அ.சீனிவாசனின் கவிதைகள்
**********************************************
1.
‘இனி நடப்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும்’
என நீ சொல்லும்போதே
முதல் நல்லது
நடந்துவிடுகிறது சகியே!
**********************************************
2.
சுற்றமும் நட்பும்
எல்லோருடனான
உரையாடல்களையும்
‘பத்திரமா இரு’
என்பதாக முடிப்பதால்
தொலைந்து போகாமல்
இருக்கமுடிகின்றது!
**********************************************
3.
மழையில் நனையாத பக்கம்
உள்ளாடைகளுக்கு மேல்
வார்மர்
ஆடைகளுக்கு மேல்
ஜெர்கினோ ஸ்வெட்டரோ
அணிந்துகொண்டு
சுத்தமாக மழைத்துளியோ
இயற்கையான குளிர்காற்றோ
உட்புகாத காரின் உள்ளிருந்தவாறு
வீட்டு கேட்டின் முற்புறம்
மழைக்கு ஒதுங்கியிருப்பவர்களை விரட்டுபவனின் மனதில்
இந்த மழையால்
எப்படி ஈரம் சேர்க்க முடியும்!
**********************************************
4.
பேய்கள்
இருந்திருக்கலாம்.
இருந்திருந்தால்
இவ்வளவு பயம்
இருந்திருக்காது.
**********************************************
5.
குளிர்காலங்களிலும்
குளிர்பிரதேசங்களிலும்
தேநீரின் வேகத்தில்
ஆறிவிடுகிறது
ஊடல்!
**********************************************
6.
“புரிதலுள்ள இடங்களில் நடிப்பு இருக்காது,
நடிக்கும் இடங்களில் புரிதல்
தேவைப்படாது.
**********************************************
7.
யார் முதலில்
சொல்வது என்ற
தயக்கத்தில் சிலர்
பிரிந்திருக்கிறார்கள்
சிலர்
இன்னும்
தயங்கிக் கொண்டே
இருக்கிறார்கள்.
**********************************************
8.
புத்தரே என்
துன்பத்திற்கு காரணம்.
இப்படிக்கு
புத்தராக ஆசைப்படும்
நான்.
**********************************************
9.
புத்தர் பொம்மையாக
இருத்தல் எளிது.
புத்தராக இருத்தல்
கடினம்.
**********************************************
10.
நான் புத்தராக
“ஆசைப்படுகிறேன்”
**********************************************
📚 எழுதியவர்:
அ.சீனிவாசன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.