ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்
1. பிரளயம் நிகழட்டும்..
*************************
போர்வாட்கள் இறங்கட்டும்
பெருந்தாகம் அடங்கட்டும்
தீயுஷ்ணம் குறையட்டும்
தீராமழை பொழியட்டும்
ஆன்மக்கடல் நிறையட்டும்
ஆருயிர் துளிர்க்கட்டும்
காலக்கடன் தீரட்டும்
காரிருள் அகலட்டும்
கேவல்கள் அடங்கட்டும்
கொடுந்துயரம் விலகட்டும்
வெறுமை அழியட்டும்
விகல்பம் வெளுக்கட்டும்
பெருஞ்சுவர் இடியட்டும்
பிரளயம் நிகழட்டும்
இரகசியங்கள் அவிழட்டும்
இதயங்கள் கொண்டாடட்டும்
அன்பே
பேசிவிடு
அதுவரைக்கும் தோன்றவில்லை
அதுவரைக்கும் நினைக்கவில்லை
அந்தக்கணம் வரைக்கும் எதுவுமில்லை
அந்த நொடிவரையில் தேடவில்லை
அதுவரையில் உறைக்கவில்லை
அதுவரையில் தேவையாக இருக்கவில்லை
அப்படிக் கேட்காமல் விட்டிருக்கலாம்
அவ்வாறு திசைமாறி வினா வந்தது ஏன்
இயல்பில் வெளிவந்ததை வீணென்றும் கூற முடியாது
வெறுமையிலும் அன்பின் தேடலை அறிவித்தது எது
அதன் பிறகே வலித்தது
அதன் பிறகே உறைத்தது
அதன் பிறகே ஆயிரம் கேள்விகள்
அதன் பிறகே பல்லாயிரம் கேவல்கள்
ஆயினும் அழவில்லை
நோயில் கிடந்தவளை நலம் பெற உருகும் உறவொன்று
இப்படி ஒரு கேள்வி கேட்டது
“அவர்களுமுனை நலம் விசாரித்தார்களா?”
அழத் தோன்றவில்லை
அழ வைத்தவர்களுக்காக அழத்தோன்றுமா என்ன?
எழுதியவர் :
ஏறாவூர்
இலங்கை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

