1. சிறகை விரித்து
பறக்க பழகுகிறது புத்தகம்
ஒளியில் நிழலாய்.
2. வான்நின்ற பனி விழவிழ
பணியாது மேலெழும்
தும்மல்.
3. சாலையில் இடவலாமாய்
நிலைதடுமாறும் நெகிழிக்குவளை
மது அளித்தவனுடன்.
4. கைகளின் ஈரத்தை உறிஞ்சி
தாகத்தை தீர்த்தது
எங்கோ காய்ந்துக்கிடந்த மரக்கொப்பு
5. புதையுண்ட வரலாறு
பூக்காமல் கருகியது
மெட்ரோ ரயில்!
6. சுட்டுவிரல்களின் நகக்கண்கள்
இருள் பூசி
விடியல் தேடலில்.
************
எழுதியவர்:
ச.கௌரிசங்கர்,
93, பிளாக் B , B1, ஷாலினி ரெஸிடென்சி,
ராம் நகர், 3 வது பிரதான சாலை,
பேரவள்ளூர், சென்னை-600082.
தொடர்பு எண் : +919566019183
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

