ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – தலைமைப் பண்புகள் – ரவி செல்வராஜ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – தலைமைப் பண்புகள் – ரவி செல்வராஜ்

 

 

 

தலைமைப் பண்புகள் என்னும் இந்நூலில், ஒரு அமைப்பில் அல்லது குழுவில் அல்லது நிறுவனத்தில் அல்லது கட்சியில் அல்லது பள்ளி மற்றும் கல்லூரிகளில் எனப் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் இனி தலைமைப் பொறுப்புகளை ஏற்க உள்ளவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டிய தலைமைப் பண்புகள் பற்றி 33 தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல்வேறு சுயமுன்னேற்ற நூல்கள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த தலைமைப் பண்புகள் என்னும் நூல் நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நூலாகும். ஒரு தலைவராக பொறுப்பேற்ற அல்லது இனி பொறுப்பேற்கவுள்ள ஒருவர் சிறப்பாக செயல்படத் தேவையான தலைமைப் பண்புகள் குறித்து இந்நூல் தெளிவாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் விரிவாகவும் விளக்குகிறது.

தலைமைப் பண்புகள் என்பது பிறப்பிலேயே வருவதல்ல. அது கல்வி மற்றும் அனுபவங்கள் மூலம் உருவானாலும், அந்தப் பண்புகள் என்னென்ன என்பது பற்றி வாசித்து அறியும் பொழுது, நீண்ட அனுபவமோ, அதற்குரிய கல்வியோ இல்லாமலேயே அந்தப் பண்புகளைப் படிக்கும் அனைவரும் உள்வாங்கி உருவாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நூலின் பெயர் : தலைமைப் பண்புகள்
ஆசிரியர்: எல்.மெர்லின்
வெளியீடு: 18.11.2023
பக்கங்கள்: 200
விலை: ரூ.200
பதிப்பகம்: சங்கம் பதிப்பகம்
79 A, பிருந்தாவன் நகர்
மன்னார்குடி – 614 001
அலைபேசி : 80561 76908
மின்னஞ்சல்: sdotravi@gmail.com

எல்.மெர்லின்
மின்னஞ்சல்: merlynalexander69@gmail.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *