கலைவாணியின் கவிதை
என் அன்பிற்குரிய புத்தகமே!
என் ஐந்தாம் அகவையில்
உன் கரம்பிடித்தேன்…
அன்று வரை
என் பெற்றோரை மட்டுமே
நேசித்த நான்…
உன்னை வாசிக்கத் தொடங்கினேன்
அ… என்று அரிச்சுவடியுடன்
தொடங்கினேன்…
ஆண்டுகள் மாற
அழகான அட்டைப்படங்களுடன்
என் கைகளில்
தவழ்ந்தாய்!
திகட்டாத திருக்குறளாய்
கவிரசம் சொட்டும்
கம்பராமாயணமாய்
சிந்தும் தேன் குடம்
சிலப்பதிகாரமாய்….
என்னுடன் நீ…
என் வாழ்க்கைத் துணையாய்
நீ வராவிட்டால்
நான் எப்படி இருந்திருப்பேன்?
செதுக்கப்படாத சிற்பமாய்
முடிக்கப்படாத சித்திரமாய்
முட்டாள்களின் முன் உதாரணமாய்
முழுமையற்ற வாழ்க்கை….
உனை வாசிக்கும் போதெல்லாம்
அகம் புத்துயிர் பெறுவதால் தான்
உனைப் புத்தகம் என்றார்களோ?
பனை யோலைகளில்
தொடங்கிய உன் பயணம்…
இன்று பல வடிவங்களில்
எங்களோடு…
உன்னை வாழ்க்கைத் துணையாகக்
கொண்டதால் எனக்கு
வழித்துணை
தேவையில்லை…
உன் கரம்பிடித்தே
என் காலங்கள் கடந்து செல்வேன்….
அன்பான என்
ஆயுள்காலப் புத்தகமே !
எழுதியவர் :
– கலைவாணி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

