ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கிய விருது 2023 பெற்ற நாவல் “பற்சக்கரம்”.
“சோடாபுட்டி “முகப்பின் படமாக உள்ளது . பெப்சி- கோக் வருகைக்குப் பின் 100 கடைகளுக்கு.. பல திரையரங்கங்களுக்கு செல்லப்பா சோடா என்று பெயர் பெற்ற சோடா கலர் சப்ளை செய்த செல்லப்பன் வாழ்ந்து கெட்டு.. நொடித்துப்போன கதை இந்த நாவல் ..
செல்லப்பன்- ராஜம்மாள் தம்பதிக்கு மூன்று ஆண்- மூன்று பெண் குழந்தைகள்.. 100 பேருக்கு வேலை கொடுத்த முதலாளி.. நான் வேற எங்கேயும் போயி கைகட்டி வேல பாக்க மாட்டேன் ..என்று காலம் முழுவதும் கௌரவம் பேசி காலம் கடத்தும் செல்லப்பா..
சாராய பாக்கெட்டிற்கு மகன்களிடம் கூட சோடை போகிறார்..
..ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவுன்சிலர் பதவியை இழந்த.. எல்லோராலும் கவுன்சிலர் என அழைக்கப்படும் சுப்பையா ..அச்சு அசல் அரசியல்வாதிக்குரிய எல்லா இலக்கணங்களுடன் நாவல் முழுதும் நம்மோடு வருகிறார் ..நமக்கு நிறைய பாடங்களை உணர்த்துகிறார்..
நானும் எந்த வேலைக்கும் போக மாட்டேன்.. நீயும் எந்த வேலைக்கும் போய் என் கௌரவத்தை கெடுக்க கூடாது என்று ஆசிரியை ஆகும் கனவோடு திருமணம் செய்து கொண்ட மனைவி ராஜம்மாவை அடக்கி வைக்கிறார் செல்லப்பா ..ராஜம்மாள் ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்தபடி பூ கட்டுகிறார்.. அச்சகத்திற்கு அச்சு கோர்க்கும் வேலை செய்கிறார் .இறுதியில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு வெளியே செல்கிற வரை நிலைமை மாறி விடுகிறது ..
வேறு ஒருவருக்கு திருமணம் ஆகி நான்கு நாளே ஆன புதுமணப்பெண்ணை ..அழைத்துக் கொண்டு அல்லது அவளும் உடன்பட்டு வந்திட.. தன் வீட்டிற்கு வந்து ஒளிந்து கொள்கிறான் இளைய மகன் சிவக்குமார்.. பெண்ணைப் பெற்றோர், உறவினர் ,ஊர்மக்கள்& பெண்ணை இழந்துவிட்ட புது மாப்பிள்ளையின் பெற்றோர் ,உறவினர் , ஊர்மக்கள் எல்லோரும் செல்லப்பா வீட்டிற்கு வந்து பஞ்சாயத்து நடத்துகிறார்கள் ..அதில் அரசியல்வாதி சுப்பையாவின் கைங்கரியம் நம் கண்களில் நிஜமான காட்சிகளாக விரிகிறது.. முடிவில் வீடு அடமானம் போகிறது ..
மகள் ரம்யா சுமங்கலி திட்டத்தில் திருப்பூர் மாவட்ட நூல் ஆலைகளில் மூன்று வருட ஒப்பந்தத்தில் பயிற்சி என்ற பெயரில்(apprentice)வேலைக்குப் போகிறாள். முதலில் கருத்தம்பட்டியிலும் ,பின் சென்னிமலை மில்லிலும் வேலை பார்க்கிறாள். அந்த மில்களில் நடைபெறும் உழைப்பு சுரண்டலை மையமாக்கி ,..எப்படி தொழிலாளி எந்திரத்தோடு இயந்திரமாக பற்சக்கரம் ஆகிறான் (ள்)என்பதை விளக்குவதாக நாவலுக்கு “பற்சக்கரம்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது!
அந்த நூல் ஆலையின் முதலாளியின் நாடக வசனம் ..நடிப்பு.. பாச வேசம்..ஆயிரம் பிள்ளைகளுக்கு நான் அப்பாவாக இருந்து கல்யாணம் செய்து வைக்கிறேன்.. எல்லோரும் என்னை அப்பா என்று கூப்பிடுங்கள் என்று நடத்தும் கூத்து… இதையெல்லாம் சரியாகவே புரிந்து கொண்ட ரம்யா கூட …முதலாளிக்கு உதவும் சூழலுக்கு ஆளாகி விடுகிறாள் …எதனால்? எப்படி? என்பதை மிக மிக எதார்த்தமாக நாவல் நமக்கு சொல்கிறது..
முதலாளிக்கு ஏற்றவாறு என்னமாய் நடிக்கிறார்கள்ஹாஸ்டல் வார்டன்களும்.. அங்குள்ள மேஸ்திரிகளும்என்பதும் …சூப்பரான பாத்திர படைப்புகள்…
எப்பப் பார்த்தாலும் க்ரைம் நாவல் படித்துக் கொண்டு…. வேலை பார்க்கும் பெண்களை சீண்டும் பொறியாளர் கதாபாத்திரமும், ஆலைகளில் நடைபெறும் அட்டூழியங்களுக்கு ஒரு உதாரணமாய் ..
மூன்று ஆண் பிள்ளைகள்.. மூன்று பெண் குழந்தைகள் பெற்ற.. அப்பாவும் ,அம்மாவும் அவர்களால் காப்பாற்றப்பட்டார்களா?..
சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு.. அப்பா அம்மா நலிந்த நிலையில் வாழ்க்கைக்கு உதவினார்களா?
ஏன் பெண்கள் மட்டுமே சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்… ஆண் தொழிலாளர்கள் ஏன் சேர்க்கப்படுவதில்லை?..
என்று பல கேள்விகளுக்கு விடையாய் நாவல்…
உழைப்பு சுரண்டலுக்கு தோதாக யோகா.. தவம்.. அருளுரை.. மூன்று வேளை தாராளமான உணவு.. டிவி காட்சிகள்.. etc..etc.. என நம்மை ஆலைகளில் நிலவும் சுரண்டல்களை புரிந்து கொள்ள வைக்கிறது நாவல்..
குடும்பங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்கு எல்லாம் அம்மா மட்டுமே பொறுப்க்கப்படுவது ஏன்?
குடும்பங்களில் உள்ள சூழல்… நூல் ஆலைகளில் உள்ள சூழல் …சமூகத்தின் உள்ள சூழல்… என அனைத்தையுமே நன்கு உள்வாங்கி அப்படியே வர்ணித்து .. கற்பனை என்று எதையும் கூறிவிட முடியாத அளவுக்கு.. நாவலை படைத்திருக்கிறார் ஆசிரியர் தேவி!
உயிரோடு இருக்கும்போது சாதாரண சோறு கூட போடாத பிள்ளைகள்.. இறந்தபின் திதி கொண்டாடி தின்னுத்தீர்ப்பதை …திட்டித் தீர்க்கிறார் தேவி…
நாவல் ஒரு திரைப்படம் போல நமக்குள் காட்சியாய் விரிந்து நம்மையும் அதில் ஒரு பாத்திரமாய் மாற்றி விடுகிறது ..
வாசிப்பில் ஆர்வம் காட்டும் ராஜம்மா மூலம் தேவி நாவல் முழுவதும் வலம் வருகிறார் ..
மிக விறுவிறுப்பான சமூக நாவல் ..
பல. விருதுகள் பெற தகுதியானதே எழுத்தாளர் தேவியின் படைப்பு… வாழ்த்துக்கள்..
நூலின் விவரம்:
நூல்: “பற்சக்கரம்” நாவல்
நூல் ஆசிரியர்: எஸ்.தேவி
பக்கங்கள்: 230 விலை: ரூபாய் 280
எழுத்து பிரசுர வெளியீடு
நூல் அறிமுகம் எழுதியவர்:
மன்னார்குடி இரா.இயேசுதாஸ்
அறிவொளிவாசிப்பு இயக்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
