தீராத் தீ
ஊழிக் காற்றின்
இரைச்சலில்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
பூமி…
வனமடைத்து
பெய்யும்
பெருமழைக்குள்
நனைந்து காய்கிறது
கனல் துண்டுகள்..
அகத்தினடியில்
எரிந்து கொண்டிருக்கும்
தீயின் நாக்குகளோ
தாகத்தின் வேட்கையில்.
யுகங்கடந்து
பெய்த பின்னும்
பெருநெருப்பு
அணைவதாயில்லை…
கனன்று கொண்டே
இருக்கிறது
பெண்ணுக்குள்
தீராத் தீ..
மதுரா
UNENDING FIRE
The earth is vibrating
in the sounds
of the hurricane wind.
Hot cinders
dampened by
the downpour
the forest over
are drying.
The flames
of the fire
burning inside
are in the grip of thirst.
The big fire
won’t be put out
even after
it rains for eons.
It keeps
smouldering,
the unending fire
inside the woman.
~ Srivatsa
நிகழ்தகவு
நிகழ்தகவின் வரையறைக்குள்
சிவப்போ கறுப்போ ஊதாவோ
எடுக்கப்பட்ட பந்துகளில்
தொடங்குகிறது
விதியின் விளையாட்டு…
சீட்டெடுக்கும் கிளியாகவோ
தொழுவத்தின் மாடாகவோ
ஆலயத்தின் ஆனையாகவோ
எதுவாகப் போவதென
யாருக்கும் தெரிவதில்லை…
பிணைத்த சங்கிலிகளின்
வடிவம் மட்டுமே மாற்றம்..
நவீன யுகத்தில்
ஏதொன்றின் அடிமையாக
கட்டிய கயிறுகள் அவிழ்த்த
பின்னும் பழக்கப்படுத்தப் பட்ட
தடத்திலேயே உழன்று
பாதுகாப்பாய் சுழல்கிறது
நல்லவர்களின் பூமி..
மதுரா
PROBABILITY
Within the limits of probability,
the game of providence
begins with the numbers shown
on the dice that is thrown.
Whether a card picking parrot,
cow in a barn or temple elephant,
no one knows what it will be.
The change is only in the shape
of the chains that bind.
Even after untieing the ropes
that once bound slaves
of some entity,
on familiar tracks
the world of good people
revolves safely.
~ Srivatsa
மோனத்திரையின் முன்
அமர்ந்திருக்கிறோம்
நீயும் நானும்…
நாவிலிருந்து
உதிர்ந்த சொற்கள்
ஈசலின் இறகுகளென
இறைந்து கிடக்கின்றன..
குறி பார்த்து
வீசிய சொல்லம்புகளின்
நுனியில் சொட்டிக்கொண்டிருக்கும்
குருதியின் வீச்சம்
வீடெங்கும்…
பேசக்கூடாத சொற்கள்
இருபக்கமும்
துருத்திக்கொண்டிருக்கின்றன.
முடித்து வைக்க
யாருமில்லாத நிலையில்
அசைபோட்டு பின்
சமாதானக்கொடிகள்
ஏற்றப்படலாம்…
உடையும் தருணத்துக்காகக்
காத்திருக்கும்
மௌனக் குமிழிகள்….
மதுரா
In front of a meditation screen
you and I
are seated…
Words that dropped
from the tongue
are scattered
like the wings
of flying white ants…
The stench of blood
dripping from the tips
of word-arrows
shot on targets
is all over the house…
Words not to be spoken
are jutting
from either side…
After mulling over,
with no one
in a position
to end,
flags of truce
may be hoisted…
Silent bubbles
await the instant
of bursting…
~ Srivatsa
தமிழில் மதுரா
ஆங்கிலத்தில் ஸ்ரீவத்ஸா