பிச்சுமணியின் கவிதை
இப்பொழுதெல்லாம்
துரோணாச்சாரிகள் கட்டைவிரலைக் கேட்பதில்லை.
அவர்களுக்குக் கட்டைவிரலைக்
கொடுக்கும் மடத்தனுமும்
எங்களுக்கு இல்லை
கூடவே நின்று
எதிரியாரென்று தெரிந்தும்
நாங்கள் அம்பெய்தும்போதெல்லாம்
அவரசர அவசரமாய்
கட்டை விரலைத் தொட்டுப்பார்த்து
சோதித்து..
உப்பு சப்பில்லையென சொல்லும்
உங்களைப் பார்த்துதான்
பயமாயிருக்கு
எழுதியவர் :
பிச்சுமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

