க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்
1
வரி வரியாய்
வரிகளை வாசித்தது
சோளத்தட்டை தின்னும் மாடு
2
கிணற்றுக்குள் ஒலிக்கும்
மழைக் குருவிகளின் சப்தம்
வெளிவர மனமில்லை தவளைக்கு
3
பயணத்தின் போது
கேட்கும் சில்லறை சப்தம்
அமைதியாய் தூரத்து மலை
4
விறகு அடுப்பு
புகை ஊதும் அம்மா
வரைகிறாள் புதிய ஆகாயம்
5
மழை தூறும் போது
வாலாட்டுகிறது
நாய்க் குட்டி
6
பறந்து போகும் புறா
கிளையில் இருந்து உதிரும் இலை
நீரில் தப்பிக்கும் எறும்பு
எழுதியவர் :
க. புனிதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

