மகளிர் தின சிறப்பு கவிதை Women's Day Special Poem

கவிதை: மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் வெள்ளைத்தாளும் ஒரு நிமிடம் பலவர்ணம் கொண்டது_ஏனோ “பெண் “ என்ற தலைப்பை பார்த்ததும்… ஆரவாரம் இல்லாமல் வந்து விட்டோம் அழகான கருவறையின் முதல் வீட்டை விட்டு மழலையாய்த் தவழ்ந்தோம், பேதையாய்ப் பள்ளிக்குச் சென்றோம்,பெதும்பையாய் வளர்ந்து விட்டோம்… சற்று பொறுங்கள்,சட்டப் படிப்போ,…
மகளிர் தின சிறப்பு கவிதை: ஆடவனும் காரிகையே…

மகளிர் தின சிறப்பு கவிதை: ஆடவனும் காரிகையே…

ஆடவனும் காரிகையே... கரு சுமந்தவள் தாயாக இருக்கலாம்.. வளர்ந்த பின்னும் அவள் பிள்ளையும் சேர்த்து மனதில் சுமப்பவன் அப்பன். சோறாக்கி அன்பு ஊட்டி இருக்கலாம் அக்காள்... தவறு செய்யும் போது குட்டு வைத்து கட்டிக் கொள்பவன் சோதரன்.. பக்கம் பக்கமாக காதல்…
மார்ச் 8 மகளிர் தினம் (March 8 Women's Day)

“மார்ச் 8 மகளிர் தினம்” கொண்டாடத்தான் வேண்டுமா?

  எட்டுதானே முடிந்தது. முடித்துவிட்டீர்களே, வாசலில் விளையாடிய மகளை மரணவாசலுக்கு அனுப்பிவிட்டீர்களே அரும்பிய சிறகை முறித்து குரலெடுத்தவளின் குரவலைய நெரித்துவிட்டீர்களே அய்யோ ஐந்து படிக்கும் முன் இத்தனை பாடுகளா? எப்படித் துடித்தாளோ ‌ கொடூரக்கார்களே கருவில் தப்பியவள் உருவாகி வருமுன் உருக்குலைத்துவிட்டீர்களே…
பெண் – அன்றும், இன்றும் – அத்தியாயம் 1- நர்மதா தேவி, சிபிஐ(எம்)

பெண் – அன்றும், இன்றும் – அத்தியாயம் 1- நர்மதா தேவி, சிபிஐ(எம்)



பெண் – அன்றும், இன்றும் – அத்தியாயம் 1

‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த தமிழ்நாடு அரசின் அறி
விப்பு, பொதுமக்கள் மத்தியிலும், வல்லுநர்கள் மத்தியிலும்
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
பாஜகவின் ஒன்றிய அரசால் நவதாராளமயக் கொள்கைகள்
அசுரவேகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் காலம் இது. கார்
ப்பரேட்டுகள் கொள்ளை லாபத்தில் கொழுக்க வேண்டும் எ
ன்பதற்காகத் தொழிலாளர்கள், விவசாயிகள் கொடூரமாக சுர
ண்டப்பட்டு வருகிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்புகள் மிக
மோசமாகக் குறைந்துவிட்டன. உழைக்கும் மக்கள் மாதம் பத்
தாயிரம் ரூபாய்கூட குறைந்தபட்ச வருமானமாகப் பெற முடி
யாத சூழல்தான் இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. ஒன்றிய
அரசின் தவறான வரிக்கொள்கைகளாலும், விலைவாசி ஏற்
றத்தாலும் மக்கள் முதுகொடிந்து போயிருக்கிறார்கள். சமை
யல் உருளை விலை 1150 ரூபாயைத் தொடுகிறது. இவ்வளவு
மோசமான பொருளாதாரச் சூழலில்,
‘2023 செப்டம்பர் முதல் ஒரு கோடிப் பெண்களுக்கு ஒவ்வொ
ரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தமிழ்நாடு
அரசின் அறிவிப்பு பேசுபொருளானது.
இந்தத் திட்டம் குறித்து 27.3.2023 அன்று சட்டசபையில் முதல்
வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கம் முக்கியமானது.
”பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தா
ய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்க
ளுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண்
ஒருவரின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி,
உடல்நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும் வீட்டிலும்,
வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள்
உழைத்திருப்பார்கள்?

அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம்
நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெ
ண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும்.
இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்
பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொ
கைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால் ஆண்

களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சம
உரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் எ
ன்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்ட
த்திற்கு ‘மகளிருக்கான உதவித் தொகை’ என்று இல்லாமல் ‘
மகளிர் உரிமைத் தொகை’என்று கவனத்துடன் பெயரிடப்பட்
டிருக்கிறது” என்பது முதல்வர் அளித்த விளக்கம்.
‘சபாஷ்! பரவாயில்லையே மிகச்சிறப்பான திட்டமா இருக்கே!
சமூக உழைப்பில் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்ப
டாத பெண்களின் வீட்டு உழைப்பைப் பற்றியெல்லாம் ஒரு
அரசாங்கம் சிந்திக்கிறதே!’ நாம் கைதட்டிப் பாராட்டிக்கொண்
டிருக்கும் போதே, நமது நம்பிக்கையில் அணுகுண்டு வீசப்ப
டுகிறது. தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தின் 65-
ஏ சட்டத்திருத்தம் வருகிறது. பெண்களின் உழைப்பைப் பற்
றியெல்லாம் கவலைப்பட்ட அதே திமுக அரசாங்கம்தான்,
12 மணி நேர வேலை என்கிற அடிமைமுறைக்குச் சட்ட அங்கீ
காரம் தரப்பார்க்கிறது.
சமூக உற்பத்தி, வளங்களை உருவாக்குவதில் உழைப்பின்
பாத்திரம், உழைப்பில் பெண்களின் பங்கு, இவற்றைப் பற்றி
யெல்லாம் முறையான, சரியான புரிதல் இல்லாமல், வெறும்
சட்டங்களை இயற்றிப் பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பது
இயலாது. இதுதான் வரலாறு நமக்கு உணர்த்துகிற பாடம்.

மாட்டைவிட அதிகம் வேலை செய்யும் பெண்கள்
”இமயமலை கிராமங்களில் ஒரு ஜோடி உழவுமாடுகள் சராசரி
யாக ஓர் ஆண்டில் 1064 மணிநேரங்கள் வேலை செய்கின்றன
; ஓர் ஆண் 1212 மணிநேரங்கள் வேலை செய்கிறார்; ஒரு பெ
ண் 3485 மணிநேரம் வேலை பார்க்கிறார்” எனக் காங்கிரஸ் த
லைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால
த்தில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட ’விவசாயத்தில்
பெண்கள்’ என்ற ஓர் ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.
வழக்கமாக அதிகமாக வேலைசெய்பவர்களைப் பார்த்து,
’மாடு மாதிரி பொழுதுக்கும் வேலை செய்கிறாயே!’ என்போம்.
ஆனால் மாட்டைவிடப் பெண்கள் அதிகமாக வேலை செய்
கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட மகளிர் ஆணைய அ
றிக்கை நமக்கு உணர்த்துகிறது. ஆண்டுக்கு 3485 மணிநேரங்
கள் என்றால், ஒரு நாளைக்கு ஒன்பதரை மணிநேரம் வருகி
றது. இந்தக் கணக்கை நமது வீட்டுப் பெண்களிடம் சொன்
னால்,
‘என்னது, ஒரு நாளைக்கு வெறும் ஒன்பதரை மணி நேரமா?
மிகக் குறைவா சொல்றீங்களே! நானெல்லாம் சர்வசாதாரண
மா 10, 12 மணிநேரம் உழைக்கிறேனே!’ எனச் சொல்வார்கள்.
வேண்டுமானால், நமது குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்
குடும்ப வேலைகள் என்ற ’போர்வையில்’ ஒரு நாளைக்கு எ
ன்னென்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு நேரம் வேலை
செய்கிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாக ஒரு வாரம் நாம்
பதிவுசெய்து பார்ப்போம். நிச்சயம் 10,
12 மணிநேரங்களைத் தொடும் என இப்போதே நாம் எதிர்பார்
க்கலாம். வீட்டை, வீட்டுப்புறத்தைச் சுத்தம் செய்வது, தண்ணீ
ர் கொண்டுவருவது, சமையல் செய்வது, பாத்திரங்கள் கழுவு
வது, வேலைக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய அனைத்தை
யும் உறுதிசெய்வது, குழந்தைகள், வயதானவர்களைப் பராம
ரிப்பது என வீடு, குடும்பம் சார்ந்த அனைத்து வேலைகளை
யும் – ஒரு நாள், இரண்டுநாள் அல்ல, வாழ்நாள் முழுவதும் –
அதாவது சாகும்வரை பெண்கள் செய்துகொண்டிருக்கிறார்க
ள்.

ஆண்கள் செய்யும் குடும்ப, வீட்டு வேலைகள் என்னென்ன?
வெளியே கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவருவது
, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று கூட்டிவரு
வது. இவை போன்ற ஒரு சில வேலைகள்தான் பொதுவாக
குடும்பத்தில் ஆண்கள் செய்யும் வேலைகளாக இருக்கின்ற
ன. விதிவிலக்குகளாக வீட்டுவேலைகளில் ஆண்கள் சமமா
பங்கெடுத்துக்கொள்வது என்பது ஒரு சில குடும்பங்களில் ந
டக்கலாம். ஆனால், வீட்டு வேலைகள் முழுமையும் பெண்க
ள் மீது மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது.
வெந்நீர்கூட வைக்கத் தெரியாத ஆண்கள்
ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் நான் பணிபுரிந்த காலத்தி
ல், உடன்பணியாற்றிய ஆண் ஊடகவியலாளர் ஒருவர்,
“எனக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது; எங்கள் வீட்டில் எ
னது அம்மாவும் தங்கையும்தான் எல்லாவற்றையும் பார்த்து
க்கொள்வார்கள்” என அடிக்கடி பெருமைபீற்றிக் கொண்டிரு
ந்தார். எனக்கு ஒரு கட்டத்தில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு
, “எனக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது என ஆண்கள்
சொல்கிறார்களே! பெண்கள் என்ன கர்ப்பப்பையைக் கொ
ண்டா சமைக்கிறார்கள்? ஆண்கள் உட்பட கைகள் இருப்பவ
ர்கள் அனைவரும் சமையல் வேலை செய்யலாமே! சமைப்ப
தற்குக் கர்ப்பப்பை ஒன்றும் தேவையில்லையே!” என முகநூ
ல் பதிவு ஒன்று போட்டுவிட்டேன். அந்தப் பதிவைப் பார்த்த
அந்த நண்பர் ஏன் இப்படிக் கடுமையாக நடந்துகொண்டீர்க
ள் என என்னிடம் வந்து முறையிட்டார்.
பொதுவாகவே ‘வீட்டு வேலைகள் எதையும் ஆண்கள் செய்ய
த் தேவையில்லை. ஓர் எஜமானன் போல தங்களுக்குக் கிடை
க்கும் பணிவிடைகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் அ
னுபவிக்கலாம்’ என்ற சலுகை நமது சமூகத்தில் ஆண்களுக்
கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் ஒடுக்கப்பட்டு, சாதிப்படிநிலையில் கீழ்நிலையில்
வைக்கப்பட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களிலும், ஆ
ண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக, தங்களுக்கு இடப்பட்ட ப

ணிகளைச் செய்யும் அடிமைகளாகவே பெண்கள் இருக்கிறா
ர்கள். கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளர் பெண்க
ளின் வலியான வாழ்க்கையை, கவிஞர் இளம்பிறையின் அ
ல்லு பகல் எனும் கவிதை உணர்த்தும்:
”அல்லு பகல் உழைப்பவள
அடிக்கக் கைய நீட்டாதய்யா
சீக்கிரமா சமச்சித்தாரேன்
’சிடு சிடு’னு பேசாதய்யா

கஞ்சி கொஞ்சம் ஊத்திக் கிட்டுக்
கதிரறுக்கப் போகும் போது
கோழிகூட கூவுதில்ல
கொடுமையை நான் என்ன சொல்ல

கொட்டுற பனியில
குனிந்து அறுக்கையில்
அடிவயிறும் நடுங்குதய்யா
ஆரிடத்தில் இதைச் சொல்ல

களத்துல கட்டுடைத்துக்
கச்சிதமா நெல் உதிர்த்து
காத்துவரும் நேரம் பாத்து
தூத்தி முடிக்கு முன்னே
கண்ணில் விழுந்த தூசு
முன்னெடுக்க நேரமேது?  அட
ஒன்னுக்கு இருக்கக் கூட
ஒழிகிறதில்ல நேரமய்யா

கொட்டி குமிஞ்ச நெல்லில்
கொடுத்தக்கூலி வாங்கிக்கிட்டு
குறுகலான வரப்பு வழி
கூலி நெல்லத்தூக்கிகிட்டு
எட்டு அடிவச்சும்
எட்டு மணி ஆகுதய்யா

பச்ச வெறகு பத்த நேரமாகுதய்யா
கண்ணு கலங்குதய்யா

கை நீட்ட நியாய முண்டா
…”
பெண்கள் செய்யும் வீட்டுவேலைகள் அவர்கள் சார்ந்த வர்க்
கங்களைப் பொறுத்து வேறுபடும். என்றாலும், உழைத்தால்
தான் சாப்பாடு என்கிற நிலையில் உள்ள பாட்டாளி வர்க்கப்
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்ய வேண்டிய
வீட்டுப்பணிகள் என்பது மற்ற பெண்களுக்கு இருப்பதைக்
காட்டிலும் மிக அதிகம். அதுவும் பொருளாதார நெருக்கடி தீ
விரமடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், கேஸ் அடுப்பு
களையே பயன்படுத்த முடியாத நிலைக்கு கிராமப்புறக் விவ
சாயக் கூலித்தொழிலாளர் வர்க்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இ
ந்த வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில், விறகு, சாணம் சேக
ரித்து எப்படியாவது அடுப்பெரித்து குடும்பத்தினருக்கான உ
ணவை உறுதிசெய்ய வேண்டிய கடமை பெண்கள் மீதே சுமத்
தப்பட்டிருக்கிறது.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வீட்டு வேலை, பணியிட
த்தில் வேலை என இருமடங்கு வேலை. சென்னையில் வே
லைக்குப் போகும் பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கு
ம் நேரத்தில் கீரைக்கட்டுகளை வாங்கி மறுநாள் சமைப்பதற்
கு ஏதுவாக ஆய்ந்துகொண்டே பயணிப்பதைக் காணலாம்.
இத்தகைய காட்சிகளில் ஆண்களைப் பார்க்கவே முடியாது.
’இதிலென்ன அங்கலாய்ப்பு வேண்டிக்கிடக்கிறது? இதுதானே
நமது சமூக வழக்கம்!’ என வெகு இயல்பாக எடுத்துக்கொண்
டு, பெண்களின் குடும்ப உழைப்பு சுமை குறித்த எந்தவித வி
மர்சனங்களும், குற்ற உணர்வுகளும் இல்லாமல் நாம் பயணி
க்கிறோம்.
ஒரு சில பெண்கள் விழிப்படைந்து,
’என்னால் மாடுமாதிரி பொழுதுக்கும் வேலை செய்ய முடியா
து!’ என உரிமைக்குரல் எழுப்பினால், இந்திய நீதிமன்றங்கள்
கூட,’நோ வே! அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக்கூடாது. பெ
ண்களின் கடமை வீட்டைப் பராமரிப்பது, வீட்டு வேலைகள்
செய்வது. ஒழுங்குமரியாதையாக எந்தப் புகாரும் இல்லாமல்

வீட்டு வேலைகளைச் செய்து சிறந்த அடிமைகளாக இருங்க
ள்!’ என நிர்ப்பந்திக்கின்றன.
மும்பை உயர்நீதிமன்றத்தின் அகமதாபாத் கிளை, கணவர்
வீட்டில் ஒரு பெண் அனுபவித்த கொடுமைகள் தொடர்பான
வழக்கில் (Sarang Diwakar Amle & Others. v. State of
Maharashtra) அதிர்ச்சிக்கும், கண்டனத்துக்கும் உரிய கருத்துக
ளை தெரிவித்திருந்தது.
“திருமணமான ஒரு பெண் குடும்பத்திற்காக வீட்டுவேலைக
ளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதை, அவர் வேலை
க்காரி போல நடத்தப்படுகிறார் என்றெல்லாம் சொல்லக்கூடா
து.
‘நான் குடும்ப வேலைகளைச் செய்யமாட்டேன்’ என அந்தப்
பெண் திருமணத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால், அந்தப்
பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமா, வேண்டாமா எ
ன்பதை அந்த ஆண் முடிவுசெய்திருப்பார் அல்லவா?” என நீ
திபதிகள் ‘அறிவார்ந்த’ கருத்துகளைத் தெரிவித்திருந்தார்க
ள். பெண்கள் மீதான பாரபட்சங்களை ஒழித்து, பாலினச் சம
த்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள ஓர் அரசு
இயந்திரம்தான் நீதிமன்றங்கள். ஆனால், சட்டம் தெரிந்த நீதி
பதிகளுக்கே குடும்பத்தில் பெண்கள் வரைமுறையின்றி அடி
மைகள்போல வேலைவாங்கப்படுவது என்பது சுரண்டல்
முறை என்கிற பார்வை இல்லை. திருமணத்திற்கு முன்னிப
ந்தனையே பெண் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்ய
வேண்டும் என்பதுதான் என நீதிபதிகளே வலியுறுத்துகிறார்
கள். இதுதான் சமூகத்தின் எதார்த்த நிலை.
பெண் எப்படி அடிமையானாள்?
’குடும்ப வேலைகள் அனைத்தையும் பெண்கள் இடுப்பொடி
யச் செய்ய வேண்டும்; இதுதான் விதி!’ என்பதைச் சமூகம் நீ
ண்டகாலம் முன்பே விதித்துவிட்டது. இப்படியான நிலைக்கு
என்ன காரணம்?
மனிதச் சமூகத்தில் எந்தக் கட்டத்தில், இப்படியான நியாயமற்
ற நியதிகள் உருவாகின? அல்லது உருவாக்கப்பட்டன? இது

வரை பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலை குறித்து மேற்கொள்
ளப்பட்ட மானுடவியல் ஆய்வுகளிலேயே அறிவியல்பூர்வமா
ன ஆய்வாக, எங்கெல்ஸின் ”குடும்பம் தனிச்சொத்து அரசு
ஆகியவற்றின் தோற்றம்” நூல் விளங்குகிறது. பெண்ணடி
மைத்தனத்தின் வேர்களை ஆய்வு செய்யும் இந்த மார்க்சிய
ஆய்வே நமக்குச் சரியான, தெளிவான, உண்மையான விளக்
கத்தைத் தருகிறது. மார்க்சியவாதிகள் அல்லாத பெண்ணிய
வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் ஆய்வாக இந்நூல் திகழ்கிறது
.
’மனிதச் சமூகத்தில் வர்க்க
சமுதாயம் தோன்றியபோது, அதோடு இணைந்து பெண்ணடி
மை முறையும் தோன்றியது’ இதுதான் இந்நூல் தெரிவிக்கிற
அடிப்படை உண்மை. வர்க்க
சமுதாயம் மற்றும் பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தை எ
ங்கெல்ஸ் மூலமாக அடுத்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

-தொடரும்…

Kanavugal Meipadattum Book By Ramadevi Rathinasami Bookreview By Kamalalayan நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் - கமலாலயன்

நூல் அறிமுகம்: ரமாதேவி ரத்தினசாமியின் கனவுகள் மெய்ப்படட்டும் – கமலாலயன்




“வரலாறு நெடுக, பெயரற்றவர் ஒரு பெண்ணே” [Throughout History, anonymous was a woman] என்ற மேற்கோள், இப்புத்தகத்தின் அணிந்துரையில் காணப்படுகிறது. எழுதியிருப்பவர், வரலாற்று ஆய்வாளரான நிவேதிதா லூயிஸ்.

“பெண்கள் எழுதவும் தொடங்கிவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரியது. அப்படி என்ன எழுதி விட்டார்கள்? அவர்களைப் பற்றி அவர்களே எழுதுகிறார்கள். அதுதான் மகிழ்ச்சிக்குரியது.” வாழ்த்துரையில் தோழர் க. பாலபாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார். மேனாள் சட்டமன்ற உறுப்பினராகப் புகழ் பெற்ற பாலபாரதி, ஒரு சிறந்த கவிதாயினியும் கூட. அவர் இப்புத்தகம் எதைப் பற்றியது என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்குரியது: “பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள், வடிவமைப்பில் அழகோடும், நேர்த்தியோடும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன… இந்நூலின் ஆசிரியர் ரமாதேவி, ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்பதைக் கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கிறேன்…”

கனவுகள் அதிலும் குறிப்பாக நல்ல கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றே நாமனைவரும் விரும்புகிறோம். வெறும் விருப்பம் மட்டும் போதுமானதாயிருப்பதில்லை; அது நிறைவேற கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றன. பெண்கள் எப்படியெல்லாம் வரலாற்றில் தமது சாதாரண விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூலின் கட்டுரைகள் அழுத்தமாக விவரிக்கின்றன.

“வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட பெயர்கள் பெண்களுடையவை. பெண்கள் நடந்து வந்த தடங்கள் கவனமாக நீக்கப்பட்டன. பெண்களுக்கென தனி வரலாறு பதிவு செய்யப்படவே இல்லை” – என்று ரமாதேவி ஓர் இடத்தில் எழுதிச் செல்லுகிறார். இதை மேற்கோள் காட்டுகிற நிவேதிதா லூயிஸ், பண்டைய எகிப்து நாகரிகத்தின் இரண்டாவது பெண் ஃபாரோவாக ஆட்சி செய்திருந்த ஹஷப்சுட்டின் வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறுகிறார். அவள் மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட அரசி. அவள் இறந்த சில வருடங்களிலேயே அவளுடைய சிலைகளுக்கு தாடியும் மீசையும் வரையப்பட்டு அவள்   அவனாக மாற்றப்பட்டாளாம்! 5000 ஆண்டுகள் கழித்து, அகஸ்டா மாரியட் என்ற ஆய்வாளர், சமூகம் மறந்த ஹஷப்சுட்டை, அவளுடைய வரலாற்றை மீட்டெடுத்து, உலகின் முன் கொண்டு வந்திருக்கிறார்!

ஆசிரியர் ரமாதேவி, தன் ‘மனத்திலிருந்து…’ ஒரு விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். தன்னை வளர்த்தெடுத்து, தன்னம்பிக்கையூட்டிய ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ எனும் பேரியக்கத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். “சிறு வட்டத்திற்குள் இருந்த என்னைக் , கைப்பற்றி அழைத்து வந்து, இப் பெரு உலகை, உலகெங்கும் வாழும் பெண்களை, அவர்களின் கடினமான வாழ்வியல் சூழலை அறிந்துகொள்ள” வைத்தது ஆசிரியர் இயக்கமே என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ரமாதேவி.

நூலில் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கனவுகள் மெய்ப்படட்டும், மனைவியின் கனவுகளைக் கேட்டுப் பாருங்கள், சமையலறை ஒரு சிறை, இது என்ன சமூக நீதி, No Means No, சுயம் தொலைக்கும் அம்மாக்கள், ஆணின் சர்வரோக நிவாரணி, ஓ… ரெண்டாங் கல்யாணமா?, உழைப்பாளர் சிலையில் பெண் எங்கே?, அவனால் முடியுமெனில், அவளால் ஏன் முடியாது?, வீடு என்னும் வன்முறைக் களம், பெண்ணுக்கு வேண்டும் பேச்சுரிமை, கற்பைப் பொதுவில் வைப்போம், வரதட்சணையும் சீர்வரிசையும், இலட்சுமண ரேகைகள், பெண் என்னும் பேராற்றல் – ஆகியவை.

கட்டுரைகளின் தலைப்புகளே அவற்றின் உள்ளடக்கத்தையும் பளிச்செனப் புலப்படுத்திவிடக்கூடியவை. தான் முன் வைக்கும் கருத்துகளை நிறுவுவதற்குரிய தரவுகளையும், எடுத்துக்காட்டுகளையும், மேற்கோள்களையும் தேவையான இடங்களில் தந்திருக்கிறார். புள்ளி விவரங்களும் இடம்பெற்று இவர் கூறும் கருத்துகளின் உண்மைத்தன்மைக்கு சான்றளிக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் விவரங்களைக் காணலாம்:

“இந்தியக் குழந்தைகளுள் 53% குழநதைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள். இங்கு நடைபெறும் திருமணங்களுள் 45% திருமணங்கள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகழ்கின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 7.14 கோடி பெண்கள் தனித்து வாழ்வதாகத் தரவுகள் கூறுகின்றன.”

சங்கப் பாடல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட மரபுவழி இலக்கியங்களையும் எடுத்துக்காட்டுகளாக மேற்கோள் இடுகிறார். சினிமா வசனங்களை, வடிவேலு நகைச்சுவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், வாசிக்கும் வாசகரின் மனதில் எளிமையாகப் பதியச் செய்கிறார்.

ஆசிரியராகவும், தொழிற்சங்க நிர்வாகியாகவும் ஏராளமான அனுபவங்கள் பெற்றிருக்கிறார் என்பதை கட்டுரைகள் விவரிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர்- இப்படியான பொறுப்புகளையும் வகிப்பதால் பல்வேறு நாடுகளிலும் ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப் போன்ற பன்னாட்டு அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இவ்வாறான பன்முகத் தன்மைகளின் அடித்தளம் ஆழமானது. சிறுவயது முதலே, இவர் விரும்பியதைப் படிக்கவும், இயங்கவும் பெருவெளி அமைத்துத் தந்திருக்கிறார் இவருடைய அன்னையார் மாலதி. “என் அம்மாவெனும் சிநேகிதிக்கு இந்நூலை சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்கிறார் ரமாதேவி.

மகளை வளர்த்து ஆளாக்குகிற, ஒரு தாயின் பங்கு எப்படியிருக்க வேண்டும் என்பது இது ஒரு சான்றாகலாம்…!

‘எத்தனையெத்தனை இயற்கைப் பேரழிவுகள் புரட்டி எடுத்து அழிவுக்குள்ளாக்கிய போதும், பூமி தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. அதுபோலவே எத்தனை துயர்கள் வந்தாலும், குடும்பம் – சமூகம் – அரசியல் – பொருளாதாரம் – எல்லாமும் சூறாவளியாய்ச் சுழற்றி வீசினாலும்கூட, மன வலிமை என்ற ஒற்றை அஸ்திரம் தாங்கி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க வாழ்வைத் தன் வசப்படுத்தி விடுகிறார் பெண்’ – என்று நிறுவுகிறார் ஆசிரியர். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற கனவுகளை நனவாக்க அவள் நடத்தும் போராட்டத்தை, இக்கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கின்றன.

“தினம் தினம் உன் கனவு நோக்கிப் பற. பறக்க முடியாவிட்டால் ஓடு. ஓட முடியாவிட்டால் நட. நடக்கவும் இயலாவிட்டால் ஊர்ந்தாகிலும் செல்” என்ற சீனப் பழமொழியைப் பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ளார்.

“பெண்கள் ஒரு துறையில் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட்டால், வழக்கமான ‘பெண் வாழ்க்கை’யைத் தியாகம் செய்தால்தான் முடியும். ஆண் தன் இலக்கு நோக்கி முன்னேறும்போது, ஒட்டுமொத்த குடும்பமும் கை கொடுக்கிறது; ஆனால் பெண் உயரே பறக்க ஆசைப்பட்டால்…?” – இக்கேள்விக்கான விடையை ஆசிரியர் தந்திருக்கிறார்; வலி மிகுந்த வரிகளில் அதை வாசிக்கும்போதுதான் அவற்றின் ஆழத்தை உணர முடியும். சற்றே நேரம் ஒதுக்கி அவரவர் வீட்டில் மனைவியரின் கனவுகளை கேட்டுப் பாருங்கள் என்கிறார் ரமாதேவி.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) எழுதியவற்றுள் மிகவும் புகழ் பெற்ற கதை. ‘சமையலறை ஒரு சிறை’ என்ற கட்டுரையின் மூலம், மேற்கண்ட கதையை உயிர்ப்புடன் அறிமுகம் செய்கிறார்.

“விதவிதமாய்ச் சமைத்தாலும் தனக்கான உணவை அவள் ஒருபோதும் நிதானமாய் ருசித்ததில்லை ; அவளது கோபங்களும், புலம்பல்களும், கண்ணீர்களும் சமையலறைச் சுவர்கள் மட்டுமே அறிந்திருப்பவை. அவள் கனவுகள் கடுகுகளைப் போல வெடித்து, பின் கருகிப்போய் விடுகின்றன. அம்பையின் சிறுகதை நாயகியின் கையை முகர்ந்து பார்த்து மருமகள் வியக்கிறாள்: “இந்தக் கையில்தான் எத்தனை நூற்றாண்டு கால சமையல் மணம்?” – ஆம்; மூவாயிரம் ஆண்டுகளாய் அடுக்களையில் பூட்டி வைத்துள்ள கனவுகள் மட்டுமே அவளிடம்…” – அவர்கள் பூட்டி வைத்திருக்கும் கனவுகளைத் திறக்கவல்ல சாவி ஆண்களாகிய நம்மிடம்தான் என்கிறார் கட்டுரையாளர்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும்: “எனில், ஆணின் உதவியிருந்தால்தான் பெண்ணின் கனவுகள் நனவாகுமா?” – இதற்கு மற்றொரு கட்டுரையில் மறுமொழி கிடைக்கிறது: “அன்று தாய்வழிச் சமூகத்தில் காடுகளை அளந்த பாதங்கள் இன்று உலகையே அளக்க விரும்பும்போது, மலை போல் வரும் தடைகளை இடது கையால் தூக்கி எறிந்து, தன் கனவுகளில் கால் பதிக்க அவளால் முடியும். ஆனால் விட்டுக்கொடுத்தலே பெண்ணிற்கான அறம் என போதிக்கப்பட்டிருப்பதால், தன் கனவுகளை விட்டுக்கொடுத்து தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கட்டுண்டு கிடப்பவள் வேறு யாரோ அல்ல. உங்களின் அம்மா, மனைவி, சகோதரி, மகள் – யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்…”

‘No Means No’ – கட்டுரை இன்று பொதுவெளியில் அநேகமாக தினமும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் தொடர்பானது: பள்ளிக் குழந்தைகளாக ஆசிரியர்களை நம்பி பள்ளிகளுக்குப் போகிற பெண்கள் – சின்னஞ்சிறுமிகள் – சில ஆசிரியர்களாலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு அவல நிலைக்குள்ளாகி வரும் சூழல் பற்றிய சிந்தனைகள் நிரம்பியது. பெண்களைத் தாயாக, பூமியாக, தெய்வமாக கொண்டாடும் தேசம் இது என்று பீற்றிக்கொள்வதில் குறைச்சலில்லை. ஆனால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது போதாதென்று, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்யப்படவும் விதிக்கப்பட்டுள்ள அபலைக் குழந்தைகளுக்கு ஏது நீதி?

குழந்தைத் திருமணங்கள் குறித்த கட்டுரை நம் நெஞ்சங்களில் கூரிய ஈட்டியெனப் பாயும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது: ‘பெங்களூரில், 15 வயதே நிரம்பிய தன் பேத்திக்கு திருமணம் செய்ய மகன் முயல்வதை எதிர்த்தார் என்பதற்காக, தந்தையென்றும் பாராமல் மகனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான்!; ‘உலக அளவில் மூன்று விநாடிகளுக்கொருமுறை ‘குழந்தைத் திருமணம்’ ஒன்று நடைபெறுகிறது. அவற்றில், மூன்றில் ஒரு திருமணம் நம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த விஷயத்தில், உலக நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது! இம்மாதிரியான பல செய்திகள், ஆதாரங்களுடன் அணிவகுத்துத் தொடர்கின்றன…

பாலியல் கொடுமைகள் நடக்கும் போதெல்லாம், “பெண்கள்தாம் கவனமாக இருக்க வேண்டும்; அகால நேரங்களில் இவர்கள் ஏன் தனியாகப் போனார்கள்? கண்களைக் கவரும்படியான கவர்ச்சிகரமான உடைகளுடன் அடக்கமில்லாமல் பொது இடங்களில் திரிந்தால், இப்படித்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்…” என்று பாதிக்கப்பட்ட பெண்களையே பொறுப்பாளிகளாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவே ஒட்டு மொத்த சமூகத்தின் அணுகுமுறையும் இருக்கிறது. அரசு, நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் – எல்லாத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டோரைக் குற்றம் சாட்டியே விரல்கள் நீள்கின்றன… இந்த அணுகுமுறை மாறினால் ஒழிய, ஆண்களின் நடத்தையும் மாறாது என்று சுட்டிக்காட்டுகிறார் ரமாதேவி: 

“ஆண் குழந்தைகளின் சிறகுகளைத் தடவிக்கொடுத்து, அழகு பார்த்து, ஊட்டமளித்து வளர்க்கும் அம்மாக்கள், பெண் குழந்தைகளுக்கு சிறகுகள் வளர அனுமதிப்பதேயில்லை. இந்நிலை மாற வேண்டும்…” “பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியவுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் அறிவுரைகள் கூறும் நாம், அதே வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை சக மனுஷிகளாய் நேசிக்கக் கற்றுத் தருவோம். அவர்களது உணர்வுகளை நேர்படுத்துவோம். வீரம் மட்டுமே ஆணுக்கான அழகல்ல; ஒழுக்கமும் ஆண்மையே என்பதை உணர வைப்போம்” 

– சமூகத்தின் பொதுப்புத்தியும், அணுகுமுறையும் இந்த விஷயத்தில் அடியோடு மாறினால் ஒழிய பெண்களைப் பற்றிய ஆண்களின் கண்ணோட்டம் மாறாது. ரமாதேவியின் இந்த நூல் அளவில் சிறியது. ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் கூர்வாளாகத் திகழ்கிறது. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், ‘உயிருடன் இருப்பதே வாழ்க்கை’ என நாம் நிறைவடைந்து நின்று விடுகிறோம். மாறாக, “உயிர்ப்புடன் இருப்பதே வாழ்வின் அடையாளம்” என்று நிறுவுகிறது இந்த நூல்.

“ஒவ்வொரு கட்டுரையின் நிறைவிலும் ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ என்ற சொற்றொடருடன் முடிக்கிறார், ரமாதேவி. வாசித்து முடித்ததும் உங்கள் மனதில் ‘ஆமென்’ – அப்படியே ஆகட்டும் என்ற சொற்கள் தோன்றுமானால், அது இந்த நூலின், ஆசிரியரின் வெற்றி” என்று நிவேதிதா லூயில் அணிந்துரைத்துள்ளார். ‘ஆமென்!’

நூல்: கனவுகள் மெய்ப்படட்டும்
வெளியீடு: சுவடு பதிப்பகம்,
மு.ப. 2021 – 11.104;
ரூ.100/-
எண்: 142, வேளச்சேரி, முதன்மைச் சாலை, பூண்டி பஜார், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600 059.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் ‘புல்லி பாய்’ செயலி – மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு



Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு
மரியம் தவாலே, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளர்

‘சுல்லி டீல்ஸ்’ செயலிக்குப் பிறகு இப்போது மிகவும் இழிவான ‘புல்லி பாய்’ செயலி முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களுக்குள் நுழைந்துள்ளது. குற்றவாளிகள் மீது ஆறு மாதங்களுக்கு முன்பாக முதல் சம்பவத்தின் போதே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருந்தால், இப்போது சமீபத்தில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று பெண் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஐந்து பெண்கள் அமைப்புகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன. அதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளரான மரியம் தவாலே டெக்கான் ஹெரால்டின் ஷெமின் ஜாயிடம் உரையாடினார்.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கசப்பான செய்தியுடன் இந்தப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இப்போது ‘புல்லி பாய்’ என்ற செயலியை நாம் காண்கிறோம். இந்தச் செயலி ‘சுல்லி டீல்ஸ்’ பிரச்சனை ஓய்ந்த சில மாதங்களிலேயே வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அநீதிக்கு எதிராக, தங்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரலை உயர்த்தி வருகின்ற துணிச்சலான சிறுபான்மைப் பெண்களை அச்சுறுத்துவதாக, கலவரப்படுத்துவதாகவே அது இருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் இந்த வகையான அரசியல் சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்ற தந்திரங்களாக அவை இருக்கின்றன. சிறுபான்மையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பதைக் காண முடிவது இதுபோன்ற குண்டர்களை மேலும் ஊக்குவிக்கிறது.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

‘சுல்லி டீல்ஸ்’ வந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா? அதுவே ‘புல்லி பாய்’ செயலிக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு உத்வேகத்தை அளித்ததா?
முற்றிலும் சரி. முதல் தகவல் அறிக்கை பதிவானதும் இணையதளம் அல்லது செயலி முடக்கப்பட்டது என்பதே அமைச்சர் கூறிய முதல் விஷயமாக இருந்தது. அவர்கள் மீது தண்டனை அளிக்கின்ற வகையிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களைத் தொட்டு விடாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரைக் கொல்வதற்கான வெளிப்படையான அழைப்பை விடுத்த தர்ம சன்சத் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மனுவாதிகளின் கருத்துப்படி அவர்கள் தேச விரோதிகள் கிடையாது. ஆனால் அதே சமயத்தில் அநீதிக்கும், கொடுமைகளுக்கும் எதிராக குரலை உயர்த்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு எதிராகத்தான் நாம் இப்போது போராட வேண்டியுள்ளது.

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், பிரகதிஷீல் மகிளா சங்கதன், அகில இந்திய மகிளா சன்ஸ்கிருதிக் சங்கதன் (NFIW, AIDWA, AIPWA, PMS, AIMSS) ஆகிய ஐந்து பெண்கள் அமைப்புகள் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக ஓராண்டிற்குள்ளாக இரண்டாவது முறையாக பெண்கள் வெறுப்பு குறித்து உருவாகியுள்ள வெட்கக்கேடான காட்சியை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுதி வருகின்ற, போராடுகின்ற துணிச்சலான முஸ்லீம் பெண்களை அவமானப்படுத்தவும், பயமுறுத்தவுமே இதுபோன்று செய்யப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உத்தரப் பிரதேசம், தில்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச் செயல்கள் குறித்து அரசு நிர்வாகத்தின் பிரிவுகள், நீதித்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மை அவை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து வருகின்ற போக்கின் ஒரு பகுதியாகவே உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்து மதத் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தண்டனை எதுவுமின்றி இனப்படுகொலைத் தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அட்டூழியம் நடைபெற்றுள்ளது என்பதையும் நாங்கள் அந்தக் கடிதத்தில் குடியரசுத் தலைவருக்கு நினைவுபடுத்திக் காட்டியுள்ளோம்.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

சமீபத்திய நிகழ்வை சமூகத்தில் உள்ள மதச்சார்பற்ற பிரிவினரை மேலும் ஓரம் கட்டுகின்ற வலதுசாரிகளின் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆமாம். மதச்சார்பற்ற வெளியை மட்டுமல்லாது, முற்போக்கான, ஜனநாயக, மதச்சார்பற்ற விழுமியங்களை முன்னிறுத்தி நம் நாட்டில் குரல் எழுப்ப முயன்று கொண்டிருக்கும் அனைவரையும் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டமாகவே அது உள்ளது. நமது அரசியலமைப்பை தங்களுடைய ‘மனுவாதி’ முறைக்கு மாற்ற இந்த பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி விரும்புகிறது.

அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஆம். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் அடிபணிந்து செல்ல வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும், எதிராக குரல் உயர்த்தக் கூடாது.

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயதை பதினெட்டு ஆண்டுகள் என்பதிலிருந்து இருபத்தியோரு ஆண்டுகளாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த நேரத்தில் இத்தகைய தாக்குதல்கள் வந்துள்ளன. அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கிய முயற்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கி இருப்பதாக நான் கூற மாட்டேன். உண்மையில் அது ‘மனுவாதி’ கலாச்சார அமைப்பை நாட்டின் மீது திணிக்கும் பாதையை நோக்கியதாக இருக்கின்றது. ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் என்றிருக்க முடியாது என்றாலும் அது பாலினம் சார்ந்த சட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் கூறியுள்ளோம்.

பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

Bulli Bai App intimidates courageous minority womens Article By Mariam Dhawale in tamil Translated By Chandraguru தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் 'புல்லி பாய்' செயலி - மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு

அந்த திருத்தத்தில் பல சிக்கல்கள் உள்ளன. கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே அரசாங்கம் முன்வைக்கின்ற வாதங்களாக இருக்கின்றன. அந்த இரண்டு வாதங்களும் பொய்யாகவே இருக்கின்றன. சிறுமிகள், பெண்களுடைய வாழ்நாள் முழுவதற்கும் அவர்களுக்கான ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, அதே நேரத்தில் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது – குறிப்பாக குடும்பம், சமூகம், கண்காணிப்பு அமைப்புகள் அல்லது அரசாங்கத்தால் வற்புறுத்தப்படாமலும், கட்டாயப்படுத்தாமலும் திருமணம், தாய்மை குறித்து முடிவெடுக்கும் உரிமைகளை வயதுவந்த பெண்களுக்கு வழங்குவதன் மூலம் தாய், குழந்தை ஆரோக்கியம் குறித்து இருந்து வருகின்ற பிரச்சனைகளைத் திறம்பட தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

மேலும் அந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வயது வந்தவர்களுக்கிடையில் நடைபெறுவதாக இருக்கின்ற இருவரும் ஒருமித்து செய்து கொள்ளும் திருமணம் குற்றச்செயலாகி விடும் என்பதால், வயது வந்த பெண்களின் சுதந்திரம் மேலும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாது திருமண வயதை உயர்த்தி, ஒருமித்த உறவை குற்றப்படுத்திய செயலுக்காக ஒரு பையனை சிறையில் அடைப்பதற்கு நாம் எப்படி சம்மதிப்பது?

2000ஆம் ஆண்டிலிருந்து பதின்ம வயது திருமணங்கள் 51 சதவிகிதம் குறைந்திருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் வெளியான அரசு அறிக்கை, திருமணம் செய்து கொள்கின்ற சராசரி வயது 22.1 ஆண்டுகள் என்று அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ முன்கூட்டியே திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள் ஆகும்.

அப்படியென்றால் அவ்வாறான திருமணங்கள் எங்கே நடந்து கொண்டிருக்கின்றன? அவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் அடிப்படையில் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு வழி இல்லாது மிகவும் ஏழ்மையில் உழல்கின்ற மக்களாகவே இருக்கின்றார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நிதி சுதந்திரம் அடிப்படைத் தேவையாக உள்ளது. அதேசமயம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பெண்களிடையே அதிக அளவிலே வேலையின்மை நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த அரசால் அதற்கெல்லாம் தீர்வு காண முடியவில்லை. அந்தக் காரணிகள் எதையும் தீர்த்து வைக்காமல், இந்திய மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற இந்த முடிவை அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

https://www.deccanherald.com/national/bulli-bai-app-to-intimidate-the-courageous-minority-women-says-mariam-dhawale-1067727.html
நன்றி: டெக்கான் ஹெரால்டு
தமிழில்: தா.சந்திரகுரு