சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்
பாரதி புத்தகாலயத்தின் சார்பில்
திரு.அருண்குமார் நரசிம்மன் அவர்களின்
“ தல இது தபால் தல ” நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 25 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர்
முனைவர் கோ. விசுவநாதன் தலைமையேற்று நூலை வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
திரு. துரை ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் முனைவர் கோ.விசுவநாதன் பேசுகையில் “ புத்தகங்களை வாசிக்க
இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும். தபால் மூலம் தலைவர்கள் எழுதிய
கடிதங்கள் புத்தகங்களாய் உருவெடுத்தன. தபால் தலைகள் குறித்த
யாரும் அறியாத தகவல்களை நூலாசிரியர் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
எனவே இந்நூல் தனித்தன்மையானது ” என்று தெரிவித்தார்.
முனைவர் ச.கண்ணப்பன் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
அவர் பேசிய வாழ்த்துரையில் “ நூல் அளவில் சிறியதாய் இருந்தாலும் வாசிப்பவர்களின்
நெஞ்சில் தேடலை உருவாக்கும் திறன் வாய்ந்ததாய் உள்ளது.
குழந்தைகளுக்கு தேவையான கருத்துகளைக் கொண்டுள்ளது ” என்று பேசினார்.
நூலின் ஆசிரியர் திரு.அருண்குமார் நரசிம்மன் பேசியதாவது
“ நான் பத்திரிகை துறையிலிருந்து எழுத்தாளனாகியுள்ளேன்.
எனது புத்தகங்களை தொடர்ந்து பாரதி
புத்தகாலயம் வெளியிட்டு வருகிறது.
இந்த புத்தகம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ” என்றார்.
பாரதி புத்தகாலய பதிப்பாளர் திரு.க.நாகராஜன் வரவேற்று பேசுகையில்
சிறுவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் தற்போது குறைந்துவரும் சூழலில் ஆங்கில
இலக்கியங்களுக்கு இணையாக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான
புத்தகங்களை தாங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களின் you tube
சமூக ஊடகமான பாரதி டிவியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான
குழந்தைகளின் நூல் விமர்சன காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
கட்டுரையாளர்- கார்த்திக் மாரிமுத்து
நூலாசிரியர் அருண்குமார் நரசிம்மன் அவர்களின் காணொலியை பார்க்க
விஐடி வேந்தர் அவர்களின் உரை காணொலியை பார்க்க