Tanzanian writer Abdul Razak Gurnah awarded Nobel Prize in Literature. தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு



இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்படுகிறது. 1994 இல் வெளியான “Paradise’, இவர் எழுதியவற்றில் மிகப்புகழ் பெற்றது. Desertion, By the sea என்பவை பிற புத்தகங்கள்.

2005 இல் பூக்கர் ப்ரைஸ் (Booker Prize) விருதிற்கும், வைட்பிரெட் ப்ரைஸ் (Whitbred prize) விருதிற்கும் இவர் புத்தகங்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

1948 இல் தான்சனியாவின் சான்சிபர்( Zanzibar) எனும் தீவு பிரதேசத்தில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்துவருகிறார். தான்சியா ஆட்சியை 1964 இல் ராணுவம் கைப்பற்றியபோது இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.பின்பு அந்நாட்டிலேயே நிரந்தரமாக வசித்துவருகிறார்.

காலனிஆட்சிமுறை தருகிற தாக்கத்தோடும் , அகதிகளின் வாழ்க்கைவலியோடும் சரசமற்றதும் மிகத்தீவிரமானதுமான அனுதாபவுமே நோபல் பரிசுக்கான தேர்வின் காரணமாக தேர்வுக்குழு சொல்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிற ஐந்தாவது ஆப்பிரிக்க தேசத்தவராவர் அப்துல் ரசாக் குர்னா.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *