“DNA குறித்த எளிய அறிவியல் தகவல்கள்”
டி என் ஏ என்பதன் தமிழாக்கம் தாயனை.
நம்மோடு நம் வாழ்வியல் முறையில் பின்னிப் பிணைந்து இருக்கும் மரபணுவின் ஆச்சரியங்களை இந்த நூலினை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
மரபணு குறித்த அடிப்படை அறிவை மிக எளிமையாக 15 கட்டுரைகள் மூலம் மிக அருமையாக அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் வெண்பா.
நம் பள்ளிக்கூட பாடப் புத்தகங்கள் தேர்வு நோக்கில் தான் அமைந்துள்ளது.
அறிவை வளர்க்கும் நோக்கில் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.
டி என் ஏ என்றால் என்ன?
நடைப்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை பேணும் உடற்பயிற்சிகள், சிறுதானிய உணவு என்பதை தாண்டி அறிவியல் கண்ணோட்டத்துடன் நம்மை நாம் தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளோமா ?
டி என் ஏ எனப்படும் தாயானை குறித்து இளைய சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பான தமிழ் நடையில் மிக எளிமையாக நூலை படைத்துள்ளார் நூலாசிரியர்.
இந்தியாவில் 70% மக்களுக்கு பாலை செரிக்கும் சக்தி கிடையாது.
குடும்ப சொத்துக்கள் வெளியே போகக்கூடாது என்று கருதி நெருக்கமான உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியம் எப்படி பாதிக்கிறது ?
ஏன் பெர்டிலிட்டி மருத்துவமனைகள் அதிகரித்து வருகிறது ?
மரபணு மாற்றங்களால் புற்றுநோய் நீரழிவு நோய் ஏற்படுமா?
ஒருவரின் தாயனையை வைத்து அவருக்கு பிற்காலத்தில் வரும் நோய்களை கண்டறிய முடியுமா ?
மரபணு மாற்றப்பட்ட உணவு கலப்பு காய்கறிகள் பழங்கள் உண்பதால் இளம் வயதில் உடல் பருமன் ஏற்படுமா ?
குழந்தையின்மைக்கு விதைக்குள் இருக்கும் வளங்கள் சுருங்கிப் போனதன் காரணமா ?
நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும் போது நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?
நம் உடலில் ஏற்படும் வலி, வீக்கம், காய்ச்சல் தோன்றுவது நல்லதா ?
நம் உடலில் அளவுக்கு மிஞ்சிய செல்கள் உற்பத்தியானால் கேன்சர் ஏற்படுமா ?
கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரம்பரையாக வரக்கூடியவையா ? எப்படி தடுப்பது ?
யூட்ரஸ் ரிமூவ் செய்தால் இதய நோய், பிளட் பிரஷர், உடல் பருமன் போன்றவைகள் ஏற்படுமா ?
தாய் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போது கருமுட்டைகள் உருவாகிவிடுமா ?
வயது முதிர்ந்தவர்கள் தாய்மை அடையும் போது பிறக்கும் குழந்தைகள் மரபணு குறைபாட்டுடன் பிறக்குமா ?
முந்தைய தலைமுறையின் ஆரோக்கியம் தற்போது உள்ள தலைமுறையிடம் இல்லாமல் போனதற்கு உணவு பழக்கம் தான் காரணமா ?
குழந்தை இல்லாத தம்பதிகள், பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளை ஏன் தத்தெடுக்க மறுக்கின்றனர் ?
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மற்றவர்களைப் போல் வாழ்க்கை வாழ இயலுமா ?
ஏற்கனவே ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தை உடைய பெற்றோர் அடுத்த குழந்தைக்கு தயாராகும் போது மரபியல் ஆலோசர்கள் ஆலோசனை ஏன் பெற வேண்டும் ?
35 வயதுக்கு மேலாக கருத்தரிக்கும் தாய்க்கு டவுன் சிண்ட்ரோம் உடைய குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகமா ?
பெண்களுக்கு ஏன் ஹீமோபிலியா நோய் தாக்குவதில்லை ?
நிறக்குருடு என்றால் என்ன ? இந்த நோயால் ஏன் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ?
டயாபடீஸ் எனும் சர்க்கரை நோய் மூன்று டைப்களாக உள்ளதா ? டயபடிஸ் 1, 2, 3 இதில் எது மிக மிக ஆபத்தானது ?
இது போன்ற கேள்விகளுக்கு முழுமையான அறிவியல் ரீதியான விடை இந்த நூலை வாசிக்கும் போது கிடைக்கும்.
குழந்தை என்பது கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் தனிப்பட்ட விஷயம். இந்தியா போன்ற நாடுகளில் குழந்தை என்பது ஒரு சமுதாய கட்டமைப்புக்கு இன்றியமையதாக உள்ளது. “வீட்டில் என்ன விசேஷம்” என்ற கேள்வி சமுதாய எதிர்பார்ப்பாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியான முறையில் நாம் அணுக வேண்டும்.
பெண்ணிற்கும் ஆணிற்கும் உடல் ரீதியாக இருக்கும் தனித்துவங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக பருவமடைதல், கருத்தரித்தல், தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம்.
இதுகுறித்து வெளிப்படையாக பேசி, தயக்கங்களை உடைத்து இளம் தலைமுறையினருக்கு இவை பற்றிய புரிதலை ஏற்படுத்துவது நமது கடமை. அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ இதுவே சிறந்த முயற்சியாகும்.
டி என் ஏ என்னும் தாயனை குறித்து சிறந்த அறிவியல் அறிவை பலரும் அறியாத மருத்துவ தகவல்களை எளிய நடையில் வழங்கியுள்ள நூல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
நூலின் தகவல்கள்
நூல் : “தாயனை”
(தலைமுறைகளின் கதை)
நூலாசிரியர் : பொறியாளர் வெண்பா
விலை ரூபாய் : 120/-
வெளியீடு : ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம்
சென்னை -600004
தொடர்பு எண் : 7550098666
நூலறிமுகம் ஏழுதியவர்

MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

