தங்கேஸ் கவிதைகள் - Thanges Kavithaikal - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1

பௌதிகமான தூரத்தை
என் மனதினால் கடந்து
உன்னிடம் வருகிறேன் சகி

உயிரினை உருக்கும்
தனித்துவமான
என் மூச்சுக்காற்று
ஒரு முறையேனும்
கடல் கடந்து வந்தாகிலும்
உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
நான் இன்னும்
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்

2

 

பெரிய தொரு செய்தி எதுவுமில்லை அனுப்புவதற்கு
இன்னும் உயிர்த்திருக்கிறேன் என்பதை தவிர

நிலவு வரும் நேரம் தான்
வானில்
என்றும் திக்கற்ற உயிர்களுக்கு
அது தானே துணை

நான் பார்க்கும் போது நீயும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்பதில் தான் தொக்கி நிற்கிறது
எஞ்சிய எனதுயிர்

வெண்ணிலவை வருடிவிட்டு
மீண்டு வரும்
உன் பார்வையும் என் பார்வையும்
ஒரு புள்ளியில் கட்டிப்பிடித்துக் கதறிக் கொண்டிருப்பதை
நான் கண்கொட்டாமல்.
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அது ஒன்று போதாதா நாம் நிலவை நேசிப்பதற்கு !

 

3

பறக்கும் நட்சத்திரம்
சிறகை விரித்துப் பூமியை நோக்க
வெற்றிடத்தில் ஒரு பறவை
புதிய நட்சத்திரமாகிவிடும்

ஆனால் சிறகை விரித்த
இதயப் பறவையோ
அசைவற்றுக் கிடக்கிறது

அவ்விடத்தில் யுகம் யுகமாக

வானத்திற்கும் பூமிக்கும்
பயணம் செய்யும் மேகங்களோடு
தொடருகின்றது கோடி கோடி
ஜீவன்களின் பிறவிப் பயணம்

எண்ணற்ற பிறப்புகளின் வழியே
அடைவது ஒன்றும் இல்லை
இது ஒரு அலகிலா விளையாட்டு என்பதைத் தவிர

 

எழுதியவர் : 

தங்கேஸ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *