க.வருண்குமார் கவிதைகள்
1
சிதைந்து போன பனை ஒன்னு
சிரிச்சுக்கிட்டே சொல்லிடுச்சு
குஞ்சு தூக்கும் கழுகெல்லாம்
குதிகாலம் போட்டுருச்சு
வெளியூரு கொக்கு ஒண்ணு
என்
வீட்டில்
கூடு கட்ட
அடுப்பில் பூத்த
காளான் புழுவாய்
போகுதையா என் பொழப்பு
வெள்ளை நிறப் பறவை ஒண்ணு
வலசை தான் வந்து போகும்
வாய் நிறைய பேசிப் போகும்
நகத்தில் மைய வச்சு
நாசம் போச்சு
என் வாழ்க்கை
நாத்துக்குள்ள
நான்
விழுந்து
நாதியத்துப் போகையில
என்னப் பாத்து
சிரிச்சுப் போகுதையா
ஆகாயக் கொக்கு ஒண்ணு ..!
2.மல்யுத்தம்
ஒவ்வொரு கணமும்
எங்கோ ஏதோ
ஓர் இடத்தில்
மல்யுத்தம்
நடந்துகொண்டு தான்
இருக்கிறது
கருப்புஆடு பலி கொடுக்க
பறக்கும் கொடி
காவி
கங்கை பாவம்
போக்கும் என்றால்
நாங்கள் பாவம்
எங்கே போவது
எங்கள்
கண்ணீரும்
கண்ணீர் தானே..!
3.கம்மாய்
வத்திப் போகும்
கம்மாயில்
கொத்திப் போகும்
கொக்கைப் போல
மீனாய் துள்ளும்
மிச்ச மீதியும்
தொலைந்து போகட்டும்
ஏதுமற்ற
அமைதியாய்
கம்மாய்
உறங்கட்டும் ..!
எழுதியவர் :
க.வருண்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.