ஜீவாவின் "தலைவர் தம்பி தலைமையில்" திரை விமர்சனம் | Thalaivar Thambi Thalaimaiyil (TTT) Tamil Movie Review - www.bookday.in

திரை விமர்சனம்: தலைவர் தம்பி தலைமையில் – இரா.இரமணன்

தலைவர் தம்பி தலைமையில் – 2026 ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். நிதிஷ் சகாதேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவரது முதல் படம் மலையாள மொழியில் இயக்கிய ‘falimy’ என்கிற வெற்றிகரமான படம். இப்போது தமிழிலும் இறங்கியுள்ளார். ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் இளவரசு என்பவரின் மகள் சவ்மியாவிற்கு கன்னியப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. இவரது பக்கத்து வீட்டுக்காரரான மணியின் மகள் பூரணி சில காலத்திற்கு முன் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுகிறார். தன மகள் உயிருடன் இருந்தால் அவளுக்கும் இப்படி சிறப்பாக திருமணம் நடந்திருக்கும் என்று மணி ஆதங்கப்படுகிறார். அவரது வயதான தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். சவுமியின் திருமண நாளன்று மணியின் தந்தை இறந்துவிடுகிறார். அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் ஜீவா இரண்டு பேருக்கும் வேண்டியவர். திருமணம் குறித்த நேரத்தில் தன் வீட்டிலேயே நடக்க வேண்டும் என்று இளவரசும் தந்தையின் இறுதி ஊர்வலமும் அதே நேரத்தில் நடக்க வேண்டும் என்று மணியும் கச்சை கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இரண்டு பேரையும் சமாதானம் செய்யும் ஜீவாவின் முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

Thalaivar Thambi Thalaimaiyil Tamil Movie Reviewed By Era Raamanan

இதற்கு பஞ்சாயத்து தேர்தலில் ஜீவாவை எதிர்த்து நிற்கும் தவிடு என்பவரின் குறுக்கீடுகளும் மணி மற்றும் இளவரசின் பிடிவாதமும் காரணமாக அமைகின்றன. இறுதியில் இரண்டு கோஷ்டிகளும் அடிதடியில் இறங்க, ஏதோ ஒரு நோக்கத்துடன் அதில் நுழைந்த ஒரு கோஷ்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீச, தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து திருமண ஏற்பாடுகளையும் இறுதி ஊர்வல ஏற்பாடுகளையும் நாசப்படுத்துகிறது. காவல்துறை வந்து மணி,இளவரசு இரண்டுபேரையும் கைது செய்து மணியின் தந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்கின்றனர். மணி,இளவரசு மற்றும் கிராமத்தாரை திட்டும் ஜீவா, சவுமியாவையம் கன்னியப்பனையும் ஏதாவது ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடத்திக் கொள்ள சொல்கிறார்.

இந்த திரைப்படத்தில் நாம் ரசிக்கும் முக்கிய விஷயம் ஒரு திருமண வீடு, இழவு வீடு இவற்றில் நாம் பார்க்கக்கூடிய காட்சிகள், நபர்களை இயல்பாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் காட்டியிருப்பது. சவுமியாவை திருமணம் செய்ய வரும் மாப்பிள்ளை கன்னியப்பன் பல வருடங்களாக திருமணம் கூடி வராத நிலையில் சவுமியா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆகவே திருமணத்திற்கு வந்து கொண்டிருக்கும் கன்னியப்பனின் தவிப்பு, அடிக்கடி சவுமியாவிற்கு போன் செய்வது, இறுதியில் சவுமியாவைக் காப்பாற்றும் ஆர்வம் போன்றவை ஒரு முழுமையான ஆளுமையை காட்டுகிறது. வழக்கமாக இப்படிப்பட்ட பாத்திரங்களை அசட்டுத்தனமாக காட்டுவார்கள். எல்லோருக்கும் சில ஆர்வக் கோளாறுகள் இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும்.

இழவு வீட்டிற்கு வரும் அரசியல்வாதி அந்த ஊரில் ‘நம்ம ஆளுக அதிகம். எனவே எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும்’ என்று ஜீவாவிடம் கூறும் இடமும் பஞ்சாயத்து தேர்தலில் ஜீவாவின் எதிர் தரப்பான தவிடு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இழவு வீட்டில் செய்யும் சில்லுண்டித்தனங்கள் இவற்றை ஜீவாவின் நிதானமான எந்த பக்கமும் சாயாமல் எதார்த்தமான ஆலோசனைகள் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இறுதியில் விரக்தியில் எல்லோரையும் திட்டுவது மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது. உடல் ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நோயாளிகள் அல்லர்; மனதில் ஜாதி, பொறாமை, போட்டி ஆகியவற்றை வைத்து என்ன ஆனாலும் பரவாயில்லை தன் வீம்புதான் முக்கியம் என்றிருப்பவர்களும் மனநோயாளிகளே என்கிற கருத்தையும் இயக்குனர் வைக்கிறார். ஒரு பெண் குறித்த தவறான செய்தியை ஊர் முழுவதும் பேசுவதனால் அவள் உயிரை மாய்த்துக் கொள்வதும் கிராமப்புறங்களில் நடைபெறும் நிகழ்வுகளை மாற்ற வேண்டிய முக்கியத்துவத்தை காட்டுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசூலை பெற்றுள்ளதாம். பத்திரிக்கையாளர்கள் பலர் ஐந்துக்கு மூன்று என்ற மதிப்பெண் கொடுக்கிறார்கள். மலையாள இயக்குனர் என்பதால் மலையாள படம் போல ஒரு உணர்வு ஏற்படலாம். ஆனால் இப்படிப்பட்ட படங்கள் வர வேண்டும் என்பதே நல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

📚 எழுதியவர்:

இரா.இரமணன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *