அ.ஈடித் ரேனா ஹைக்கூ கவிதைகள்
1
எந்நேரமும்
கூரிய ஆயுதங்களுடன்
தயார் நிலையில்
சப்பாத்திக்கள்ளி
2
இதழ்கள் பட்டு
இசையாவதற்கு
காத்திருக்கிறது
குழலும் காற்றும்
3
விலை போகாத
மூச்சுக்காற்று
வேதனையில்
பலூன்காரர்
4
போர் நிறுத்த வழிபாடு
நிற்கவேயில்லை
கடவுளின் அழுகுரல்
5
பள்ளி விடுமுறை
குழந்தைகளுடன் விளையாடிக்
கொண்டிருந்தது
கடல்
6
பட்டாம்பூச்சிக்
கனவில் இருந்து
விழித்துக் கொண்டேன்
கொசு கடித்ததால்
7
அவளை அர்ச்சிக்க//
வந்த மழை
திகைத்து நின்றது//
இடைஞ்சலாய் குடை
8
இறுக்கி மூடிய
சர்க்கரை டப்பா
ஏமாற்றத்துடன்
எறும்புகள்
9
இப்போதும் கூட
சலனமின்றி
கடக்க முடிவதில்லை
முன்னாள் காதலியின் வீடு
10
பெருநகரச் சந்தடி
கவனிக்க ஆள் இல்லை
வானவில்
எழுதியவர் :
அ.ஈடித் ரேனா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.