கவிதை முன்னோட்டம்: நிலவைப் பருகும் குளம் – கவிஞர் ஏகாதசி
இந்நூல் அண்ணன் அய்யப்ப மாதவனின் மதிப்புரையோடு வந்திருக்கிறது. ஹைக்கூ வகைமையில் எனக்கிது மூன்றாவது நூல். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய நூல், இதை இருவாட்சி பதிப்பகத்தின் மூலம் தோழர் பா. உதயக்கண்ணன் அவர்கள் பொங்கல் பரிசாய் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் அன்பு. சுமார் 500 கவிதைகளிலிருந்து நான், நண்பர் மா.காளிதாஸ் மற்றும் அண்ணன் அய்யப்ப மாதவன் ஆகியோர் இத்தொகுப்பிற்கான கவிதைகளைத் தேர்வு செய்தோம்!
உள்ளிருந்து சில:
போதி மலரின்
வாசம் வீசுகிறது
புடவையில் புத்தர் ஓவியம்
கிணற்றில் இறந்த அக்கா
தூர் வாரும் போது
கிடைக்கவில்லை உயிர்
குதித்து குதித்து
விளையாடுகிறது அரிசி
அம்மாவின் முறம்
எறும்புறங்கப் போதும்
புளிய மரத்தின்
ஓர் இலை நிழல்
அப்பா நட்ட விதை
மரமெல்லாம்
கை ரேகை
நூல் விரும்பும் நண்பர்கள்
தொடர்பு கொள்க:
“இருவாட்சி” பதிப்பகம்,
எண் – 41, கல்யாணம் சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை – 600011.
விலை : 100 ரூபாய்
6381357957 இந்த எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு உங்கள் முகவரியை அனுப்பினால் போதும், உங்கள் கைகளை வந்தடையும் “நிலவைப் பருகும் குளம்”. நிறைந்த அன்புடன்,
ஏகாதசி