசாவா (AKIRA KUROSAWA) இவர் படங்கள் பல முறை அமைப்புகளால் பரிசு பெற்றவை. அவ்வப்போது பிற மொழியிலுள்ள நாடகங்கள், நாவல்களையும் ஜப்பானிய மண்ணின் பாரம்பரியத்துக் கேற்றவாறு படமெடுத்து, அவை எவற்றின் தழுவல் என்பதை நேர்மையோடு பதிவிடுவார். ஷேக்ஸ்பியரின் சில நாடகங்களையும் (RAN, THRONE OF BLOOD) தாஸ்தாவெஸ்கியின் நாவலையும் (IDIOT) குரோ சாவா ஜப்பானிய படங்களாகத் தழுவி எடுத்திருக்கிறார். போலவே இவரது அசல் ஜப்பானிய கதைத் திரைப் படங்களை (RASHOMAN, SEVEN SAMURAI ஹாலிவுட்டிலும் தமிழிலும் கண்ணியமாக வெளிப்படையாக தழுவி படமெடுத்திருக்கிறார்கள். (OUTRAGE, அந்த நாள், THE MAGMFICENT SEVEN)

குரோவாவின் அமரத்துவமான திரைப்படங்களான ரஷோமன், செவன் சாமுராய், ரெட் பியர்டு, இகிரு, யோஜிம்போ, ரான், ட்ரீம்ஸ் என்பவை சும்மா பட்டியலுக்காகச் சொல்லவில்லை. அவரை ஓர் உலகத் திரைப்பட மேதையென கருதச் செய்தவை. ரஷோமன் படத்தின் கதையை தி.சு. சதாசிவத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் ஸ்நேகா பதிப்பகம் சிறப்புற வெளியிட்டார்கள். படத்தின் அசல் திரைக்கதை வசனமாகும் இது. குரோசாவா பற்றிய அரிய நூலை திரைப் பட ஆய்வு எழுத்தாளர் எஸ். ஆனந்த் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வெகு சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அகிரா குரோசாவா ஜப்பானின் சத்யஜித்ரே என்றால், கோபயாஷி ஜப்பானின் ரித்விக்கடக் எனலாம். குரோசாவா ஜப்பானில் கொஞ்சம் வேலை குறைந்திருந்த நேரத்தில் 1974ல் 1974ல் ரஷ்யாவில் அவ்வரசாங்க அழைப்பின் பேரில் போயிருந்து ஓர் அரிய திரைப்படத்தைச் செய்தார். அதுதான் டெர்சு உஜாலா.

டெர்சு உஜாலா (DERSU UZALA) ரஷ்யமொழியில் குரோசாவா இயக்கி சென்னை தேவி திரையரங்கில் 1975-ல் திரையிடப்பட்டது. விளதிமிர் ஆர்செனியீவ் என்பவர் (VLADIMIR ARSENIEV) ஜார் கால ரஸ்யாவில் பயணம், பத்திரிகை, நிலம் நீர் மலைகளின் ஆய்வுக்கட்டுரைகள் ஏராளமாய் எழுதியவர். அவரது கதை டெர்சு உஜாலா 1902-ல் இடம் பெறுகிறது. ஓர் அதிகாரி சில வருடங்களுக்கு முன் தான் தன் நண்பர் ஒருவரை அடக்கம் செய்த இடத்தைக் காண வருகிறார். அடையாளம் தெரியவில்லை புதைக்கும் சமயம் இருந்த இரு பெரிய மரங்களையும் எடுத்துவிட்டு இடம் பெரிய அரசு கட்டுமான மொன்றுக்காக சீராக்கப்படுகிறது. ஒரு தீர்மானத்தோடு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டவராய் அவர் சென்று போனதை நினைவுகூர்கிறார். படமும் இவ்வாறே ஃபிளாஸ் பாக்கில் தொடங்குகிறது.

டெர்சு உஜாலா சோவியத் யூனியன் தயாரித்த மகத்தான 70 MM படம். இது அகிரா குரோசாவா இயக்கிய ரஷ்ய மொழிப்படம். 1902ல் ராணுவத்திலிருந்து வந்த சிலரை ஓர் அதிகாரியின் கீழ் சைபீரிய பகுதி ஒன்றை அதன் பள்ளத் தாக்கு, மலைகள், நீர்நிலை போன்றவற்றை மறு ஆய்வு செய்து காடுகள் அருவிகளையும் உள்ளிட்ட பகுதிகளை சர்வே செய்து புதிய வரை படம் (MAP) ஒன்றைத் தயாரிக்க அனுப்புகிறது. அவர்கள் ஒரு புதிய மனிதனைச் சந்திக்கின்றனர். குள்ளமான வயதான கால்கள் வளைந்த ஒரு வேட்டைக்காரனான அவன் பெயர் டெர்சு உஜாலா சைபீரிய பனிப் பிரதேசம், காடுகள் வனவிலங்குகள், நீர் நிலை எல்லாவற்றையும் அறிந்த டெர்சு ஒரு மங்கோலிய இன காட்டு ஜீவி. மனைவியும் மக்களையும் அம்மை நோய்க்கு பலி தந்த டெர்சு தனியாள் விலங்குகளைக் கொன்று விற்று வாழ்பவன். ஒரு புலியைச் சுட்டுக் கொன்றிருக்கும் அவன் புலியின் கூட்டத்தை எதிர்பார்ப்பவன். ஒரு பெரும் சைபீரிய பனிப் புயல் மிகப் பிரமாதமான காமிரா ஒளிப்பதிவால் படமாக்கப்பட்டுள்ளது.

பனிப் புயல் வருவதை தன் கூர்ந்த மதிநூட்பம், அனுபவ ரீதியாக முன்னதாக டெர்சு சர்வே குழுவை க் காப்பாற்றும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்று. குழு நகருக்குப் போய்விட்டு சில ஆண்டுகள் கழித்து வரும்போது டெர்சுவின் கண் பார்வை கூர்மை குறைந்திருப்பதை அவன் வேட்டையின்போது குறிதவறுவதிலிருந்து தெரிய வருகிறது. கண்களைச் சோதிக்க அழைத்தால் அவன் காட்டைவிட்டு நகருக்கு வர மறுக்கிறான். கஸ்டப்பட்டு அதிகாரி அவனைத் தம்மோடு நகரத்துக்கு அழைத்து வருகிறார். நகரின் வாழ்க்கை, நாகரிகம் எதுவும் டெர்சுவுக்கு ஒத்துப்போகவில்லை. தன்னை தன் காட்டிலேயே கொண்டு விடும்படி நச்சரிக்கிறான். அதிகாரி அன்றைக்கு அதிநவீனமான வேட்டைத் துப்பாக்கி ஒன்றை பரிசளிக்கிறார். பார்வை குறைவால் சற்று தவறாகக் குறி வைத்தாலும் குறி பிசகாது சுடும் துப்பாக்கி அது என்று சொல்லித் தருகிறார். சில நாட்கள் கழித்து போலீஸ்காரர் ஒருவர் அதிகாரியைத் தேடி வந்து விசாரிக்கிறார்.

”இது உங்கள் பெயர் பொறித்த வேட்டைத் துப்பாக்கி. திருடர்கள் சிலரால் விற்க முற்படுகையில் பிடிபட்டது.”

”ஆனால் இது திருடுபோகவில்லை. டெர்சு உஜாலாவென்ற வேட்டைக்காரருக்கு நான் பரிசாக தந்தாயிற்றே?” என்கிறார் அதிகாரி.

”அவரைக் கொன்று போட்டுவிட்டு இத் துப்பாக்கியை பிடுங்கிச் சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை வந்து பாருங்கள்.”

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Fyodor Dobronravov Image Credit: Wikipedia

அதிகாரி போய் பார்த்துவிட்டு சவ அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எல்லாம் முடிந்தவுடன் ஒரு போலீசு பவ்யமாய் சல்யூட் அடிக்கிறார். அதிகாரி அதை ஏற்று திரும்புகையில் இன்னொரு முறையும் போலீசு சல்யூட் செய்கிறார். அதிகாரி புரிந்து கொண்டு முக இறுக்கத்தோடு நகருகிறார். ஜார்மன்னன் காலத்து ரஷ்யாவில் போலீசுகாரர் இனாம் எதிர்பார்த்ததை இக்காட்சி சொல்லுகிறது.

அகிரா குரோசாவாவின் சிறந்த இயக்கத்துக்கு இப்படம் மற்றொரு எடுத்துக்காட்டு. படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புரிந்திருப்பவர் காமிரா கலைஞர் ஃபியோடோர் டோப் ரோன் ரவோவ் (FYODOR DOBRONRAVOK) என்ற ரஷ்ய ஒளிப்பதிவாளர். ஐசக் ஷ்வார்ட்ஸ்-ன் (ISAAK SHVARTS) இசைக் கோர்வை நுட்பமானது. அதிகாரியாக ரஸ்ய நடிகர் யூரி சோலோமின் (YURI SOLOMIN) என்பவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 1975ம் ஆண்டுக்கான சிறந்த அயல்மொழி பட விருது ஆஸ்கார் அகாதமி விருது விழாவில் பெற்ற படம். மாஸ்கோ சர்வதேச பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்கம் பெற்ற படம்.

அகிரா குரோசாவாவுக்கும் சத்யஜித் ரேக்கும் ஒரு வகையில் ஒற்றுமையுண்டு என கூறும் வகையில் இருவரது கடைசி படங்களும் தோன்றுகின்றன. ரேயின் ”அகாந்துக்”, அவரது கடைசி படம். குரோசாவின் ”மததாயோ” அவரது கடைசி படம். இரு படங்களும் ஒரு வருக் கொருவர் நன்கு புரிந்து கொண்டு அன்பு காட்டுவதை அடிப்படையாகக் கொண்ட படங்கள், இரு படங்களும் ஆழமான உணர்வுகளைக் கொண்டு, அதிகம் வெளிப்புற காட்சிப் பிடிப்புகள் கொண்டதாயில்லாதவை.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்குரோசாவின் ”மத தாயோ”, 1993-ல் வெளிவந்தது. அவரது முப்பதாவதும் கடைசியுமான படம். 60-வயதை எட்டும் ஆசிரியர், புரொபசர் ஹியாகன் உச்சிடா (HYAKKEN UCHIDA) இரண்டாம் உலகப் போர் நடக்கையில் தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார். சதா நகைச்சுவை ததும்ப பேசி மாணவர்களின் நிறைந்த அன்பைப் பெற்ற ஆசிரியருக்கும் மாணவர்களில் கொஞ்சம் பேருக்கும் நெருக்கமான பிணைப்பு நிலைக்கிறது. அவர் குடியிருக்கும் வீடு விமானத் தாக்குதலில் நாசமாகி குடிசையொண்றில் கணவனும், மனைவியும் சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், தம் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆசிரிய தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அவரது மாணவர்களே அவருக்கு குழந்தைகள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஜப்பானிய வழக்கப்படி புரெபசரை மாணவர்கள் ஒரு கேள்வியைக் கேட்பார்கள்.

”மஹ்தா-கேய்? (MMAHDA-KAI?) என்றால் நீ தயாரா? அதாவது மறு உலகுக்குபோக தயாரா என்பது.

அதற்கு உச்சிடா, மததாயே! (MADADAYO) என்று பதிலளிப்பார். என்றால் ”இன்னும் இல்லை என்று பொருள். மாணவர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அழகான வீடொன்றைத் தங்கள் அன்பான பேராசிரியருக்குக் கட்டி அதில் குடியமர்த்துகிறார்கள். யுத்தமும் முடிவுக்கு வருகிறது. குழந்தையற்ற உச்சிடா தம்பதிகள், தம் புது வீட்டுக்குள் வந்து சேர்ந்த பூனையொன்றை உயிருக்குயிராய் அன்பு செலுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூனை ஒரு நாள் ஓடிப் போய் விடுகிறது. திரும்பி வருவதேயில்லை. உச்சிடா சாப்பிடாமல் குழந்தைபோல் பார்த்துக் கொண்ட பூனையின் நினைவாகவே ஒரு நாள் முழுக்க இருப்பார்.

வேறொரு பூனை வந்துசேருகிறது. பேராசிரியர் தன் 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நாளில் அவரது மாணவர்களின் பேரக் குழந்தைகளும் கொண்டுவரப்படுகின்றன. அன்றும் அவர் உரக்கச் சொல்லுவார் ”மததாயோ” இன்னும் நேரம் வரவில்லை என்று மனித உறவை, மனிதன்- செல்லப் பிராணி உறவையெல்லாம் மிக நளினமாக துளியும் மிகையின்றி அற்புதமான வெகு இயல்பான மிகையற்ற நடிப்பால் மததாயோ மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பல விமர்சகர்கள் மததாயோவை குரோசாவா தன் இறுதி படமாக தீர்மானித்தே செய்திருப்பதாக ஹேஷ்யம்கூட கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் அளித்த – பதில், ”கிடையாது, எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய படங்கள் கையிலிருக்கின்றன” என்பதுதான்.

தாத்சுவோ மட்சுமுரா (TATSUO MATSUMURA) ஆசிரியர் உச்சிடாவாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குரோசாவின் சிறந்த இயக்கமும் தகாவோ செயிடோ (TAKAO SAITO)வின் காமிரா கலையும் மிகச் சிறப்பான விஷயங்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

Bioscope Karan 18th Web Article Series by Vittal Rao. This Series About கிழக்கு முகமாய் – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்கு முகமாய்

பயாஸ்கோப்காரன் சென்னைக்கு வந்து வாழ்க்கையில் நங்கூரமடித்து நின்றதும் திரைப்படங்களை தியேட்டர்களிலும், திரைப்படச் சங்கங்களிலும், மாறி மாறி பார்த்து வைக்கும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற முடிந்தது. கீழை நாட்டு திரைப்படக் கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய் ஒருபுறமும், அதேசமயம், ஏதோ ஒரு மெல்லிய சரடால் ஒன்றுக்கொன்று ஒத்திசைத்து நெருக்கமாகி சார்ந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டியது. சீனப்படம் HONG-FEN [1995]-இல் அரிசி மாவைக் கொண்டு நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சித்தரிப்பு. தன் வாழ்வின் குறிக்கோளாக ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைத்து பணம் சேர்தது வாங்கி விடுகிறாள்.

இப்போது புதுப் பிரச்சினை ஒன்று. அக்கம் பக்கத்திலிருந்து தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இவள் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். இவ்வளவு காலமாய் ஒட்டி உறவாடிய சினேகிதிகளை வரவேண்டாமென சொல்ல முடியாது. சிறுசுகள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டுப் பார்க்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். பிறகு இவளுக்கே தன் பெருமையை மற்றவர்கள் பேச வேண்டுமென்று நினைத்து எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். ஒருநாள் டி.வி.பெட்டி வேலை செய்யாமல் மக்கர் செய்கிறது. சொல்லியனுப்பியும் பழுது பார்க்க வல்லுனர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சினேகிதிகளின் வருகை நிற்கிறது. இவளைவிட அதிக அக்கறையோடு “சரியாச்சா, சரியாச்சா?” என்று அவர்கள்தான் சதா இவளைக் கேட்டுக் கொண்டேயிருக்க ஒருநாள் பெட்டி சரியாகிறது. ஆனால் முன் போலில்லை. இப்படத்தை வேறுவிதமாக கன்னடத்தில் பார்த்த மாதிரியுமியிருக்கிறது. [குலாபி சினிமா]. உலகத் திரைப்பட விழாவில் காண நேரிட்ட இச் சீனத் திரைப்படத்தை இயக்கியவர் லீ ஷாவோ ஹோங் [LEE SHAO HONG].

Ermo - Alchetron, The Free Social Encyclopedia

“எர்மோ” [ERMO] எனும் சீனப்படம் [1995] குறிப்பிட வேண்டிய ஒன்று. கிராம வாழ்க்கை, பள்ளிக்கூட நாட்கள், என்பனவான அடிப்படை வாழ்வியல் சங்கடங்களை வைத்து பின்னப்பட்ட கதையைக் கொண்ட இப்படத்தை சிறப்பாக இயக்கியவர் மக்கள் சீனாவின் புதிய சினிமாவுக்கான இயக்குநர் ZHOU XIAOWEN.

Red Cherry (1995) - IMDb

1996-ல் திரைப்பட விழாவில் காட்டப்பட்ட செஞ் செர்ரி [RED CHERRY] மிகவும் பேசப்பட்டு பாராட்டப்பட்டு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்ற படம். இப்படம் ஃபாசிஸ எதிர்ப்பு யுத்தத்தில் அடைந்த வெற்றியின் ஐம்பதாம் ஆண்டு நினைவுக்கு அர்ப்பணிக்கப்படுவதான அறிவிப்போடு வெளியானது.
முன்னாள் சோவியத் யூனியனில் பெலோரஷ்யாவுக்கருகில் இயங்கி வந்த இவானோவ் சர்வதேச அனாதைப் பள்ளிக்கூடத்தில் [IVANOV’S INTERNATIONAL SCHOOL] படித்த சில சீன மாணவர்கள், 1940-1945 கால கட்டத்தில் அடைந்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் உருவான அரிய சீனத் திரைப்படம் செஞ் செர்ரி [RED CHERRY], 2-ம் உலகப் போரில் பெற்றோர்களை இழந்த சூ சூ [CHU CHU] என்ற சிறுமியையும், லுவோ ஜியாமன் [LUO XIAMAN] என்ற சிறுவனையும் அந்த ரஷ்ய சர்வதேசப் பள்ளியில் சேர்க்கின்றனர். ஜெர்மன் நாஜி படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சண்டை நடந்தவாறு உள்ள 1940-45 கால கட்ட சூழலில் அப்பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெலோரஷ்யாவிலுள்ள கோடை முகாமுக்குச் செல்ல பள்ளி ஏற்பாடு செய்கிறது. கர்னல் கீல் [COL.QIEL] எனும் கிராதக ஜெர்மன் படைத்தலைவன் ரஷ்ய-சீனச் சிறுவர்களைத் தன்னோடு கூடைப்பந்தாட்டமாட கட்டளையிட்டு, முரட்டாட்டம் ஆடி சிறுவர்களை மோதித் தள்ளி காயமுறச் செய்து அதை ரசிக்கிறான். அப்போது பள்ளியின் ரஷ்ய ஆசிரியை மணியடித்து அவர்களை வகுப்புக்கு அழைப்பது நாஜி அதிகாரிக்கு பொறுக்கவில்லை. ஆசிரியை எதிரியின் ஆக்கிரமிப்பையும் கொடுமையையும் குறிப்பால் உணர்த்தி உரையை நிகழ்த்துகிறாள். அவள் பேச்சைக் கேட்கும் ராணுவ அதிகாரி அவளைச் சுட்டு கொன்று விடுகிறான். இதுபோன்ற பல்வேறு துன்பங்களை பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து ஜெர்மனிய ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் ஒருவன் வருகிறான். ஒரு காலை இழந்து பொய்க் காலோடு நடமாடும் ஜெனரல் கொடுமையிலும் கொடுமையானவன். சூ சூவை அவனது இருப்பிடத்தைச் சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். நாஜி ஜெனரல் தன்னை ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொள்ளுபவன், அவனுக்கு குரூர எண்ணம் ஒன்று. அழகிய இளம் பெண்களின் உடலில் தனக்கு மிகவும் பிடித்தமான, நாஜிகளின் மூன்றாம் ரீச் [ஹிட்லரின் பரம்பரை]சின் சுவஸ்திகா சின்னத்தை மையமாய் வரைந்து அதற்கு மேலே இரு சிறகுகளையும் விரித்து நிற்கும் கழுகின் உருவை பலவண்ணங்களால் பச்சை குத்தி வைப்பது [TATTOO]. அம்மாதிரி உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட பெண்ணைக் கொண்டு வந்து மதுவும் விலை மாதுகளோடும் கும்மாளம் போடும் நாஜி, ராணுவ அதிகாரிகளின் கிளப் ஒன்றின் உயரமான மேஜைமீது நிற்க வைத்து நிர்வாணமாக்கி பார்க்கச் செய்து பரவசமடைகிறான்.

அடுத்த ஓவியம் சூ சூ என்பதாகிறது. அவனது லட்சியமே அதுதான். நடமாடும் உயிருள்ள ஓர் ஓவியக்காட்சி, தன் கோர எண்ணத்தையும் செயலையும் கலை என்றே சொல்லிக் கொள்ளுகிறான். அச்சமயம் ருஷ்யர்கள் ஜெர்மன் ராணுவத்தை தாக்கி வருகிறார்கள். ஜெர்மன் ராணுவம் தோற்கும் படலம். “நம்மைச் சுற்றி ரஷ்யர்கள் வந்து விட்டார்கள். நாம் அழியப் போவது உறுதி. அதற்குள் என் மகத்தான இறுதி ஓவியத்தை முடிக்க வேண்டும்.” என வெறியோடு கூவிவிட்டு சூ சூவை நிர்வாணமாக கவிழ்ந்து படுக்க வைத்து மயக்க ஊசி செலுத்தி மயக்கத்திலாழ்த்துகிறான். இரண்டு மூன்று தினங்களில் பல வண்ணங்களிலான இறகு விரித்த கழுகு மற்றும் சுவஸ்திகா சின்னங்களை நாஜி, ஜெர்மனியின் மூன்றாம் ரீச் சின்னத்தை பச்சைக் குத்தி முடித்துவிட்டு, “இது எனது மாஸ்டர் பீஸ்”, என்று கூறிவிட்டு துப்பாக்கியை எடுத்து வாயில் சுட்டுக்கொண்டு சாகிறான். ரஷ்யர்கள் வருகிறார்கள். தப்பியோடும் ஜெர்மன் சிப்பாய்களை ஒளிந்திருந்து சுடும் லுவோ ஜியாமன் தான் ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கி அங்கு தன்னைப் பிடிக்க வரும் ஜெர்மானியரை உள்ளே விட்டு பெட்ரோலை கொட்டி வெடி வைத்து அழிப்பதோடு தானும் மரணமுறுகிறான்.

சூ சூவை கோணிப் பையில் போட்டு பொட்டல் வெளியில் கொண்டு போய் போட்டு விட்டு ஜெர்மானியர்கள் ஓடி விடுகிறார்கள். ருஷ்யர்களால் காப்பாற்றப்பட்ட சூ சூவை சர்வதேச பள்ளியின் பிரின்சிபால் அடையாளம் கண்டு கொள்ளுகிறார். இப்போது முக்கிய பிரச்சினை சூ சூ எனும் உயிருள்ள நடமாடும் ஓவியக் காட்சி. அந்த ஓவியம், ஃபாசிஸ நாஜிகளின் மூன்றாம் ரீச்சின் இலச்சினை போன்ற கழுகும் ஸ்வஸ்திகாவும் பல வண்ண மூலிகை மருந்துகளாலான வண்ணங்களைக் கொண்டு அந்த சீனப் பெண்ணின் முதுகெங்கும் பச்சைக் குத்தப்பட்ட ஒன்று. சாமானியத்தில் அழிக்க முடியாது. ருஷ்ய டாக்டர் ஒருவரும் சர்வதேச டாக்டர்களும் இணைந்து சூ சூவின் பச்சைக் குத்தின முதுகுத் தோலை முற்றிலுமாய் உரித்தெடுத்து விட்டு வேறு தோலை வைத்து SKIN GRAFT ரண சிகிச்சை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வியுறுகிறது.

போர் ஓய்ந்து சூ சூ சீன தலைநகர் பைஜிங்கிற்கு 1950-ல் திரும்பி வந்தவள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழந்து தன் 63வது வயதில் காலமானார் என்பது செஞ் செர்ரியின் வரலாறு. 1996-ன் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, ஹவுஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருது மற்றும் பல விருதுகளைப் பெற்ற இதில் சூ சூவாக நடித்த GUO-KE-YO என்ற நடிகைக்கு சிறந்த நடிகை விருது கிடைத்த RED CHERRY படத்தை இயக்கியவர் YE YING. படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை செய்தவர் காமிராமேன் ZHANG LI.

File:Pudong, Shangai.png - Wikipediaஷாங்காய் நகரில் 1958-ல் பிறந்து ஹாங்காங்கில் வளர்ந்து உருவான புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குனர் ஓங்க் கார் வை [WONG KAR WAI]. பதிப்போவிய பயிற்சி பெற்ற ஓங்க் கார்வை எண்பதுகளில் சினிமா தயாரிப்பு துறையில் உதவியாளராயும் திரைக் கதையாசிரியராயும் தொடங்கியவர். இவரது, “AS TEARS GO BY”, [1988] எனும் சீனப் படம் இவரது ஆழ்ந்த காட்சி ரூப தனி நடையை வெளிப்படுத்திற்று. இவரது பெரிதும் பேசப்பட்ட “சங் கிங் எக்ஸ்பிரஸ்” [CHUNG KING EXPRESS]Chungking Express (1994) - IMDb 1994-ல் வெளிவந்தபோது மேற்குலக திரைப்பட ஆர்வலர்களை வசீகரித்து அசத்தியது. அவரது கிராஃபிக் பயிற்சியின் பின்புலத்தில் சங் கிங் எக்ஸ்பிரஸ் அதி நவீன உத்திகள் கொண்ட வண்ணப்படமாய் அமைந்தது. ஹாங்காங் காவல் துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் தன் வருணனையாகச் சொல்லிப் போகும் இப்படத்தில் அவர் புகுத்தியிருக்கும் வண்ண முறையும் ஒலியமைப்பும் அசாத்தியமானது. அதே சமயம் சீனப் பண்பாடு, பாரம்பரியம், சீனக் கலாச்சாரம் என்பனவற்றின் எச்சமாக எதையும் பார்க்க முடியவில்லை. முழுக்க மேலை நாட்டு கலாச்சாரத்தையும் நாகரிக பூச்சாகவும் விளங்கவல்லதாய் அதன் அடிப்படை கதையமைப்பிலிருந்து சகலத்தையும் அமைத்திருக்கிறார் ஓங்க் கார் வை. மேலைநாட்டு கதை வகை, சூழல், நடிப்பு, ஒப்பனை, இசைக் கோர்வைகளாகவே போய்க் கொண்டிருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றையும், கலை, கலாச்சாரப் பண்பாட்டுக்களையும் கொண்ட சீனத்தின் குறியீடுகளாய்க்கூட இவரது படங்களில் பார்க்க முடியவில்லை. அடுத்து, ஓங்கார் வையின் படமான, “DAYS OF BEING WILD”, ஹாங்காங் நகர சூழலையும் வாழ்வியல் முறையையும் கொண்டிருப்பது. ஹாங்காங் 99 ஆண்டுகளாய் பிரிட்டிஷ் காலனியாக இருந்து வந்திருக்கிறதென்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு ஓங்க் கார்வை போன்றோரின் கம்யூனிஸ ஒவ்வாமை காரணமும் இத்தகைய புதிய கலாச்சார முலாம் பூசப்பட்ட சினிமாவை ஆரத் தழுவிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து ஓங்கார் வை தயாரித்து இயக்கிய “HAPPY TOGETHER” [1997] எனும் நவீன சீனப்படம். இது ஹாங்காங் நகர நவீன நாகரிக வாழ்க்கையில் இரு இளைஞர்களுக்கிடையேயான ஓரினக் கவர்ச்சி காதல் மற்றும் ஓரினப் பாலுறவு பற்றிய படம். ஒரு சமயம் சோகமும், மறுசமயம் மகிழ்ச்சியோடும் போகும் வாழ்க்கைப் பற்றிய படம். இந்தப் படமும் மேற்கு நாடுகளில் மிக்க வரவேற்பையும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது. ஓரினப் பாலுறவு எங்கும் இருப்பதொன்று. பூடகமான நடவடிக்கைகள் வெடித்துச் சிதறி அம்பலத்துக்கு வந்து உலக அங்கீகாரத்தை வேண்டும்போது எல்லாவற்றுக்கும் உடனடியாய்க் கிட்டுவதில்லை. அதனால் சிக்கலும் சோகமும் தற்கொலை முயற்சிகளும்கூட இவ்வித உறவில் நிகழ்கின்றன. D.H.லாரன்ஸின் பெண்கள் இருவரிடையேயுள்ள ஓரினப் பாலுறவை பற்றிய கதை ஒன்று “FOX” என்ற பெயரில் 70-களில் வெளியானது. விஷயத்தை பூடகமாய் சொல்லும் படம். 1940-களின் தொடக்கத்தில் புகழ் பெற்ற உருது பெண் எழுத்தாளர் திருமதி இஸ்மத் சுக்தாய் “QUILT” [போர்வை] எனும் பெண்களின் ஓரினப் பாலுறவைச் சொல்லும் அதியற்புத சிறுகதையை எழுதியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் இடையில் தைவானைச் சேர்ந்த மற்றொரு சீன இயக்குனர் ஆங் லீ அமெரிக்க கௌபாய்கள் இருவரிடையேயான ஓரினப் பாலுறவைக் கொண்ட Brokeback Mountain (2005) - IMDb “BROKE BACK MOUNTAIN” என்ற ஆங்கில படத்தை இயக்கி ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இந்நூற்றாண்டில் எடுக்கப்பட்ட “BLUE IS THE WARMEST COLOUR”, என்ற ஃபிரெஞ்சு திரைப்படம் மிகவும் பேசப்பட்ட பெண்களுக்கிடையேயான ஓரினப் பாலுறவு பற்றிய அரிய படம். இந்தியாவில் ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ், குல்பூஷன் கர்பந்தா ஆகியோர் நடித்த “FIRE”ம் அதே வகை படம். ஓங்க் கார் வையின் “ஹாப்பி டு கெதர்” படத்தில் யூ-ஃபை [YIU-FAI] மற்றும் போ விங்க் [PO WING] எனும் இரு இளைஞர்கள் ஓரினப் பாலுறவு ரீதியாக காதலர்கள். இருவரும் விடுமுறையைக் கழிக்க அர்ஜெண்டினாவுக்கு போயிருக்கையில் விங், யூவை ஒதுக்கி விட்டு தனியேபோய் வேறு பையன்களை ஜோடி சேர்த்துக் கொள்ளுகிறான். யூ, ஹாங்காங்குக்குத் திரும்பிப் போக கடுமையாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறான். ஒருநாள் விங் சிலரால் பலமாய்த் தாக்கப்பட்டு கிடக்கையில், யூ அவனைத்தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வந்து தாய்போல சிகிச்சை உணவெல்லாம் அளித்து உண்மை அன்பு எது என்பதை தெரிவிக்கிறான். இருவரும் பழையபடி நெருக்கமாகி ஊர் திரும்புகிறார்கள். இந்தப் படத்திலும் ஓங்க் கார் வை முழுக்கவும் மேற்கின் மாறிவரும் கலாச்சார மாற்றத்தைத் தாங்கிய ஹாங்காங் சீனர் வாழ்க்கையைத்தான் காட்டுகிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் உயரிய வண்ண ஒளிப்பதிவு. காமிராமேன் கிறிஸ்டோஃபர் டாயில் [CHRISTOPHER DOYLE] பாரட்டுக்குரிய ஒளிப்பதிவாளர்.

ஓங்க் கார் வையின் வெகுவாகப் பேசப்பட்ட மற்றொரு படம், “2046”. சௌ [CHOW] சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் நகருக்கு வந்த ஒரு எழுத்தாளனும் பத்திரிகையாளனுமாவான். ஹாங்காங் உல்லாச விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவன் புகழ்பெற்ற சூதாட்ட மையம் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் பெரிய விடுதியில் பணியிலமர்கிறான். அவனுக்கு மிகவும் இணக்கமும் ஏற்றம் மிக்கதுமான இடம். அவன், தான் எழுதியவை எதிர்காலத்தை முன்வைத்த, நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கால வெளியின் எல்லைக்கப்பாற்பட்ட வெகு தொலைவில் நடந்தேறுவதாய் நினைக்கிறான். ஆனால் அது சரியல்ல. அது அத்தனையும் கடந்த காலத்தவை. அவன் எழுதி வந்த நாவலில் மர்மமான ரயில் வண்டியொன்று அவ்வப்போது வருடம் 2046-ஐ நோக்கி புறப்படும். அங்கு பயணம் மேற்கொண்டு போன ஒவ்வொருவருக்கும் தாங்கள் இழந்துவிட்ட கடந்த கால நினைவுகளை அங்கு போனதும் திரும்பப்பெறும் நோக்கமாகவே இருக்கிறது. 2046-ல் ஒன்றுமே மாற்றமடையவில்லை என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதானென்பதை யாருமே உறுதியாக அறிந்தவருமில்லை, ஏனெனில் 2046க்கு சென்ற ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை… ஒருவன் மட்டும் அதை மாற்ற விரும்பி அங்கு நிலையாக நின்றான். இந்த கதைப் போக்கினிடையே “2046” என்பது அந்த சூதாட்ட விலைமாதுள்ள விடுதியில் புகழ்பெற்ற அறை. அறை எண் 2046-ல்தான் சௌவின் காதலியும் இளம் விலைமாதுவான பெண் இருக்கிறாள். இந்த உறவு வாழ்க்கை தொடருகையில் அந்த பெண் வேறொருவனோடு ஜப்பானுக்கு சென்று விடுகிறாள். செள 2046- நாவலின் முடிவுக்கும் மேலே புதியதாக ஒரு பிற்சேர்க்கையை எழுதி முடிக்கிறான் அது 2047. அலுப்பற்ற விறுவிறுப்பான படம். ஓங்க் கார் வையின் சிறந்த இயக்கம், சிறப்பான ஒளிப்பதிவு, எடிடிங்கும் சேர 2046 சிறந்த படமாகிறது.

“BA WANG BIEJI” என்ற சீன சொற்றொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு “FAREWELL MY CONGUBINE” என்பது. திருமணம் செய்யாது ஆணோடு சேர்ந்து வாழும் பெண் “காங்குபைன்” ஒரு சீன அரசன் தன் “வைப்பை” இறுதியாக அனுப்பி வைக்கும் கதையாடலைக் கொண்ட புகழ் பெற்ற சீன மிக பழைய பாரம்பரிய இசை நாடகத்தின் பெயர் அது. உலகெங்கும் இந்திய தேவதாசிக் குலம் என்று குறிப்பிடப்பட்ட குடிகள் உட்பட தாசிக்குல குடிமக்களுக்கும் இசை, நடனம், கவிதை, இசை, நாடகம், நாடகம் எனும் கலைத் துறைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு, செயல்பாடு, சேவை என்பவை மறுக்க முடியாத அளவில் இன்றளவு இருந்துவரும் நிரூபணங்கள், அந்த வகையில் பண்டைய சீனமும் அந்த கலைப் பங்களிப்புகளில் அதன் தாசிக்குல மாந்தரின் அர்ப்பணிப்புகளைக் கண்டிருக்கிறது. “காங்குபைன்” படத்திலும் தாசிகளும், பண்டைய சீன கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக விளங்கிய இசை நாடக செயற்பாட்டோடு இணைந்திருப்பதை விரிவாகவே கூறுகிறது.

காங்குபைன் கதை 1924-லின் சீனத்து சூழலிலிருந்து ஆரம்பிக்கிறது. “மலர்ச்சி” என்ற பெயர் கொண்ட பிரபலமான விலைமாதர் இடத்திலுள்ள இளம்பெண் ஒருத்தி தன் ஆறுவிரல்கள் கொண்ட பையனோடு பகலில் வெளியேறி சீனத்தின் புகழ்பெற்ற இசை நாடகக் குழுவின் குருவிடம் ஓடுகிறாள். பகலில் விலை மாதைப் பொதுவிடத்தில் பார்க்கும் ஆண்களின் எதிர்வினை அற்புதமாயும் அளவோடும் படமாக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பைஜிங்கிலிருக்கும் “பைஜிங் திரைப்பட அகாடெமி, கலாச்சாரப் புரட்சியும் நால்வர் குழுவின் [CULTURAL REVOLUTION] செயல்பாடுகளும் ஓய்ந்துபோன நிலையில் 1978-ல் திறந்து விடப்பட்டது. அதில் உருவான சீன திரைப்படக்காரர்களின் ஐந்தாவது தலைமுறையின் முதல் இயக்குனர் வரிசை உலக சினிமா அரங்கில் தோன்றியது. அதில் முக்கியமானவர் கெய்கெ சென் [KAIGE CHEN] சீனாவில் கலாச்சார புரட்சி 1966-ல் உச்சத்திலிருந்த சூழலில், கெய்கெ பெற்று அனுபவித்த மிகக் கசப்பான நினைவுகளை, தைரியமாகவும் தீரத்தோடும் தாம் அற்புதமாய் இயக்கிய “FAREWELL MY CONCUBINE” படத்தில் புகுத்திக் கொண்டு வந்திருக்கிறார்.Farewell My Concubine (1993) - IMDb ஒரு கையில் ஆறு விரல்களிருப்பது இசை நாடக நடிப்புக்கு லாயக்கற்றதென்று கூறி, நாடகப் பள்ளியின் தலைவரும் குருவுமானவர் விலைமாதின் மகனான டௌஜியை [DOUZI]யை நிராகரிக்கிறார். மாணவர்கள் கடுமையாய் தண்டிக்கப்படுமிடம் அது. டௌஜியை விட வயதில் பெரிய லேய்ஜி [LAIZI] காங்குபைனில் அரசனாக நடிப்பவன். டெளஜியின் ஆறாவது விரலை கத்தியில் வெட்டியெறிந்துவிட்டு நாடகப் பள்ளியில் சேர்க்கிறாள் விலை மாதான தாய். அவனை அரசனின்
“வைப்புப் பெண்” [CONCUBINE] பாத்திரத்தில் நடிக்க பயிற்சியளித்து மிகச் சிறந்த நடிகையாகிறான் ஆணாகிய டௌஜி. இதனிடையில் இரண்டாம் உலகப்போர், ஷியாங் கேய் ஷேக்கின் நேஷனாலிஸ்ட் கட்சியினரின் கொடுமை, அட்டகாசம் படத்தில் இடம் பெறுகிறது. ஜப்பானின் ஆக்கிரமிப்பும் ஷியாங்கே ஷேக்கின் கோமிங்டாங் கட்சியெனும் தேசியவாதத்தின் தைவான் தீவுக்கு ஓட, தலைவர் மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மலர்கிறது.

பின் கலாச்சாரப் புரட்சி, நால்வர் குழுவின் தர்பார் எல்லாம் வந்து போகிறது. இச்சமயம், டௌஜியை அரசு கைது செய்து, அவன் செய்ததாக கலாச்சாரப் புரட்சிக் குழு சுமத்திய குற்றங்களுக்காக விசாரணை நடத்துகிறது. ஷியாங்கே ஷேய்கின் கோமிங்க் டாங் சிப்பாய்களுக்கு பாட்டுப் பாடியதற்காகவும், ஜப்பானிய ராணுவத்துக்கு இசைபாடியதற்குமான குற்றங்களாய் அவை. பிறகு அந்தப் பழி வேறொரு குருவின் மீது திரும்புகிறது. லேய்ஜி ஜுஜியன் [JUXIAN] எனும் அழகிய விலைமாதைத் திருமணம் முடிக்கும் செயலால், நாடகத்தில் அரசனும் அவனது ஆசை நாயகியுமாய் நடித்து, நிஜ வாழ்வில் ஓரினப் பாலுறவிலிருந்த டௌஜியும், லெய்ஜியும் பிரிகிறார்கள். கலவரம் ஒன்றில் ஜுஜியின் கரு கலைந்து போகிறது. இரு இசை நாடகக் கலைஞர்களின் ஐம்பது வருட உறவை இவ்வளவு அரசியல் சமூக நிகழ்வுகளினூடே மிக அற்புதமாக திரைக் காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர் கெய்கே சென்.

The Piano - Rotten Tomatoes

கேன்ஸ் உலகத்திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த GOLDEN PALM விருது சீனப்படம் ஒன்றுக்கு கிடைத்த முதல் கேன்ஸ் விருது. அதே சமயம் இவ்விருது மற்றொரு சிறந்த படமான “THE PIANO” என்ற ஆஸ்திரேலிய படத்துக்கும் காங்குபைனுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது. காங்குபைன் பெண்ணாக LESLIE CHEUNG-ம், FENGYI CHANG அரசனாயும் நடித்த இப்படம் 1993-ல் வெளியானது. கெய்கே சென்னின் சமகாலத்து திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும், சிறந்த காமிரா ஒளிப்பதிவாளருமான ஜாங் இமெள [ZHANG YIMOU] 1987-ல் வெளியான சிறந்த சீனப்படம்“RED SORGHUM”, என்ற படத்தை இயக்கியவர்.

[தொடரும்]

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



சினிமாவான சில நவீன நாடகங்கள்

நவீன அமெரிக்க நாடகம் எனும்போது மிக முக்கியமான பெயர் டென்னிசி வில்லியம்ஸ் (TENNESSEE WILLIAMS) நவீன அமெரிக்க நாடக வெளியில் மிக முக்கியமானவர் டென்னிசி வில்லியம்ஸ் நவீன அமெரிக்க நாடக வெளியில் மிக முக்கியமானவர் டென்னிசி வில்லியம்ஸ் என்பதற்கு, அவரது நாடகங்கள் முக்கியமான சில திரைப்படங்களாக்கப்பட்டதும் ஆகும். 1914-ல் மிஸ்ஸவுரியிலுள்ள கொலம்பஸ் நகரில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வில்லியம்ஸ் ஒரு காலனி கம்பெனியில் வேலை செய்துகொண்டே இரவு நேரங்களில் எழுதினார். பிறகு 1938ல் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். டென்னிசி வில்லியம்ஸ் தனது Battles of Angles எனும் நாடகத்துக்காக 1940-ல் ராக்ஃபெல்லர் ஃபெலோசிப் பெற்றவர். இவர் 1948 மற்றும் 1955க்கான புலிட்சர் விருதுகளை இரு முறை பெற்றவர். இவரது Glass Managerie, A STREET CAR Named Desire, Baby Doll, Suddenly Last Summer, The Cat on a Hot Tin Roof, The Night of The Iquana என்ற நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவரது The Knightly Quest என்ற குறுநாவலும் பன்னிரெண்டு சிறு கதைகளும் சேர்ந்து ஒரு தொகுப்பாய் வெளி வந்திருக்கிறது. டென்னிசி வில்லியம்ஸ் தமது 71-வது வயதில் நியூயார்க் ஓட்டல் ஒன்றில் 1983ல் இறந்து கிடந்தார். வில்லியம்ஸின் THE CAT ON A HOT TIN ROOF மற்றும் NIGHT OF THE IGUANA ஆகிய இரு நாடகங்களையும் எனக்கு எனது நண்பரும் பழம் பெரும் நடிகருமான ரஞ்சன் அவர்கள் படிக்கக் கொடுத்தார். ரஞ்சனுக்கு ஆர்தர்மில்லர், டென்னிசி வில்லியம்ஸ் இருவரின் நாடகங்கள் மிகவும் பிடித்தமானவை.

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

டென்னிசி வில்லியம்சின் A Street Car Named Desire நாடகம் 1951-ல் திரைப்படமாக்கப்பட்டது. மிகச் சிறந்த திரைப்படமாய்க் கருதப்பட்ட இதில் மார்லன் ப்ராண்டோவும் விவியன்லீயும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு உப பாத்திரமாக காரல் மால்டன் சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படத்தின் நடிப்புக்குப் பிறகு ப்ராண்டோவுக்கு அடுத்தடுத்து நடிக்க சந்தர்ப்பங்கள் வந்தபடியிருந்தன. இந்தியாவில் டார்ஜிலிங்கில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி நடிகையான விவியன் லீ, 1939-ல் வெளியான பிரம்மாண்ட வண்ணப்படம், Gone with The Wind-ல் கதாநாயகியாய் நடித்தார். இவர் மற்றொரு புகழ் பெற்ற நாடக சினிமா நடிகர் சர் லாரன்ஸ் அலிவியரை மணந்தார். அவரது இயக்கத்தில் இதே நாடகத்தை நாடகமாய் மேடையேற்றியபோது விவியன் லீ அதே பாத்திரத்தை ஏற்றார்.

Desire ( ஆசை) என்பது நியூ ஆர்லியன் நகரின் டிராம் வண்டிகளில் ஒன்றின் பெயர். அந்த வண்டியைப் பிடித்து தன் தங்கை வீட்டுக்கு வந்து தங்கியிருக்க ரயிலில் பயணித்து வரும் ப்ளான்ச் துபோய் (Blanche Duboise) சரியான மனோ நிலையில்லாதவளாய்க் காணப்படுகிறாள். அவளுடைய வாழ்க்கைப் பின்னணி மோசமானது. பள்ளி மாணவன் ஒருவனுக்கும் ப்ளான்சுக்கும் உறவு இருந்து, பையனின் தந்தை பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்த புகாரின் பேரில்தான் அவள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாள். மாறாக தானே முன்வந்து தான் வேலை பார்த்த ஆசிரியைப் பணியை விட்டு விட்டதாகச் சொல்லுகிறாள். ஏராளமாய் நிலுவையிலிருந்த வரி பாக்கிக்காக தங்கள் மூதாதையர் சொத்தான எஸ்டேட்டை இழந்துவிட்டதாகத் தெரிவித்து அதிர வைக்கிறாள். அவளது கற்பிணி தங்கை ஸ்டெல்லாவின் முரட்டு கணவன் ஸ்டான்லி கோவால் ஸ்கிக்கு அவளது வருகையில் துளியும் விருப்பமில்லை. ஸ்டெல்லா இருக்கும் குடியிருப்பு மனை சிறியது. அந்தரங்கத்துக்கு இடப்பஞ்சம். ப்ளான்ச் சொல்வதை நம்பாத ஸ்டான்லி எல்லாவற்றையும் யார் மூலமாயோ விசாரித்து அறிந்து மனைவியிடம் கூறுகிறான். ப்ளான்ச் குளிக்கப் போயிருக்கையில் அவளது பெட்டிகளைக் குடைத்து அவனிடமுள்ள விலையுயர்ந்த உடைமைகளை மனைவி்க்குக் காட்டி, சாதாரண பள்ளியாசிரியைக்கு இதை வாங்க வருமானம் ஏது என்கிறான். எஸ்டேட்டை விற்றுவிட்டு, வரி பாக்கிக்கு இழந்ததாய் பொய் சொல்லுவதாய்க் கூறுகிறான். அத்தோடு நெப்போலிய விதியென்று ஒன்றை நினைவூட்டுகிறான். அந்த சொத்து பாத்தியத்தைக்கான விதிப்படி, மனைவிக்குச் சேர வேண்டிய சொத்தில் கணவனுக்கும் பாத்தியதை உண்டு என்றும், அதன்படி தன்னுடைய சொத்தையும் ப்ளான்ச் ஏமாற்றிவிட்டு தாருமாறாக செலவு செய்வதாகக் கூறி கூச்சலிடுகிறான். இதனிடையில் காதலி இறந்துபோன ஒருவன் ப்ளான்சை விரும்புகிறான் அதுவும் முறிந்து போகிறது. ப்ளான்சின் காதலன் பள்ளி மாணவன் . அவனுடைய தந்தை பள்ளி நிர்வாகத்துக்கு ஆசிரியை மீது புகாரளிக்க, அவளை நிர்வாகம் பணி நீக்கம் செய்கிறது. அவளது காதலனான, பையன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகிறான். அதை நினைத்தே அவள் மனநலம் பாதிக்கப்பட்டவளாகிறாள். அவளை விரும்பி ஏற்க வந்தவனுக்கு இதை கூறுகிறாள். இதையெல்லாம் ஏற்கத் தயாராக இல்லாத ஸ்டான்லி கோவால்ஸ்கி அவள் மனம் பெரிதும் நோகும்படி சாடுவதோடு தன் மனைவிக்குச் சேர வேண்டிய சொத்தில் பாத்யதையுடைய தனக்கும் இழப்பை ஏற்படுத்தியதாகத் திட்டுகிறான். அவள் வரி கட்டியதற்கான ரசீதுகளை எடுத்து அவன் முன் வைக்கிறபோது அவளுக்கு இறந்துபோன காதலன் எழுதிய கவிதையை அவன் எடுக்கிறான். அவன் அதைத் தொடுவதை விரும்பாத ப்ளான்ச் பிடுங்கிக் கொள்ளுகிறாள். இந்த ரகளையில் வந்து சேரும் ஸ்டெல்லாவை மூர்க்கமாய்த் தள்ளுகிறான் ஸ்டான்லி, அவளது வயிறு அடிபட்டு வலியேற்பட மருத்துவமனைக்கு அவளை கொண்டுபோய் சேர்த்துவிட்டு வரும் கோவால்ஸ்கி மீண்டும் ப்ளான்சை சீண்டுகிறான். மனநோயால் உழலும் அவள் அவனை வெளியேறச் சொல்ல அவன் அவளை நெருங்குகிறான். ப்ளான்ச் ஒரு பெரிய மது புட்டியை உடைத்து ஆயுதமாய்க் கொண்டு தன்னை நெருங்கினால் குத்திவிடுவதாய் எச்சரிக்கிறாள். ஸ்டான்லி அவளைப் பிடித்துக் கிடத்தி வல்லுறவு கொள்ளுகிறான். ப்ளான்ச் முற்றிலும் மனநிலை பிறழ்ந்து போகிறாள். அவளது தங்கை ஸ்டெல்லாவும் வீடு திரும்புகிறவள். ப்ளான்சின் நிலைமை மேலும் மோசமடையும்போது அவளை மனநிலைக் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு நடக்கிறது. காப்பகத்தைச் சேர்க்க முதிய அதிகாரி ப்ளான்சைத் தொட்டு அன்போடு தடவி தன் கையை நீட்டுகிறார். அந்தக் கையோடு தன் கையைப் பிணைத்துக் கொள்ளும் ப்ளான்ச், நீயாகவே இருக்கட்டும், நான் எப்போதும் அந்நியனின் அன்பில் நம்பிக்கைக் கொள்பவள், என்ற தணிந்த கடைசி வசனத்தோடு காப்பக வண்டியிலேற, படம் முடிகிறது.

ஸ்ட்ரீட் கார், ஆஸ்கர் விருது வரலாற்றில் முதல் முறையாக 1951-ல், அவ்வாண்டின் நான்கு நடிப்புக்கான பரிசுகளில் மூன்றைப் பெற்ற முதல் படம், அக்கா தங்கைகள் பாத்திரத்தில் நடித்த விவியன் லீ, கிம் ஹண்டர், அந்நியனாக செய்த கார்ல் மால்டன் ஆகிய மூவருக்கும் நடிப்புக்கான பரிசுகள் கிடைத்தன. எலியா கஸான், இயக்கத்தில் உருவான On The Water Front (1954) படத்தில் அதி சிறப்பாக நடித்த மார்லின் பிராண்டோ அவ்வாண்டின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

ருஷ்ய நாடக மேதை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (K.S.Stanislavsky) நடிப்புக் கலையின் நவீன முறையாக, தணிந்த வகையிலான, உரத்தகதியை நிராகரித்த, படிப்படியாக எடுத்துச் செல்லும் மெத்தாட் (Method) எனும் நவீன நடிப்பை அறிமுகப்படுத்தி தாம் மேடையேற்றிய செகாவின், நாடகங்களில் கையாண்டு வெற்றி கண்டார். இந்த மெத்தாட்வகை- நடிப்புக் கலை நுணுக்கத்தை அமெரிக்காவில் வளர்த்தவர் லீ ஸ்ட்ராஸ் பர்க் என்பவர். லீ ஸ்டீராஸ்பர்கின் முறையை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் கையாண்டு வெற்றி கண்ட இயக்குனர் எலியா கஸான் (Elia Kazan) துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் காலூன்றி பல சிறந்த படங்களை இயக்கியவர். நடிகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து உடல் மொழி நுணுக்கத்தைப் பெற்று தாம் நாடகங்களில் திரைப்படத்தில் ஏற்கும் கதாபாத்திரங்களில் திரைப்படத்தில் ஏற்கும் கதாபாத்திரங்களில் ஆழ்ந்து இரண்டறக் கலக்க வேண்டும் என்பதை பின்பற்றச் செய்தவர். அத்தகைய நடிகர்களாய் உருவானவர்களில் மார்லன் பிராண்டோ ஜேம்ஸ்டீன், கார்ல் மால்டன், பால் நியூமன், பீட்டர் ஓட்டூல், விவியன் லீ, என்பவர்கள் முக்கியமானவர்கள்.
கவிதை, உரைநடை, இசை, நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், நடனம் என்பவை பழைய நிலையிலிருந்து நவீனப்படுத்தப்பட்டு நவீனமான வேகத்தில் நடிப்புக் கலையும் பழைய முறையிலிருந்து நவீன நடிப்புக்கு மாறிக் கொண்டது. நடிப்புக் கலையில் நவீன மாற்றத்தைப் பின்பற்றி இந்தியாவில் வெற்றி கண்டவர்களில் நசிருதின் ஷா, பால்ராஜ் சஹ்னி, உத்பல் தத், செளமித்ரா சட்டர்ஜி, ஸ்மீதா பாட்டில், சபனா ஆஸ்மி, ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராயிருந்தமைக்காக எலியா கஸான் அரசால் விசாரிக்கப்பட்டபோது முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேரின் பெயர்களை வெளியிட்டவர்.
டென்னிஸ்ஸ வில்லியம்சின் நாடகங்கள் சுருங்கச் சொன்னால், நான்கு சுவர்களுக்கிடையே நடக்கும் சமகால குடும்ப விவகாரங்கள், கடந்த காலத்தின் ஒதுக்கித் தள்ள இயலாத நினைவுகள், அவை தொடர்பான மன உளைச்சல்கள், மன பலவீனங்கள், மன நோயாளிகள், பாலியல் பிரச்சினைகள், ஆண், பெண் ஒழுக்கவியல் சிதைவுகள் என்ற அம்சங்களை மையமாயும் முக்கியமாயும் கொண்டவை. அவரது சடன்லி லாஸ்ட் சம்மர் (Suddenly Last Summer) நாடகத்தைத் திரைப்படமாக்கிய வடிவில் சினிமாவைக் காட்டிலும் நாடக வடிவமே பிதுங்கி நிற்கிறது. A street Car Named Desire, மற்றும் Night of the Iguana Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ் ஆகிய இரண்டைத் தவிர மற்றவை சினிமாவாக்கப்பட்ட, காமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடக வடிவங்களாகவே படுகின்றன. இந்த நிலை இப்ஸனின் நாடகம் சினிமாவானபோதும் (Enemy of the Public கண சத்ரு சத்யஜித் ரே) சந்திக்க வேண்டியிருந்தது. ஓரளவுக்கு பெர்னாட் ஷாவின் நாடகங்கள் சினிமாவாக்கப்பட்டதில் இத்தகைய நிலைக்கு உட்படவில்லை.

சடன்லி லாஸ்ட் சம்மர் நாடகத்தினின்று திரைப்படம் சற்று வேறுபட்டு தோன்றும், நாடகத்தில் இடம் பெறும் இலை மறைவு காய் மறைவான ஓரினப் பாலியல் நிகழ்வு, விபச்சாரம், நர மாமிசப் பசி என்பவை நீக்கப்பட்ட நாடகமாய் சினிமா முயற்சிக்கப்பட்டிருந்தும் அபரிதமான மன அதிர்ச்சிக்கு மேல் படம் மனதைத் தொட்டு நெருடவில்லை. திரைப்படத்துக்குள்ளே அது நாடகமாகவே நிற்கிறது. பொறுமையை சோதிக்கும் ஒரே வசன மழை. பாத்திரங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். கடந்த காலத்தில் வாழ்பவர்கள். படம் தொடங்குவது புகழ் பெற்றதொரு மனநிலை பிறழ்ந்த ஆண், பெண் மனநோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள ஒரு மருத்துவமனை – விடுதியிலிருந்து பெண் மன நோயாளிகள் இருக்கும் பகுதியில் தொடங்குகிறது கதை. ஒரு வயதான நோயாளி ஆடும் நாற்காலியொன்றில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பிரிவில் ஆடும் நாற்காலி அது ஒன்றே ஒன்றுதான். ஆண், பெண் மனநோயாளிகள் பேர் பாதி குழந்தைகளாகவும் இருக்கிறார்கள். எனவே ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆடுவதென்பதும் அவர்களுக்குப் பிடித்தமான செயலாக இருக்கிறது.

Lions view, State Asylum எனப்படும் அந்த மிகப் பெரிய மனநிலை காப்பகத்தின் மேல் தளத்தில் காப்பகத்தின் பொறுப்பாளராய் இருக்கும் பணக்காரி ஒருத்தி நினைத்தபோது லிஃடில் இறங்கி வருவாள்- போவாள். அவளது அழகிய இளம் பெண் ஒருத்தியும்- அவளுக்கு நெருங்கின உறவில் அதே மருத்துவமனை வளாகத்தில் வசிக்கிறாள். இவர்களும் மனநிலை சரியில்லாதவர்களாகவே நடந்துகொள்ளுகிறார்கள். காப்பக மருத்துவமனையின் மனநோய் மருத்துவ நிபுணரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான இளம் டாக்டர் ஓர் இளம் மனநிலை பிறழ்ந்த பெண்ணுக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுகையில் பிரச்சினை ஏற்படுகிறது. அதையடுத்து காப்பக மேலாளரான சீமாட்டியையும் அவள் உறவினளான இளம் பெண்ணையும் சந்தித்து பேசுகிறார். சில சிக்கல்கள் விலகலும், சேருவதுமாய் படம் முடிகிறது. சீமாட்டியாக பழம் பெரும் நடிகை காத்தரீன் ஹெப்பர்ன் (Katherine Hepburn) அவளது இளம் உறவினளாக எலிசபெத் டேலர், Elizabeth, Taylor) இளம் அறுவை சிகிச்சை நிபுணர் மனோதத்துவ நிபுணராக மாண்ட் காமரி க்ளிஃப்ட் ஆகிய மூவரும் தாம் ஏற்ற பாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அலுக்க அலுக்க வசனம், நாடக சினிமாதான். ஜோசப் எல். மன்கீவிக்ஸின்(Joseph L. Mankiewicz) இயக்கம் சாதாரணம்.

தெற்கு அமெரிக்கப் பகுதியில் ஒரு மாபெரும் பணக்காரர், குடும்பத்தாரால் Big Daddy என்று செல்லமாக , மரியாதைக்கு பயத்தோடு, பெருமைக்காகவும் அழைக்கப்படுபவர். இவரது மக்களில் இவருக்கு செல்லமான மகன் பிரிக் (Brick) ஒரு கால் பந்தாட்டக்காரன். தனது தினசரி உடற்பயிற்சியின்போது தடைகளைத் தாண்டிக் குதிக்கையில் இடறி விழுந்து கால் முறிந்து கட்டுகளோடு ஊன்றுகோலுடன் வீட்டோடு முடங்கியவன் பிரிக். அவனது அழகிய, வாக்குவாதம் கொண்ட மனைவி பூனை என்று செல்லப் பெயரிடப்பட்டு சுருக்கமாக ‘‘மாக்கி’’ என்றழைக்கப்படும் (Maggie The Cat) மார்கரெட். ஒரு பிரம்மாண்ட மாளிகையில் இரண்டு மூன்று குடும்பங்களாயிருக்கும் பிக் டாடியின் பிள்ளைகள், பெண் குடும்பங்களுள், பிரிசீ- மாக்கி தம்பதிகளுக்கு குழந்தை கிடையாது. பிரிக் சிறிது சிறிதாக தன்னம்பிக்கை குறைந்தவனாகி தனது ஆண்மை நிலை மீதும் நம்பிக்கையிழந்தவனாகிறான்.

இதனால் அழகிய இளம் மனவைி மார்கரெட் பேரில் சந்தேகமும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டு வளர்கிறது. “மாக்கியெனும் பூனை” யெனப்படும் மார்கரெட்டுக்கு குழந்தையில்லாத நிலை மனத்தில் குழந்தைகள் மேல் ஈர்ப்பு ஏற்படுவதற்கு பதிலாக பெரும் ஒவ்வாமையுணர்வும் வெறுப்பும் கோபமுமாய் ஏற்படுகிறது. பூனை மாக்கி ஒருநாள் பிரிக்கோடான வாக்குவாதத்தின்போது, “நான் உன்னோடு சேர்ந்து வாழவில்லை. நாம் இருவரும் ஒரே கூண்டில் ்இருக்கிறோம். அவ்வளவுதான்” என்கிறாள். எந்தவித அலங்காரமும் இல்லாத நேரான வசனங்களைக் கொண்ட “A CAT ON A HOT TIN ROOF”, நாடகத்திற்காக Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்
1955-ம் ஆண்டிற்கான புலிட்ஸர் பரிசு டென்னிசி வில்லியம்ஸுக்கு கிடைத்தது. ஆறு அகாடெமி விருதுகளுக்கு [சிறந்த படம் உள்ளிட்டது] 1958-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின்போது பரிந்துரைக்கப்பட்ட படம். பெரிய வசூலை ஈட்டித் தந்த இப்படத்தில் பிரிக்காக பால் நியூமனும், பூனையாக எலிசபெத் டேலரும், பெரியவர் “பிக் டாடி”யாக BURL IVES-ம் மிகச் சிறப்பாக நடித்த இப்படத்தை அனுபவமிக்க ரிச்சர்டு புரூக் (RICHARD BROOK)பிரமாதமாக இயக்கினார்.

அந்த வீட்டின்-மாளிகையின் ஒரு பகுதி பிக் டாடியெனும் பிரிக்கின் தந்தையின் வாழ்நாள் சேகரிப்பான உலகின் பல்வேறு அரிய பொருள்கள் நிறைந்த காட்சிக் கூடமானது. இந்த சூழலில் பெரியவரின் பிறந்தநாள் வருகிறது. பிறந்த நாளை எல்லோரும் கோலாகலமாய்க் கொண்டாடுகிறார்கள். பெரியவர் தம் மனைவியோடு விமானத்தில் வந்திறங்கி கலந்து கொள்ளும்போது கால் அடிபட்டு மாடியில் கோலூன்றி அறைக்குள் இடைவிடாது மது வருந்தியபடியே இருக்கும் ஆவரது செல்ல மகன் விருந்தில் கலந்து கொள்ள கீழே இறங்கி வரவேயில்லை. பெரியவருக்கு கான்சர் நோய் இருப்பது யாவருமறிந்தது. மகன் வராததும், மகனுக்கும் மருமகளுக்கும் உறவு சரியில்லை என்பதும் அவரது உயர் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. செல்வமும் வசதிகளும் படாடோபமும் நிறைந்த தன்னைவிட, ஒரு பிச்சைக்காரனின் சுதந்திரமும், சுகமும், சிக்கலில்லாத உறவு நிலையும் மேலானது என்று பெரியவர் உணர்கிறார். மகனுக்கும், தந்தைக்கும் காரசாரமான வாய்ச் சண்டை முற்றி கை கலப்பு ஏற்படுமளவுக்குப் போகிறது. அவருக்கு உயர் ரத்த அழுத்தத்திற்கான ஊசி மருந்தை மகனே செலுத்துகிறான். கோபத்தில் அவரது காட்சியறையிலுள்ள அரிய விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை பிரிக் அடித்து நொறுக்குகிறான். மார்கரெட்டையும் அடிக்கப் போகிறான். பாலியல் ரீதியாக தான் வீரியம் குறைந்தவன் என்ற உணர்வாலும் மன உளைச்சல் கொண்ட அவன் தன் மனைவி அன்போடு நெருங்குவதையும் வெறுத்தொதுக்குகிறான். சொத்தில் பெரும் பகுதியை அபகரிக்க இவனது அண்ணனும் அண்ணியும் திட்டமிடுகின்றனர். கான்சர் நோயில் அவதியுறும் பெரியவரின் முடிவை அவர்கள் உள்ளூர எதிர் நோக்கியுள்ள சமயம் ப்ரிக்கும் மார்கரெட்டும் பெரியவரிடம் அன்பு காட்டுகிறார்கள்.

இறுதியில் நொண்டி நொண்டி கொட்டும் மழையில் காரிலேறி ஓட முயலும் மகனைத் தடுத்து நிறுத்த தம் பெருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு மழையில் ஓடிவரும் பிக் டாடியின் நடிப்பும் காட்சி விறுவிறுப்பும் படத்தை உச்சிக்கு இட்டுச் செல்லுகிறது. அபார வீச்சு கொண்ட டென்னிசி வில்லியம்சின் முகத்திலடிக்கும் வசனம் எல்லோரும் தணிவு பெற்று புறப்பட்டபடியிருக்க, மாடியிலிருந்து ப்ரிக் தன் மனைவியை, “மாக்கி… மாக்கி” என்று அழைக்கிறான். அதற்கெனவே காத்திருந்தவள் போல உடனே, “இதோ வருகிறேன்” என கூறிவிட்டு மாடியேறி அவனிடம் ஓடி வருகிறாள் மார்கரெட். அவன் அவளை அந்நியோன்யமாய் அணைத்துக் கொள்ளுகிறான். பால் நியூமன் (ப்ரிக்) எலிசபெத் டேலர் (மார்கரெட்-மாக்கி பூனை) பரல் ஐவ்ஸ் (பிக் டாடி-பெரியவர்) இம்மூவரின் அபாரமான நடிப்பை மறக்க முடியாது.

ஹாலிவுட் சினிமாவில் JOHN HUSTON எனும் பெயர் பிரபலமானது. இவர் இயக்கிய படங்களில் MOBI DICK, MALTESE FALCON, AFRICAN QUEEN, SINGER, NOT THE SONG, THE UNFORGIVEN, REFLECTION IN A GOLDEN EYE, NIGHT OF THE IGUANA என்பவை சிறப்பானவை. நைட் ஆஃப் த இகுவானா என்ற திரைப்படம் டென்னிசி வல்லியம்சின் நாடகத்தை திரைப்படமாக்கினார். டென்னிசி வில்லியம்சின் பிற நாடகங்களிலிருந்து IGUANA வேறுபட்டது. நான்கு சுவர்களுக்குள்ளெ அடைபடாமல், பல திசைகளில் கதை திரிகிறது. வசனமும் குறைவு. நாடக வடிவை ஜான் ஷுஸ்டன் திரைப்பட வடிவாக மாற்றிக் கொண்டார். அதற்கு தக்கபடி நாடக எழுத்தாளர் டென்னிசி வில்லியம்சும் உடனிருந்து மாற்றியெழுதிக் கொடுத்தார்.

அமெரிக்க தேவாலயம் ஒன்றில் கிறிஸ்தவ மத புரோகிதராக இருக்கும் ரெவரண்ட் லாரன்ஸ் ஷான்னன் (SHANNAN) பிரார்த்தனையின்போது ஒருநாள் ஏடாகூடமாகப் பேசிக்கொண்டே எல்லோரையும் திகிலுறச் செய்து வெளியேற்றுவதோடு சர்ச்சிலிருந்து தானும் வெளியேறுகிறான். அவன் மீது பாலியல் குற்றமும் இருக்கிறது. ஷான்னன் சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்து பயணிகளை சுற்றுலா பஸ்ஸில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து காண்பிக்கும் வேலையில் அமர்கிறான். பதினோறு ஆசிரியைகள் கொண்ட குழுவொன்றை பஸ் ஏற்பாடு செய்து சுற்றுலாவுக்கு அழைத்துப் போகிறான். பல்வேறு வயதிலுள்ள அந்தப் பெண்களுக்குள் ஒருத்தி தலைவி. இளம் ஆசிரியை ஒருத்தி ஷான்னனுக்கு வலை வீசுகிறாள். ஒரு விடுதியில் தங்கும்போது கிட்டதட்ட அவர்களிருவரும் உறவு கொள்ள இருக்கையில் ஆசிரியைகளின் தலைவி வந்து விடவும் அது நிகழ்வதில்லை. சுற்றுலா மெக்ஸிகோ பகுதியில் “இகுவானா” [IGUANA] எனும் தலையிலிருந்து வால்வரை முட்களைக் கொண்ட, பார்க்க திகிலூட்டும் ஒரு வகை உடும்புகள் கடற்கரைப் பகுதியில் திரியும். பஸ் மெக்சிகோவுக்குள் நுழையும் வழியெங்கும், நம்மூரில் காய்கறி, பழங்களை காட்டி விற்பதுபோல இருவானா உடும்பைக் கையில் பிடித்துக் கொண்டு விற்பார்கள். ஒரு பெண் பயணி அது என்ன, அதை வாங்கி என்ன செய்யலாமென கேட்டபோது ஷான்னன் கூறுகிறான்.

அது உடும்பு. சாப்பிட கோழிக் கறிபோல இருக்கும். உண்மையில், இருவானா உடும்பினம் செக்ஸ் சமாச்சாரத்தில் விசேசமானது என்று நம்பப்படுவதால் அதை பயணிகள் விரும்பி வாங்குவார்கள். ஷான்னனுக்கு தெரிந்த வசதிகள் குறைந்த தங்கு விடுதிக்கு அழைத்துப் போகிறான். விடுதி உணவகத்தின் உரிமையாளர் அழகிய நடுத்தர வயது விதவையொருத்தி, அவள் கடலில் குளிக்க, உடலுறவு கொள்ள இரு இளம் மெக்சிகன் வாலிபர்களை வைத்திருப்பவள். சமயத்தில் ஆபத்தானவர்கள். விடுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்து தங்குகிறார்கள் என்பதை அறிந்தால் இளம் பெண் ஓவியர் ஒருத்தி தன் 97-வது வயது தாத்தாவோடு வந்து இலவசமாய் விடுதியில் தங்குவாள். 55 ஆண்டுகளாக முயன்று வந்த கவிதையை இச்சமயம் வெற்றிகரமாக முடித்த கையோடு உயிரையும் விடுகிறார் கவிஞர் தாத்தா. பேத்தியும் ஓவியருமான இளம் பெண் பயணிகளை வரைந்தும், தீட்டியும் காசு சம்பாதிப்பவள். அதையே இப்போதும் செய்கிறாள். ஷான்னனுக்கு குறி வைத்த இளம் ஆசிரியை கடைசியில் பஸ் டிரைவரையே பிடித்துக் கொள்ளுகிறார். அன்றிரவு சமைக்கவென்று இருவானா உடும்பைப் பிடித்து வந்து கட்டிப் போடுகிறார்கள். ஷான்னனும் பாலுணர்வு ரீதியாக அலைபாய்கிறான். ஆசிரியைகள் அவனை அங்கேயே விட்டுவிட்டு பஸ்ஸிலேறி கிளம்பிப் போகின்றனர். ஷான்னன் கடலில் நீந்தப் போகிறான். விடுதிக்காரி அவனைப் பிடித்து வந்து கட்டிப் போடுகிறாள். தன் கட்டுகளை அவிழ்த்து விடுவிக்குமாறு கெஞ்சுகிறான். திமிறி பார்க்கிறான். அதே சமயம், வெராண்டாவில் கட்டப்பட்ட உடும்பும் கட்டவிழ்த்துக் கொண்டு ஓடப் பார்க்கிறது. ஓவியர் ஷான்னனின் கட்டுகளை அவிழ்த்து விடுவிக்கிறாள். விடுதிக்காரி தன் இரு மெய்க்காப்பாளர்களோடு கடலில் நின்று தழுவிக் கொண்டிருந்தவள் ஷான்னனை நினைத்து அவர்களை உதறிவிட்டு ஓடி வருகிறாள். அங்கே ஷான்னன் கட்டப்பட்ட இருவானா உடும்பின் கயிற்றை வெட்டிவிட்டு புதருக்கு அதை விரட்டி விடுகிறான். இகுவானா என்பதை ஒரு பாத்திரத்தின் நிலையை குறியீடாகக் காட்டியிருக்கிறார் வில்லியம்ஸ் விடுதிக் காரியும் ஷான்னனும் இணைகிறார்கள்.
ஜான் ஹீஸ்டனின் சிறந்த இயக்கத்தில், ஷான்னனாக ரிச்சர்டு பர்டனும், விடுதிக்காரியாக ஆவாகார்டனரும், 97 வயது கவியாக 75 வயது நடிகர் ஒருவர் ஆச்சரியப்படும்படி நடித்துள்ளார்கள். இகுவானா 1964-ஆம் ஆண்டு வெளி வந்தபடம்.

நவீன ஆங்கில நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்ட வகையில் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் மூன்று நாடகங்கள் இடம் பெறுகின்றன. கிரேக்க பாரம்பரியக் கதையான் ஆன்ரோக்ளீசும் சிங்கமும், எனும் ஷாவின் நாடகம் (Androcles and the lion) செஸ்டர் எர்ஸ்கின் என்பவரால் இயக்கப்பட்டு 1952ல் வெளிவந்த படம். ஆன்றோகிளிஸ் கிரேக்க வீரன், சிங்க ஒன்றின் காலில் தைத்த பெரிய முள்ளைப் பிடுங்கி சிங்கத்தின் துன்பத்தைப் போக்குவதின் மூலம் அதன் இதயத்திலும் நினைவிலும் நிலையாக நிற்கிறான். ஒரு சமயம் கொடுங்கோலனின் ஆணைப்படி சிங்கத்தோடு பொருதுகையில் அச்சிங்கம் தன் நண்பனை அடையாளம் கண்டு கொண்டு உதவுகிறதாய்க் கதை. ஆன்றோ கிளீசாக விகீடர் மச்சூர் தன் உடல் வலிமையுடன் ஏற்கெனவே சில படங்களில் புலி, சிங்கங்களோடு சண்டையிட்ட அனுபவத்தோடு நடிக்கிறார். அவரது காதலியாக ஜூன் சிம்மன்ஸ் வந்து போகிறார்.

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

1945ல் ஷாவின் புகழ் பெற்ற நாடகம் சீசரும் கிளியோபட்ராவும் (Caesar and Cleopatra) ஒரு அங்கத நாடகப் படமாய் வெளிவந்தது. இது ஒரு நகைச் சுவை கொண்ட அங்கத நாடகம். கிளியோ பட்ரவாக விவியன்லீயும், ஆண்டனியாக ஸ்டூவர்ட் கிரேஞ்சரும் (Stewart Granger) Claude Rains என்பவர் ஜீலியஸ் சீசராகவும் நடிக்கின்றனர். புகழ் பெற்ற இயக்குனரான காப்ரியல் பாஸ்கல் (Gabriel Paskel) இயக்கிய நல்ல பொழுது போக்குப் படம்.
பெர்னார்டு ஷாவின் நாடகங்கள் திரைப்படமானதில் மிகவும் வெற்றிகரமும், வசூல்மிக்கதும் நீண்ட நாட்கள் தியேட்டரில் ஓடியதுமானது மைஃபேர் லேடி எனும் பெயரில் சினிமாவான பிக்மேலியன் (Pygmalion) நாடகம். பிக்மேலியன் என்று தம் நாடகத்துக்கு ஒரு பண்டைய கிரேக்கக் கதையைக் கொண்டு பெயரிட்டார் பெர்னார்டு ஷா. இந்நாடகம் இங்கிலாந்தில் மாட்சிமை மிக்க His Majestys Theatre, எனும் லண்டன் நகரிலுள்ள புகழ் பெற்ற நாடக அரங்கில் 1914-ல் முதன் முதலில் அரங்கேறி நடித்துக் காட்டப்பட்டது.

பிக்மேலியன், கிரேக்க நாட்டின் சைப்ரஸ் பகுதியை ஆண்டு வந்தவன். அரசன் என்பதோடு சிறந்த சிற்பியுமாவான். அவன் சல வைக்கல், மரம் மற்றும் தந்தத்தில் சிற்பம் வடிப்பதில் சிறந்தவன். ஆனால் பெண்களை வெறுத்து ஒதுக்கியவன். திருமணமே வேண்டாமென்றிருந்தவன். கிரேக்கக் கடவுள்கள் சதா பூ உலக நிகழ்வுகளையே கண்காணித்து அவர்களுக்கு புதிராகவும் பிரச்சினையாகவுமிருக்கும் மானுட செயல்களை திருத்துவதற்கு பண்டைய கிரேக்க புராணத்திலுள்ள அந்தந்த கடவுளர்களை அணுகி தீர்வுகாண்பார்கள். பிக்மேலியன் விஷயம் அவர்களுக்கு தீர்க்கபட வேண்டிய பிரச்சினையாகிறது. காதல், காமம், ஆண், பெண் உறவாடலுக்கான கடவுளான வீனஸ் தேவதையிடம், என்ன பிக்மேலியன் விசயம் கவனம் பெறவில்லையா? என கேட்க, கவனிக்கப்படும் என்கிறது காதல் தேவதை வீனஸ்.

நான் செய்யும் சிற்பப் பெண்களுக்கு நிகரான அழகியாக உயிரோடிருக்கும் பெண்களில் யாருமில்லை, எனவே திருமணம் வேண்டாம் என்று கூறிய பிக்மேலியன் ஓர் அதி அழகியை தந்தத்தில் சிற்பமாய் வடித்து அதற்கு, கலாடியா GALATEA என்று பெயரிட்டு அணைத்து மகிழ்கிறான். வீனஸ் பெரு விழா சைப்ரஸில் கொண்டாடப்படுகையில் கலாடியாவுக்கு வீனஸ் உயிரூட்டுகிறாள். பிக்மேலியன் தான் காதலிக்கும் தான் வடித்த சிற்ப அழகியுடன் இணைகிறான்.
இதனடிப்படையில் பிக்மேலியன் நாடகத்தை படைத்த ஷா, நவீன பிக்மேலியனை பெண்களை வெறுத்த, ஆங்கில மொழியின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடும் மொழியியல் வல்லுனராக பேராசிரியர் ஹிக்கின்ஸ் எனும் பாத்திரமாக படைத்திருக்கிறார். ஹிக்கின்ஸ் பொது மக்கள் கூட்டமாய்க் கூடு மிடங்களில் ஓரமாய் அமர்ந்து, மக்கள் ஆங்கிலத்தைப் பேசுகையில் எவ்வளவுக்கு அம்மொழியைக் கொலை செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் உச்சரிப்பை சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டுபோய் திருத்த பாடுபடுபவர், ஒரு நாள் ஏழைப் பூக்கார இளம் பெண் எலிஸா டூ லிட்டில் என்பவளின் நடைப்பாதை – கேசி ஆங்கில பேச்சை பதிவு செய்வதிலிருந்து ஒரு சவாலை மேற்கொள்ளுகிறார் புரஃபொஸர். அவளை வீட்டுக்கு அழைத்து வந்து முற்றிலும் புதுப்பித்து படாதபாடு பட்டு ஆங்கில மொழியைக் கற்பித்து அதில் வல்லவளாக்குகிறார்.

அவளுடைய தந்தையின் தொந்தரவை, தம் தாயின் தலையீடையெல்லாம் ஒதுக்கி லிஸாவை ஒரு மேட்டுக்குடிப் பெண்ணாக்கி பிரபுக்களும் இளவரசர்களும் கூடி …. நடனமாடும் நிகழ்வில் கலந்து கொள்ள வைத்து வேடிக்கைப் பார்க்கிறார். பணக்கார பிரபு ஒருவரின் மகன் ஃரெட்டி (Freddy) என்பவன் பூக்காரி லிஸாவை காதலிக்கிறான். அவனையே அவள்மணக்கப் போவதாகக் கூறுகிறாள். பேராசிரியர் ஹிக்கின்ஸ் தான் வார்த்தெடுத்த புதிய வார்ப்பான லிஸா தன்னை விட்டு பிரிவதில் துயரமுறுகிறார். இந்நாடகம் பிரம்மாண்டமான தயாரிப்பாக 1965ல் MY FAIR LADY Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ் என்ற பெயரில் ஓர் உயரிய இசை நாடகமாய் திரைப்படமாகியது. ஜார்ஜ் கூக்கரின் அற்புத இயக்கத்தில் 70oMM படமாய் சென்னை சஃபையர் திரையரங்கில் வெளியாகி தொடர்ந்து முப்பது வாரங்கள் ஓடிய படம். பேராசிரியர் ஹிக்கின்ஸாக நடித்த ரெக்ஸ் ஹாரிசன் (Rex Harrison) இதே பாத்திரத்தை இருபதாண்டுகளாய் லண்டன் நாடக மேடைகளில் நடித்தவர். பூக்காரியாக நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் (AUDRY HEPBORN) மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்தை தம் இறுதி நாட்களில் அளித்த பேட்டி ஒன்றில் மிரினான் சென் மிகவும் உயர்வாக பாராட்டியிருக்கிறார்.

(தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கருப்பும் வெளுப்பும்

டாம் மாமாவின் குடில் Uncle Toms Cabine  என்று ஒரு திரைப்படம் சேலம் நியூ சினிமாவில் காலைக் காட்சியாகப் பார்த்தேன். பிறகு சேலத்திலும் சென்னையிலும் பார்த்த பல கருப்பு- வெளுப்பு நிற பேத உணர்வுகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை முறையாக அணுகவும் யோசிக்கவும் முடிந்தது.  அதற்கு முன் அங்கிள் டாம்ஸ் காபின் நூலைப் படித்திருந்ததால் தான் படத்தையும் பார்க்கத் தூண்டியது. உயர்நிலை பள்ளி மாணவர்களின் சராசரி ஆங்கில அறிவுக்குத் தக்கவாறு அவர்கள் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டு இந்தியாவில் கிடைத்து வந்த புகழ் பெற்ற கதை நூல்களில் ஒன்று  Uncle Toms Cabine  ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் என்பவர் எழுதிய நூல்.

அமெரிக்காவில் குடியேற்ற நாடுகள் காலூன்றி தேர்தல் அரசாங்கம் நிர்வாகம் என ஏற்பட்டவுடன் வீடுகளில் அடிமை வேலை செய்வதற்கு என ஆப்ரிக்காவிலிருந்து கருப்பின மக்களை கூட்டம் கூட்டமாக கப்பலில் கொண்டு வந்து ஏலம் போட்டு  விலைக்கு வாங்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு  கேவலமான நிலையில்  வைத்திருந்த வெள்ளை முதலாளிகளின் அட்டூழியங்களையும், அதில் டாம் என்னும் கருப்பின முதியவரின் பாகுபாடற்ற அன்பு காட்டல், தியாகம் என்பதையும், சோக முடிவோடு கூறும் நூல்.  அப்பா, அதைப் படித்து ஆழ்ந்து போய் எனக்கு விளக்கிச் சொன்னார். அதைத் திரைப்படமாய்ப் பார்க்கும் நேரம் அப்பா உயிரோடில்லை. படத்தில் அங்கிள் டாம் பாத்திரத்தை ஏற்று மனம் நெகிழ நடித்தவர் O.W.Ficser  என்பவர். கொடுமையான வெள்ளையராக நடித்த அனுபவம் மிக்க நடிகர்  HERBERT LOW சிறப்புற செய்திருக்கிறார், அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டதற்கும் இந்நூலும் ஒரு முக்கிய காரணமென்பர்.

Uncle Tom's Cabin (1965 film) - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

அமெரிக்காவில் அடிமை நிலை, கருப்பு வெளுப்பு நிற வேற்றுமை என்பவற்றை விமர்சித்து நூல்களும் திரைப்படங்களும் வந்த வண்ணமேயிருந்த சமயம்- 60களின் தொடக்கத்தில் சேலம் பாலஸ் திரையரங்கில் ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப் படம் வெளியானது. 1965-ல் கருப்பர் – வெள்ளையர் நிற உணர்வு பற்றிய இக்கதைப் படத்தை ஸ்டான்லி க்ராமர்  STANLEY KRAMER இயக்கியிருந்தார். படம்,  THE DEFIANT ONES. நிறபேத உணர்வின் சகிப்புத் தன்மையை விருவிருப்பான காட்சி நகர்வுடன் எடுத்துச் செல்லும் அரிய திரைப்படம். ஜோக்கர் ஜாக்சன் எனும் வெள்ளைக் குற்றவாளியும் ஒரே சங்கிலியால் பிணைத்த விலங்குகளால் பூட்டப்பட்டு வேறு சில குற்றவாளிகளோடு சிறைக்கு வண்டியில் அழைத்துப் போகையில், நடுவழியில் ஏற்படும் விபத்தில் இறந்தவர் போக எஞ்சியவர்களில் ஜாக்சனும் நோவாவும் தப்பித்து ஓடுகின்றனர். போலீசு நாய்களோடு துரத்தி வருகிறது. நிறத்தால் ஒருவரையொருவர் வெறுத்து வெவ்வேறாக இயங்கினாலும் விலங்கால் மட்டுமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பித்து ஓடி ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொண்டு ஊராரால் தாக்கிச் சாகடிக்கப்பட இருக்கையில் அங்கிருக்கும் பெரிய மனிதன் ஒருவனால் காப்பாற்றப்படுகிறார்கள். காரணம், அவரும் இவர்களைப் போலவே தப்பியோடி வந்த மாஜி குத்தப்பட்ட கைதியெண்ணைக் காட்டி தெரிவிக்கிறார். பிறகு இவர்கள் ஒரு  கிராமத்தையடைந்து, சிறுவன் ஒருவனோடு தனித்திருக்கும் விதவையின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்.

உணவு, உறைவிடம் கிடைக்கிறது. வெள்ளை விதவைக்கும் வெள்ளைக் கைதிக்கும் உறவு ஏற்படுகிறது. வெள்ளைக்காரி கருப்புக் கைதி கல்லணை ஒழித்து விடத்தீர்மானிக்கிறாள். கைதிகள் தம் விலங்கை உடைத்து ஒருவருக்கொருவர் வெவ்வேறாகின்றனர். இது வரை அவர்கள் விலங்கால் ஒன்றிணைந்து மனத்தால் நிற உணர்வு மேலிட்டு வெவ்வேறாக இருந்து வந்த நிலையில் – சின்ன நிகழ்வுக்கும் நிற ரீதியாக சிலித்தெழுந்து அடித்துக் கொள்ளும் அவர்கள் ஒரு சின்ன மாற்றம், இப்போது விலங்கிலிருந்து அவர்கள் வெவ்வேறு என்றாகிவிட்டார்கள். நோவா கல்லன் அவர்களின் உணர்வை உறவைப் புரிந்து கொண்டவனாய் தான் எங்காவது போய் விடுவதாய்க் கூறி விடை பெறுகிறான். அதே சமயம் காவலர்களும் நாய்களோடு அந்த இடத்தை நெருங்குகையில் ஜாக்சன் தப்பியோடுகிறான். கல்லனின் அன்பும் நட்பும் அவனுக்குப் புரிகிறது கல்லனின் பெயரைச் சொல்லி உரக்க அழைக்கிறான். காட்டில் ஒளிந்திருக்கும்  அவனைக் கண்டதும் கட்டியணைத்து மன்னிப்பு கோரி, இருவரும் ஒன்றாய் அப்பக்கமாய் ஓடும் சரக்கு ரயில் ஒன்றில் ஏறி அடுத்த மாநிலத்துக்குத் தப்பிக்க முயல்கின்றனர்.

நாய்களின் குரைப்பு பாய்ச்சலோடு போலீசும் நெருங்குகிறது. கல்லான் முதலில் ஏறிக் கொண்ட கடைசி பெட்டியிலிருந்து ஓடி வரும் ஜாக்சனுக்காக கையை நீட்டின்படியே இருக்கற வண்டி வேகமெடுக்கிறது. அதனோடு ஓடி கல்லனின் கையைப் பிடிக்க முடியாது தடுமாறுகிறான் ஜாக்சன். வண்டி மேலும் வேகமெடுக்கிறது. கல்லனும் கீழே குதித்து ஜாக்சனோடு சேர்ந்து கொண்டு தோல்வி- கஸ்டங்களின் போதெல்லாம் தான் வழக்கமாய்ப் பாடும் நீக்ரோ பாட்டைப் பாடுகிறான். முன்பெல்லாம் அப்பாட்டை வெறுத்து சண்டையிட்டு வந்த ஜாக்சன் இப்போது மனதார ரசிக்கிறான். நாய்களோடு போலீசும் இவர்களை அடைந்து மறுபடியும் கைது செய்கிறது. ஜாக்சனாக டோனி கர்டிஸ், கருப்பு கல்லனாக கருப்பு நடிகர் சிட்னி பாய்சியர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஸ்டான்லி க்ராமரின் அரிய இயக்கம் படம் முழுக்கத் தெரிகிறது. படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் நெட்ரிக் யங் NEDRICK YOUNG.  ஒளிப்பதிவு. ஸாம் லியவிட் இப்படத்தின் திரைக்கதை வசன கர்த்தாவும், காமிராமேன்  ஒளிப்பதுவிக்காகவும் ஆஸ்கார் விருதுகள் பெற்றனர். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான வெள்ளிக் கரடி விருது சிட்னி பாய்ஸருக்குக் கிடைத்தது.

சிட்னி பாய்ஷர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மியாமியில் 1927ல் பிறந்தவர். மன அழுத்தம் காரணமாய் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனவர். இவரது பெற்றோர்களுக்குச் சொந்தமான தக்காளிப் பண்ணையிலும் பிறகு மியாமியிலுள்ள மருந்துகடையிலும் பணிபுரிந்தார். இவர் மருந்துக் கடையிலிருக்கையில்தான் இவரது மேற்கு இந்திய ஆங்கில உச்சரிப்பாலும், கரிய நிறத்தாலும் அவரைச் சுற்றிய வெள்ளையர் உலகம் கீழாகவும் வித்தியாசமாகவும் பார்ப்பதை உணர்ந்தார். பாய்ஷர்  நியூயார்க் சென்று ஓட்டல்களில் பிறர் சாப்பிட்ட எச்சிற் தட்டுகள், குவளைகளைக்கழுவித் தன் வயிற்றைக் கழுவினார். அப்படியே அருகிலிருந்த நீக்ரோ தியேட்டரில் நாடகங்களில் நடித்தார். பிறகு திரைப்படங்களில் நடிக்கலானார். நாற்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்தார்.

Blackboard Jungle Movie - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

1955-ல் ரிச்சர்டு புரூக்  இயக்கிய Blackboard Jungle என்ற படத்தில்  அடங்காத கருப்பின மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்புக்கு வெள்ளைக்கார ஆசிரியராக GLEN FORD நடிப்பார். படாதபாடுபடுவார். முக்கியமாக உயரமான நீக்ரோ மாணவன் ஒருவன் இவரை ஆட்டிவைப்பான். அந்த மாணவனாக நடித்தவர் சிட்னி பாய்ஸர். இந்தக் கதையை உள்ட்டா செய்தாற்போல 1967ல் கருப்பின மேல் வகுப்பு ஆசிரியராக ரவுடித்தனமும் முரட்டு குணமும் பல்வேறு தீய பழக்கங்களும் நிறைந்த வெள்ளைக்கார மாணவர்களின் வகுப்பாசிரியராக சிட்னிபாய்ஷர் “TO SIR, WITH LOVE”, என்ற அற்புதமான படத்தில் நடித்தார்.

சிட்னி பாய்ஷர் ஹாலிவுட் வட்டாரத்தின் மிகவும் மரியாதைக்குரிய ஆஃப்ரிக்க – அமெரிக்க நடிகராக விளங்கி வருபவர். சர்வதேச உயர்ந்த விருதை 1958 வெனிஸ் திரைப்பட விழாவில் “SOMETHING OF VALUE”, என்ற படத்தில் நடித்தமைக்காகப் பெற்ற முதல் கருப்பு நடிகர் எனும் பெருமைக்குரியவர் சிட்னி பாய்ஷர். டெஃபியண்ட் ஒன்ஸ் படத்துக்கு அவரது நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கருப்பு நடிகரும் பாய்ஷரே ஆவார். 1963-ம் ஆண்டின் சிறந்த படமான, “THE LILLES OF THE FIELD”ல் நடித்த சிட்னி பாய்ஷரே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பு நடிகர். தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவையும், கடைசி வெள்ளை அதிபர் டி கிளார்க் வாழ்க்கையையும் வைத்து தயாரித்து ஒளிபரப்பான “MANDELA AND DE KLERK” தொடரில் பாய்ஷர் மண்டேலாவாகவும், மைகேல் கேய்ன் டி கிளார்க்காகவும் செய்தனர்.

Lilies of the Field - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

சென்னை மினர்வா திரையரங்கில் சிட்னி பாய்ஷர் ஆனி பேங்கிராஃப்டோடு நடித்த “தி ஸ்லெண்டர் த்ரெட்” [THE SLENDER THREAD]  எனும் படம் விசேஷமானது. மருத்துவக் கல்லூரி கருப்பின மாணவன் ஒருவனுக்கு பெண்ணொருத்தியிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வருகிறது. யாரென்றோ, இன்ன தொலைப்பேசி எண்ணிலிருந்து பேசுவதாகவென்றோ, இன்ன இடமென்றோ தெரிவிக்காதவளாக அந்தப் பெண் தன்னைக் குறித்துப் பேசுகிறாள்:

‘நண்பனே, நான் இப்போது இறந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருக்கிறேன்.”

கருப்பின இளைஞன் பொறுமையாக அவள் பேசுவதைக் கவனிக்கிறான். அவள் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பவள். தன் தற்கொலைக்குப்பின் புலமாயிருக்கும் அபரிதமான மனவழுத்தத்தையும் அதற்கான குடும்பச் சூழலையும் கூறத்தொடங்குகிறாள். அவளைப் பேசவிட்டக் கொண்டே இன்னொரு தொலைப்பேசி மூலம் இளைஞன் போலீசுக்கு தகவல் தந்து விட்டு தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுக்கும் சொல்லி தன் உரையாடலை கவனித்து தன்னுடன் உரையாடிக்கொண்டிருக்கும் தொலைபேசியின் மறுமுனை எண்ணையும் அது இருக்கும் முகவரியையும் தேடிப் பிடித்துத் தரும்படி சொல்லுகிறான். படம் இந்த செயல்பாடுகளைக் கொண்டு மாறி மாறி காட்சிப்படுத்தப்படுகிறது.

அவளை எப்படியும் காப்பாற்றி விடுவதில் கருப்பு இளைஞனுக்கு விடாது முயற்சி மேலிட்ட துடிப்பு. படத்தில் அன்றைய தொலைத்தொடர்பு முறை – டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சின் சுவிட்சுகள் இயங்கும் முறையெல்லாம் சுவாரசியமாயும் விருவிருப்போடும் மிக நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ளன. கடைசியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சு ஊழியர்களின் முயற்சியில் செத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் பேசும் தொலைப்பேசி எண், விலாசம் என்பவை கண்டுபிடிக்கப்படும் கடைசி நேரம், அவள் மயங்கி விழுந்து விடுகிறாள். சமயத்தில் அவர்களை அங்கு சென்று அவளை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியதோடு கருப்பின இளைஞனின் மனிதாபமானமும் போற்றப்படுகிறது. தன் அவசர முடிவுக்கு வருந்தும் அப்பெண் இளைஞனுக்கு நன்றி கூறுகிறாள். இளைஞனாக சிட்னி பாய்ஷரும், அந்தப் பெண்ணாக ஆனி பாங்கிராஃப்டும் [ANNEY NAMNKROFT] சிறப்பாக நடித்த இப்படத்தை SIDNEY POLLOCK சிறப்பாக  இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழின் ஒரு பிரபலமான தேசிய விருது பெற்ற எல்லாரும் கொண்டாடும் தமிழ் இயக்குனர் ஒருவரால் கச்சிதமாய் காப்பியடிக்கப்பட்டுள்ளது. [தாமரை நெஞ்சமா?]

1965-ல் கை கிரீன் [GUEY GREENE] என்பவர் பிரமாதமாக இயக்கிய படம் A PATCH OF BLUE, முதலில் ஆனந்த் திரையரங்கில் கருப்பு வெள்ளையில் 1965ல் திரையிடப்பட்டு பின்னர் தொலைக்காட்சியில் 90-களில் வண்ணப்படமாக ஒளிபரப்பானது. கருப்பு வெள்ளைப் பதிப்பில் இருந்த அழுத்தமும் ஆழமும் பதிப்போவியத் தன்மையும் [GRAPHIC EFFECT] வண்ணப் பதிப்பில் தெரியவில்லை.

அந்த குருட்டு ஏழை வெள்ளைக்கார இளம்பெண் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு போன்ற சேரியிலிருந்து பரந்த பூங்கா ஒன்றுக்கு ஒருவர் துணையோடு தினமும் காலையில் வந்து மரத்தடியில் அமர்ந்து மணிகளைக் கோர்த்த மாலையாக்குவாள். மாலை நேரம் அவளைக் கூட்டி வந்தவர் வந்து அழைத்துப் போவார். கோர்த்த மாலைகளை கடையொன்றில் விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தில் மணிகள் வாங்கிக்கொண்டு மீதிக் காசைதான் தங்கியிருக்கும் உறவுக்காரியிடம் தருவாள். சிற்றன்னை உறவில் இருக்கும் அந்தம்மாள் விபச்சாரத் தொழில் செய்து வருபவள். குருட்டுப் பெண்ணையும் அத்தொழிலில் ஈடுபட முயற்சித்து வருபவள்.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் |A Patch of Blue (1965)

ஒருநாள் மரத்தடியில் மணி கோர்க்கையில் பூச்சியொன்று அப்பெண்ணின் கௌணுக்குள் புகுந்துவிட, அவள் அலறிக் குதிக்கவும் மணிகள் யாவும் சிதறிவிட, உதவிக்கு கூவுகிறாள்.

என்னாயிற்று? நான் ஏதாவது உதவவா? என்ற அமைதியான அடக்கமும் அன்பும் நிறைந்த ஆண் குரல் மிக அருகிலிருந்து வருகிறது. அவள் தடவித்தடவி மணிகளைத் தேடுவதைக் கொண்டு அவள் பார்வையற்றவள் என்பதை அறிகிறான். அந்தக் குரலுக்குரிய கருப்பு இன இளைஞன் சிதறிய மணிகளைப் பொறுக்கித் தந்துவிட்டு அவளுக்கு ஐஸ்கிரீம்  கொண்டு வந்து தருகிறான். இந்தப் படத்தில் முடிவு வரை தான் ஒரு நீக்ரோ என்பதை அந்த பார்வையற்ற வெள்ளைக்காரிக்கு சொல்லவே மாட்டான். அவள் தன்னைப் பற்றி அவனுக்கு கூறுகிறாள். அவளைத் தினமும் பூங்காவில் சந்தித்துப் பேசும் இளைஞனின் பழக்கத்தை காதல் என்றே குருட்டுப் பெண் நினைக்கிறாள். அவன் அவளுக்கு டெலிபோன் பூத்தில் காசுபோட்டு டெலிபோன் செய்யக் கற்று கொடுத்துவிட்டு தன் தொலைப்பேசி எண்ணைச் சொல்லி மனப்பாடம் செய்ய வைக்கிறான். அவளை வீட்டிலிருந்து சாலையைத் தனியே கடந்து டெலிபோன் பூத்தை அடையவும் சொல்லிப் பழக்குகிறான்.

ஒருநாள் பூங்காவில் அந்தப் பெண்ணோடு அவனிருக்கையில் அவளது சிற்றன்னை பார்த்துவிட பெரிய கச்சேரியே வைத்து விடுகிறாள். ஆனால் அங்கு வந்து சூழும் ஜனங்கள் நீக்ரோ இளைஞனுக்கு சார்பாக பேசி, அந்த விபச்சாரியை துரத்தி விடுகிறார்கள். இதனிடையில் அந்த கருப்பின இளைஞன் அந்தப் பார்வையற்ற வெள்ளையினப் பெண்ணுக்கு கௌரவம் மிக்க நல்வாழ்வளிக்க திட்டமிடுகிறான். அந்தப் பெண்ணை  அதற்கான தங்கும் வசதிக்கொண்ட பள்ளியில் சேர்த்து சகல உதவிகளும் படிப்பும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறான். பார்வையற்ற அந்த அபலைப் பெண் தன் உள்ளத்தை அவனுக்குத் திறப்பதோடு அவன் தன் மீது காட்டும் அன்பை காதல் என்பதாகவே தான் கருதுவதாகக் கூறுகிறாள். அவன் அவளைத் தேற்றி, உலகில் “லவ்” காதல் என்பதற்கு ஆண், பெண் உறவு மட்டும் பொருளல்லவென்றும் வெவ்வேறு உள்ளார்த்தங்களையும் உள்ளிட்டதென்றும் அவற்றில் உயர்ந்த ஒன்றையே தான் அவளிடம் இதுவரைக் காட்டி வந்ததாய்க் கூறுகிறான். படித்து முன்னேறினால் எல்லாம் விளங்கும் என்று ஆறுதல் கூறி விடுதியின் வண்டியில் ஏற்றியனுப்புகிறான். ஒன்றை மறந்துவிட்டான். அவளுக்குத்தான் தந்த சிறு பரிசை. சிறு பெட்டியைத் திறந்தால் ஒரு இனிய பியானோ இசை கேட்கும். ஓடிப் போய் அதை எடுத்து வருவதற்குள் வண்டி புறப்பட்டுப் போய்விடும். குருட்டுப் பெண்ணாக எலிஸபெத் ஹார்ட்மனும் [ELIZABETH HEARTMAN] கருப்பின இளைஞனாக சிட்னி பாய்ஷரும் மிக அற்புதமாக நடித்திருக்கும் இதில் ஷெல்லி விண்டர்ஸ் [SHELLY WINTERS] கொடுமைக்கார சிற்றன்னையாக வருகிறார். இச்சிறந்தபடத்தை இயக்கியவர் GUEY GREENE.

1963 சிட்னி பாய்ஷர் LILIES OF THE FIELD எனும் படத்தில் நடித்தமைக்காக அவ்வாண்டின் தலைசிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

இவ்வுயரிய திரைப்படம் சென்னை குளோப் தியேட்டரில் 1964-ல் திரையிடப்பட்டது. குளோப் தியேட்டர் நியூ குளோப் என்றிலிருந்து குளோப் என மாறி இறுதியில் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு முகப்பு மாற்றி கட்டப்பட்டு அலங்கார் என பெயர் மாற்றப்பட்டு இடித்து கடைகளாக மாறியது.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் - Lilies of the Field

நிலையான வேலையற்ற கருப்பினக் கட்டிட தொழிலாளி ஹோமர் ஸ்மித் [HOMER SMITH] தனது பெரிய காரில் பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசம் ஒன்றில் வந்தவன் கார் ரேடியேட்டர் சூடேறியதால் தண்ணீர் தேடிப் பார்க்கிறான். தொழிலில் நன்றாகவே சம்பாதிக்கும் அவனுக்கு தட்டப்பாடு அவ்வளவாயில்லை. தூரத்தில் மரங்களிடையே தெரிந்த வீட்டை நோக்கி காரை செலுத்துகிறான். அது சிறிய பண்ணை. அதைப் பராமரித்து வரும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளும் அவர்களின் மகா கண்டிப்புகாரரான கன்னிமார்த்தலைவி [MOTHER SUPERIOR]  மரியாவும் ஹோமர் ஸ்மித் தண்ணீர் எடுப்பதைக் கவனிக்கின்றனர். அறிமுகமேற்படுகிறது. ஸ்மித் ஒரு கட்டிடத் தொழிலாளியென்பதை அறிய வரும் மதர் மரியா, அவனிடம் ஒரு பேருதவி வேண்டுகிறான். அங்கு ஒரு தேவாலயம் கட்டித்தரவேண்டும். அந்தப் பகுதியில் எங்கும் தேவாலயம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதர் மரியாவும் நான்கு கன்னியாஸ்திரீகளும் மைல் கணக்கில் நடந்து அவ்வூரின் கடை, பெட்ரோல் நிலையமருகிலிருக்கும் சிறு மைதானத்தில் கூட வேண்டும். பாதிரியார் ஒருவர் வசதி மிக்க பெரிய வாகனத்தில் வந்து பிரார்த்தனை முடிப்பார்.

தேவாலயத்தைக் கட்டி முடித்துத் தரும்படி ஹோமர் ஸ்மித்தை ஆண்டவனே தங்களிடம் அனுப்பி வைத்திருப்பதாக உறுதியாக நம்புகிறாள் மதர் மரியா. கன்னியா ஸ்திரீகள் நால்வருக்கும் ஆங்கிலம் வராது. உள்ளூர் புழக்கத்துக்கென ஆங்கிலம் பேசக் கற்றுத்தரும் கிராம ஃபோன் பெட்டியும் பாட போதனைப் பதிவாக்கிய தட்டுகளையும் ஸ்மித்துக்குக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுத்தருகிறான் ஸ்மித். சொல்லுவதையெல்லாம் திருப்பிச் சொல்லும்படி கூறுகிறான். இந்தக் காட்சி படத்தில்  மிகவும் சுவாரசியமானது.

“கிராமஃபோன் பெட்டி கருப்பு நிறம்” என்கிறான் அவர்கள், “கருப்பு நிறம், என்கிறார்கள்.

அவன் தன் கையைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு என்கிறான். அப்படியே திருப்பிச் சொல்ல வேண்டிய ஜெர்மானிய கன்னியாஸ்திரீகளும், தங்களைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு”, என்பார்கள்.

உடனே அவன் திருத்துவான்,

“நீங்கள் வெள்ளை, நான் கருப்பு”, இவ்விதமாய் உட்காரவும் எழுந்திருக்கவும் ஒருமை பன்மைகளில் பேச கற்றுத் தருகிறான். பிறகு பைபிள் வாசகம் கூறி முடிக்கையில் அவர்கள், “ஆமென்”, என்கின்றனர். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் “ஆமென்”, என்பதை  அமெரிக்க கிறித்தவர்கள், “ஏமென்”, என்பார்கள். ஹோமர் ஸ்மித் அமெரிக்கனாகையால், “ஆமென் அல்ல ஏமென்” என்கிறான். நான்கு கன்னிமாரும் அதை ஏற்றுக் கொண்டு “ஏமென்” என்பார்கள்.

மதர் மரியா விவரித்த வரைபடத்துக்கு ஏற்ப சிறிய தேவாலயம் ஒன்றைக் கட்டி முடித்துவிட்ட புறப்படத் தயாராகிறான் ஸ்மித். கட்ட வேலை நடக்கும் காட்சிகள் அபாரம். இடையிடையே அவனுக்கும் மரியாவுக்கும் பிணக்கு, மோதல், சமாதானம் ஏற்படுகிறது. ஊராரின் ஒத்துழைப்பு வரும் கட்டமும் நெகிழ்வைத் தருகிறது.

ஸ்மித் விடைபெறும் காட்சி நெகிழ்ச்சிமிக்கது. எல்லோரையும் பாடவிட்டு, “ஏமென்… ஏமென்”, என முடிக்கச் சொல்லிவிட்டு அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மெதுவாக  நழுவி காரைக் கிளப்பிப் புறப்பட்டு போய்விடுகிறான். முடிவு என்பதை “END”, என்று காட்டுவதற்குப் பதிலாக, “AMEN”, என்று காட்டி படம் முடிகிறது. மதர் மரியாவாக LILIA SKALA  என்பவரோடு படத்தில் எல்லோருமே நன்கு நடித்திருக்கிறார்கள். ஹோமர் ஸ்மித்தாக நடிக்கும் சிட்னி பாய்ஷர் அருமை. நடிப்பின் சிகரத்தை எட்டுகிறார். இப்படத்தின் கதை WILLIAM E.BARRETT என்பவரின் நாவலை அடிப்படையாய்க் கொண்டது. ERNEST HALLER-ன் சிறந்த காமிரா ஒளிப்பதிவில் RALPH NELSON-ன் மிகச் சிறந்த இயக்கத்தில் மூன்று விருதுகள் பெற்ற படம்.

1962-ல் E.R.BRAITHWAITE என்பவர் எழுதிய தன் வரலாற்று நூல், “TO SIR, WITH LOVE” ஓர் ஆஃப்ரிக்க அமெரிக்க இளம் பள்ளியாசிரியன், பிற்பட்ட சேரிவாழ் உழைக்கும் வர்க்க வெள்ளைக்காரர்களின் ரவுடித்தனம், பாலியல் வக்கிரம் உள்ளிட்ட சகல மோசமான பழக்க வழக்கங்கள் கொண்ட வெள்ளைக்கார ஆண்-பெண் பிள்ளைகள் படிக்கும் சாதாரண உயர் வகுப்புப் பள்ளியில் வெற்றி பெறுவது படம். இந்நாவலை TO SIR, WITH LOVE- திரைப்படத்துக்கு ஏற்றமுறையில் திரைக் கதையாக்கி தயாரித்து அதி உயரிய முறையில் இயக்கியவர் ஜேம்ஸ் க்ளேவெல் [JAMES CLAVELL].

மார்க் தாக்கரே [MARK THACKERAY] எஞ்சினீரிங் படித்து வேலை கிடைக்காததால் மேற்சொன்ன பள்ளியில் ஆசிரியராக பணியில் சேரும் கருப்பின இளைஞன். மாணவர்கள் நிறவெறி, காமம், ரவுடித்தனம், அடிதடி எல்லாம் கொண்ட சேரியிலிருந்து வருபவர்கள். தாக்கரேயை தாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

To Sir with Love, Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

வளர்ந்த பருவ வயதினரின் மனம்-செயல் இயல்பு, நிறவுணர்வு – பேதம் மலிந்த சமூகத்தில் சிறுபான்மைக் கருப்பின பள்ளியாசிரியரின் மனோ நிலையையும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பச் சூழலிலிருந்து  வரும் வெள்ளைக்கார பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தனித்து விடப்படும் கருப்பின ஆசிரியரின் தவிப்பு நிலை என்பன போன்ற பல்வேறு முக்கிய சமூக பொருளாதார கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாயுள்ளது இப்படம்.

பணியில் சேர்ந்த முதல் நாள் முதலாகவே தாக்கரேயின் உற்சாகத்தை, மனோ திட்டத்தையெல்லாம் தூள் தூளாக்கும் விதமாக நடந்து கொள்ளுகிறார்கள் மாணவர்கள். ஆனால் எதிர்ப்பு, பகைமை, சவால்களை ஏற்கெனவே சந்தித்திருக்கும் தாக்கரே அதையெல்லாம் சமாளிக்கிறார். புது வழியில் இறங்குகிறார் பாடப் புத்தகங்களை மூடிப்பையில் வைக்கச் சொல்லிவிட்டு, “நீங்களெல்லாம் சிறுவர், சிறுமியரல்ல. வளர்ந்த யுவன், யுவதிகள். ஒருவரையொருவர் அந்த ரீதியில் அழைக்க வேண்டாம். வழக்கமான பாடங்களுக்குப் பதிலாக இனி நாம் வாழ்க்கையை, லவ், செக்ஸ், கல்யாணம் என்பனவற்றையெல்லாம் கற்கப் போகிறோம்”, என்று பேசுகிறார் தாக்கரே.

மாணவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இதுவரை பல ஆசிரியர்களை அவர்கள் விரட்டி வேலையிலிருந்து ஓட விட்டது பழங்கதையாகிறது. மாணவ, மாணவிகள் சமையல் கற்பது அவசியம் என்பது சொல்லி சமையல் சொல்லித் தரும் தாக்கரே மாணவர்களை அப்பள்ளியின் சரித்திரத்திலேயே நடந்திராத வழக்கமாய் பஸ்ஸிலேற்றி விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி விளக்குகிறார். வயதில் சற்று மூத்த ஒரு மாணவனைத் தவிர மற்றவர்களெல்லாம் புதிய ஆசிரியரை மரியாதையுடன் நடத்தி அன்பு காட்டுகின்றனர். மாணவ, மாணவிகள் சகஜமாக ஜோடி சேர்வதும் காதலிப்பதும் அங்கே நடக்கிறது. வயதில் மூத்த பையன் முரடன் என்பதோடு ஒரு மன மகிழ் நிகழ்ச்சியின்போது தாக்கரேயை வம்புக்கிழுத்த தன்னோடு குத்துச் சண்டைக்கு வருமாறு அழைக்கிறான். அக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் அவர் அந்தப் பையனை ஒரேயடியில் வீழ்த்துவது அந்தப் பையனின் குண இயல்பையே மாற்றுகிறது. படிப்பு முடிந்ததும் பையனை முறையாக குத்துச் சண்டை கற்கதான் உதவி புரிவதாய்க் கூறி அவனது நட்பையும் பெறுகிறார். தாக்கரேவுக்கு அமெரிக்க கம்பெனியொன்றில் இன்ஜினியர் வேலைக்கு தேர்வாகி வேலையில் சேர உத்தரவு வருகிறது. மாணவ, மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவு உபசார பார்ட்டி வைத்து சிறு பரிசையும் தருகிறார்கள். லூலு எனும் மாணவி தான் கட்டிய, ஒரு பாட்டை இனிமையாகப் பாடுகிறாள். “பென்சில் பேனா புத்தகம் இல்லை. வாழ்க்கையைப் பாடம் கற்பித்தவரே, உள்ளம் கொள்ளை கொண்டவரே, டு சார், வித் லவ்”, என முடியும் சிட்னி பாய்ஷர் தாக்கரேவாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். லுலுவாக பார்பாரா துடிப்பாக நடித்திருக்கிறார்.

Who's Afraid of Virginia Woolf,Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

கண்கள் காமிரா வழியே பார்த்து திரைப்படத்துக்கான சட்டகங்களைத் தீர்மானிக்கின்றன. காமிரா கலைஞரான ஒளிப்பதிவாளர் திரைப்பட உருவாக்கலில் முதுகெலும்பு போன்றவர். தலை சிறந்த காமிரா ஒளிப்பதிவாளர்களில் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர் ஒருவர் [HASKELL WEXLER] “இது ஒளிப்பதிவாளர் படம்” என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் படத்தில் அவரது கலையாளுமை கொண்ட சாமர்த்தியம் விரவிக் கிடக்கும். 1966-ல் “WHO IS AFRAID OF VIRGINIA WOOLF?” என்ற அரிய கருப்பு வெள்ளைப் படம் மைக் நிக்கோல்ஸின் இயக்கத்தில் ரிச்சர்டு பர்டன், எலிசபெத் டேலர் நடிப்பில் வெளிவந்து ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. EDWARD ALBEE என்பாரது நவீன நாடகத்தை, நாடக இயக்குனராயிருந்து ஹாலிவுட் சினிமாவுக்கு வந்த மைக் நிக்கோல்ஸ், ஆல்பீயின் நாடகத்தை அற்புதமாக திரைப்பட வடிவமாக்கினார். இப்படத்தின் ஐந்து ஆஸ்கர் விருதுகளில் ஒன்று, இதன் பிரமிப்பூட்டும் கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவுக்கானது. அந்த காமிரா கலைஞர் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர். இவரது மற்றொரு உயரிய வண்ண ஒளிப்பதிவில் உருவாகி அடுத்த வருடம் வெளிவந்த [1967] நான்கு ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம் “இன் தி ஹீட் ஆஃப் தி நைட்” [IN THE HEAT OF THE NIGHT]. இத்தலைப்பு சேர்ந்து வருமாறு இயற்றப்பட்ட பாடலை படத்தின் தொடக்கத்தில் [QUINCY JONES-ன் பாப் இசையமைப்பு] வெக்ஸ்லெரியின் ஒளிப்பதிவில் கலந்தளிப்பது திணற வைக்கும் ஒன்று JOHN BALL – என்பவரின் நாவலைக் கொண்ட படம். நிறவுணர்வின் கொடுமையை இப்படத்தில் இயக்குநர் நார்மன் ஜயூசன் [NORMAN JEWISON] மிக நேர்த்தியாகச் சொல்லுகிறார். ஒரு சிலிர்க்க வைக்கும் சமூகக் கொலை நிகழ்வு கருப்பின மக்கள் நிறைந்த பகுதியில் வெள்ளைக்கார தொழிலதிபரின் படுகொலையால் கதிகலக்குகிறது. முக்கிய இடங்களில் தேடல் இறுக்குகிறது. அது மிசிசிப்பி பகுதியிலுள்ள ஸ்பார்டா எனும் சிற்றூர். அவ்வூர் ரெயில்வே ஸ்டேஷனில் இரவு ரயிலுக்காகக் காத்திருக்கும் கருப்பின  இளைஞன் கைது செய்யப்பட்டு அங்கேயே சோதிக்கப்படுகையில் அவனிடமுள்ள பணம் அவன் மீது சந்தேகத்தைக் கூட்டுகிறது. அவ்வூர் சிறிய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறான். சாதாரண மார்ஷல் பதவியிலிருக்கும் கிண்டலும் நிறத் திமிரும் கொண்ட மார்ஷல் கருப்பு இளைஞனை விசாரிக்கையில், “ஏன் கொன்றாய்?”, என்று தெனாவெட்டாக ஆரம்பிக்கிறான்.

அதற்குப் பற்களைக் கடித்துக் கொண்டு சொல்லுகிறான். நீக்ரோ இளைஞன், “நான் ஒரு போலீஸ் அதிகாரி”, அதைக் கேட்டு கொஞ்சம் திகைப்பும் கொஞ்சம் ஏளனமுமாய் சுவிங்கத்தை  மென்று கொண்டே வெள்ளை மார்ஷல் பார்க்க, இளைஞன் தன் உத்தியோக ஐ.டி.யை எடுத்து காட்டுகிறான். விர்ஜில் டிப்ஸ் [VIRGIL TIBBS] பிலடெல்பியாவிலிருந்து இந்தூருக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு ஊர்த்திரும்ப இரவு ரயிலுக்குக் காத்திருந்த “ஹோமிசைடல் எக்ஸ்பெர்ட்” எனும் குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணரான உயர்ந்த போலீஸ் அதிகாரி. கருப்பர் குடியிருப்பில் வெள்ளை தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதால் கொலையை ஒரு கருப்பர் புரிந்திருக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் கைதான முதல் நபர் கருப்பின போலீஸ் அதிகாரியான டிப்ஸ்.

“ஹாய், டிப்ஸ்”, என்பான் மார்ஷல்.

“என்னை மிஸ்டர் டிப்ஸ் என்று அழைப்பார்கள்,” என்று கோபமாக திருத்துவான் டிப்ஸ். அங்குள்ள டெலிஃபோனை வாங்கித் தன் உயரதிகாரியோடு பேசிவிட்டு மார்ஷலிடமும் பேச வைக்கிறான் டிப்ஸ். உயர் அதிகாரியுடன் பேசிய பின் அவன் முகம் மாறுகிறது. ஆனால் டிப்ஸை விட மனமில்லை. அந்தக் கொலையைக் கண்டு பிடிப்பதில் தனக்கு உதவும்படி வேண்டுகிறான். அந்த நிலையில் நிற வெறி அமுங்கியடங்க இருவரும் சேர்ந்து உண்மைக் குற்றவாளியான வெள்ளையனையும் அவனது சகாக்களையும் பிடிக்கிறார்கள். டிப்ஸ் ஊருக்கு ரயிலேறுகையில் கொண்டுவிடவரும் மார்ஷல் டிப்ஸின் பயணப் பெட்டியைத் தூக்கி வந்து கை குலுக்கி வண்டியேற்றுகிறான். சதா சுவிங்கம் மென்றுகொண்டே அடக்கி நடிக்கும் மார்ஷல் பாத்திரத்தில் அருமையாகச் செய்த ராட் ஸ்டீகர் [ROD STEIGER] சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் GUESS WHO'S COMING TO DINNER - CRITERION CHANNEL

மீண்டும் ஒருமுறை சிட்னி, பாய்ஷர், ஸ்டான்லி க்ராமர் இயக்கத்தில் ஆஸ்கர் விருதுகள் இரண்டைப் பெற்ற “GUESS WHO IS COMING TO DINNER”என்று புகழ்பெற்ற வண்ணத்திரைப்படத்தில் பழம்பெறும் நடிகர்கள் SPENCER TRACY, KATHARINE HEPBURNகளுடன் 1967-ல்  நடித்தார். காத்தரீன் ஹெப்பர்ன் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்துக்கு பெற்றார். மாத்யூ டிரேய்டன் நன்கறியப்பட்ட  பதிப்பாளர் [MATHEW DRAYTON] அவரது மனைவி கிறிஸ்டினா. இவர்களது அழகிய ஒரே மகள் ஜோவன்னா தன் காதலன் ஜான் பிரெண்டைஸுடன் [JOHN PRENTICE] பெற்றோர்களிடம் வருகிறாள். “இவரைத்தான்நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”, என்று கூறி பெற்றோர்களுக்கு தன் காதலனை அறிமுகம் செய்து வைக்கிறாள். பெற்றோர்கள் தம் வருங்கால மருமகனைக் கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். அந்த அழகிய வாலிபன் – புகழ் பெற்ற மருத்தவன் – டாக்டர் ஜான், ஒரு கருப்பின ஆஃப்ரிக்க அமெரிக்கன். ஜோவன்னாவின் அம்மா கிறிஸ்டினாவுக்கு தன் மகள் ஒரு கருப்பின டாக்டரை. கணவனாகத் தேர்ந்தெடுத்ததில்  பெருமகிழ்ச்சியே. ஆனால் அப்பா, மாத்யூ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். டாக்டர் ஜான் தன் பெற்றோர்களையும் அழைக்க, ஊரிலிருந்து வரும் அவர்களோடு அவனும் ஓட்டலில் தங்குகிறான். அவர்களுக்கும் தங்கள் மகன் ஒரு வெள்ளைக்காரியைத் திருமணம் முடிப்பதில் ஒப்புதலேயில்லை. அவர்களிடையே நீண்ட விவாதம் நிகழ்கிறது. ஒருவாறு இரு தரப்பினரும் எதிரெதிரே நேராக அமர்ந்து அவரவர்களின் சகியாதன்மையின் அளவு மட்டத்தை கண்டுணரும் விதமாய் ஒருவருக்கொருவர் சோதிப்பதாய் செய்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டு அவர்களுள் சமரசமும் ஏற்பும் ஏற்பட அன்றிரவுச் சாப்பாடு [DINNER] ஏற்பாடாகிறது. ஸ்பென் ட்ரேசியும்> கேத்தரின் ஹெப்பர்னும், சிட்னிபாய்ஷரும் மிக அற்புதமாய் நடித்த “கெஸ் ஹு இஸ் கமிங் டு டின்னர்”, படத்தை ஸ்டான்லி க்ராமர் அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

“நீ என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவில்லை. கருப்பு நிறமானவனாகத்தான் பார்க்கிறாய்”, என்று தந்தையிடம் சூடாக சிட்னி பாய்ஷர் விவாதிக்கும் கட்டம் மிகச் சிறப்பானது. திறவுணர்வு, நிறவெறி பற்றிய வேறு மொழி படங்களும், ஆஃப்ரிக்க படங்களுமிரு க்கின்றன. பார்ப்போம்.

(தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்



தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஜான் ஃபோர்டு (John Ford)

கலையிலக்கிய விமர்சகர் வெங்கட்சாமி தான் சொல்லுவார், ஹாலிவுட் இத்யாதிகளைவிட கிழக்கு ஐரோப்பிய திரைப்படக்காரர்கள் அற்புதமான சினிமா செய்திருக்கிறார்கள் என்று, உண்மைதான். ஆனால் சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷியாம் பெனகல் ஆகிய இந்திய திரைப்பட மேதைகள், ஹாலிவுட் சினிமாவின் குறிப்பிடப்பட்ட சில இயக்குனர்களைப் பற்றியும் அவர்கள் பணியின் உன்னதத்தைக் குறித்தும் வெகுவாக சிலாகித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட சிலருள் ஒருவர் ஜான் ஃபோர்டு (John Ford).

ஜான் ஃபோர்டின் திரைப்படங்களை இரு முக்கிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம், அதன் தொடக்கத்திலிருந்த கடினமான வாழ்வியல் நிலை, உள்நாட்டுப் போர் செவ்விந்தியர் எனும் பழங்குடியினரோடான பிரச்சனை இடப்பெயர்ச்சியால் ஏற்பட்ட பிரச்சினை என ஒரு பகுதி. மற்றது, மேற்கத்திய மாடுமேய்ப்போர் (Westerns of Cowboys) எனப்படும் கெளபாய் சாகசப் படங்கள். இவரது படங்களில் இயற்கைச் சூழல் – குறிப்பாக அமெரிக்காவின் அரைசோனா பகுதியைச் சுற்றியுள்ள சிறப்பு மிக்க Great Canyons எனப்படும் பிரமிப்பூட்டும் செம்மண் நிற மலைச் சிகரங்கள் பின்னணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவார். மாட்டு மந்தை அகன்று பரந்த வட அமெரிக்க கால் நடைப் பண்ணை RANCH, குதிரைச் சவாரி, ‘‘ஸ்டேஜ் கோச் எனும் குதிரைகள் பல பூட்டிய பெரிய கோச்சு வண்டிகள், துப்பாக்கிச் சண்டை, மார்ஷல் எனும் போலீஸ் அதிகாரி, மாவு அரைக்கும் மெஷினில் தானியத்தைக் கொட்டும் அகன்ற புனல் போன்ற புகைப் போக்கி வைத்த ரெயில் வண்டித் தொடர் என்பவை கண் கொள்ளா காட்சிகள்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்
Ford, John – Senses of Cinema

ஜான் ஃபோர்டின் புகழ் பெற்றதொரு நேர்காணல் அவரது விருப்பத்தின் பேரில் அந்த மலைச் சிகரங்களின் பின்னணியில்தான், வெட்ட வெளியில் உட்கார்ந்து பேசுவதாக இடம் பெற்றது. அவரது நிறைய படங்களில் இடம் பெற்ற அந்த மாபெரும் கான்யன் மலைகள் ஃபோர்டுக்கு மிகவும் உகந்ததான காட்சிப் பின்னணி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில், ஜேம்ஸ் பாண்ட் தன்னை இவ்வாறு அறிமுகப் படுத்திக் கொள்ளுவார், ‘‘என் பெயர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட், சுடுவதற்கு என்னிடம் அனுமதியிருக்கிறது.’’ (I have Licence to Shoot). அந்த மாதிரி ஜான் ஃபோர்டும் ஒரு முறை தன்னை அறிமுகப்படுத்திக் கெண்டார். என் பெயர் ஃபோர்டு; ஜான் ஃபோர்டு. நான் வெஸ்டெர்ன் திரைப் படங்களைச் (காமிராவில்) சுடுகிறேன்.

1894-ல் ஜான் மார்டின் ஃபீனி (John Martin Feeney) என்று அயர்லாந்தியக்காரரின் மகனாகப் பிறந்தவர் ஹாலிவுட்டுக்கு வந்ததும் தம் பெயரை ஜான் ஃபோர்டு என்று மாற்றிக் கொண்டார். உலக சினிமாவின் தோற்றுவாய்களுள் ஒருவர் எனப் போற்றப் படும் கிரிஃப்பித் (Griffith) படைத்த ஒரு தேசத்தின் ஜனனம் (Birth of Anation) என்ற 1915-ல் தயாரிக்கப்பட்ட படத்தில் சிறிய பாத்திரமொன்றில் ஜான்ஃபோர்டு நடித்திருக்கிறார். அவரை, துப்பாக்கிச் சூட்டு வெறியர்களான கெளபாய் பாத்திரங்கள் கொண்ட கதைப்பட இயக்குனர் என்று ஒதுக்குவாருண்டு. ஆனால், அமெரிக்க சினிமாவின் மேதைகளில் ஒருவர் என பேசப்படுபவர் அவர். அந்தளவுக்கு அரிய அற்புதத் திரைப்படங்கள் அவர் பங்களிப்பாக இருக்கின்றன. நான்கு முறை ஆஸ்கர் விருது பெற்றவர் ஜான் ஃபோர்டு.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்ஜான்ஃபோர்டின் வித்தியாசமான படங்களில் ஒன்று, ‘‘மூன்று ஞானத் தந்தைகள்.’’ (3 God Fathers) மூவரில் ஒருவர் ஜான்ஃபோர்டின் படங்கள் பலதில் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஜான் வைன். John Wyne) ஃபோர்டின் ஆரம்பகால படங்களில் அதிகமாய் நடித்த மற்றொருவர் ஹென்றி ஃபோண்டா (Henry Fonda) 3 ஞானத் தந்தைகள் படத்தின் கதையில் மூன்று ரவுடிகள் குதிரைகளில் வந்து தங்கள் பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்கின்றனர். மூன்று ரவுடிகளின் தலைவன் தாங்கள் ஒரு கொள்ளைக்குப் போக இருப்பதைக் கூறுகையில், நண்பன் தன் சட்டையை மாட்டிக் கொள்ளுகிறான். அந்தச் சட்டையில் குத்தப் பட்ட போலீசு மார்சலுக்கான பித்தளை நட்சத்திரத்தைக் கண்டதும் ரவுடிகள் ஓட்டம் பிடிக்கின்றனர். அவர்கள் பல குற்றங்களுக்காக போலீசால் தேடப்பட்டு வருபவர்கள். அவர்களைத் தொடர்ந்து ரயிலிலும், குதிரைமீதும் பயணித்து மார்ஷல் குழுவும் அலைகிறது. மூவரில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவனுக்கு பலமான அடி. பாலைவன மணலில் புதைந்த கோச்சு வண்டிக்குள் பிரசவித்து, ஆண் குழந்தையோடு மரணப் படுக்கையில் கிடக்கும் பெண்ணைச் சந்திக்கிறார்கள். அவளைச் சேர்ந்தவர்களை செவ்விந்தியர்கள் கொன்றுவிட்டார்கள். ரவுடித் தலைவனிடம் குழந்தையை ஒப்படைத்து தான் சொல்லும் பெண் அம்மூன்று ரவுடிகளையும் அந்த குழந்தைக்கு ஞானத் தந்தைகளாக இருக்க வேண்டிக் கொண்டு உயிரை விடுகிறான். ரவுடிகள் அவளைப் புதைத்துவிட்டு குழந்தைக்கு அவள் விட்டுச் சென்ற பாலைக் கரைத்து புகட்டுவதும் ஆள் மாற்றி ஆளாக தூக்கிக் கொள்ளுவதுமாய் வேறிடம் போகிறார்கள். மார்ஷலும் அவர்களைத் தேடி தொடர்கிறார். தண்ணீரில்லை. பாலைவனப் புயலில் குதிரைகள் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றன. மூவரில் அடிபட்ட ரவுடி மரணமடைகிறான். அங்கு அவனை நல்லடக்கம் செய்யவும் முடியாது.மேலும் கடினமான பகுதிக்குள் நடக்கையில் இன்னொரு ரவுடி தன்னைச் சுட்டுக் கொண்டு சாகிறான். மூன்றாம் ரவுடியும் தலைவனுமானவன் குழந்தையை தன் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றும் திடத்தோடு விழுந்து புரண்டு சிற்றூர் ஒன்றையடைந்து ஊராரிடம் ஒப்படைத்துவிட்டு விழுகிற சமயம் மார்சல் படையோடு வந்துவிடுகிறார். ஊரார் வாயிலாயும் தானாகவும் அறியவரும் மார்ஷல் படையோடு வந்துவிடுகிறார். ஊரார் வாயிலாயும் தானாகவும் அறியவரும் மார்ஷல் ரவுடித் தலைவனின் தீரத்தை, மனிதாபிமானத்தைப் பாராட்டி பொது மன்னிப்பு வழங்கி ஊரார் அவனை ரயிலில் ஏற்றி அவனது ஊருக்கு அனுப்புகிறார்கள். குழந்தை ஊராரிடம் விடப்படுகிறது. இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் ரவுடித் தலைவனாக ஜான் வைன் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஜான் ஃபோர்டின் மிக நல்ல படங்களில் ‘‘மூன்று ஞானத் தந்தைகள் ஒன்று.

மெளனப் படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் ஜான் ஃபோர்டு ஒரு காதல் கதையை திரைப்படமாக்கியிருக்கிறார். இது முற்றிலும் மாடுகள் மேய்க்கும் கெளபாய்கள் மாட்டுப் பண்ணைக்காரர் என்ற பாத்திரங்களைக் கொண்ட படம். மெளனப் படங்களாக நாம் ஏராளமாக அற்புதமான சார்லி சாப்ளின் படங்கள், பார்த்திருக்கிறோம். அவை மனித குலத்துக்கான சத்துணவாக வாய்விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவுமான செய்திகளையும் வெளிப்படுத்தியுள்ளன. ரஷ்ய திரைப்பட மேதை செர்கேய் ஜசென்ஸ்டீன் ஜெர்மனியின் லாங் (LANG) ஆகியோரின் தலைசிறந்த மெளனப் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஜான் ஃபோர்டின் இந்த மெளன படத்தை அவைகளோடு ஒப்பிடவே முடியாது.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்ஜான் ஃபோர்டு 1917-ல் பக்கிங் ப்ராட்வே (Bucking Broadway) எனும் மெளனப் படத்தை எடுத்தார். 54 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் அவர் தமக்கு மிகவும் பிடித்தமான அந்நாளைய மெளனப் பட நட்சத்திரம் ஹாரி கேரி (HARRY CAREY) என்பவரை நடிக்க வைத்தார். இந்த ஹாரி கேரியின் மகன் Harry carey-JR. பின்னாளில் ஜான் ஃபோர்டின் ‘‘3 ஞானத் தந்தைகளில்’’ கையில் அடிபட்டு பாலைவனத்தில் இறந்துபோகும் ஒரு ஞானத் தந்தையாக நடித்தவர்.

ஏராளமான மாடுகளைக் கொண்ட பெரிய மாட்டுப் பண்ணையின் உரிமையாளர், ஏராளமான மாடு மேய்க்கும் கெளபாய்களையும் நியமித்திருப்பவர். அவர்களில் ஒருவனான லிடியன் என்பவனும் பண்ணையாரின் ஒரே மகள் ஹெலனும் காதலர்கள். அதை ஹெலன் அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறாள். அவரும் சம்மதிக்கிறார். இடையில் வந்து சேரும் குதிரை நிபுணன் பண்ணைக் குதிரைகளை சோதித்துப் பயிற்சித்து பழக்குகிறேன் என்றவன் ஹெலனை மயக்கி ஏமாற்றி நியூயார்க்குக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். அவன் பெண் பித்தன் என்பதை புரிந்து கொண்ட ஹெலன் கவலையுற, அவளைத் தேடி வரும் கெளபாய் நீண்ட நேர நகைச்சுவை கலந்த கைகலப்புக்குப் பின் காதலியை மீட்கிறான். 1917-லேயே ஃபோர்டின் பிற்காலப் படங்களில் தெரியும் அழகியல் கூறுகளில் ஒரு சில சங்கதிகள் பளிச்சிடுகின்றன என்பது முக்கியம்.

ஜான் ஃபோர்டுக்கு அமெரிக்காவின் மாபெரும் அகன்று விரிந்த பள்ளத்தாக்கும் அங்குள்ள வியப்பூட்டும் வடிவிலான மலைகளும் (Great Canyons) நமது ஹம்பியைப் போல. அங்கோர்வாட் போல. அதன் பின் புலத்தில் அவரது நிறைய படங்களின் காட்சி சட்டகங்கள் அமைந்து காண்போரை அசத்துபவை. அதே சமயம் ஜான் ஃபோர்டு காலகட்டத்துக்கு முன்பே இந்த இயற்கைச் சூழலை, அமெரிக்காவின் ஆதிக் குடிகளான செவ்விந்தியரை, குதிரைகளையெல்லாம் கோட்டோவியங்களாகவும் தைல வண்ண ஓவியங்களாயும் தீட்டிய பலருள் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் நிரந்தர குடிமகனான ஓவியர் ஆல்பர்ட் பியர் ஸ்டாட் (ALBERT BIERSTADT) இவர் 1859-ல் மேற்கு அமெரிக்கப் பகுதியில் ஆறு குதிரைகள் பூட்டிய அதிவேக ஸ்டேஜ் கோச் வண்டிகள் ஓட்டத்துக்கான வழித்தடங்கள் அமைய ஜெனரல் பி.டபிள்யூ. லேண்டர் என்பவரின் கீழ் சர்வே செய்ய நியமிக்கப்பட்டு பயணம் மேற்கொண்டவர்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பள்ளத்தாக்குகளும் குன்றுகளும் (Great Canyons) அவரை மிகவும் பிரமிப்பூட்டி அவற்றின் அழகில் ஆழ்ந்துப் போன அவர் பலமுறை அங்குபோய் வந்திருக்கிறார். அந்த சமயங்களில் பெரிய பெரிய கான்வாசுகளில் அக்காட்சிகளை தைல வண்ண ஓவியங்களாக்கி புகழ் பெற்றார் ஜெர்மனியில் ரைன் பகுதியில் (RHINE) 1830ல் டுஸ்ஸெல்டார்ஃப் (Dusseldorf)-ல் பிறந்த பியர் ஸ்டாட், அமெரிக்க மேற்குப்புற பள்ளத்தாக்குகளை வண்ண ஓவியங்களாய்த் தீட்டிய முக்கியமான ஓவியர். இவர் 1902-ல் காலமானார். இவரது ஓவியங்கள் ஜான் ஃபோர்டின் படங்களுக்கான காட்சிப் பின்னணி சட்டகங்களு்க்கான பாதிப்பை ஏற்படுத்தியவை என அறியப்படுகிறது. இவரது புகழ்பெற்ற ஓவியங்கள், விண்ட் ரிவர் மலையிலிருந்து காட்சி (View From wind River Mountain) கடைசி எருமை (The Last of the Buffalo) மலைகளில் இடி மின்னல், பள்ளத்தாக்கில் கோச்சு, வண்டிகள் மற்றும் குதிரைப் பயணம் ஆகிய ஓவியங்கள் ஜான் ஃபோர்டு உவந்து தம் படங்களின் காட்சிகளுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்க உதவியிருக்கின்றன.

மற்றொருவர் புகழ் பெற்ற கெளபாய் ஓவியர். சார்லஸ் மரியன் ரஸ்ஸெல் (Charles Marion Russell) தொழில் ரீதியான குதிரை மீது சவாரித்து பண்ணை மாடுகளை மேய்த்து வந்த கெளபாய். இவர் சக கெளபாய்களை, குதிரைகளின் நூற்றுக்கணக்கான அசைவுகள், பாய்ச்சல்கள், துள்ளல்களையெல்லாம் நேரிலிருந்தே கோட்டோவியங்கள் வரைந்தவர். இவரது பல கோட்டோவியங்களின் காட்சியை நாம் ஜான் ஃபோர்டின் பல படங்களில் காணமுடிகிறது.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை நன்றாக எழுதியிருந்தாலும் அவரது ஒரு நூலைச் சொல்லியே பேசப் படுவார், நினைவு கூரப் படுவார். சினிமாவும் அவ்வாறே. விட்டோரியா டீசிகா பல நல்ல படங்களைச் செய்திருந்தும் அவர் பெயரைச் சொன்னவுடனே பைசைக்கிள் தீஃப் படக்காரர் என்றே சட்டென நினைவு கூர்கிறார்கள். ஜான்ஃபோர்டும் அப்படியே நான்கைந்து அரிய படங்களை அவர் படைத்திருந்தாலும் அவர் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனேகர் ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவரது ஒப்பற்ற படமாக இருப்பது ‘‘ஸ்டேஜ் கோச் இந்தப் படத்தைத் தான் பொதுவாக விமர்சகர்கள், முதல் நவீன வெஸ்டெர்ன் என்று குறிப்பிடுவார்கள். கதை நடந்த சமயம் குடியேற்ற நாடுகளின் வெள்ளையர்களுக்கும் பூர்வீக குடிகளான செவ்விந்தியருக்குமான சண்டை. செவ்விந்தியருக்குள்ளிருக்கும் பல பிரிவுகளில் ஒன்றுக் கொன்று பகைமை, காட்டிக் கொடுத்தல் என்ற நிலையில் மூர்க்கமானதும் பலம் மிக்கதுமான அப்பாச்சி இனத்துக்கும், கொமாஞ்சி இனத்துக்குமான பகையில் ஒருவருக்கொருவர் வெள்ளைப் படைகளிடம் போட்டுக் கொடுக்கும் நிலை. அப்பாச்சிகள் மிகுந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதி வழியே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் ஒரு ஸ்டேஜ் கோச் பயணிகள் வண்டி வித்தியாசமான பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறது.

ஸ்டேஜ் கோச் ஆறு குதிரைகள் பூட்டி அதிவேகமாய்ப் போகும் பயணிகள் ஊர்தி பஸ் கண்டுபிடிக்கும் வரை இத்தகைய பெரிய மூடப்பட்டு குஷன் இருக்கைகள் உள்ள வண்டிகள் இருந்தன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி – கன்னியாகுமரி பகுதிகளில் இருந்திருக்கின்றன. (மெயில் வண்டிகள்) ஸ்டேஜ் கோச்சில், சதா ஒன்றொன்றுக்கும் குறை கண்டுபிடித்து தான் புகாரளிப்பதாய் சொல்லும் பாங்க் மானேஜர் பெரிய சூதாடி, ஊர் அறிந்த அழகிய வேசி, சதா குடித்துக் கொண்டேயிருக்கும் டாக்டர், ஒரு வர்த்தகன், இராணுவ கேப்டன் ஒருவனை சந்திக்கவென்று பயணிக்கும் கர்ப்பிணி பெண், (சூதாடி இவளுக்கு மெய்க் காப்போனாக வண்டிக்குள் பயணிக்கிறவன்) பாதிரியார் ஒருவர் என்று நுழைந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்டேஜ்கோச் என அழைக்கப்படும் பயணிகள் மற்றும் தபால் வண்டிகள் பஸ்களைப் போன்றே செயலாற்றி வந்தன என்பதை இந்தப் படத்திலிருந்தே அறிய முடிகிறது.

பஸ் நிறுத்தம் மாதிரி இந்த வண்டிகளுக்கும் போகிற வழியெங்கும் நிறுத்தங்களிருந்தன. நீண்ட தூரம் போய் நிறுத்தம் வருகையில் பயணிகளை இறங்கி சிறிது, உலாவ, ஓய்வெடுக்க, அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் காபி, டீ குடிக்க வண்டியோட்டி அனுமதிப்பார். வெகுதூர ரயில் பயணங்களின்போது எஞ்சினை மாற்றுவது இருந்திருக்கிறது.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்சில சமயம் ஓட்டுனரும் மாறுவார். நீண்ட தூர பஸ் போக்குவரத்தில் ஓட்டுனரை ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் மாற்றுவதுமுண்டு. அது போல, ஸ்டேஜ் கோச் வண்டி வெகுதூரம் ஓடியதும் குதிரைகளை மாற்றி வைப்பார்கள். இதையெல்லாம் ஜான் ஃபோர்டின் ஸ்டேஜ் கோச் (Stagecoach 1939) படம் நமக்குக் காட்டுகிறது. படம் ஒவ்வொரு பயணியாக வண்டிக்குள் ஏறிக் கொள்ளுவதிலிருந்து தொடங்குகையில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துகிறது.

1939-ல் எடுக்கப்பட்ட இத்திரைப் படத்தின் வெவ்வேறு நடத்தையும் குணமும் கொண்ட பாத்திரங்கள் சுவாரசியமாய் நடமாடுகின்றன. பல்லஸ் (DALLAS) என்னும் கெட்ட பெயர் எடுத்த வேசி. அவளோடு வரும் மொடா குடிகார டாக்டர் பூண் (BOONE). இந்த பாத்திரங்களில் முறையே க்ளேர் ட்ரிவோர் (Clair Trivor), தாமஸ் மிட் செல் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஸ்கி வியாபாரி பீகாக் ஆக டொனால்டு மீக் என்பவரும், பெருஞ்சூதாடி ஹாட்ஃபீல்டு (HATFIELD) ஆக ஜான் கர்ராடினும் (John Carradine), காப்டனின் கர்ப்பிணி மனைவி மல்லோரியாக லூயிஸ் ப்ளாட்டும் (Louise Platt) கேட்வுட் எனும் பாங்கராக பெர்டன் சர்ச்சிலும், வண்டி ஓட்டுனர் பக் (Buck) காக ஆண்டி டிவைன் திறம்பட நடித்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் ரிங்கோ கிட் (Ringo Kid) வண்டிப் பயணதச்தின் வழியில் நிறுத்தி ஏறிக் கொள்ளுவான். இப்பாத்திரத்தில் ஜான் வைன் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் மூலக்கதையை எழுதியவர் ஏனெஸ்ட் ஹேகாக்ஸ் (Ernest Haycocx).

ஸ்டேஜ் கோச் பயணத்தின் தொடக்கத்தில் பாதுகாப்புக்காக சிறு காவல் படை வந்து வேறொரு வழியில் செல்லும் வேறொரு பயண வண்டியோடு போய்விடுகிறது. ரிங்கோ கிட் ஏற்கெனவே நிலுவையிலுள்ள குற்றங்களுக்காக தேடப்படுபவன். இந்த வழித் தடத்தில் வரும் வண்டியை நிறுத்தி அவன் ஏறிக் கொள்ளுவதை மார்ஷல் உட்பட சிலர் விரும்புவதில்லை. ரிங்கோவுக்கு இந்தப் பயணத்தில் ஒரு நோக்கமிருக்கிறது. ரிங்கோவின் தந்தையையும், சகோதரனையும் பிளம்மர் (Plummer) என்பவன் கொன்றுவிடுகிறான். அவனை பழிக்குப் பழி வாங்க துடிப்பவன் ரிங்கோ. இந்த ஸ்டேஜ் கோச் போய்ச் சேரும் கடைசி நிறுத்தம் பிளம்மர் இருக்கும் ஊர்தான். ரிங்கோ அதற்குத்தான் நடுவழியில் இந்த வண்டியில் ஏறினான். அவனுக்கும் வேசி டல்லஸுக்கும் காதலாகிறது. அவளைத் தன்னோடு வரும்படி கேட்கிறான். தான் மிகவும் மோசமானவள் என்று கூறி தன்னைவிட்டு விடச் சொல்லுகிறாள் டல்லஸ். அது மட்டுமின்றி ப்ளம்மர் கூட்டத்தோடு சண்டையிட வேண்டாமென்றும் கூறுகிறாள். இதற்கிடையில் ஸ்டேஜ் கோச் ஓரிடத்தில் நிற்கும்போது கர்ப்பிணி பெண் மல்லோரிக்கு பிரசவம் நிகழ்கிறது. அந்த பிரசவம் சுகப் பிரசவமாவதில் குடிகார டாக்டரும், வேசி டல்லஸும் பேருதவி புரிகிறார்கள். ஸ்டேஜ் கோச் பயணிகள் அனைவரும் ஒத்துழைக்க, டல்லஸ் குழந்தையை தாய்போல பார்த்துக் கொள்ளுகிறாள். மீண்டும் பயணம் தொடருகிறது. ஸ்டேஜ்கோச்சுக்கு இப்போது ஆபத்தான நெருக்கடி நேர்கிறது. அப்பாச்சி இன இந்தியர்கள் தாக்கத் தொடங்குகின்றனர்.

கடுமையான சண்டை. 1939-லேயே இந்த துப்பாக்கிச் சண்டைக் காட்சியை மயிர்கூச் செரியும்படி செய்திருக்கிறார் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யாகிமா கானட் (Yakima Canutt) ஸ்டேஜ் கோச்சை கிட்டதட்ட சூழ்ந்து வளைத்துக் கொண்ட அப்பாச்சிகளில் ஒருவன் வண்டியின் ஆறு குதிரைகளின் மேல் குதித்து குதிரையை அவிழ்த்து வண்டியை நிறுத்த முயற்சிக்கையில், ரிங்கோ அவனைச் சுட்டு விடுகிறான். அந்த அப்பாச்சி குதிரைகளுக்குக் கீழே விழுந்தவன் கோச் வண்டியின் சக்கரங்களில் மாட்டி அரைபட்டுச் சாகிறான் இந்த பயங்கர சாகஸ ஸ்டண்ட் புரிந்தவர் ஸ்டண்மாஸ்டர் யாகிமா கானட். கானட்டே அப்பாச்சி வேடத்தில் நடித்தார். அதற்குள் அரசு சிப்பாய்கள் வரவும் அப்பாச்சிகள் ஓடிவிடுகிறார்கள். வண்டி ஊரையடைகிறது. மீண்டும் ஒரு கலவர நிலை. ரிங்கோ கிட், பிளம்மரைக் கொன்று பழி தீர்த்த கையோடு டல்லஸ்ஸின் கையைப் பிடிக்கிறான். நான்கு ஆஸ்கர் விருதுகளோடு ஜான் ஃபோர்டையும் ஜான் வைனையும் முக்கியமானவர்களாக்கிற்று ஸ்டேஜ்கோச். அந்த அழகிய பள்ளத் தாக்கில் ஜான் ஃபோர்டு படமாக்கிய முதல் படமும் இன்றுள்ள ஸ்டேஜ் கோச்தான். இன்றுள்ள மார்டின் ஸ்கார்சீஸ், ஜார்ஜ் லூகாஸ், ஸ்பீல்பெர்க் ஆகிய ஹாலிவுட் மேதைகள் ஜான்ஃபோர்டு தங்களை பாதித்தவர் என்கிறார்கள்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About American Director John Ford Classic Movies. Adaptation, Dubbed Movies தொடர் 15: பயாஸ்கோப்காரன் | ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

1956-ல் ஜான் ஃபோர்டு எடுத்த அற்புதமான படம், செர்ச்சர்ஸ் (The Searchers). இந்த வண்ணப்படத்தில் அரைஸோனாவின் பிரம்மாண்ட மலைப் பள்ளத்தாக்கு பல கோணங்களில் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஜான் வைன் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். தனது சகோதரியின் குடும்பத்தினர் முழுவதையும் கொன்று வீட்டையும் கொளுத்திவிட்டு ஒரேயொரு சின்ன பெண் குழந்தையை மட்டும் தூக்கிச் சென்று விட்ட மூர்க்கமான அப்பாச்சிகளைத் தேடி ஐந்து வருடம் அலைந்து கடைசியாகக் கண்டு பிடிக்கிறார். அப்பாச்சித் தலைவனைக் கொன்று வளர்ந்த நிலையிலுள்ள சகோதரியின் மகளை மீட்டுக் கொணர்வது கதை. பல கோணங்களில் சிறப்பு மிக்கப் படம்.

ஜான் ஃபோர்டின் Sergeant Rutwge, Grapes of wrath, Donnovans Reet, Mogambo, How Green was my Valley ஆகிய படங்கள் அற்புதமானவை. மொகேம்போவில் பழம்பெரு நடிகர் கிளார்க் கேபுள், ஆவா கார்டனர் ஆகியோர் நடித்தது. ஜான் வைன் நடித்த ஹட்டாரி எனும் வன விலங்குகளைப் பிடித்து சர்க்கசுக்கும் மிருகக் காட்சி சாலை கட்கும் விற்கும் குழுவைப் பற்றிய படத்துக்கு முன்னோடிப் படம் மொகேம்போ சார்ஜண்ட் ரடீலஜ், உள்நாட்டுப் போரின்போது ரட்லஜ் எனும் கருப்பின சார்ஜெண்ட் வெள்ளையினப் பெண்ணை கெடுத்தான் என்ற குற்றச்சாட்டையடுத்து நீதி விசாரணைப் பற்றிய படம். ரட்லஜ்ஜாக கருப்பு நடிகர் வூடி ஸ்ட்ரோட் (Woody Strode) சிறப்பாக செய்திருக்கிறார். கிரேப்ஸ் ஆஃப் ராத், ஜான் ஃபோர்டு கலையழகோடு படமாக்கி ஆஸ்கர் பரிசு பெற்றார். எனது பள்ளத்தாக்கு எவ்வளவு பசுமையானது என்ற படமும் அவரது கலை மேன்மையைச் சொல்லும் படம்.

(தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்



தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்