தமிழ்க் கவிதையும் ஆங்கில மொழியாக்கமும் – சந்துரு கவிதை | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸாNot everything is predictable. Yet, some clues by way of actions and reactions lead to logical conclusions that are both possible and probable as enunciated in this Tamil poem by Chandru Rc, which has been reproduced here with prior permission from the poet alongside an English translation by moi:

நீண்ட சோதனைக்குப் பிறகு
என் பாக்கெட்டுகளில்
எதுவுமில்லையென்று
தெரிந்த பின்பும்
விடாமல்
என் நிழலிடம் எதையோ
தேடிக்கொண்டிருக்கிறாய்
எப்படிப் புரியவைப்பேன் உனக்கு…!
அணிந்திருக்கும்
என் ஆடைகளில் இல்லாத
பாக்கெட்டுகள்
நீ துழாவும் என் நிழலிடம் மட்டும்
எப்படி இருக்குமென்று
நம்பமுடிகிறது உன்னால்…
இருப்பினும்
நிழலுடன் சேர்ந்து
நிலத்தை அகழும்
தொடர்ந்த உன் தேடுதல்கள்
ஒன்றை மட்டும்
யூகிக்கச் செய்கிறது…
என் நிழலுக்கடியில்
ஏதோவொன்றை
முன்கூட்டியே நீ
ஒளித்து வைத்திருக்க வேண்டும்…

சந்துருAfter a long checking
even after realising
there is nothing
in my pockets,
you are searching
in my shadow
relentlessly
for something.
How do I make you
understand!
How is it possible
for you to believe
that the pockets
not on
the dresses worn
will only be
in my shadow
you are groping through!
However,
your continued searches
that excavate the earth
alongwith the shadow
makes me hazard a guess:
You must have
hidden something
beforehand
below
my shadow.

~Sri Noida