தொடர் 45 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் தமிழில் – தங்கேஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியரின்
ரோமியோ ஜுலியட்
முன்னுரை
கோரஸ்
அழகிய வெரோனோ நகரம் , அங்கே ஆரம்பிக்கிறது இந்த காதல் கதை. ..இரண்டு உயர்ந்த குடும்பங்கள். இரண்டுமே சகலத்திலும் சரி சமமானவை..ஆனால் ஆதியிலிருந்தே அவைகளுக்குள் தீராப்பகை. பழைய பகை புதிய கலவரத்தில் கலவரத்தில் முடிகிறது- இரத்த ஆறு ஓடுகிறது. விளைவு மனிதர்கள் சக மனிதர்களின் இரத்தத்தினால் தங்கள் கரங்களை கறைபடுத்திக்கொள்கிறார்கள்
இந்த இரண்டு எதிரிகளின் குடும்பத்திலிருந்தும் இரண்டு அப்பாவி குழந்தைகள். ஆனால் அதிர்ஷ்டமற்றவர்கள்.ரோமியோ ஜுலியட் … கள்ளம் .கபடமற்ற காதலர்கள் . விதி அவர்களின் வாழ்வில் காதலாக விளையாடுகிறது. அவர்களை காதலிக்க வைத்த அதே காதலின் விதி தான் இறுதியில் அவர்களை மரணிக்கவும் வைக்கிறது. தங்கள் குழந்தைகள் தங்களின் பகைமைக்கு பலியானதை கண்ட பிறகு பெற்றோர்கள் தங்கள் தீராப் பகையை குழிதோண்டி புதைக்கிறார்கள்.
இரண்டு மணி நேரங்கள் அந்த அதிர்ஷ்டமற்ற காதலர்கள் இந்த மேடையில் தோன்றி தங்கள் காதலை அரங்கேற்றப் போகிறார்கள்..
அவர்களின் காதலை எது ஒன்றும் தடுக்கப்போவதில்லை அவர்களின் மரணத்தை தவிர.
இரண்டு மணி நேரங்கள் நீங்கள் பொறுமையாக இந்த மேடையில் அந்தக் காதலர்களை கவனித்தால் இங்கே நாங்கள் அவர்களைப் பற்றி சொன்னது எது ஒன்றையும் நீங்கள் தவறவிடப்போவதில்லை என்று உறுதியளிக்கிறேன்.
மூலம் ; வில்லியம் ஷேக்ஸ்பியரின்
மொழியாக்கம் ; தங்கேஸ்
( தொடரும் )