தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் | Thanga Jeyapal Jothi 's Kavithaikal | Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/w

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள்

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள்

காதலே என் காதலே

காதலே
என் காதலே
உன் நெருப்பிலே
கற்பூரம் நான்
எரிகிறேன்
என் கடவுளே
அருள் தருவையோ
கடவுளே
என் காதலே…

கற்பூரமாய் என்னைக் காட்டினேன்
கற்பூரம் அணைப்பாயா
காதல் சுடர் அழகு
என்று என்னை ரசிப்பாயா
அருள் பாலிப்பாயோ
கடவுளே என் காதலே…

மாலை மங்கும் வேளையில்
ஓடி வருகிறான்
என் இதய வாலிபன்
விடைபெறுமோ
என் விரகமோ
நிலவின் தண்ணொளி
அவன் தீ பருகுமோ
என் தேகம் உருகுமோ
அவன் தீ என்னைப் பருகுமோ
கடவுளே என் காதலே…

காதலே என் காதலே
உயிர் எடுக்கவே
அவன் வருகிறான்
என்னை உருக்கினாய்
உயிர் பறிக்கிறாய்
உன் நெருப்பிலே
எனை எரிக்கிறாய்
கடவுளே என் காதலே

மாலையே ஓ மாலையே
புது வெண்ணிலா
முகம் ஒளிர்கிறேன்
அவன் வருகிறான்
வான் வீதியில்
மழை மேகங்கள்
அட கடவுளே என் காதலே!

ஜனன ஓலை
ஆண் பெண் இல்லாம
இடையே அநாதியாய்
மகர ராசிக்காரன் என்றார்கள்
வியாழன் கடைசி நாழிகை
வெள்ளி இன்னும் பிறக்கவில்லை
சூரியோததி அஞ்சரை மணி
கடகமா திருவோணமா
ஓலையில் இலுப்ப பட்டை பண்டாரம்
கடகராசி மகரம் என்று கிறுக்கியிருந்தான்
திருவோணம்தான் சரி என்றார்கள்
கடவுளின் நாடெனில்
திருவோண மகராஜா சிலாக்கியம்தான்
மன்மத ஆண்டில்
எந்த தடயமும் இல்லெனில்
ராசிக் கட்டத்தில்
தடவி பயனென் கொல்….
எழுதியவர் : 

தங்க.ஜெயபால் ஜோதி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *