ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - பிணக்குகளை ஒதுக்கிப்பிரசன்னமாகிவிட்ட பிறகும் - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்
********************************** 
1.இணங்கியதன் பாசாங்கு
பிணக்குகளை ஒதுக்கிப்
பிரசன்னமாகிவிட்ட பிறகும்
மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை
என்ன செய்ய இயலும்?

ஒதுங்கி இருக்கிறேன்
தருணம் பார்த்து
புரிதலாகுமென!
***

2
கொய்த அன்பில்.

புன்னகையைப் பறித்து விட்டது
பூ.
பூப் பறித்துவிட்டதாக
குதிக்கிறாள் சிறுமி.
***

3 .தருணச் செருகல்

தயங்கித் தயங்கி
உள்ளே வந்த மரம்
என்னைத் தொட்டுவிட
நினைத்தது.
மேகத்திற்குப்
பிடிக்கவில்லை போலும்
இடையில் புகுந்து
பிரித்துவிட்டது
சொற்ப கணத்தில்.
***
எழுதியவர்:
ரவி அல்லது

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *