தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் உலகத்திலேயே மிகப்பெரிய தமிழ்ப் புத்தக விற்பனையகம் எழும்பூர், கன்னிரமரா நூலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை புணரமைத்து இதன் தொடக்கவிழா (22.1.2021) வெள்ளி மாலை 3 மணிக்கு நிரந்தர புத்தகக்காட்சி, கன்னிமரா நூலக வளாகம், பாந்தியன் சாலை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு க.பாண்டியராஜன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு க.பாண்டியராஜன் அவர்கள், நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை உள்வாங்கி தமிழ் பதிப்புலகம் மேலும் நவீனமயமாக வேண்டும். இதற்க்கான முயற்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.