Posted inPoetry
ஆயுதம் கவிதை – சாந்தி சரவணன்
மலர்களை பறிக்க
கைவிரல்கள் ஆயுதமாகின்றன
காய்கறி வெட்ட
கத்தி ஆயுதமாகின்றன
மரத்தை வெட்ட
கோடாளி ஆயுதமாகின்றன.
ஆனால்
மனதை குத்தி கொதர
உறவுகளை கத்திரிக்க
ஒரு “வார்த்தை’ ஆயுதமாகிறது.
“வார்த்தை” என்னும்
கொடிய ஆயுதத்தால்
முட்காடாய் மறுவுகிறது
மனம்..
“வார்த்தை” என்னும்
சொல் ஆயுதத்தை
அம்பாக எய்தி
உறவுகளை, நடப்புகளை
வாழ்நாள் முழுவதும்
நடை பிணமாக நடமாடவிடுகிறது.
தீயாக வார்த்தையை
உமிழ்ந்து
இதயத்தை
காயப்படுத்திவிடுகிறது.
இனியாவது
‘வார்த்தையை”
வசைப்பாட சுமக்காமல்
ரீங்காரமாய்
வார்த்தையின் தித்திப்பு
மனதை வசியம் செய்து
வசந்தத்தை வீசி
வாழ்க்கையை வசப்படுத்தி
உறவின் நட்பின்
சங்கிலியை அன்பால்
பிணைக்கட்டும்!