Dr.ஜலீலா முஸம்மில் கவிதைகள்
***********************************************
குறுங்கவித்துளிகள்
***********************************************
♥️
முத்தமும்
அன்பும் ஒன்று
ஏங்க வைப்பதிலும்
இயங்க வைப்பதிலும்!
***********************************************
♥️
தின்று தின்று
வளர்ந்திருக்கிறது
என்றாலும்,
தீராத பசிதான்
இன்னும் இன்னும்…
அன்பெனும் அன்னம்
கொண்டு வா
என்னிதயத்திற்கு!
***********************************************
♥️
எப்போதும்
அலுத்து விடாத
சலித்து விடாத
பைத்தியக்காரத்தனத்தால்
பதட்டமாகிப் பரிதவிக்கிறது
எனதன்பு..
ஆதலால்,
மூடி விடத்தோன்றினாலும்
திறந்தே வைத்திருக்கிறேன்
என் சாளரங்களை!!
***********************************************
♥️
மெதுவாக
எழுந்து உலாவி
சிறகடித்து
உன்னில்
உயிர் ஜனிக்கும்…
உன் விழிமோட்சத்திற்காகவே
என் எழுத்து..
அதுவரையில்
அதுவொரு
குறைமாதக் குழந்தை!!
***********************************************
♥️
தேநீரின் தீஞ்சுவை
சேர்க்கைப்பொருள்களில் அல்ல
சேர்க்கும் கைகளின் அன்பில்
***********************************************
♥️
இருப்பவை அடங்காது
இல்லாத ஒன்றுக்காக
எப்படி ஏங்குகிறது
இந்த உள்ளம்…
வராத ஒரு ஹார்ட்டீன்
இத்தனை கஷ்டம்
தர வேண்டாம்!
***********************************************
♥️
எனையிறுக்கித் தளை போட்டுப்பின்
தழைத்துப்பெருகிப்
பெருங்காடாகி நிற்கிறது
உன் நேசம்!
***********************************************
♥️
எனைக்கவனி…
என்பது தவிர
ஏதேனும் வேறு சுயநலம்
உளதோ நேசத்தில்?
***********************************************
♥️
நீ விசிறுகின்ற
இதயத்திற்காகவே
இத்தனை காத்திருப்பும்…
தொடுதிரையில்
விழித்திருக்கும்
ஆன்மத் தீ!
***********************************************
♥️
வெண்தோகை
அலர்த் திரளாய்
என் மென்னிதயம்
கொய்தாளவள்…
பின்னொரு கணமே
கைதாகி
நின் தாள் சேர்ந்தேன்!
📚 எழுதியவர் :
✍🏻 Dr.ஜலீலா முஸம்மில்
ஏறாவூர், இலங்கை.
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.