Thalaiyanga Vasam Book Review By Prabakar MJ - "தலையங்க வாசம்" (நமது மண்வாசம் (Namadhu Mannvasam) தலையங்கங்கள்) - நூல் அறிமுகம் - https://bookday.in/

“தலையங்க வாசம்” (நமது மண்வாசம் தலையங்கங்கள்)

“தலையங்க வாசம்” (நமது மண்வாசம் தலையங்கங்கள்) – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

புத்தகம்: “தலையங்க வாசம்” (நமது மண்வாசம் தலையங்கங்கள்)
நூலாசிரியர் : ப. திருமலை
விலை : ரூபாய் 170/-
வெளியீடு : பட்டறிவு பதிப்பகம், மதுரை-625016
தொடர்பு எண்: 0452 2302566

“குரல் அற்றவர்களின் குரலாய்” நமது மண்வாசம்…..

மக்களாட்சி நிலைபெற நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் எவ்வளவு முக்கியமோ அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்தது ஊடகத்துறை.

குறிப்பாக பத்திரிக்கை துறை, அரசு நிர்வாகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் இதில் யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட வேண்டும்.

அது போன்று ஒவ்வொரு பத்திரிகைக்கும் தலையங்கம் முக்கியமானதாகும். தலையங்கம் இல்லாத இதழ்களும் உண்டு. அது போன்று தங்கள் விருப்பத்திற்கு சார்புத் தன்மையோடு தலையங்கத்தை வெளியிடும் இதழ்களும் உண்டு.

தலையங்கம் என்பது முழுமையாக அந்த இதழின் ஆசிரியரின் கருத்தாகும்.

தலையங்கம் கருப்பொருள், விளக்கம், முடிவு என மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதில் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு முடிவு கூறுதல் அமைய வேண்டும்.

ஒரு தலையங்கம் என்பது இதழின், ஆசிரியரின் கொள்கைகளையும் அவர் சமூகத்தை பார்க்கும் முறையையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.

அது போன்று தலையங்கம் அமைய வேண்டிய இடம் மிக மிக முக்கியமானது. பொதுவாக நாளிதழ்களில் இரண்டாம் பக்கத்தில் அமையும். மாத, வார இதழ்களில் முதல் மற்றும் இரண்டாம் பக்கத்தில் இடம்பெறும்.

பொதுவாக வாசகர்கள் அதிக கவனம் எடுத்து தலையங்கத்தை விரும்பிப் படிப்பார்கள்.

அந்த வகையில் “நமது மண்வாசம்” 2015 ஜூலை முதல் 10 ஆண்டுகளாக வெளி வருகிறது.

நூறு இதழ்களையும் கடந்து வெளி வந்து கொண்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

100 இதழ்களில் வெளிவந்த தலையங்களின் தொகுப்பு தான் தலையங்க வாசம் நூல்.

நமது மண்வாசம் இதழில் வெளிவந்த அனைத்து தலையங்கங்களும் எவ்வித சார்பும் இன்றி உள்ளது மிகுந்த சிறப்புக்குரியதாகும்.

நீராதாரங்களைக் காக்க..

ஊழலுக்கு எதிராக…

சென்னையில் மட்டுமா தொழில் தொடங்க வேண்டும்…

மதுக்கடைகளை மூடுங்கள்..

கல்வி மருத்துவம் முற்றிலும் இலவசமாகட்டும்…

அரசு, நிர்வாகம் எளிமையாகவும் வெளிப்படைத் தன்மையோடு அமையட்டும்…

பொறியியல், மருத்துவம் தான் சிறந்த படிப்பு என்ற மாயையை பெற்றோர்கள் அகற்ற வேண்டும்..

குழந்தை திருமணத்தை தடுத்து தாலியை சுமக்காமல் புத்தக பையை சுமக்க வைக்க வேண்டும்..

லஞ்சமும் ஊழலும் நாட்டின் வளர்ச்சிக்கு முதல் தடையாகும்..

குடிநீர் சிக்கலுக்கு தீர்வு..

கிராமங்கள் தான் இந்தியாவின் சுவாசம்..

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை…

100 நாள் வேலைத்திட்டம்- வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும்…

அரசுகள் விலைவாசி உயர்வை குறைப்பதை அடிப்படை கடமை ஆக்க வேண்டும்..

மாதம் தோறும் மின்கட்டணம்…

சிறு தானியங்கள் கட்டாயமாக்குதல்…

வெய்யில்லை மகிழ்வாக்குவோம்…

மக்கள் நல அரசு என்றால் மதுவிலக்கே அமல்படுத்த வேண்டும்…

இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த தலையங்கம் மட்டுமே வெளியிட்டுள்ளது நமது மண்வாசம்.

தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பதிவு செய்த இதழின் ஆசிரியர் ப. திருமலை மிகுந்த பாராட்டுக்குரியவர்.

நீண்ட களப்பணி அனுபவம் கொண்டவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருப்பவர். ஒவ்வொரு தலையங்கத்தை படிக்கும் போதும் நாம் அதே சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை உண்மை.

இந்த நூல் மிகப்பெரிய வரலாற்று ஆவணம் ஆகும்.

தமிழ்நாடு அரசு இந்நூலை அனைத்து நூலகங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் அவசியம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

 

எழுதியவர்:

MJ. பிரபாகர்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *