முல்லைவாசன் கவிதைகள்
வீடு
——-
வெள்ளை அடித்த
வீட்டின் அழகில்
அம்மாவின் கை பக்குவம்
வானத்தின் நீலத்தை
சுவரேறிக் குதிக்கச் செய்தது
சுவரின் மூலையில்
வேர் பிடித்த செடி
மரமாகும் என்றால்
வீடு என்னவாகும் ?
மண்ணில் இருந்தால்
மரம் அழகு
சுவரில் இருந்தால்
சித்திரம் அழகு
அம்மாவின் குரல்
அழைத்த வீடு அழகு.
அதுசொர்க்கத்தின் முற்றம் .
அப்பாவின்
தடம் பதிந்த வீடு அழகு.
அது ஆன்ம பலத்தின் கிடங்கு
உறவுகள்
சிறகுகளை கோதிக் கொள்ளும்
பறவைகளின்
அழகே வீடு
ஆடும் தூளியின்
ஒவ்வொரு கணத்திலும்
பிரம்மாண்டமாய்
பேரூருக்கொள்ளும் வீடு.
அதிகாலை
———————
குயில் பாட்டில
நழுவும் வைகறையை
துப்பறிந்த குதூகலத்தில்
தாவி குதிக்கும் அணில்களுக்கு
திசைகளே மேடை.
இருளை துடைத்த
கதிரின் கிரணங்கள்
ஒவ்வொன்றிலும்
ஒட்டிய புன்னகையை
கோலத்தின் கோலமாய்
பூசணிப்பூ ஏந்திக் கொள்ளும்
பகையறிய அமைதியில்
உலர்ந்திட்ட அதிகாலை
வீடு திரும்பும் போர் வீரர்களின்
முகங்களை ஏந்தி கொள்கிறது
அதிகால
ஏந்திக் கொள்ளும் முகங்களில்
அழகு நிலையங்கள்
நடுங்கவே செய்கின்றன
கிருமி
———-
வாய் திறந்தால்
கிருமிகள்
கை வீசினால்
கிருமிகள்
தரையில் நடந்தால்
கிருமிகள்
துணியை துவைத்தல்
கிருமிகள்
பாத்திரத்தை தொட்டால்
கிருமிகள்
கிருமிகளால்
சுற்றி வளைக்கப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
பெரிய கிருமி
கருப்பு வெள்ளையாயிருந்து
டிஜிட்டல் வண்ணத்தில்
வீட்டையே சிறை வைத்துள்ளது.
எழுதியவர் :
முல்லைவாசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

