Kalaiyin Kavithaigal 2 கலையின் கவிதைகள் 2

கலையின் கவிதைகள்




அலையும் நுரையும்
****************************
தன்னிடம் வரும்
எல்லோரையும் தலைக் குப்புற அடித்தாவது குளிக்க
வைத்து விடுகிறது
ஆனால் தான் மட்டும்
எந்நாளும் அரைகுறையாகவே
குளித்துக் கொண்டு இருக்கிறது கரை
எப்போதும்
தலையில் நுரை…

*****************************
கொலை செய்யப்பட்ட
நெற்கதிர்களுக்குத்தான்
எவ்வளவு உயர்ந்த கொள்கை
உடல் உள்ளவர்களின்
உயிர் காக்க
உயிரற்று காக்கிறது… மனிதர்களுக்குத்தான் இல்லை
அதன் மேல் கருணை
வெறும் கழிவாக மிதித்து
மேலே மேலே
ஏறிக்கொண்டு இருக்கிறார்கள் கட்டிடத்தில்!