பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்
வளர்ப்பு நாய்களின்
மகிழுந்துப் பயணம்
தெரு நாய்கள் குரைப்பு
*****
வானம் பார்த்து நீந்தும்
பலவகை மீன்கள்
காத்திருக்கும் கொக்குகள்
*****
காளையின் கழுத்தில்
புண்களின் இரணங்கள்
கொத்தும் பறவைகள்
*****
தேநீர்க் கடைகள்
நிரம்பியிருக்கின்றன
நிலத் தரகர்கள் கூட்டம்
*****
பாசியுடன் படித்துறை
கவனத்துடன் கால்கள்
நனைந்த பக்தன்
எழுதியவர்:
– ஆர். எஸ். பாலகுமார்
சென்னை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அன்புடையீர் ,
வணக்கம்
நான் எழுதி அனுப்பின ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டமைக்கு நன்றி
தொடர்ந்து
எழுதுகின்றேன்,பிரசுரிக்க வேண்டுகின்றேன் .
அன்பன்.
கவிஞர் .இரா .சீ .பாலகுமார் .M .A .
சந்தோஷபுரம் …சென்னை —600073