ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்
1.
வீடு திரும்பும்
வியாபாரியின் கூடையில்
மௌனமாக புல்லாங்குழல்கள்
2.
கன மழை
உதிர்ந்த இலையோடு போகிறது
கலங்கிய நதி
3.
பதறும் பட்டாம்பூச்சி
அங்குமிங்கும் துரத்துகிறது
வாலறுந்த பட்டம்
4.
அரவணைப்பில் தீபம்
வீசியெறிப்படுசிறது
அணைந்த தீக்குச்சி
5.
கைம்பெண்ணின் கூந்தல்
அடிக்கடி நடுங்குகிறது
அட்சதை பூ
6.
வழிகாட்டி மரம்
தடுமாறி நிற்கிறார்
ஆதரவற்ற முதியவர்
7.
சாலையோர வாசி
முகவரியை மாற்றுகிறது
தொடர் மழை
8.
உச்சியில் சூரியன்
விரிந்த குடையின் அடியில்
விற்காத மொட்டுகள்
9.
தாழ்ந்த பருந்து
அந்தரத்துக்கு போகிறது
அழகான கோழிக்குஞ்சு
10.
உழவர் கட்டிய வீடு
காட்சிப் பொருளாக மாறியது
கலப்பை
எழுதியவர்:
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பு. ஒவ்வொரு ஹைக்கூவும் கற்றுத்தருகிறது. படிமங்களை மனதில் உருவாக்கி விடுகின்றன.