அ.ஈடித் ரேனா துளிப்பாக்கள்
1
எந்நேரமும் கூரிய ஆயுதங்களுடன்
தயார் நிலையில்
சப்பாத்திக்கள்ளி
2
இதழ்கள் பட்டு
இசையாவதற்குக் காத்திருக்கிறது
குழலும் காற்றும்
3
விலை போகாத மூச்சுக்காற்று
வேதனையில்
பலூன்காரர்
4
போர் நிறுத்த வழிபாடு
நிற்கவேயில்லை
கடவுளின் அழுகுரல்
5
பள்ளி விடுமுறை
குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது
கடல்
5
பட்டாம்பூச்சிக் கனவில் இருந்து
விழித்துக் கொண்டேன்
கொசுக்கடி
6
அவளை அர்ச்சிக்க வந்த மழை
திகைத்து நின்றது
இடைஞ்சலாய் குடை
7
இறுக்கி மூடிய சர்க்கரை டப்பா
ஏமாற்றத்துடன்
எறும்புகள்
8
இப்போதும் கூட
சலனமின்றி கடக்க முடிவதில்லை
முன்னாள் காதலியின் வீடு
9
பெருநகரச் சந்தடி
கவனிக்க ஆள் இல்லை
வானவில்
எழுதியவர்:
அ.ஈடித் ரேனா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எனது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தரும் புக் டே தளத்திற்கு நன்றி
அருமை!!!