பிப்பிரவரி 28, 2023 அன்று சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அறக்கட்டளை, தமிழ்ப் பண்பாட்டு மன்றம் அறக்கட்டளை மற்றும் எஸ்தர் ராஜம்மாள் அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளுக்கும் சொற்பொழிவுகள் நடந்தன. இந்த அறக்கட்டளைகளுக்கு வரவேற்புரையை அறக்கட்டளைப் பொறுப்பாளர் பேரா. முனைவர் இ. அமல்ராஜ் அவர்கள், அனைவரையும் வரவேற்பு செய்தார். வாழ்த்துறையை அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச. செயலர் மற்றும் தாளாளர் அவர்கள் வழங்கினார். அவர் தமிழ்த்துறை மாணவர்களையும், பேராசிரியர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் வாழ்த்திப் பேசினார். அப்பொழுது தமிழ் மொழியின் உயர்வையும், தமிழ் மொழியைப் பேசும்போது பிற மொழிகள் கலக்காமல் பேசுவதையும், அதன் அழகையும் கோடிட்டுக் காட்டினார்.
தலைமையுரை வழங்கிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் இந்த அறக்கட்டள் உருவான வரலாறை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன. இந்த அறக்கட்டளைகளுக்கு பொறுப்பாசிரியர் பேரா. முனைவர் இ. அமல்ராஜ் அவர்கள் ஏற்கனவே இரண்டு அறக்கட்டளைகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இன்று மூன்றாவது அறக்கட்டளையைத் நடத்திக் கொண்டுள்ளார். அவருக்கு நம் அனைவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்நிகழ்விற்கு வந்து ஆசியுரையும் வாழ்த்துரையும் வழங்கி சென்றுள்ள நம் கல்லூரி செயல தந்தை அருள் முனைவர் ஜெயராஜ் போனிபஸ் சே.ச. அவர்களுக்கும் தமிழ் துறை சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சீரிய முறையில் செயலாற்றும் மாணவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன் என்றார்.
இன்றைய அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா. முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் நாடறிந்த நற்றமிழ் அறிஞர். அவர் சமூக செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் அறிமுகமானவர். அவருடைய பணியும் செயல்பாடும் எல்லோரையும் கவனிக்க வைத்தது. அப்படிப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முனைவர் அரங்கமல்லிகா அவர்களை நம் அனைவரின் சார்பாக வருக! வருக! என வரவேற்கிறேன்.
அடுத்து பேரா. முனைவர் த. அருள் பத்மராசன் அவர்கள் பொன்னேரி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் சீரிய சிந்தனையாளர். இன்று சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இங்கு வந்துள்ளார் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுச் சிந்தனைகளையும், உரைகளையும் வழங்கி தமிழுக்குத் தொண்டாற்றி வருபவர். அவர்களையும் நம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதுபோன்ற அறக்கட்டளைகளைச் சொற்பொழிவுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் துணைபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் நன்கு கவனித்து எதிர்காலத்தில் நீங்களும் தமிழுக்கு இதுபோன்ற சிறந்த படைப்புகளைத் தர வேண்டும் என்று வாழ்த்தியும், வரவேற்றும் தலைமை உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.
சிறப்பு சொற்பொழிவாளர் பேரா. முனைவர் அரங்க மல்லிகா
தலைப்பு : சுற்றுச்சூழல் பெண்ணியம்
சென்னையின் அழகு இலயோலா கல்லூரிதான், என்று நான் குறிப்பிடுவேன். இந்த இயற்கைக் காட்சிகள் என்னை எப்பொழுதுமே ஈர்க்கும். ஒரு பக்கம் இறைபணியை சிறப்பாக செய்து கொண்டு, மற்றொரு பக்கம் இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்காக ஓர் அற்புதமான கல்விப் பணியை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது என்பதனால், என்னை பொருத்தவரையில் சென்னை மாநகரின் அழகு என்றால் அது அறிவு கூடமாக இருக்கும் சென்னை இலயோலா கல்லூரி தான் என்பேன் என்றார். தொடர்ந்து செயளர்தந்தை, துறைத்தலைவர், அறக்கட்டளை பொறுப்பு ஆசிரியர், தன்னுடைய இன்னொரு சகப்பொழிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் சொல்லி சுற்றுச்சூழல் பெண்ணியம் தலைப்பை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விவரித்தார்.
இதுவரைப் பெண்ணியம் குறித்து பெண்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருப்பதை விட ஆண்கள் மத்தியில் பேசலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த தலைப்பைத் தேர்வு செய்தேன்.
இந்த உலகம் என்பது ஒரு தசை கலாச்சாரம் நிறைந்த நாடு. ஒரு பெண்ணை சக மனுசியாக பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இன்றைக்கு இருக்கும் இந்த தசைக்கலாச்சாரம் திரைப்படம் அல்லது நமக்கு வந்து சேர்ந்துள்ள தவறான புரிதல்களால் நமக்கு வந்து சேர்ந்துள்ளது. முதலில் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது நாம் எப்படி பார்க்கிறோம்? என்றால் அவளை வெறும் தசையாக தான் பார்க்கிறோம். பெண்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையையும் முன்வைத்து உருவான இயக்கம் தான் பெண்ணியம். இந்தப் பெண்ணியம் என்னும் சொல் அது விடுதலைக்கான குறியீடாக பார்க்கப்படுகிறது அது ஒரு concept. Feminism is Moment. அது ஒரு Ideology. இந்தக் கருத்தியலை தவறாக புரிந்து கொண்டால் கத்தி மேலே நிற்பதைக் போன்றது.
இன்று வரை பெண்களை சரியாக புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் ஆக்ஷிபா கொலை வரை சென்று முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை. இன்னும் அங்கும், இங்குமான எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 24 மணி நேரமும் ஒரு பெண்ணை காமம் சார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? 24 மணி நேரமும் சோறு தின்றுகொண்டே இருக்க இருக்க முடியுமா? 24 மணி நேரமும் தூங்கிக் கொண்டே இருக்க முடியுமா?. முடியாது அல்லவா… எல்லா பெண்களையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதிலிருந்துதான் நாம் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இன்று ஒரு வாதம் நடைபெறுகிறது. அது அபத்தமானது. அவர்களின் ஆடை கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்கள்.பெண்கள் Modern Dress போட்டுக் கொள்வதால் மட்டும் தான் தவறு நடக்கிறதா? அப்படி அல்ல பெண்களை தவறாக பார்க்காதே என்று குழந்தை பருவத்தில் இருந்து நம் அம்மா நமக்கு சொல்லித் தரவில்லை. பெண்களின் வளர்ப்பைப் பற்றி தவறாக பேசும் இந்தச் சமூகம் ஏன்? ஆண் பிள்ளைகளின் வளர்ப்பைப் பற்றிப் பேசுவதில்லை. ஆண்கள் தலைமுடி சரியாக வெட்டிக் கொள்ளாத போதும், அவன் ரவுடியாக மாறும்போதும், அவனுடைய ஒழுக்கம் சரியில்லாத போதும் கேள்வி கேட்க மறுக்கும் இச்சமுகம் பெண்கள் மட்டும் அவர்கள் ஆடைகள் அணிவதில் குற்றம் கண்டுபிடிப்பது எந்த வகையில் நியாயம் அல்லது அவர்கள் போடும் ஆடைகளால் தான் இந்த சமூகத்தில் தவறு நடக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஆடைகளை எல்லாம் திருத்திக் கொண்டு சரியாக போட்டுக் கொண்டாலும் இந்த சமூகம் மாறிவிடப் போகிறதா? அல்ல அப்படியல்ல இது ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க மறந்த செயலால் வந்த வினை.
Feminism என்பது பெண் வேறு – பெண்ணியம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது; பெண் வேறு சுற்றுச்சூழல் வேறு அல்ல. Women and Ecology என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. சம்பந்தப்பட்டது… எப்படி சம்பந்தப்பட்டது என்று பார்த்தால்? வேட்டை சமூகத்தில் இருந்த பெண்கள் தங்கள் உணவுகளுக்காக மிருகங்களை வேட்டையாடினார்கள். அவள்தான் வேட்டையாடி கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்து கொடுத்தாள். வேட்டையாடுவது அவ்வளவு இயல்பு அல்ல. வேட்டுவம் என்னும் ஒரு கவிதை நூல் அதன் ஆசிரியர் மௌனன் யாத்திரிக்கா அந்தக் கவிதை நூலில் வேட்டை சமூகத்தின் கலாச்சாரத்தை நவீன தமிழ் மொழியில் ஆனால் சங்க காலத்தின் தொடர்ச்சியாக தந்துள்ளார்.
அதில் காடுகளில் விலங்குகள் எங்கெங்கு இருக்கும். அதன் காலடி சுவடுகள் எது? அதனுடைய குடியிருப்பு எப்படி இருக்கும்?, அது எங்கு தங்கி இருக்கும்? என்பதையெல்லாம் வேட்டைச் சமூகத்தில் இருந்த பெண் நன்கு அறிந்திருந்தாள். அந்த அளவிற்கு கவனிக்கும் சக்தி கொண்டவளாக பெண் இருந்திருக்கிறாள். இதையெல்லாம் அந்தக் கவிதை நூலில் காண முடியும்.
What is role of ecology? பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பை எப்படி பார்க்க வேண்டும் என்றால்? சங்க இலக்கியப் பாடல் ஒன்று… சிறு வயதில் பெண் குழந்தை ஒன்று விளையாடும் பொழுது ஒரு புன்னை விதையை மண்ணில் புதைத்து விடுகிறாள். தான் சாப்பிட்ட உணவை பால் சோறு, தேன் சோறு, தண்ணீர் எல்லாம் அந்த விதைக்கு ஊற்றி வளர்த்து வருகிறாள். ஒரு நாள் அந்தப் பெண் வயது வந்த பருவம் கொண்ட பெண்ணாக மாறும் பொழுது, அவளுக்கு காதல் அரும்புகிறது. அப்பொழுது தலைவன் தன்னை மற நிழலில் உறவாட அழைக்கும் பொழுது, அந்த மரம் என்னுடைய சகோதரி… என் சகோதரிக்கு முன் எப்படி என்னால் காதல் முடிவு பேசமுடியும் என்று கேட்பதில்? இருந்து அவள் எந்தளவிற்கு அந்த மரத்தையும், இயற்கையும் தன்னுடைய உறவாக நினைக்கிறாள் என்பதை உணரமுடியும்.
அறிவுமதியின் நட்புக்காலம் என்கின்ற கவிதை நூலை எடுத்துப் பாருங்கள். தோழனுக்கும், காதலனுக்குமான உணர்வுகள் புலப்படும். அவள் உறவு புலப்படும். பெண்கள் பெரும்பாலும் காதலனுடன் இருப்பதைவிட தன் தோழனுடன்தான் இருக்க விரும்புவாள். நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றால் bear cultureரில் நின்று கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் western culture உள்ளே வந்திருக்கிறது . westernனில் இந்தியாவின் culture சென்றிருக்கிறது. இங்கிருந்து அங்கு போனவர்கள் மடிசார் புடவை கட்டிக்கொண்டு கோவில் பூஜை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். அங்கிருந்து இந்த கலாச்சாரத்தை அரைகுறையாக கற்றுக்கொண்டு நாம் செய்வது அறியாமல் கவலை அடைகிறோம். இது போன்ற சூழலில் தான் நாம் Ecologyயைப் பேச வேண்டும். Ecology genderருடன் தொடர்புடையது. ஒரு ஆண் பெண் சூழலுடன் இது தொடர்புடையதாக இருக்கிறது. பெண் இயற்கையுடன் தொடர்புடையவள் என்று எப்படி சொல்கிறோம் என்றால்? அவளுடைய கர்ப்பப்பை. அவள் கர்ப்பப்பையில் உள்ள நீர் எப்படி ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவதற்கு பனிக்குடம் பயன்படுகிறதோ? அந்த நீர் ஆணின் விந்தை உள்வாங்கி அது வளர்த்தெடுக்கிறது. அந்த நீர் இல்லை என்றால் வளராது. அப்பொழுது நீரும் பெண்ணும் ஒன்றாகி இருக்கிறாள். செம்புலப் பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற சங்கப்பாடலில் வரும் பொருள் என்ன செம்மண்ணில் நீர் கலந்து விட்டால் எப்படி பிரிக்க முடியாதோ? அப்படிதான் ஒரு ஆணினுடைய விந்தணு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் நுழைந்து விட்டால் அது கருவாக உருவாகிறது. அது அன்பை தருகிறது. அந்து அன்பின் அடையாளம்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைதல் என்பது, இந்த இடத்தில் பெண்கள் குழந்தைகளை உற்பத்தி செய்து தருபவளாக இருக்கிறாள். அதேபோன்று நாம் இயற்கைக்கு வந்தோம் என்றால்? ஒரு விதைப் போட்டால் செடியாய், கொடியாய், மரமாய் வளர்ந்து வரும்.காய் தரும், கனி தரும், மலர் தரும், எல்லாம் தரும். இந்தப் பக்கம் Nature gives எல்லா விதமான resource. அந்தப் பக்கம் women gives Reproduction. ஒரு பெண் மனித உயிரை தருகிறாள். இயற்கை வளங்களை தருகிறது. Nature = Women; Women = Nature
இப்படி அரிய பல தகவல்களைத் தந்து சுற்றுச்சூழல் பெண்ணியம் குறித்து பேராசிரியர் அரங்கமல்லிகா சிறப்பாக உரையாற்றினார்கள்.
சிறப்பு சொற்பொழிவாளர் பேரா. முனைவர் த.அருள் பத்மராசன்
தலைப்பு : எதிர்காலத் தமிழ்
எதிர்காலத்தில் தமிழ் மொழி எப்படி இருக்கும்? அதற்கு மாணவர்கள் ஆசிரியப் பெருமக்கள், மொழிகள் அறிஞர் என்று பலரும் ஆற்ற வேண்டிய பணிகளை எல்லாம் பட்டியலிட்டார். அவர் அரங்கத்தை வெறும் சொற்பொழிவு அரங்கமாக எண்ணாமல், பங்கேற்பாளர் அரங்கமாக மாற்றிக் கொண்டார். மாணவர்களை கேள்வி கேட்டு அவர்களுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக மாற்றி அனைவரையும் பங்கேற்கச்செய்தார். அதில் ஒரு மாணவர் தூய தமிழ் மொழியில் பேசுவது நல்லதா? அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகள் கலந்து உரையாடுவது நல்லதா? என்றார். மற்றொரு மாணவர் முன்பு எல்லாம் தமிழ் இலக்கியத்தை விரும்பி படித்தனர். ஆனால் இன்று தமிழ் படிக்க வரும் மாணவர்களை முன்பு போல் வரவேற்பு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? இது போன்ற கேள்விகளை எழுப்பிய போது, மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான மொழியில் பதிலளித்தார். தொடர்ந்து தமிழ் மொழி ஊடகங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் சூழலையும், கூறி மாணவர்களைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தூண்டினார்.
நிறைவாக மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் வெ. ரூபன் நன்றி உரையைக் கூறி முடித்தார். இந்நிகழ்வை தன் குரல் வளர்த்தாலும், அழகான தமிழ் மொழியாலும் மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் மாதேஷ் தொகுத்து வழங்கினார். இந்தளவில் அறக்கட்டளை சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது.
பேரா. எ. பாவலன்
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments