தமிழ்க் கவிதையும், ஆங்கில மொழியாக்கமும் – ரிஸ்கா முக்தார் | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸாWhen a rose by any name will be a rose still, you ask what is in a name. Don’t you know that not the sight or voice or even the sound of footsteps but just the hint of a name sets lovelorn hearts aflame?
In this Tamil poem reproduced alongside an English translation by moi with prior permission from the poet, Riska Mukthar tells us more:

ஆயிஷாக்கள்
அழகானவர்களென்று
நம்புமொரு நண்பனைத்தெரியும்
எனக்கு
நான் ஒரு ஆயிஷாவாக இல்லாதிருப்பதில்
கொஞ்சம் சங்கடம்தான்
அவனுக்கு
எனக்குத்தெரியும்
ஆயிரம் ஆயிஷாக்களை
போலவே
அறிமுகமற்ற ஆயிஷாக்களையும்
எங்கேனும்
புன்னகைத்து நான் கடந்திருக்கக்கூடும்
ஓரிரு ஆயிஷாக்கள் என்னுடன் ஒன்றாகப் படித்திருக்கிறார்கள்
ஓரிரு ஆயிஷாக்கள் முகம் காட்டாமல் முகநூலில் என்னைப் பின்தொடர்கிறார்கள்
ஓரிரு ஆயிஷாக்களுக்கு தலையில் கொட்டி நான் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்
இன்னும் சில ஆயிஷாக்களை
காலத்தின் கையில் நான் வாரிக்கொடுத்திருக்கிறேன்
முன்னெப்போதோ
ஒரு ஆயிஷா என் நெருங்கிய தோழியாய் இருந்திருக்கிறாள்
ஒரு ஆயிஷா என்னை வெறுத்து விலகிப்போயிருக்கிறாள்
ஒரு ஆயிஷா என் துயரத்தில் துணை வந்திருக்கிறாள்
இன்னுமொருத்தி
எனைப் பாதி வழியில் கைவிட்டுச் சென்றிருக்கிறாள்
எனினும்
எவ்வாறாயினும்
எல்லோருக்கும்
தெரிந்திருக்கிறது
ஏதாவதொரு ஆயிஷாவை
தெரியாத ஒரு சிலருக்கும்
ஏதோவொரு
ஆமினாவோ
அமைராவோ
வாய்த்து விடுகிறார்கள்
என்பதில்
மகிழ்ச்சிதான்
ஆயினும்
ஆயிஷாக்கள்
அழகானவர்களென்று
நம்புமொரு நண்பனைத்தெரியும்
எனக்கு
நான் ஒரு ஆயிஷாவாக இல்லாதிருப்பதில்
அவனுக்கேனோ
எப்போதும்
சிறு வருத்தம்!!!

ரிஸ்கா முக்தார்I know
a friend
who believes
Ayeshas
are beautiful.
My not being
an Ayesha
is indeed
a bit of a bother
for him.
I know
a thousand Ayeshas.
Likewise,
I may also have
gone past
unfamiliar Ayeshas
somewhere,
with a smile.
A couple of Ayeshas
have studied with me.
A couple of Ayeshas
follow me on Facebook
without showing their face.
With a knuckle rap on their heads,
I have taught a couple of Ayeshas.
A few more Ayeshas
I have lost to the hands of Time.
Once upon a time,
an Ayeshas had been
my close friend.
An Ayesha hated me
and moved away.
An Ayesha gave me
company
in grief.
Another one
had abandoned me
halfway and left.
Even then,
somehow or the other,
everyone knows
any one Ayesha.
Still,
it is a pleasure
that even the few
who don’t know,
are bestowed with
some Aamina
or Amaira.
I know
a friend
who believes
Ayeshas
are beautiful.
I know
a friend
who believes
Ayeshas
are beautiful.
Somehow,
my not being
an Ayesha
is always
a bit of a sadness
for him.

~Sri Noida