கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்…!

கரிம் அ எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் நூலிலிருந்து ஒரு சில வரிகள்

பதினான்காம் தேதிதானே
பால் ஊற்றவேண்டும்
அதற்குள் என்ன அவசரம்
ஆறாம் தேதியே வருகிறாய்

உன்னை தோரணம் கட்டி வரவேற்க
எனக்கும் ஆசை தான்
என்ன செய்வது
ஒரு எலும்பும் கிடைக்கவில்லை
எல்லாம் சாம்பலாகிவிட்டன
இதயமே இல்லாத உன்னை இரும்பு மனிதர் என்று அழைத்து
உன் கட்சிக்காரர்களே உண்மையாக்கி விட்டார்கள்

நீ பக்கத்து நாட்டில் இருந்து அகதியாய் வந்தவராமே
நீ என் நகருக்கு வரப்போய்
என் நகருக்கு நான் அகதியாகிவிட்டேன்.

பத்திரிகையில் படித்தேன் பந்துகொண்டு போனால்கூட
பிளந்து பார்க்க வேண்டுமென்கிறார்களாம் காவலர்கள்.

என்னசெய்வது
நவம்பரில்
காக்கியைக் கழட்டிவிட்டுக்
காவியை மாட்டியபோது யோசித்திருக்க வேண்டும்.

சுதேசிக்காரன்
மைதானத்தில்
விதேசிகளோடு மைதுனம் செய்கிற நீ.
பேசுகிறாய்
பேசு
எதையாவது பேசு
எப்படியாவது
சாகாமல் போ.

வரும் பிப்ரவரி 14ம் தேதியாவது என் காதலிக்கு கொடுக்க பிணங்கள் அல்ல
பூக்கள் வேண்டும்

தாழிடப்பட்ட கதவுகள்

– ஆசிரியர் அ.கரீம்

பாரதி புத்தகாலயம் வெளியீடு.

-நன்றி Sfi Malai Kannan முகநூல் பதிவிலிருந்து

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *