ஹைக்கூ கவிதைகள் – தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்

ஹைக்கூ கவிதைகள் – தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்



1.  வானமே எல்லை
வெறுமையோடு விளித்த
வீடில்லா சிறுவன்

2. உயரப் பறக்க
கனவு காணும்
சிறகுகள் ஒடிந்த ‘பட்டாம்பூச்சி’

3. ஆனந்தக்களிப்பு
சேறு அள்ளி பூசி
விளையாடும் சிறுவர்கள்

4. அமைதி அமிழ்ந்து
அலைகள் தோன்ற
குளத்தில் சலசலத்த கல்



5. பிச்சை பாத்திரம்
விட்டு எறியப்பட
கால் இடறிய கருமி

6. பரவசப்படுத்தும் புல்வெளியில்
மயான அமைதி
மனஅமைதியின்றி மனிதன்

7. மத்தாப்பு வெளிச்சத்தில்
மங்கிய மகிழ்ச்சி
ஏக்கத்தோடு பார்க்கும் ஏழைச்சிறுவன்

8. பூகோள வரைபடம்
உலகம் சுற்றும் வாலிபன்
தலையின் மீது ஒழுகும் கூரை

9. பெரும் கான்
பரவும் வெளிச்சம்
அழிக்கும் காட்டுத்தீ



10. பெருங்காற்று
அசைந்தாடும் மரங்கள்
அசைவதற்கு இலைகளின்றி

11. கள்ளமில்லா சிரிப்பு
கைமாறும் பணம்
கள்ள நோட்டில் காந்தி

12. பூகோளத்தை சுற்றும்
சுதந்திர நாடோடி
தென்றல் காற்று

13. ஆளரவமற்ற இடம்
அமைதியை உடைத்த
வழிதவறிய குழந்தையின் அழுகை

14. உலகம் உங்கள் கையில்
உண்மை உறவுகளை அழித்த
உயர் ரக அலைபேசி

15. பேசுவதற்கு ஆளில்லை
ஓயாது பேசும்
தனிமையில் இதயம்



Show 5 Comments

5 Comments

  1. சாந்தி சரவணன்

    அருமை தோழர். இயற்கை, மழலை மனம் அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்

  2. Jayasree

    மிக் அருமை தோழர். எல்லா ஹைக்கூகளும் சிறப்பு

  3. Sakthi bahadur

    சிறப்பு தோழர்…
    அருமையான வரிகள்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதைகள். தொடர வாழ்த்துக்கள் தோழர்.

  4. Rathika

    மிகவும் அருமையான சிறப்பான ஹைக்கூக் கவிதைகள் வாழ்த்துக்கள் தோழர்

  5. Mohamed Umardeen

    உங்கள கவிதையில் ஒரு வலி இருந்தது
    உங்கள் கவிதையில் ஒரு feel இருந்தது
    உங்கள் கவிதையில் அழகான கவிதை இருந்தது
    உங்களின் கவிதையில் உங்களின் அறிவும், முதிர்ச்சியும் தெரிந்தது.

    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *