சாந்தி சரவணனின் ஹைக்கூ கவிதைகள் - Haiku Kavithaikal - Tamil Haiku Poetry - Shanthi Saravanan - Bookday - https://bookday.in/

சாந்தி சரவணனின் ஹைக்கூ கவிதைகள்

சாந்தி சரவணனின் ஹைக்கூ கவிதைகள்

மயங்கி கிடக்கிறது
வண்டு
மலரில் விருந்து
***

அட்சயப்பாத்திரம்
சிற்றுயிர்களின் ஆகாரம்
யானைச் சாணம்
***

சோலைக் காடுகளின்
சீரமைப்பு
யானைகளின் பயணம்
***

காடுகளின் வறட்சி
புலம் பெயர்ந்தது
வனவிலங்குகள் ஊருக்குள்
****

வனத்தில் மனிதர்கள்
ஆதிக்கம்
நாட்டில் மிருகங்கள்
****

மிதக்கும் பஞ்சு
அரவணைக்கத் துடிக்கும்
மேகமும் தென்றலும்
****

கதவுயில்லா சிறைச்சாலை
அடிமைப்பட்டு இருக்கிறது
பெண் சமூகம்
****

தென்றலின்
ஸ்பரிசம்
சுவாசிக்கும் இலைகள்

***
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
காற்றும் மழையும்
***

எழுதியவர் : 

திருமதி சாந்தி சரவணன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *