நினைவுக் கூறுகள்
நினைவுகளைக்
கூறுகளாக்கிப்
பிரித்துக் கொண்டிருக்கிறேன்..
உரசிச் சென்றவை சில..
உறுத்திக் கொன்றவை சில..
பொக்கிஷமாய்ப் பொதிந்து
வைத்தவற்றுள் சில
அழுகல் வாசனையடிக்கின்றன..
வெறுப்பாய் ஒதுக்கிய சில
மலர்ந்து மணம் வீசுகின்றன..
புரிபடாத சில
இன்னும் புதிராகவே இருக்கின்றன..
அதற்குள் புதிதாகச் சில
பிரிக்கச் சொல்லி
வரிசையில் நிற்கின்றன….
BUNCHES OF MEMORIES
I am separating
memories
into bunches.
Some had brushed past.
Some had pricked and killed.
Some of the treasured lot
stink of rot.
Some of the disliked
and discarded
are abloom,
and spreading aroma.
Some uncomprehended
remain a puzzle still.
Some new,
in the meantime,
line up
to be separated.
பாதங்களைத் தேடும் கால்கள்
வைகறைக் கனவுகளோடு
கைகோர்த்து ….
விரியும் வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளில் வரையப்பட்ட
சித்திரங்களை ரசித்து
பூத்திருக்கலாம் அந்தப் பூ.
மென்பனியில் நனைந்து
சிலிர்த்த இலைகளின்
இடையே விழுந்த ஒற்றை
ஒளியில் பட்டென விரிந்திருக்கலாம்…
ரீங்கரித்து சிறகடிக்கும்
வண்டொன்று மொட்டுக்கதவை
மெல்லத் தட்டியதால்
திறந்திருக்கலாம் அதன்
பூவிதழ்கள்…
எது எப்படியோ
நேரமறியாது பூத்து
நேர்ந்துவிட்ட கணப்பிழையில்
அகலிகையானவள் காத்துக் கிடக்கிறாள்
சாப விமோசனத்துக்காக…
பாதங்களைத் தேடி…
LEGS IN SEARCH OF FEET
Hands entwined
with dreams at dawn
that flower may have blossomed
admiring the paintings drawn
on the spread out wings
of butterflies.
It may have bloomed
instantly
in the lone spot of light
falling between leaves
bristling wet in the thin mist.
Its petals may have opened
when a bug buzzing
with its wings
gently knocked on the portals
of the bud.
Whatever it may be.
For a moment’s mistake
of having bloomed
unaware of time,
Ahalya awaits
to be released from the curse,
in search of feet.
மொழிகளற்ற உலகு
**********************
மொழிகளற்ற உலகு அது….
கடலும் அலையும்
நுரையும் மணலுமாய்
அடர்ந்த மௌனத்தில்
உதிர்ந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை எண்ணியபடி
நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணைகள்……
ஒவ்வொரு முறையும் கரையைத்
தொட்டுச் சொல்லிப் போகும்
செய்திகள்…
நீள் இரவாய் கணங்கள்
கடக்கையில்…
பிரிய மனமின்றி
வீடு திரும்பிய பின்னே
தெரிகிறது…
கடலும் என்னோடு வந்து
விட்டதென்று….
THE WORLD WITHOUT LANGUAGES
It is a world without languages…
In a thick silence
of sea and waves
and foam and sand,
conversations
taking place
while counting
falling stars….
News on the go
conveyed every time
the shore is touched…
When moments pass
as long nights
unwilling to part,
only after returning home
does it become evident
that the sea
has come along with me.
ஆங்கிலத்தில்… ஶ்ரீவத்ஸா(srivatsa)