ச.சக்தியின் கவிதைகள் - தமிழ் கவிதைகள் (Tamil poetry - Kavithaikal) - அந்தப் பக்கம் மழைஇந்தப் பக்கம் வெயில் - https://bookday.in/

ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள்

அந்தப் பக்கம் மழை
இந்தப் பக்கம் வெயில்
மீதி இரண்டு பக்கங்களிலும் ‌நான் ,
அதிலொன்று என் உடல் ‌
இன்னொன்று என் உடலின் நிழல்
நீயே சொல் மழை கொடுத்த மரமே
எந்தப் பக்கத்திலிருந்து
எந்தப் பக்கத்திற்கு ஊர்ந்து நகர்கிறது ‌
என் உயிரிலிருந்து
வெளியேறிய ஆவியின் அந்தம்?

ஆகாசமாய் கைவிரித்து
புதியதாய் பூக்கத் தொடங்கும் நட்சத்திரங்களை
எண்ணத் தொடங்குகிறது
புது வீடென குடியேறிய
அனாதைக் குழந்தை ஒன்று

அதன் கைநிறைய
ஒரே ஒரு நிலவின் ஒலி ,

எழுதியவர் : 

ச.சக்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *