தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
நூலின் தகவல்கள் :
புத்தகம் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
ஆசிரியர் : அருணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 370/-
தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com
தமிழகத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த சீர்திருத்தங்களை ஆசிரியர் புத்தகத்தில் விவரித்துள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்த அநீதிகளையும் அவற்றை கலைப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களையும் அதற்காகப் பாடுபட்டவர்களையும் ஒரு நீண்ட வரலாறு பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.
மனிதன் பிறப்பின் அடிப்படையில் பிராமணர் சத்திரியர் வைத்தியர் சூத்திரர் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இவர்களைத் தாண்டி சண்டாளர்கள் என அழைக்கப்பட்ட பஞ்சமர்களை ஒரு மனிதனாகக் கூட யாரும் அங்கீகரிக்கவில்லை என்பது பெரும் கொடுமை.
தங்களுடைய மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவர்களே தமிழகத்தில் முதல் முதலாக சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்கள். பின்பு வந்த ஜி சு ஐயர், மாதவையா, வேதநாயகம், வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோர் மக்களிடையே ஒரு பெரும் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர்.
குறிப்பாக இப்புத்தகம் தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், மறுமணம் போன்றவற்றை எதிர்த்து போராடிய சீர்திருத்தவாதிகளின் வரலாறு என்று கூறலாம்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முட் சண்டை
தமிழகத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த சீர்திருத்தங்களை ஆசிரியர் புத்தகத்தில் விவரித்துள்ளார்.
ஆயிரம் ஜாதி எனில் வன்னியர் வந்து புகழ் என்ன மீதி ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் சண்டை செய்தாலும் சகோதரர் என்ற சண்டை செய்தாலும் சகோதரர் என்று தங்களுடைய சீர்திருத்தத்தை மேற்கொண்டு உள்ளன.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது நன்றி சொல்ல வேண்டும்.
மனிதனை மனிதன் தீட்டு என்று சொல்லக்கூடிய அந்த மதத்தை வெறுப்பதோடு அதிலிருந்து தோன்றுகின்ற கிளைகளான ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிங்காரவேலர், காந்தி , பாரதிதாசன் போன்ற எத்தனையோ தலைவர்களின் போராட்டத்திற்கு பின்பு தான் நமக்கு எத்தனையோ சுதந்திரங்கள் கிடைத்துள்ளன எண்ணி பார்க்கும் பொழுது இந்த தலைவர்களைக் கொண்டாட தேவையில்லை அவர்கள் சொன்ன கருத்துக்களை முன்வைத்தாலே போதுமானதாக இருக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்து திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை என அத்தனை கட்சிகளும் சமூக சீர்திருத்தங்களில் ஆற்றிய பங்கினை கூறும் நூல்.
வரலாறு அறிந்து கொள்வது நம்மை நாம் அறிந்து கொள்வது ஆகும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல இன்னும் பழமைகளை ஏற்றி சுமந்து கொண்டு நாம் என்ன சாதிக்க போகிறோம்.
ஒருவனுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதின் மூலம் அவனுடைய சமூக நிலையை மாற்றிவிடலாம் என்கின்றனர்.
இங்கே எத்தனை பேர் பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்தும் சாதி என்ற சாக்கடையை தலையில் ஏந்தி சுமந்துகொண்டு இருக்கின்றனர்.
மாற்றம் வேண்டும்.யார் சொல்லியும் மாற்றம் வராது நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் வரை.
நூல் அறிமுகம் எழுதியவர்:
நளினி மூர்த்தி
மேலும் இந்த நூலின் அறிமுகத்தை படிக்க கிளிக் செய்யவும் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

