ச. இராஜ்குமார் ஹைக்கூ கவிதைகள்
1. மதிய உணவு இடைவேளை
பள்ளி வளாகத்தில் கூடுகின்றன
காக்கைகள் ..!
2. நதியை வளைக்கும்
தொடர் முயற்சியில்
நாணல் …!!
3. தேர் நகரும் வீதி
உடைந்த நடைவண்டியுடன்
நடைப்பயிலும் குழந்தை …!
4. நதியில் விழுந்தது இலை
கரைகளுக்கு
பஞ்சமேயில்லை …!
எழுதியவர் :
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

