ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
”மறுமலர்ச்சி காணும் சிறார் இலக்கியம்”
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 9) தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திரு திண்டுக்கல் லியோனி, நிர்வாக இயக்குநர் திரு மணிகண்டன் மற்றும் இயக்குநர் நாகராஜ முருகேசன் ஆகியோரை சந்தித்து சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்திட்டம் பகிரப்பட்டது. முன்னதாக இணை இயக்குனர் திரு சங்கரசரவணன் அவர்களை சந்தித்து நிர்வாகிகளை அறிமுகம் செய்து, சங்கம் எப்படி பாடநூல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படலாம் என்று கலந்துரையாடல் நிகழ்ந்தது. பின்னர் பாடநூல் நிறுவனத்திற்கு புதிதாக நியமிகப்பட்ட திரு திண்டுக்கல் லியோனி அவர்களை சந்தித்து அறிமுகம் செய்துகொண்டு வாசிப்பின் அவசியத்தையும் பாடபுத்தகம் தாண்டி எவ்வாறான புத்தகங்கள் தேவை என்பதை சங்கம் வலியுறுத்தியது. சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விழியன், துணைத்தலைவர் சுகுமாரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இனியன், மணிகண்டன், நீதிமணி மற்றும் வெற்றிச்செழியன் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்புக்களைப் பற்றி குறிப்பிட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் விழியன் இவ்வாறு குறிப்பிட்டார் “புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு சிறார் இலக்கியம் மீது கவனம் செலுத்த கட்டளை பிறப்பித்துள்ளது மிகுந்து உற்சாகமூட்டுவதாக உள்ளது. இந்த பேரிடர் காலத்தில் எல்லாமே மெதுவாக நகர்கின்றது, ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கும்போது அவர்களுக்கு தேவையாக பாடபுத்தகம் தாண்டிய நூல்கள் துரித முறையில் தயாராகின்றன. தலைவர் லியோனியிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரிடையாக பேசும்போது சிறார் நூல்கள் சார்ந்த வேலைகளை உடனடியாக துவங்கும்படி பணித்தார் என்பதனை தெரிவித்தார். வரும் நாட்களில் இந்த நூல்களை எப்படி வடிவமைப்பது, கொண்டுவருவது ஒட்டிய கலந்துரையாடல்கள் நடக்கும்போது சங்க நிர்வாகிகளை அழைப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி, நூலகம் மற்றும் பால சாகித்ய துறையை துவங்குவது பற்றிய கோரிக்கைகளை வைக்க உள்ளோம்”