அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      பெண் விடுதலைக்கு அடித்தளம் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் விலங்கினங்களை விட மோசமான அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸார் மன்னர் பரம்பரை ஆண்களும், பிரபுத்துவ வர்க்க ஆண்களும், தங்கள் குடும்பப்…
Sindhuja Sundaraj Poems சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்

சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்




ஜனநாயக நாட்டில்
**************************
புலம்பெயர் தொழிலாளர்களின்
புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும்
கேட்கிறது
உயரற்ற உடல்களாய்
ஊர் திரும்புகையில்
உடல் மட்டுமே ஊரையடைந்தது
உறவுகளைத் தேடி
உயிர் பிரிந்தது
இந்த ஜனநாயக நாட்டில்………

உரிமைக்குரல்
*******************
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றோம்
எட்டு மணி நேர வேலை என்றோம்
குழந்தைகள் கூலித்தொழிலாளியில்லை என்றோம்
ஆண் பெண் சமம் என்றோம்
சுரண்டலே கூடாது என்றோம்
இவையனைத்தும் உழைப்பாளர் உரிமை என்றோம்
அமைப்பாய் திரண்டோம் சிகாகோவின்
ஹேமார்க்ககெட் சிவந்தது
“உழைப்பாளர் தினம் “ உரிமை பிறந்தது
“உலகமயமாக்கல் சூழ்நிலையில்
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”
நோயும்,பேயும் (முதலாளித்துவம்) ,
பசியும்,பட்டினியும்
நம்மை துரத்துகிறது
நாம் நெடும்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது
முழங்குவோம்
வாழ்க மே தினம்! வளர்க்க தொழிலாளர் ஒற்றுமை
ஓங்குக மே தின தியாகிகள் புகழ்………

பசி எனும் பிணி
*********************
வருவதும் போவதுமாய் இருந்த
வாழ்கையில்
அழையா விருந்தாளியாய் வந்தது
இந்த நோய்
அரசாங்கம் அழைத்து கொடுத்தது
கையில் தட்டை
முன்பு சாப்பிட்ட மீச்சமிதியை
தேடிகொண்டிருந்ததோம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
ஆனால்
வயிறு மட்டும்
வாய் திறக்கிறது
பசி பசி பசி
என்று சொல்லிக்கொண்டே………

வேண்டாம் சா(தீ) மனிதநேயம்
************************************
சா(தீ) என்னும் தீயெடுத்து
செங்கழலில் அவளையிட்டு
அவளின் அழுகுரலில்
ஒய்யாரமாய் குளிர்காயும்
உங்ககளை தீயும் கூட
தீண்டமறுக்கும்
காரி உமிழும்
உங்களின் சாதீ
என்னும் சாக்கடையில்
தீயும் தற்கொலை செய்யும்
இந்த மனிநேயமற்ற காட்டுமிரண்டிகளிடமிருந்து……

ஒட்டு அரசியல்
******************
காலம் கடந்து காத்திருந்தோம்
கையில் மையிட்டு
எதிர்காலம் எதுவென்று நினைத்து
காலம் காட்டியது
காலணி இல்லாமல்
கால்நடை பயணம்
நிகழ்காலம் எதுவென்று சொல்லி
பசி ,பரிவு
வறுமை, வலி
துயர், தூக்கம்
அழுகை, ஆற்றுமை
இவையனைத்தும் பாலைவனமானது
எங்கள் பாதங்களில்
வாழ்க பாரதம்…..

விசாரணை
***************
உதிரம் கொட்ட இருவரின்
உடல் உதிரகண்டேன்
அதிகாரம் ஆட்கொண்டு
ஆளக்கண்டடேன்
ஆயிரம் ஆயிரம்
வலிகள் வலியகண்டேன்
வாய்திற என்று உள்ளம்
சொன்னது
வீதிக்கு சென்று உண்மையை
சொல் என்றுது
கணவன் கரம்பிடித்து
மகளின் விருப்பமறிந்து
எழுந்தேன் ரேவதி என்ற
ஒன்றை ஆடையாளமாய்
நின்றேன் ரேவதீயாய்……..

விவசாயின் குரல்
**********************
சட்டமென்று இயற்றி
கையில் கொடுத்து
பரிசு என்றாய்
அது பரிசு அல்ல
பாதகம் என்று
எழுந்து நின்ற கால்களை
உதைத்து சென்றாய்
தடுப்பனைகள் போட்டு
தடுக்க நினைத்து
தடுப்புகள் அடுப்புகளானது
நெடுஞ்சாலைகள் உழுது
எங்களை பதுங்கு குழியில்
அடைக்க சொன்னாய்
மண்ணிற்கு பிரசவம் பார்த்த
மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்
இதோ
உன் பதங்கு குழிகளின் மேல்
பாலமைத்து
புறப்படுகிறோம்
பார்லிமென்ட் நோக்கி……….

நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய
கைகள்
இன்றைக்கு உங்களின் லத்தியை
கையாள்கிறது
வானம் பார்த்தே விவசாயம் செய்து பழகிய
கண்கள்
இன்றைக்க் கண்ணீர்புகைக்குண்டுகளை
பார்க்கிறது
குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே
பழகிய காதுகள்
இன்றைக்கு தண்ணீர் பீரங்கியால்
காதுகளை துலைக்கிறது
வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய
கருணை
இன்றைக்கு வீதியிலிறங்கி கையேந்துகிறது
சட்டம் நீதியை மட்டுமே தரும் என்று
நம்பிருந்த எங்களுக்கு
கார்ப்ரேட்க்கு மட்டுமே
சேவகம் செய்யும் என்பதை உணர்த்துகிறது
போராட்டம் எங்கள் விதை எங்களுக்கு
கற்றுத் தந்த பாடம்
கட்டாயம் மீண்டு எழுவோம் விதையிலிருந்து செடிகளாக……

ஏன் என்று கேள்வி
எல்லோருகம் எங்களிடத்தில்
வயக்காட்டில் கோதுமை
விளையவில்லை என்று
வீதிக்கு வரவில்லை
கையில் கலப்பை தவிர
உழவேறு எந்த ஆயுதமில்லை
வயலருகே கருவேலம்
வளர தொடங்கியது அது
வேளாண் பாதுகாப்பல்ல
வேலிப்போல தோன்றும் விஷம்
உறைப்பனி, கடுங்குளிர்
கொட்டிய மழை
திட்டிய அரசு
இனி
சுட்டெரிக்கும் வெயிலென
போரடிக்கொண்டியிருக்கிறோம்
போர்களத்தில் நின்றல்ல
எம் நாடு
எம் மக்களிடம்
செவிமடுத்து கேளுங்கள்
பகத்சிங் பிடித்த
செங்கொடி பிடித்து
செங்கொடி ஊன்றி
வருகிறோம்
புரட்சி பாதையில்
சுதந்திர இந்தியாவின்
மிக நீண்டப்போரட்டம்
நடத்தி
கருவேலம்(வேளாண் சட்டம்) எங்கள்
காவலுக்கு தேவையில்லை
என்ற உரிமைக்குரலோடு……
100வதுநாள்
விவசாயின்குரல்

நல்ல இதயம் புன்னகைகட்டும்
************************************
நல்ல இதயம் பூங்காவாகட்டும்
நல்ல இதயம் வேராகட்டும்
நல்ல வார்த்தை பூக்களாகட்டும்
நல்ல செயல்கள் பழங்களாகட்டும்
பட்டாம்பூச்சியாய் சிறக்க
வானம் கேட்கவில்லை
பயந்து நின்றே
பள்ளங்கள் புதைக்குழியானது
இனி புதைகுழி மீது பூக்கும்
புன்னகைக்கட்டும் சிறார்களின்
சிரிப்புகளில்……

பெண் கல்வி
****************
தோட்டாக்கள் என்னை
துளைத்தபோதும்
என் பேனாவின் முனை
உங்களின் மூளைக்குள்
சென்று
கேட்டுகொண்டேயிருக்கும்
பெண் கல்வி என்னும்
முழக்கத்தோடு……

நிறவெறி
*************
எங்கள் நிறம் கொண்டு
உங்கள் அதிகாரம்
எங்கள் மீது பாய்கிறது
நிற வெறியால்
“கான்ட் பரீத்” என்று
நான் சொல்லியது
உங்கள் காதுகளில்
விழவில்லை
ஆனால் இன்றோ
எல்லோர் காதிலும்
விழுகிறது
என் மூச்சுத் துடிப்பின்
“லப் டப்”
நமது உரிமையக்காக
எழுந்து நின்று
போராடுங்கள் என்கிறது…..

அதிகாரம்
*************
உழைப்பாளியின் வலியறியாத
நீங்கள் எங்கள் வாசல் வந்து
கேட்ட பிச்சை
நீங்கள் வைத்திருக்கும்
இந்த அரசாங்கம்
காலம் வரும்
உங்கள் அதிகாரம்
வீழும்……

ஜிகாத்
*********
கொடுமைமிகு நாட்டுகளிலும்
கண்ணியம் காப்பது ஜிகாத்
கடமையொன்றே கண்ணாக களம்
காண்பது ஜிகாத்
பொறுப்போடு பெற்றோருக்கு
பெருமை சேர்ப்பது ஜிகாத்
பொருத்தாலும் மனிதம் போற்றி
மறத்தலும் ஜிகாத்
கால்கடுக்க காதங்கள் பல கடந்து
நீதிக்கு போர் ஜிகாத்
மதமறியாது ,குலமறியாது
மொழியறியாது, இனமறியாது
மனதை பிணைத்தவாறு
அணைத்து கொள்வது ஜிகாத்
அன்பை அள்ளி தெளிப்பது
லவ் ஜிகாத்……..

கருத்து சுதந்திரம்
***********************
கருத்து சுதந்திரம் பேசும்
மக்களின் மொழியாய்
பாமரனின் எழுத்தாய்

கருத்து சுதந்திரம் பேசும்
கேள்விகள் அனலாய்
மதியின் முகமாய்

கருத்து சுதந்திரம் பேசும்
அதிகாரத்தை எதிர்த்து
எங்கள் குரல்கள் நசுக்கப்படுமாயின்
ஆயிரம் ஆயிரம் குரல்கள்
கூக்குரலிடும்
உண்மையை
உடைப்பதற்கு

கருத்து சுதந்திரம் பேசும்
ஊடகத்தின் வழியாய்
மக்களின் முகமாய்
ஊடகவியலாளர்களாய்
உண்மை
எழுதுகோலில் மையாகட்டும்………

எங்கள் குடியுரிமை
************************
கறைப்பட்ட கைகள்
கரம் நீட்டிக்கேட்கிறது
குடிமக்கள் யாருயென்று?
புண்பட்ட நெஞ்சம்
புலம்பலோடு சொல்கிறது

ரத்தம் சிந்தி
யுத்தம் புரிந்தோம்
பிரிவினை இல்லையென்று
மதம் என்னும் கொடாளி கொண்டு
வெட்டப்பட்டது
தொப்புள் கொடி உறவு
எங்கள் குடியுரிமையும்
எங்கள் அடையாளமும்…….

புத்தாண்டு பிறக்கட்டும்
*****************************
ஆஸ்திரிய காடுகள்
அழிந்தன
விலங்குகள் கலங்கின
எரிமலை வெடித்தது
என்குமியிர்கள் மாய்ந்தன
கிருமிகள் கால் பதித்தன
காலமின்றி காலம் பதில் சொல்கிறது
புலம்பெயர் தொழிலார்களின் புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும் செப்ப்பனிகின்றது
கறுப்பின கொலை நிகழ்ந்தது
உலகம் கொதித்து எழுந்தது
கால்பந்து நாயகன்
களம் காணாது மண்ணில் போனது
விவசாயிகள் வீதியிலிறங்கி
போரட்டங்கள் நிகழ்கின்றன
என் உலகம் முழுதும்
துயர்கள் சுழ்ந்தன
பூமி புன்னைகக்க
புத்தாண்டு பிறக்கட்டும்
இப்படிக்கு காலம்

சட்டமும் சுற்றுச்சுழலும்
****************************
தென்றல் தடுப்பனையால் நிற்பதுயில்லை
அலைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாது
பெய்யும் மழை நதியின் ஓட்டத்திற்கு காத்திருக்காது
விடியும் கதிரவன் வெப்பத்தை காணாது
கானகம் விலங்குகளின் குடாரம்
கிளையமைப்புரு கலைந்தனவே பேராசைப் பெருந்தீனியர்
கணமும் காத்திருக்காது
கடைசி மரம் காணமல் போகும் வரை
கடைசி நீர்த்துளி விஷமாகும் வரை
கடைசி மூச்சுக்காற்று நச்சுயாகும் வரை
கடலில் கடைசி மீன் பிடிக்கும் வரை
கணப்பொழுது தாமதிக்காமல்
இயற்கை அன்னையின்
ஆற்றல் அறிந்தவர்கள் நாம்
விழித்தெழு சவக்கிடங்கில் சொர்க்கம் ஒருபோதும் மலரது……….

நிறம் மாறும் மனிதிர்கள்
அலைகள் இல்லா கடற்கரைகள்
எதிரொலிக்காத மலை முகடுகள்
ஈரமில்ல்லாத பாறைகள்
அழகாய் தோன்றும் புதைக்குழிகள்
இயன்றவரை உதவாத உள்ளங்கள்
பசுமையை பிரசிவிக்கும் –கார்புகனிகள்
நறுமணம் வீசும் நச்சுமலர்கள்
விண்ணிலிருந்து விழும் குண்டுமழைகள்
இப்படி நிறம் மாறும் மனிதர்கள்
பச்சோந்தியின் விசுவரூபங்கள்…..

ஆம் போர் நடக்கிறது
**************************
துயருள்ளம் துடித்திடர் தூக்கிலிடும்
போர் நடக்கிறது
காயமுற்ற கால்கள் கானகத்திலிடும்
வன்மம் நடக்கிறது
பட்டினிக்கு மக்கள் பலியிடும்
கொலைதொழியில் நடக்கிறது
கண்கள் பார்த்துகொண்டு
தான் இருக்கும்
காதுகள் கேட்டுக்கொண்டு தான்
வாய் மட்டும் பேசாது எதிர்வினையாற்ற
ஊமையாய் ஊடகம்
ஊமையாய் ஊமையாய்
எம் மக்கள்…….

பெருந்தொற்று
*******************
பெருந்தொற்றுக்கு
ஏது சாதி, மதம்
விலகி
இருப்பதில்லை
மனிதனிடம்
வீதியெங்கும்
பிணக்குவியல்
சுவாசிக்கும்
காற்றும்
சுவாச மற்றுப்போகிறது
வான் உயர்ந்த
சிலைகளுக்கு
இடமிருக்குமிடத்தில்
உயிருடனிருக்க
ஒரு படுக்கையில்லை
மாத்திரை மருந்து
மந்திரிகளுக்கு மட்டும்
மரணபடுக்கையில்
எண்ணற்ற உயிர்கள்
ஏன் என்று
கேட்க
நாத்தியற்றவர்களை
நடுத்தெருவில்
புலம்பல்
இன்னொரு
பொது முடக்கம்
பட்டினியை
காட்டவிருகிறது
ஆனால்
அங்கோ காட்டமாய்
கூட்டமாய்
தேர்தல் பரப்புரை
கும்பமேளாவில்
குளியல்
ஏதுமற்றவர்களாய்
நாளும்
இந் நாட்டில்….

சிவப்பு சிந்தனையில்
*************************
சிவப்பு சிந்தனையில்
உதித்தது
சுதந்திரம் சுய உரிமையென
பதிந்தது
இயக்கங்கள் இயக்கியது
நேர்மைக்கு மட்டுமே
தலைவாங்குயென்று
போராட்டங்கள் , புரட்சிகள்
வீதியெங்கும் வழிந்தோடும்
உழைப்பவனின் உரிமையென்று
முதுமை ஒருபோதும்
முடக்கியது இல்லை
போராடி பெற்ற
சுதந்திரத்தை பாதுகாக்கவும்
போராட்டம் தேவைப்படுகிறது
இன்றைய சுழலில்……..

மாதவிடாய்
***************
மாதம் மாதம்
மாதவிடாய்
மங்கை இவள்
தீட்டுனால்
மானுட பிறப்பும்
தீட்டே…
மாதத்தில் வரும்
மூன்று நாட்டுகளுக்கு
முற்றத்தை
முடுடுபவனும்
முடனே…
மாதம் மாதம்
முதுகுதண்டு
முச்சுயிரைக்கிறது
உதிர்ந்த உதிரம்
உடுத்ததுணி
கந்தலும் கிழிச்சலுமே
மங்கையின் உடல்
மாற்றம்
எப்படி
மனிநேயமற்றோக்கு
தீட்டாகிறது தெரியவில்லை?