தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் *ஆளுக்கு ஒரு நூலகம்* மக்கள் சந்திப்பு இயக்கம்…!வாணியம்பாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கப்பட்டது ஆம்பூர், அக்.15 – திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் “ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம்” துவக்க விழாவை மாவட்ட தலைவர் அச்சுதன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.

Image

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.எஸ்.சுப்ரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் திரு.சி.குணசேகரன் அவர்களும், மாவட்ட பொருளாளர் செல்வி.பெ.ஜெயசுதா அவர்களும் மற்றும் திருப்பத்தூர் கோட்ட பொறுப்பாளர்களும், வாணியம்பாடி கோட்ட பொறுப்பாளர்களும், ஆம்பூர் ‌கோட்ட பொறுப்பாளர்களும் ஒன்றிய ,நகர செயலாளர்களும் பா. ராமன் சத்தியமூர்த்தி மாரிமுத்து முனிராஜ் முருகன் சபாரத்தினம் ஆகியோர் கலந்துக் கொண்டனர். குறைந்தது 1000 பேக் (Pack) இலக்காகக் கொள்ளப்பட்டது. இன்று 120 பேக்கிற்கான பணம் பெறப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பெ.ஜெயசுதா அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.