Essential requirements for internet classroom (Monero, Titcoin And Zcash) 57 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 – சுகந்தி நாடார்



Monero, Titcoin, Zcash

இன்றைய புழக்கத்தில் இருக்கும் எண்ணியியல் முக்கியமான எண்ணியியல் செலவாணிகளின் பட்டியலில், கடைசியாக இருக்கும் மூன்று முக்கியப் பெயர்களைப் பார்ப்போம்

Monero: 

Nicolas van Saberhagen என்பவரால் 2014 உருவாக்கப்பட்ட இந்த எண்ணியியல் செலவாணி உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் பொதுப்புழக்கத்தில் அதிக இல்லை என்றாலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இருட்டு இணையம் பணமோசடி என்று எதிர்மறையான செயல்பாடுகளில் ஈடுபட்டு இருப்பவர்களிடையே அதிமாகக் பயன்படுத்தப்படுகின்றது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால் Bitcoin, Ethereum ஆகிய இரு தொழில்நுட்பங்களுக்கு அடுத்து இந்த தொழில்நுட்பத்தில் பல கணினி நிரலர்கள் பங்கு கொள்கின்றனர்.

சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடு படுவோர் பயன்படுத்தும் செலவாணி என்பதால் இதைப் புழங்குவோரின் விவரங்கள் முற்றிலுமாக மறைக்குறீயீட்டாக்கம் செய்யப்படுகிறது என்று தெரிகிறது. அதாவது Bitcoin ஐ விட மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இந்த செலவாணியைப் பயன்படுத்தும் பணப்புழக்கத்தில் ஈடுபடுபவரைப் பின்பற்றி அவரைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கவும், அளவுக்கதிகமான நிரல்களைச் சுருக்கிக் கொடுப்பதும் இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அடையாளப்படுத்தக்கூடிய தரவுக் கசிவுகளை நீக்கவும், எளிதாகத் தொழில்நுட்பத்தை மாற்ற இயலாத வகையில் நிரலமைத்தல் முறையை மாற்றவும் தேவையான நிரல் வரைமுறைகளைத் தன்னுள்ளேக் கொண்டது இந்த எண்னியியல் செலவாணி. Moneroவில் பயன்படுத்தப்படும் நிரல் வரைமுறைக்கு cryptonote என்ற தனிப்பெயரே உள்ளது.

Essential requirements for internet classroom (Monero, Titcoin And Zcash) 57 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam
Bitcoin and Monero Coin

ஆரம்பக் காலத்தில் இந்த நிரல் வரைமுறையைப் பின்பற்றி இந்த எண்ணியியல் செலவாணி உருவாக்கப்பட்டாலும் தற்போது Bitcoin நிரல் வரையும், உறைகளை வைத்தே இந்த செலவாணியும் நிரல்களால் உருவாக்கப்படுகின்றது. Stealth Addresses என்று அழைக்கப்படும் இரகசிய விலாச முறைகளையும் RingCT என்ற நிரல் முறையில் அனுப்பப்படும் பணத் தொகையின் விவரம் மறைக்கப்பட்டும் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. Stealth Addresses என்பது ஒவ்வோரு முறை பணம் பரிவர்த்தனை செய்யப்படும் போதும், மறைக்குறியீட்டாக்கம் செய்யப்பட்ட விலாசங்கள் ஒவ்வோரு முறையும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே பணப்பரிவர்த்தனை செய்யும் ஒருவரின் பிரத்தியேக விலாசமும் பொதுவிலாசமும் மாறிக் கோன்டே இருக்க வாய்ப்பு உள்ளது. Ring signature எனப்படும் ஒரு கூட்டணியின் எண்ணியியல் கையெழுத்து முறையும் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்த எண்ணியியல் செலவாணியின் p2p தொடர்பில் உள்ள மூன்று நபர்களுக்குக் குறிப்பிட்ட எண்கள் கொடுக்கப்பட்டு அந்த எண்களைக் கொண்டு அனைவரும் பணப்பரிவர்த்தனையை உறுதி செய்து கையெழுத்து இடுவர், இந்த முக்கோணக் கையெழுத்து முறையில் பயன்படுத்தும் எண்கள் தரவுப்பாளத்திலிருந்து எடுக்கப்படுகின்றது. பணப்பரிவர்த்தனையில் உள்ள விவரங்களின் இரகசியங்கள் இந்த அடுக்கடுக்கான நிரல் வரைமுறைகளால் காப்பாற்றப்படுகின்றது.

இந்த ஒரு செலவாணியை உருவாக்க ஏறத்தாழ 415 நாட்கள் தேவைப்படுகின்றது. இத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று சொல்லும் போதே எவ்வளவு கடினமான ஒரு கணிதப் புதிராக இத்தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். ஏறத்தாழ 18 மில்லியன் Moneroக்களை உருவாக்க இயலும். அதில் 90 % ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க டாலர் மதிப்பில் இதன் தற்போதைய மதிப்பு $277 ஆகும்.

Essential requirements for internet classroom (Monero, Titcoin And Zcash) 57 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam
Titcoin

Titcoin:

Edward Mansfield, Richard Allen, ஆகிய இருவர் இன்னும் ஒரு அநாமதேய நபருடன் இணைந்து இந்த செலவாணியை நியூயார்க் நகரில் 2014 ம் ஆண்டு உருவாக்கினர். இந்த எண்ணியிஅல் செலவாணியும் Moneroப் போலவே சட்டத்திற்குப்புறம்பான செயல்களில் குறிப்பாக ஆபாச படங்களை வெளியிடும் அல்லது வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. பெண்மையை ஆபாசமாகச் சித்தரிக்கும் அடையாளத்தாலும் பெயராலும் இந்த செலவாணி அறியப்படுகிறது. எண்ணியல் செலவாணி என்பது தமிழர்களின் குழுவுக்குறீயின் எண்ணியியல் வடிவம் என்பதற்கு இந்த செலவாணி ஒரு சான்றாக விளங்குகின்றது.

69,000,000 எண்ணியல் செலவாணிகள் வரை இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்க இயலும்.

Zcash:

இந்த எண்ணியல் தொழில்நுட்பமும் மேலே சொன்ன இரு தொழில்நுட்பங்களைப் போல இரகசியம் காப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் , இந்த எண்ணியியல் செலவாணியை சட்டத்திற்குப் புறம்பானவர்கள் பயன்படுத்தாமல் பொதுமக்களின் புழக்கத்தில் உள்ளது. இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை கணிதவியலாளர்களிடமிருந்து உருவாகியுள்ளது . இச்செலவாணி 2016ல் உருவாக்கப்பட்டது.

Essential requirements for internet classroom (Monero, Titcoin And Zcash) 57 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayam
Zcash

இத்தொழில்நுட்பத்தின் வழி செய்யப்பட்ட பணவரித்தனைகள் சரி பார்க்கப்பட்டாலும் பணப்பரிவர்த்தனையைச் செய்தவர் யார்? எவ்வளவு பணப்பரிவர்த்தனை செய்தார்? என்ற விவரங்களைக் கண்டு பிடிக்கவே இயலாத அளவு விவரங்கள் மறைக்குறீட்டாக்கம் செய்யப்படுகின்றன,

இந்நிரல் வரைமுறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் இரு விலாசங்கள் முதலில் மறைக்குறியிட்டாக்கம் செய்யப்பட்டு, அதன் பின் இரு விலாசங்களில் ஒரு விலாசம் பொதுவாக்கப்பட்டு, பின் மறுபடியும் இரு விலாசங்களும் மறைகுறியீட்டாக்கம் செய்ய்ப்படுகிண்றது. மேலே சொன்ன Monero போல மும்முனைக் கையெழுத்துக்கள் கொண்டு இந்தப்பணப்பரிவர்த்தனைகள் சரி பார்க்கப்படுகின்றன. இச்செலவாணியின் மொத்த அளவு 21,000,000 ஆகும், இதில் 10,028,406 செலவாணிகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இச்செலவாணிகளைக் கடைந்தெடுக்க ஒன்றே கால் நிமிடங்களே ஆகின்றது . இச்செலவாணியின் இன்றைய மதிப்பு 156 அமெரிக்கன் டாலர்கள் ஆகும்.

இதுவரை இன்றைய அளவில் புழக்கத்தில் இருக்கும் சில எண்ணியல் செலவாணிகளைப் பார்த்தோம். அடுத்ததாக சில எண்ணியியல் செலவாணி பரிவர்த்தனை மையங்களைப் பற்றிப் பார்ப்போம்

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 (எண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 50 (எண்ணியல் செலவாணி நிலைத்து இருக்க கூடிய சாத்தியக் கூறுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 51 (மறைக்குறியீட்டாக்க செலவாணியை ஒருவர் பெறுவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 52 (மறைக்குறியீட்டு செலவாணியில் walletஐப் பற்றிய விளக்கம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 53 (மறைக்குறியீட்டு செலவாணியில் wallet தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்