தமிழ்க் கவிதையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் – தமிழில்: ப்ரியா பாஸ்கரன் (ஆங்கிலத்தில்: ஸ்ரீவத்ஸா) 

இருப்பு

ஏழு மலைகள்
ஏழு கடல்கள்
ஆறு கண்டங்கள்
பனிமழை வெயில்
இரவு பகல்
அனைத்தும் நம்மைப்
பிரித்து வைத்திருக்கின்றன
என்கிறாய்

எண்ணங்களின் அதிர்வலைகள்
இதயத் துடிப்புகள்
மௌன மொழிகள்
தொலைபேசிக் கம்பிகள்
அன்பின் அணுக்கங்கள்
நம்மைச் சேர்த்து
வைத்திருக்கின்றன
என்கிறேன்.

ப்ரியா பாஸ்கரன்

PRESENT

Seven hills,
seven seas,
six continents,
snow, rain, sun,
night and day
have all
kept us apart
you say.

The vibrating waves
of thoughts,
heart beats,
silent words,
telephone lines
and the closeness of love
have brought us together
I say.

~Sri 1221 :: 25122020 :: Noida

In English –  Sri N Srivatsa