தவா கவிதைகள் | Tamil poetry by Thava Parameswaran - Kavithaikal - தூக்கம் வராத இரவுகளில்துணைக்கு உன்னுடன்நான் - https://bookday.in/

தவா கவிதைகள்

தவா கவிதைகள்

தூக்கம் வராத இரவுகளில்

துணைக்கு

உன்னுடன்நான்

 

தூங்கிக் கொண்டிருக்கும்

அந்தச் சாலையில்

ஏதோவொரு பாடலை

முணுமுணுத்தபடி

நடந்து கொண்டிருக்கின்றோம்

 

யாருமற்ற அந்த

நள்ளிரவில்

நீயும் நானும்

சிந்துகின்ற தெருவொளியில்

முந்துகின்ற நம் நீள நிழல்களை

இரசித்தபடி

 

யாருமற்ற அந்த

நள்ளிரவில்

நீயும் நானும்

 

நம்மையும் துணைக்குச்

சேர்த்துக் கொள்கின்றோம்

இரசனையென் னும்

மந்திர சாலைக்குள்

 

ஏதோவொரு ஏகாந்தம்

அறிவுக்கு எட்டாதபடி

மனதுக்கு மிக நெருக்கமாக

மிக மெல்லிய பட்டுபோல

தொட்டு வருடித் தொடரும்

உறவுபோலத் தென்றல்

 

எம்மைக் கட்டி வைத்து

இரசனையை

தட்டில் தரும்

அந்தப் பால்நிலா

 

இன்னும் இதமாக்கும்

நம் இணைந்து பிணைந்த

கைவிரல் கோர்வை

 

அதற்கும் மேலாகப்

பட்டுவிட்டு

தொட்டுவிட்டு

தொடராமல் உரசிக்கொள்ளும்

பஞ்சும் நெருப்புமான

தேகத்தேடல்

 

இத்தனைக்கும்

மொழிகளற்ற

மௌன மொழியே

 

இப்படியே

தொடர்ந்து விடக்கூடாத

முடிவிலியாய்

இந்தச் சாலையும் பயணமும்

மனம் பாவம்

என்ன செய்யும்

ஏங்கத்தான் முடியும்

எழுதியவர் : 

தவா



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *