சட்டை பொத்தான்கள் பெண்களுக்கு இடதுபுறத்திலும், ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?
நீங்கள் எப்போதாவது ஷர்ட்களை துவைக்கும் போதே அல்லது இஸ்திரி செய்யும் போது பெண்களின் சட்டையில் பொத்தான்கள் (பட்டன்) இடது பக்கத்தில் அல்லது ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலதுபுறத்தில் இருப்பதைக் கவனித்திருப்போம். அது ஏன் என்று கேள்விக்குப் பதில் நாம் யோசித்துக் கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் நம்மை நீண்ட தூரம் நம்மை அழைத்துச் செல்கிறது.
நீண்ட காலத்திற்கு முன்பு, உடைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைப் பாலினம் தான் தீர்மானித்தது. இப்போது யுனிசெக்ஸ் ஃபேஷன் மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இனி பெண்களுக்கு பேன்ட் அல்லது ஆண்களுக்குப் பாவாடை போன்ற ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தைத் தீர்மானிக்க முடியாது. இவை இப்படி இருப்பினும், சட்டைகளுக்கு வரும்போது, பொத்தான்களின் வேறுபாடு மட்டும் இன்னும் தொடர்கிறது. நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதைக் கவனியுங்கள். அது சரி, இந்த வேறுபாட்டிற்கு என்று எந்த நடைமுறை காரணமும் இல்லை, ஆனால் 1850களில் இருந்து அதையே பரிந்துரைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. வாருங்கள் சற்று உள்நோக்கி கவனிப்போம். பொத்தான்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடிவமைக்கப்பட்டது. அப்போது தான் பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போது பொத்தான்கள் எல்லோர் ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.
அந்த காலத்தில் ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் உடுத்தும் ஆடைகள் பல அடக்கு ஆடையே பயன்படுத்தினர். மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் எனப் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தினார் . அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளைப் பணிப் பெண்கள் தான் பொத்தான்களைப் பூட்டுவதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
நாம் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாகக் குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் நிலவியது.
ஆனால் ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் குறிப்பிடுகையில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளிலும் ஆண்கள் வேலைக்காரர்களால் ஆடை அணிந்திருப்பார்கள். இதற்கிடையில், 18 ஆம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன, 1860க்கு பிறகுதான் பெண்களுக்குப் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது – குறைந்தது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பணிப்பெண்கள்/வேலைக்காரர்கள் இத்தகைய பணிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஏன் உயர் வர்க்க மக்கள் வேலைக்காரர்களுக்காக ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது இன்றும் கேள்வியே?
ஆனால் ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயத்தங்களைக் கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படிக் கையாளும் போது சட்டையில் உள்ள வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்த சௌகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை.
நெப்போலியன் கோட்பாட்டின் படி பெண்கள் பலர் பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட்டின் கை-இடுப்பு போஸ்டை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரின் அந்த போஸ் கண்ணியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனை அறிந்த பேரரசு நெப்போலியன் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும் படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் பெண்கள் கேலிக்கூத்தாகப் பார்க்கமுடியாது என்பது அவரின் கோட்பாடு. தனி ஒருவரின் தேவைக்காக ஓட்டு மொத்த பெண்களின் ஆடையிலும் தனது வெறுப்பைச் செலுத்துவது எவ்விதமான பாகுபாட்டை வலியுறுத்தி இருக்கிறார் என்பது புரிகிறது.
அதையும் கடந்து ஒரு விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும் போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும் போது காற்று அவர்களில் மேல் பாய்வதைக் குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து எளிய மக்களும் ,உயர் தட்டு மக்களின் ஆடையையே விரும்பினர். அப்போதெல்லாம் பொத்தான்கள் விலைமதிப்புமிக்கதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும் விலைமதிப்புமிக்கவை இடது புறம் இருக்க வேண்டும் என எண்ணினர். அதன் நீட்சியே ஆண்களின் சட்டையிலும் பெண்களின் சட்டையிலும் பொத்தான்கள் நிரந்தரமாக வலதிலும் இடதிலும் இடம்பெற்றது .
ஆடையில் பாலின சமத்துவம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894 இல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தைக் குறைப்பதாக இருந்திருக்கூடம் என்கிறார். எனவே ஆண்களை விடப் பெண்கள் குறைவானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
மற்றொரு கோட்பாடு என்ன வலியுறுத்துகிறது என்றால் பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ-டு காட்டு: பேன்ட்) கடன் வாங்குவதும், உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர். எவ்வாறாயினும், மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும் என்கிறார்.
பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாடின் ஒரு அடையாளம். யார் யாரே சிந்தனையில், அடுக்கு முறையில் பெண்களின் ஆடையிலும் தொடர்ந்த இருக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் இன்று காலம் மாறி வருகிறது. அதன் வடிவமே பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளைக் கையில் எடுத்திருக்கிறது. அவை ஆண்களைப் போன்றே சட்டையில் பொத்தான்கள் வலது பக்கத்தில் வைக்க உந்துகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சிந்துஜா சுந்தர்ராஜ்