Tamil Haiku Poems Written By RS Balakumar

ஹைக்கூ கவிதைகள்- இரா.சீ.பாலகுமார்

ஹைக்கூ கவிதைகள்- இரா.சீ.பாலகுமார்

 

  1. அடர்மழை

தெருவோரத் தேநீர் கடை

அதிக விற்பனை

2. ஓமத் திரவியங்கள்

வைகறையில் வாசம்

அக்கிரகாரத்து வீடுகளில்

3. எத்தனை சேனல்கள்

பார்த்துச் சோர்ந்துவிடும்

வயோதிகர்கள்

4. கறுத்த மாப்பிள்ளை

சிவத்த மணமகள்

சம்பிரதாயத் திருமணம்

5. உதிரி ரோஜாக்கள்

மாலையாக மாறியது

மாலைக்காரனின் நேர்த்தி

6. கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த

பெருந்தொகை கரைந்தது

மகளின் திருமணம்..

7. உலகத் தொழிலாளர்கள்

ஒன்று கூடி ஆர்ப்பரித்தனர்

மே முதல் நாள்

8. வலிகள் பறந்தன

மனைவி சுகப்பிரசவம்

சேமிப்பு தப்பியது

9. பள்ளிக்கட்டடம்

பார்க்கும் போதெல்லாம்

பழைய நினைவலைகள்

10. மேசை மேல்

காய்ந்த தேநீர்க்குவளையில்

நிரம்பும் எறும்புகள்

11. பாரம்

தூக்க முடியவில்லை

குடும்பச்சுமை.

12. ரேகைகள் காணவில்லை

பாத்திரம் தேய்ப்பவளின்

உள்ளங்கைகள்.

13. விளைச்சல் நிலத்தில்

முளைக்கும் கட்டடம்

வேளாண்மைக் கல்லூரி.

*****

 

எழுதியவர் : 

இரா .சீ .பாலகுமார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *