தமிழினி ஹைக்கூ கவிதைகள்1.உணவிற்காக அணிவகுப்பு
நசுக்கப்பட்ட
எறும்புகள்…

 

2. அண்ணாந்து பார்க்கையில்
அழகிய விமானம்
பொழியும் குண்டு…

 

3. கொரோனா
மரிக்கும் மனிதர்கள்
மீண்டெழும் மனிதநேயம்…4. சிலந்தியின்றி
சிலந்திவலை
கண்ணாடி மேல் விழுந்த கல்…

 

5. சமூக வலைத்தளத்தில் சமூகசேவை
ஆதரவற்றோர் இல்லத்தில்
அன்னையும் தந்தையும்…

 

6. உறுத்திக்கொண்டே இருந்தது
அந்த சிறு பிழை
கண்ணில் தூசி 7. தேர்தல் வெற்றி;
கொண்டாட்டங்கள் இல்லை
நிம்மதி பெருமூச்சில் கால்நடைகள்

 

8. தண்ணீரா‌? கண்ணீரா?
சந்தேகம் கொண்ட
மீன்கள்